Pages

  • RSS

23 April, 2012

எல்லாம் நலம்!!

அக்காச்சி வீட்டில் நண்பன் தினமும் பல காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறதாம். கூடவே அதில் வரும் காரக்டர்களின் பெயர் ஒவொருவருக்கும் வைக்கப்பட்டு அந்தப் பெயரிலேயே அழைக்கும்படியும் கட்டளை இடப்பட்டிருக்கிறார்களாம். ‘அப்ப சித்திக்கு என்ன பேர்டா’ன்னு அக்காச்சி கேட்க கடைக்குட்டி சேரன் ’ஷித்திதான் ரியா’ன்னு சொல்லிட்டார். ஒரே நிமிஷம் இருங்க. இங்கே அவ்வியே ஆகணும் நான். அவ்வ்வ்வ்வ்..

இரண்டாவது பையன் கருண் திடீரென்று சீரியசாக ‘எனக்கு ஃப்யூச்சர்ல என் வைஃப் கூட ட்ரபிள் வரும்னு நினைக்கறேன்மா’ என்றாராம். ஏனென்று கேட்டதற்கு ‘பேபி கிடைக்கறப்ப எனக்கும் எப்டி ஹேண்டில் பண்ணும்னு தெரியாதேம்மா. ஸ்வேதா போல கோவப்படுவாங்கன்னு நினைக்கறேன்மா’ன்னாராம். அது ஆரது ஸ்வேதான்னேன். அடியேய் நண்பன்ல வர ஸ்வேதாடி.. இலியானா அக்கான்னா. இங்க இன்னுமொரு அவ்வ்வ்வ்..

TWO SISTERS இப்போது ஒரு டிப்ளமா கோர்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள் அக்காச்சி. அவள் என்னைப் போல இல்லை. தைரியம், அறிவு, விவேகம், அழகு என அத்தனையிலும் என்னைவிடப் பல படிகள் மேலானவள். அவளிடம் நான் கற்றுக் கொள்ள எப்போதும் எதுவாவது இருந்துகொண்டே இருக்கும். நானும் அவளும் ஒரே சாயலில் இல்லாததால் யாராவது பார்த்தால் சகோதரிகள் என்று சொல்லமாட்டார்கள். பேச்சும் அப்படியே இருக்கும். இன்று வரை அம்மாவை விட எனக்கு அக்காச்சி மீதுதான் பயம் அதிகம். முன்னெல்லாம் அக்கா என்ற அதிகாரம் இருக்கும். இதுக்கு அக்காச்சி என்ன சொன்னா என்று என்னவர் கேட்கும் அளவுக்கு அவள் எனக்கு இப்போது எல்லாமுமாய் ஆகி அன்பால் கட்டிப்போடுகிறாள்.

நான் பதிவுலகம் வந்ததை இரண்டு மாதங்களின் பின் சொன்னபோது அவளவு கோவப்பட்டாள். உன் மனத் திருப்திக்கு எழுது ஆனால் நட்புகள் எதுவும் வேண்டாம் என்று சொன்னாள். லிங்க் கொடுத்தேன். ஆனால் படித்தாளா இல்லையாவென்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. போன வருஷம் என் பிறந்தநாளுக்கு அவளிடமிருந்து வந்த மெயில் இது.

ithu thaan en pirantha naal parisu

scrolllllllllllllllllllllllldown (இங்கே எக்கச்சக்க இடைவெளி விட்டிருந்தாள்)

"nallaaave eluthuredi!!"

எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பரிசு இது. கூடவே என் ஃப்ரெண்ட் படமும் அனுப்பி இருந்தாள்.

இப்பொழுது பதிவில் நான் அதிகம் எழுதாததால் அவ்வப்போது மிரட்டல் மெயில் அனுப்புவாள். படிப்பின் இடையில் அவள் இளைப்பாறுவது என் பதிவில்தானாம்.

‘summaave irunthirukkalaam. intha blog vaasikkira peeelingu irukke atha ennaaatha solla’ என்று தொடங்கி தொடர்ந்து எழுதச் சொல்லித் திட்டி முடித்திருப்பாள். நேர வேறுபாட்டால் சமயத்தில் பேச முடியாமல் போய்விடும். உடனேயே மெயில் வரும்.

enna pulla seiyirai
phonukal ennaththukku irukku
ஏன் புள்ள சைலெண்டா இருக்கிறாய்
piraku parai. naalaikku thanks giving day leave. veeddai nippan. time irunthaaa edu.
happy thanks giving day, I am thankful to god b'se of u!

இப்படியாக நக்கலோடு சேர்த்து நளினமாக தன் அன்பைச் சொல்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். இந்த வருடம் கோடை விடுமுறைக்கு அவளிடம் வரப் போவதாக என்னவர் சொன்ன நாளில் இருந்து எப்பொழுதும் அதே நினைவாகவே இருக்கிறாள். ’ஏன்ரியப்பா முதலே சொன்னனிங்கள். இஞ்ச மனுசரால நிம்மதியா இருக்கேலாதாம். ஒரே பரபரப்பா கிடக்கு’ என்று சிரிப்பாள். ஆனால் அது உண்மை என்பதை அவள் குரல் சொல்லும். மூன்று வயதில் அம்முவைப் பார்த்தவள் இப்பொழுது பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறாள். அவளின் குணங்களை அம்முவில் அவளே பார்த்து அறிந்து கொள்வது அவளுக்கு எவளவு ஆனந்தமாயிருக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்காச்சி. எப்போதும் உன்னோடு நாங்கள் இருப்போம். எல்லாம் நலம்!!

9 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

அக்காச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-))

இருங்க பதிவை படிச்சிட்டு வரேன் ;-)

கோபிநாத் said...

\\ஏன் புள்ள சைலெண்டா இருக்கிறாய் \\

லைட்டா ஒரு சவுண்டு வுடுங்க ;-))

மகிழ்ச்சியும் பாசமும் நிறைந்த பதிவு...மீண்டும் அக்காச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)

கோபிநாத் said...

\\ஏன் புள்ள சைலெண்டா இருக்கிறாய் \\

லைட்டா ஒரு சவுண்டு வுடுங்க ;-))

மகிழ்ச்சியும் பாசமும் நிறைந்த பதிவு...மீண்டும் அக்காச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;-)

r.v.saravanan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சே. குமார் said...

அக்காவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

happy birthday......

vinu said...

வாழ்த்துக்கள் ;-))

ராமலக்ஷ்மி said...

உங்கள் அக்காச்சிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்:)! நெகிழ்வும் நேசமுமான பகிர்வு.

Vairai Sathish said...

பிறந்தநாள் வாழ்த்துகள்


நம்ம சைட்டுக்கும் வாங்க