Pages

  • RSS

21 March, 2011

கலந்துகட்டிய தமிழ்.

என் நண்பி வந்திருக்கிறார். ஒரு வாரம் எங்களோடு இருப்பார். அந்த ஒரு வாரத்திலும் இன்னும் இரண்டே நாட்களே மீதம் இருக்கிறது. ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு உள்ளே வந்ததுமே படி இறங்கி வந்த அம்மாவின் கால் தொட்டு அவர் ஆசீர்வாதம் வாங்கியபோது கலங்கிய என் கண்கள் அடிக்கடி கலங்கிப் போகும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. அவர் அன்பால் அவ்வப்போது கண்கலங்குவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘நான் காஃபி சாப்ட போறேன். யாருக்கெல்லாம் வேணும்’ என்று உரிமையோடு வீட்டுப் பெண்ணாக ஆகிவிட்டார். எங்கள் அன்பில் அவருக்கு அந்நிய உணர்வே தோன்றவில்லையாம். அது உண்மை என்பதை அவரின் சிரித்த முகமும், பேச்சும் உறுதிப்படுத்துகிறது. பிள்ளைகளை தட்டித் தூங்க வைக்கும் அளவுக்கு அவர்களோடு ஒன்றிவிட்டார்.

நாடு கடந்த நட்பு இப்போது என்னை அக்காச்சி என்று அழைக்கும் அளவுக்குப் பாசமாக வடிவம் கொண்டுள்ளது. லீவு கிடைக்காத கவலையோடு நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடி வருகிறேன். இங்கே சுற்றிப் பார்க்க எதுவும் சிறப்பாக இல்லையென்றாலும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். இலங்கைச் சமையலை அம்மாவிடம் கற்றுக் கொள்கிறார். ’பப்பிம்மா.. அக்காச்சி கிட்ட பொட்டுக்கடலை இருக்குமா தெரியலை கேட்டுப் பார்த்து நீங்க சொன்ன மாதிரியே தேங்கா சட்னி செஞ்சுகுடுக்கறேன்’ என்று அவர் அம்மாவிடம் கேட்டு இந்தியச் சமையல் செய்து தருகிறார்.

‘நீயே ஒரு திருடி. உன்னை நம்பி இந்தப் பொண்ணை இங்க அனுப்பி வச்சாங்க பாரு.. அவ அம்மா அப்பாவுக்கு பூப் போட்டு கும்பிடணும்’னு கண்ஸ் சொல்லும் அளவுக்கு அன்பான பெண். வேகத்தோடு தூய இலங்கைத் தமிழ் பேசும் கண்ஸின் பேச்சு சட்டென்று புரியாமல் அவர் முழிக்கும்போதும், இவரின் இந்தியத் தமிழ் புரியாமல் கண்ஸ் முழிக்கும்போதும் நான் தமிழுக்கே மொழிபெயர்ப்பாளராக மாறி இருவரையும் கலாய்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எங்கள் வீட்டில் கலந்து கட்டிய தமிழ் துள்ளி விளையாடுகிறது. உதாரணத்துக்கு சில..

நுளம்புன்னா என்னக்கா?? ஒரு வகை இன்செக்டா??

நுளம்புன்னா கொசு.

--

இதில என்ன சேர்த்திருக்குன்னு சொன்னிங்க..

கறுவாவும், சீனியும், பட்டரும்.

கறுவான்னா??

பட்டை.

--

ஃப்ரெண்ட்ஸ் கூட கதைச்சேனான்னு கேட்டிங்களே.. கதைக்கிறதுன்னா??

பேசுறது.

--

பேசிப்போடுவன்னு சொன்னிங்களே.. பேசுறதுன்னா??

திட்றது.

இன்று Aquarium போய் வந்தோம். சில படங்கள் உங்கள் பார்வைக்கும்.

083 முட்டையை அடைகாக்கும் ஒரு பென்குயின் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டோம்.

 

 

 

 

 

126 பேய் போல இருந்தது கண்ணாடியோடு ஒட்டியபடி பயமுறுத்திய திருக்கை வகை மீன். பயத்தில் பெயர் மறந்துவிட்டது. இரவுத் தூக்கம் சந்தேகமே.

 

 

 

163 அழகாய்த்தான் இருக்கு அனகொண்டாவும்.

 

 

 

 

 

158 கொடுத்து வச்ச மனுஷன்/ஷி.

 

 

 

 

 

172 Green tree python ன்னு போட்டிருந்தது. எங்கடா காணம்னு தேஏஏஏடிப் பார்த்தா ஒற்றைக் கொம்பில ரெண்டு பச்சைக் கலர் ஜாங்கிரி.

 

 

 

அப்படியே மீன்களையும் சுட்டுத் தள்ளினோம்.

090  110 113 116 125 134 025 040

16 நல்லவங்க படிச்சாங்களாம்:

vinu said...

me me meyum presenttttuuuuuuuuu


he he he ennoda thamil eppudi

logu.. said...

