ஊரில் எல்லாத் தொல்லையும் ஓய்ந்தாலும் மழை விட்டபாடாய் இல்லை. ஊரே வெள்ளக்காடாய். கடல் மட்டமும் உயர்ந்து உள்ளதால் ஆற்று நீர் கடலுக்குள் கலக்க முடியாமல் ஊருக்குள்ளேயே நிறைந்துவிட்டது. கொடும் குளிர். ரஜி வீடு கொஞ்சம் உயரமான இடத்தில் இருப்பதால் வீட்டுக்குள் தண்ணீர் வரவில்லை. அண்ணா முன் பக்கத்துக்கு சுற்று மதில் கட்டிவிட்டதால் வயற் பிரதேசமான இடத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குள் தண்ணீர் குறைவாகவே புகுந்துள்ளது. பலர் பாடசாலைகளில் தஞ்சம். சொந்த நாடு மட்டுமல்ல, சொந்த வீடு கூட தமிழனுக்கு..
அண்ணா ஐந்து மாடுகள் வாங்கினார். சீமைப்பசுக்கள். எங்கள் ஊரில் கேப்பை மாடு என்பார்கள். அத்தனை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். போன வாரம் அண்ணா ‘வெள்ளை மாடு படுத்திட்டுது அப்பா’ என்று ஸ்கைப்பில் சொன்னபோது கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்த அம்மு கேட்டார் ‘மாடு படுத்தா தப்பாம்மா.. தூங்கிறதுன்னா அது படுத்து தானே ஆகணும்’ கவலை மீறி அண்ணா சிரித்தார். மாடுகள் சீக்காகிப் போவதை அப்படிச் சொல்வது எங்கள் வழக்கம் என்று அவளுக்குப் புரிய வைத்தேன். இரண்டு நாள் முன்னர் எந்த வைத்தியமும் சேராமல் செத்துவிட்டது. டவுன் கவுன்சிலில் சொல்லி, ட்ராக்டரில் வந்து, புதைந்து, மதில் சுவரையும் சற்றே இடித்து, ஏற்றிக் கொண்டு போனார்களாம். இப்போது அடுத்த மாடுகளும் வரிசையாய் நோயில்..
பொங்கல் சமயமே பெருவெள்ளம். அண்ணா, ரஜி, மச்சினர், மாமியார் உட்பட பலர் வீட்டுக்குள்ளேயே பொங்கி வராத சூரியனுக்கு சம்பிரதாயமாகப் படைத்தார்கள். வெடி கூட வீட்டுக்குள்தான். அதிலும் எங்களுக்காக, ஒற்றை மத்தாப்பு கூட சுட்டுப் போடாத துர்ப்பாக்கியசாலிகளுக்காக முதல் நாள் இரவே சக்கரவாணம் வெடித்துக் காட்டினார் அண்ணா. எத்தனையோ வருடங்களின் பின் பட்டாசுச் சத்தத்தோடு பொங்கல். இந்த மழை மட்டும் அன்று நின்றிருந்தால்..
பயிர்கள் எல்லாம் அழிந்துபோய், அழுகிப்போய், குளம்போல் தோன்றும் வயல்கள், எப்போதும் உடைப்பெடுக்கும் என மிரட்டும் குளங்கள், பாடசாலைகளுக்கு மூடுவிழா. பள்ளிப் பருவத்தில் அவ்வளவு ஆனந்தம் தந்த மழைக்கால விடுமுறை. இன்னமும் ஊரோடு அதே பள்ளிப் பிள்ளையாய் இருந்திருந்தால்..
90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கிராமம் ஒன்றில் இருந்தோம். வீட்டின் பின் பக்கம் குளம். பெரிய குளம். ஊரில் எப்போதாவது குளங்கள் வான் பாய்வதை வேடிக்கை பார்த்தபோது இருந்த சந்தோஷம் அப்போது இருக்கவில்லை. சில இடங்களில் உடைந்துவிடத் தயாராய் இருந்த குளக்கட்டு ரொம்பவே மிரட்டியது. அரிசி மூட்டைகளை உயரமாக அடுக்கி வைத்து அதன் மேல் ஏறி விழிப்போடு கழித்த இரவு. வீட்டுப் படி மேவி நில்லாது ஓடிய வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் பாம்புகள், தேள்கள். நீர் வடிந்து போக வழியில்லாத களிமண் பூமி. இருந்த அரிசியையும், ஈர விறகையும் வைத்து பசி போக்கியதோடு இரவில் குளிரும் விரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகதிகளிடம் குளிர்ச்சட்டை ஏது. அம்மம்மாவின் காட்டன் சேலையால் சுற்றிக் கொண்டு சுருண்டு போய் இருப்போம்.
