Pages

  • RSS

01 January, 2012

சிவப்பு ரோஜ்ஜ்ஜா.

முதலில் அனைவருக்கும் மனமார்ந்த புதுவருட வாழ்த்துகள். வருஷம் ஞாயிறில் பிறந்ததில் உங்களைப் போல எனக்கும் வருத்தமே. போகட்டும் விடுவோம். புத்துணர்வோடு புத்தாண்டை வரவேற்போம்.

இங்கு new year’s eve அன்றுதான் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டும். டின்னரை ஃபுல்கட்டு கட்டிவிட்டு, சரியாக இரவு 00:00 க்கு பட்டாசு சத்தத்தோடு புத்தாண்டு வரவேற்கப்படும். எங்களுக்கு மாம்ஸின் நண்பர் வீட்டில் விருந்து. சில வருடங்களாகத் தொடரும் வழக்கம் இது. இம் முறையும் சந்தோஷமாகக் கழிந்தது நேரம். miming game இல் படத்தின் பெயர் கண்டுபிடிக்க வேண்டிய முறை எனதானபோது தோழிகள் கையை விரித்துக் காட்டினார்கள். மலர் என்றேன். வேறு என்று காட்ட பூ என்றேன். உடனேயே என்னைக் காட்டினார்கள். சிவப்பு ரோஜா என்று நான் சொன்ன அடுத்த நொடி என் பின்னே இருந்த எதிரணி நண்பர் பெயரைச் சொல்லிப் புள்ளியை அள்ளினார். பூவைக் காட்டி என்னைக் காட்டியதும் சிவப்பு டிரஸ் போட்டிருந்ததால் சிவப்பு ரோஜா என்றேன். ஆனாலும் இனி எப்போதும் என்னை இதை வைத்துக் கலாய்க்கப்படும் என்பது உறுதி. படத்தின் பெயர் ‘பூவே உனக்காக’ அவ்வ்வ்வ்..

மே 17 சுதந்திர தினத்தன்று இரவு அரசாங்கமே வாண வேடிக்கை காட்டும். நாங்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால் வருஷத்துக்கு முதல் நாளும், வருஷத்தன்றும் தான் இங்கு பட்டாசுக்கு அனுமதி உண்டு. வருடம் முழுவதற்கும் சேர்த்து வைத்துக் கொளுத்திப் போடலாம். இம்முறை ஸ்னோவும் இல்லாததால் விபத்துகள் அதிகமாகி விடுமோ என்று பயந்து கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தது மழை. பொதுவான ஒரு இடத்தில் செய்யப்படும் அரசாங்க வாணவேடிக்கைகளைப் போய் பார்க்கும் ஆசையை மழையும், குளிரும் கொளுத்திப் போட்டன.

021 022 சரியாக 30ஆம் திகதி ஆரம்பமாகும் பட்டாசு வியாபாரம். குறிப்பிட்ட இடங்களில் குட்டியாக டெண்ட் போட்டு பக்கத்திலே இந்த பட்டாசு பலூனையும் வைத்திருப்பார்கள். காற்றில் அது படபடவென்று சத்தம் போடுவது பட்டாசு வெடிப்பது போலவே இருக்கும். நாங்கள் போகவும் தீயணைப்புப்படை ஆட்கள் வந்து பட்டாசுக் கடையின் பாதுகாப்பை ஆராய்ந்து போகவும் சரியாக இருந்தது. பட்டாசுகளின் அளவு கொஞ்சமாக இருந்தாலும் விலை.. உஸ்ஸ்ஸ்ஸ்..

010 அம்மு என்றும் வெடிச் சத்தத்துக்கு பயந்ததில்லை. சது மூன்றாவது வயதில் தான் வெளியே வந்து வேடிக்கை பார்க்கவே ஆரம்பித்தார். ஆனால் இப்போது இருவரும் போட்டிக்குச் சுட்டுப் போடுவார்கள். மாலை ஐந்து மணியிலிருந்து ஆங்காங்கே ஆரம்பிக்கும் வெடிச் சத்தம். அதிலிருந்து அவ்வப்போது வண்ணமாய் ஆகிக் கொண்டிருக்கும் ஆகாயம். பனிரெண்டு மணிக்கு ஒட்டு மொத்த ஊரும் ஒருசேர வெடிக்கும்போது சத்தம் காதைப் பிளக்கும். பொரி பொரியாய், பொட்டுப் பொட்டாய், பூப்பூவாய், நட்சத்திரங்களாய் வெடித்து விழும் வண்ணச் சிதறல்களின் அத்தனை அழகையும் கண்விரித்து, வாய் பிளந்து பார்த்துவிட்டு வந்து எல்லோருமாய் சாமிக்கு விளக்கேற்றி வணங்குவோம். அடுத்த சில நிமிடங்களில் அக்காச்சியிடம் இருந்து தொலைபேசி வழி வாழ்த்து வரும். இப்படியாகத் தொடங்கும் எங்கள் புதுவருஷம்.

என்னால் முடிந்த வரை மொபைலில் படங்கள் எடுத்தேன். மழையால் வெளியே போய் முழுவதையும் காமராவிற்குள் அடக்க முடியவில்லை. இங்கே ஒரு ம்க்கும் போடச் சொல்கிறது மனசாட்சி.

008  019 023 026 027 

 

013 என்னுடைய அதிகபட்ச தைரியம் stjerneskudd என்று சொல்லப்படும் நம்ம ஊர் மத்தாப்பூ தான். மீதி எல்லாம் முக்கால் குடும்பமும் சுட்டுப் போட பார்வையாளாய் மட்டுமே (பதுங்கி) இருந்து கொள்வேன்.

 

 

புதுவருடம் பகுதி இரண்டில் 2011 பற்றியும், 2012இல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றியும் சொல்கிறேன்.

மலர்ந்த இந்தப் புதுவருடம் அனைவருக்கும் நல்வாழ்வையும், மனநிறைவையும் கொடுக்க என்னப்பனை வேண்டிக் கொள்கிறேன்.

11 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

சிவப்பு ரோஜான்னு என்னையா செல்லம் சொன்ன..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டியர்..

suryajeeva said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

இராஜராஜேஸ்வரி said...

வருஷம் ஞாயிறில் பிறந்ததில் உங்களைப் போல எனக்கும் வருத்தமே.

பண்டிகை தேதி
சண்டேயில் வந்தா
டேக் இட் பாலிசி...

இராஜராஜேஸ்வரி said...

"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

வாழ்க வளமுடன்!

கோபிநாத் said...

அக்கா மாம்ஸ் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-)

சத்ரியன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், சிவப்பு ரோ....!

//
தமிழரசி said...
சிவப்பு ரோஜான்னு என்னையா செல்லம் சொன்ன..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டியர்.//

போனா போகுது ‘ஆமா’ன்னு சொல்லிடுங்க. இல்லாட்டி அழுதுருவாங்க போல.

ஜெய்லானி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Priya said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

புத்தாண்டு வாழ்த்துகள்க்கா.. உங்கள் எழுத்துக்கள் போலவே இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

red rose with out mudkal.

avainaayagan said...

comment எங்கு போடுவது என தேடினேன் பிறகுதான் புரிந்தது-- "10 நல்லவங்க படிச்சாங்களாம்" நானும் நல்லவனா ஆயிட்டேன்தானே! பார்த்ததை அனுபவித்ததை அப்படியே எழுத்தில் கொண்டுவந்துவிட்டீர்களே