Pages

  • RSS

01 May, 2011

ஒன்றாய்ச் சேர்த்(ந்)தவன்!!

நான்

மழை நின்று வெகு நேரம்

இலை சொட்டும் நீரும்

சடசடத்த ஓசையும்

இன்னமும் அடங்கவில்லை

வான் நிறைந்த கருமுகில்

குடையோடு காத்திருக்கிறேன்

மழை வராமலும் போகலாம்.

 

நீ

உன் மேல் இருப்பதால் தான்

சட்டையே அழகு என்றாய்

பாக்கெட்டில் நிறைத்து வைத்த

முத்தங்களை என்ன செய்தாயென்று

இது வரை சொல்லவில்லை.

 

நாம்

என்னுள்ளே வந்தாய்

எதற்காக வந்தாய்

விழிவழி நுழைந்து

உதிரத்தில் கலந்து

உயிர் பறித்தாய்

உனக்குள்ளே வந்தேன்

உயிர் கொண்டு வந்தேன்

உன்னையும் என்னையும்

ஒன்றெனச் சேர்த்து

காதல் செய்தேன்

kjærlighet

27 நல்லவங்க படிச்சாங்களாம்:

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் மேல் இருப்பதால் தான்

சட்டையே அழகு என்றாய்

பாக்கெட்டில் நிறைத்து வைத்த

முத்தங்களை என்ன செய்தாயென்று

இது வரை சொல்லவில்லை.//

ஜூப்பரேய்....

லொல்

அழுக்கு எடுப்பதால் தான்

வாஷிங் பவுடர் அழகு என்றாய்

பக்கெட்டில் நிறைத்து வைத்த

துணிகளை துவைத்தாயா இல்லையாவென்று

இது வரை சொல்லவில்லை.

சீமான்கனி said...

Ahaa....Super Akka...

vinu said...

நல்லா இர்ருக்கு

ராமலக்ஷ்மி said...

நான் நீ நாம்.

ரசித்தேன். நன்று சுசி.

கோபிநாத் said...

படமும் படத்தில் உள்ள வரிகளும் சூப்பரோ சூப்பர் ;)

விக்னேஷ்வரி said...

கவிதாயினி சுசி வாழ்க.

சிசு said...

நல்லாருக்கு...

பாட்டு ரசிகன் said...

அசத்தலான கவிதை..
வாழ்த்துக்கள்..

r.v.saravanan said...

அசத்தலான கவிதை

Madumitha said...

அட..

அடடா..

அடடே..

சபாஷ்.

கார்க்கிபவா said...

வசந்து, லந்துய்யா

Anonymous said...

சிம்ப்ளி சூப்பர் சுசி!
//வசந்த் //
:)))

எல் கே said...

//இலை சொட்டும் நீரும்

சடசடத்த ஓசையும்//

சொட்டும் இலை நீரும் என்று வரவேண்டுமோ ??

கவிதை சூப்பர்

எல் கே said...

@வசந்து

ஹஹ்ஹஹா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html

logu.. said...

\\உன் மேல் இருப்பதால் தான்

சட்டையே அழகு என்றாய்

பாக்கெட்டில் நிறைத்து வைத்த

முத்தங்களை என்ன செய்தாயென்று

இது வரை சொல்லவில்லை.\\

ஜோரா இருக்குங்க.

சுசி said...

ஹிஹிஹி.. எனக்கு எதிர்க் கவுஜ சொன்ன முதல் ஆள் நீங்க தான் உ பி :))))) நான் எழுதினத விட இது நல்லாருக்குப்பா ;)

@@

நன்றி கனி. நலமா??

@@

நன்றி வினு.

சுசி said...

நன்றி அக்கா.

@@

யாரு பெத்த புள்ளை செஞ்சதோ.. கூகிளாண்டவர் குடுத்தார் கோப்ஸ் :)

@@

விக்கி.. தங்கள் திடீர் வரவு நல்வரவாகட்டும்.. நோ பேட் வேர்ட்ஸ்பா.. நான் பாவம்..

சுசி said...

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிசு.

@@

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாட்டு ரசிகன். வந்து கேக்கறேன் :)

@@

நன்றி பாலாஜி.

சுசி said...

மதுமிதா.. ரைட்டு :)

@@

கார்க்கி, நான் நொந்துய்யா ;)

@@

நன்றி பாலாஜி.

சுசி said...

எனக்கு தெரியலியே கார்த்திக்.. அதுவும் நல்லாத்தான் இருக்கில்லை..

@@

மீண்டும் நன்றி புவனா.. படிச்சு கமன்ட் போட்டேன் டீச்சர் :)

@@

நன்றி லோகு.

Chitra said...

nice. :-)

rajamelaiyur said...

Wow what a poem . . . I very much like it . . .

குணசேகரன்... said...

சூப்பர்...பதிவு...
http://zenguna.blogspot.com

குணசேகரன்... said...

ஒவ்வொன்றும்..அருமை..

http://zenguna.blogspot.com

குணசேகரன்... said...

ஒவ்வொன்றும்..அருமை..

http://zenguna.blogspot.com

logu.. said...

அட்டகாசம்