அப்போது எங்களிடம் மாமாவின் மாடுகள் இரண்டும், முன் வீட்டுப் பாட்டி தந்த மாடு ஒன்றும் இருந்தது. மழையில் அவை பட்ட அவஸ்தை. அந்த மழையிலும் விறகு தறித்து வந்து இரவில் இரண்டு விறகை அவற்றுக்கும் எரித்துவிட்டுக் கூதல் விரட்டுவான் ரஜி. மாடு மீட்கப் போய் புதைகுழியில் மாளப் பார்த்த அக்காச்சி நேற்று ஸ்கைப்பில் சொன்னாள் ’உடம்பெல்லாம் மூழ்க ஆரம்பிச்சு கடைசில கண் வரைக்கும் சேறு மூடினப்போ சிவப்பியோட கண்ல தெரிஞ்சுதே ஒரு மரண பயம்.. என் வாழ்க்கேல மறக்கமாட்டேன்பா’
94இல் இருந்த வீட்டின் பின்பக்க ஒழுங்கை மழை பெய்யும் நாட்களில் ஆறு. இல்லாத நாட்களில் மறுபடி ஒழுங்கை. எங்கிருந்துதான் அவளவு வெள்ளம் வருமோ. மாரிகாலம், தொடர் மழை தவிர மீதி நாளில் வந்த வேகத்திலேயே வடிந்து விடும் மணல் பூமி. அப்போது நாங்கள் வளர்த்த செல்லம் லஸி. Alsatian நாய். ஆனந்தமாய் குளியல் போடும். வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் தடிகளையும், நாங்கள் தூக்கிப் போடும் பந்துகளையும் நீந்தியபடியே தேடி எடுத்து வரும். உபரியாய் தேங்காய்களும் கவ்வி வரும். நாங்களும் சேர்ந்து நனைந்தபடி வெள்ளத்தில் விளையாடிய நாட்கள் இன்னமும் ஏங்க வைப்பவை.
சின்ன மச்சினர் புகுந்த ஊரில் அவளவு சேறாக இருக்கும். நிலத்தில் கால் வைத்தால் சர்ர்ர்ர். ஸ்கேட்டிங் தான். நடை கிடையாது. அப்பாவின் கிராமத்துக்கு மழைக்காலத்தில் போவதென்றால் எங்களுக்கு அவளவு கொண்டாட்டம். காடும், மழையும், புதுவிதமான பூச்சிகளின் ஒலியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சமும் இரவில் ஒரு பயம் கலந்த தூக்கத்தைத் தரும். போர்க் காரணத்தால் தார் ரோடே இல்லாத காலத்தில் மண் ரோடுகளும், வண்டிகளும், நாங்களும் போக்குவரத்தில் பட்ட அவஸ்தைகள்.. அப்பப்பா..
வேண்டுமென்றே மறந்த குடை, மழை வெள்ளத்தில் ஆட்டம், பல் கிட்டும் குளிர், போர்வைக்குள் ஒளிந்தபடி கால் மடித்து அமர்ந்து, அம்மாவின் திட்டோடு ஈரத் தலை உலர, கை சுடும் தேநீர் இதமாய் குளிர் விரட்ட.. ஹூம்.. இங்கேயும் எல்லாம் உண்டு. என்ன இருந்து அனுபவிக்க நேரம்தான் இல்லை. அப்படியே இருந்தாலும் இங்கே பெய்யும் மழை மட்டும் ஏன் தான் அநியாயத்துக்குக் குளிர்ர்ர்ர்ந்து தொலைக்கிறதோ தெரியவில்லை. மழைக் காதலனான என் நண்பனுக்கு அடிக்கடி சொல்வேன் ‘இங்க வந்து இந்த மழையில நனைஞ்சிட்டு அப்புறமும் சின்ன சின்ன மழைத் துளிகள்னு பாடு.. அப்போ ஒத்துக்கறேன் உன் மழைக் காதலை’ என்று.
26 நல்லவங்க படிச்சாங்களாம்:
மலரும் நினைவுகள் அருமை.:)
ஹ்ம்ம் மழை பிடிக்கும் ஆனால் இப்படி இம்சிக்காத வரை
டும்டும்..டும்டும்...
படிக்க..படிக்க...
இளமை திரும்புகிறது
oru valiyutan padikka mudinthathu ungal ninaivugal...
கடல் உயர்ந்ததால் படிக்கவே திகீர் என்று இருக்கே..
சூப்பர் கொசுவத்தி ;)
கல்லூரி பருவம் வரை மாடுகள் வைத்துதான் வீட்டில் பால் தயிர் எல்லாம். ரொம்ப அன்பாய் கவனிப்பார்கள் வீட்டில். அதுகுறித்த கதையொன்று பாதியில் உள்ளது சுசி.
மழையில் ஆட்டம் போட்ட நினைவுகளையும் அள்ளி வந்து விட்டது உங்கள் பதிவு.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
@@
எனக்கும் அதே எண்ணம்தான் கார்த்திக்.
@@
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க நையாண்டி மேளம்.