\\ லீவு கிடைக்காத கவலையோடு நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடி வருகிறேன். இங்கே சுற்றிப் பார்க்க எதுவும் சிறப்பாக இல்லையென்றாலும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். \\


வாய் காது வரைக்கும் போகுமோ?

எல் கே said...

யாருங்க அந்த தங்கச்சி ? படங்கள் அருமை

r.v.saravanan said...

photos super

அமுதா கிருஷ்ணா said...

ஜாங்கிரி சான்சே இல்லை. கனடாவில் இருந்து எங்க வீட்டிற்கு வரும் சிலோன் ஆண்டியிடம் பேசி பேசி இப்போது எனக்கும் இலங்கை தமிழ் புரிகிறது. கிளம்புவது- விழிக்கிடுதல்..அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை.என் பசங்க தான் ஙேன்னு முழிப்பாங்க..

'பரிவை' சே.குமார் said...

Photos Kalakkal...

ராமலக்ஷ்மி said...

அம்மா தாத்தாவுக்கு இலங்கையில் தேயிலை வியாபாரம். அம்மா அங்கே வளர்ந்து இந்தியா வந்து திருமணம். புகுந்த வீடு நுழைந்த புதிதில் இப்படி பல இலங்கை வார்த்தைகள் சொல்லி யாருக்கும் புரியாமல், மொழி பெயர்க்கவும் ஆளில்லாமல், முழி பெயர்ந்த கதைகள் நிறைய சொல்வார்கள்:))!

படங்கள் அத்தனையும் துல்லியம். பச்சை ஜாங்கிரி சூப்பரு:)!

கோபிநாத் said...

:)))

பதிவும் படங்களும் சூப்பரு ;)

கலையரசன் said...

யக்கோவ்.. கடைசியா உள்ள போட்டோவுல சுட்ட மீனுன்னு சொல்லிட்டு உயிரோட உள்ள மீன் போட்டோவை போட்ருக்கீங்க?

தமிழ் சரியில்லையே...

Anonymous said...

எந்தத் தமிழ் பேசினாலும், தமிழ் அமுதம் தான! இன்னொரு தடவ பாருங்களேன், அந்த் திருக்கை மீன், அட்டகாசம் சுசி! ;) ( ஏதோ உங்க தூக்கத்துக்கு என்னால முடிஞ்சது.. ஹி ஹி.. )

R. Gopi said...

கல்ந்துகட்டிய தமிழ் நல்லா இருக்கு.
பச்சை கலர் ஜாங்கிரி சூப்பர். அந்தப் பேய் மீன், எனக்கும் பயமா இருக்கு.

சுசி said...

வினு.. உங்க தமிழ் ஃபோட்டோ அனுப்புங்க.. பார்த்துட்டு சொல்றேன் :)

@@

லோகு :)

@@

அவங்கதான் கார்த்திக்.. என் தங்கச்சி..

சுசி said...

நன்றி சரவணன்.

@@

வெளிக்கிடுவது அமுதாக்கா. வடிவு, மணம், கரைன்னு பல சொற்கள் நாங்கள் சொல்லும்போது ரொம்ப குழப்பமா இருக்கும். கூடவே நாங்க வாங்கோ/போங்கோன்னு சேர்த்துக்கிற ங்கோ.. ஆனாலும் எங்களுக்கு சினிமா/டீவி பார்க்கிறதாலை இந்தியத் தமிழ் இலகுவா புரியும்.

@@

நன்றி குமார்.

சுசி said...

அக்கா.. அப்டின்னா அவங்க கண்டி/கொழும்புப் பகுதிகள்ல இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். அந்தப் பகுதிகள்ல இருக்கிற தமிழர் சிங்களம் அதிகம் பேசுறதாலை அவங்க ஸ்லாங் ரொம்ப வித்யாசமா இருக்கும்.

@@

நன்றி கோப்ஸ்.

@@

வாங்கோ கலை.. சுட்ட மீனை சாப்டு போகணும். குத்தம் சொல்ல கூடாது :) எப்டி இருக்கு திருமண வாழ்க்கை?? என் வாழ்த்துகள் கிடைச்சதில்லை??

சுசி said...

பாலாஜி.. கிர்ர்ர்ர்ர்ர்.. அத நீங்க நேர்ல பாத்திருக்கணுமே.. கண்ணும் வெட்டி வெட்டி சரியா பேய்தான்.. உஸ்ஸ்ஸ்ஸ்..

@@

உங்களுக்கும் பயமா கோபி.. அடுத்த தடவை போகும்போது வீடியோவே எடுத்துட்டு வரேன் :)

ப்ரியமுடன் வசந்த் said...

படங்கள் எல்லாம் கொள்ளையழகு

திருக்கை மீன் யப்பேய்ய்ய்ய்..

அனகொண்டா அழகா இருக்கா என்னவோ ஹீரோஹோண்டாவ சொல்றமாதிரி ஈசியா சொல்லிப்புட்டீக?

கொடுத்துவச்ச மனுஷி/ன் ஏன் விளங்கலை..!

Green tree python அவ்வ்வ் அருவருப்பா இருக்கு பாம்புன்னாலே ஒரு பேட் ஃபீலிங் :(