நன்றி குமார்.
@@
அமுதாக்கா.. மாரி காலத்திலை கடல் மட்டம் உயரும்.. அப்போ கடல் கரைக்கு வரும்.. கரையில குடிசை போட்டு இருக்கிற மீனவ மக்கள் சர்ச்சிலயோ, உறவுக்குகாரங்க வீட்டுக்கோ போய்டுவாங்க. அத்தோட கடலும் ஆறும் கலக்கிற முகத்துவாரம் பகுதியில கடல் மட்டம் உயர்ந்து போய்டுறதாலை கடல் நீரும் ஆத்திலை கலந்து போகும்.. வெள்ளம் இலகுவில் வடியாது. உயிர்ச்சேதம் வராதுன்னாலும் குளங்கள் நிறைஞ்சு ஊருக்குள்ளை தண்ணி வந்து தொல்லை தரும்.
@@
நன்றி கோப்ஸி :)
கதையை சீக்கிரம் முடிங்க அக்கா. ஆவலோட காத்திட்டு இருக்கேன்.
மழைக்காலம் அருமை..... உலர்ந்த வீட்டில் நாம் இருந்தால்!
நல்ல கொசுவத்தி சுசி.
\\லஸி. \\
செம பிகரா இருக்கு.
ம்ம்.. கிராமம்னாலே பொங்கல் செம கலக்கலா இருக்கும்ல..
இப்பவும் எங ஊர்ல கலக்கல்தான்.
NEENGA POSTTU POTTA 35 MINUTELAYEA NAAN PADICHUTTEAN BUT NET TOO SLOW AT MY ROOM SO THAT COULDN'T COMMENT..........
SO ENAKKUM PRESENTTU POTTUUKKANGAA
வெய்யிலில் அடிச்சா, மழை எப்ப வருமுன்னு நினைப்போம்...
மழை வந்தால், ஏன்டா இது வந்ததுன்னு கதைவை சாத்திட்டு டி.வி பார்போம்...
மழையில் நினைஞ்சிகிட்டு யமகாவை ஓட்டிய நாட்களை நினைத்து ஏங்க வச்சிட்டிங்களே.. நல்ல ஆட்டோகிராஃப்!
ஆற்றில், அருவியில், கடலில் குளிக்கும்போது மழை வந்தால் பிடிக்கும். சனி, ஞாயிறு மதிய வேளைகளில் வீட்டில் இருக்கும்போது மழை வந்தால் பிடிக்கும்.
நினைவுகள் அருமை.:)
சரியா சொன்னிங்க டீச்சர்.
@@
லோகு.. அவன் பையன்பா..
ஆமாம்.. பொங்கலுக்கு உங்க அத்தை பொண்ணுங்கல்லாம் வந்தா கலக்கலாத்தானே இருக்கணும் :)
@@
வினுவுக்கு ஒரு ப்ரசண்ட்.. சரியா வினு??
அப்டியே யமஹா பின்னாடி இருந்தவங்களையும் நினைக்க வச்சேனா கலை??
@@
சூப்பர் கோபி.. நல்ல ரசனை.
@@
நன்றி சரவணன்.
எனக்கு மழை பிடிக்கும் அது புயலாய் பாதிக்காத வரை... நல்ல பதிவுப்பா... பல பழைய நாட்களின் நினைவும் வந்தது...
:))
பொலம்பல் பதிவு இந்த மனுசங்களே இப்டித்தான் கடவுளே இருக்குறப்போ இல்லைன்னும் இல்லாதப்போ இல்லையேன்னும் வருத்தப்படறதே பொழப்பா போச்சி
இம்புட்டு பொலம்பலுக்கு நடுவுலயும் கட்சீல மழையோட டூயட் வேற பாரு கடவுளே இந்த உ.பி.ய இவங்கள என்னா பண்றது?
good recall
நன்றி புவனா.
@@
வசந்து.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சரியா படிங்க..
@@
நன்றி சுதாண்ணா :)
சகோதரி இந்த பதிவு ஒருபுறம் உங்களின் துன்பங்களை பகிருந்தாலும், உங்களின் சந்தோசத்திற்கு அதேமழை காரனம்மகிறது.நீங்கள் உங்கள் நாயுடன் விளையாடிய சந்தோஷ நினைவுகளுக்கு இடையில் தங்களின் இன்ப துன்பத்தை பகிருந்து கொண்டது ஒரு வித்தியசமனபதிவு நன்றி வாழ்க வளமுடன் மென் மேலும் சந்தோசமான் வாழ்கை அமைய எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் இந்த கும்பல்களுகிடையில் நானும் எனது கிறுக்கல்களை வைக்கிறேன் நன்றி
subburajpiramu@gmail.com
நல்ல உபயோகம் உள்ள பதிவு உனது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நல்ல உபயோகம் உள்ள பதிவு உனது தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Post a Comment