Pages

  • RSS

10 March, 2011

டார்லிங்ங்ங்..

முதல்ல என்னை தொடர் பதிவுக்கு அழைத்த கோபிக்கு நன்றியை.. இல்லை இல்லை.. நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை தொடர்பதிவு எழுதுவதை விட தொடர யாரையாவது அழைப்பதுதான் அவ்வ்வ்வ்.. அப்படியே கோபி தன் பெயர்க்காரணம் சொன்ன பதிவை இங்கே சென்று படித்துப் பாருங்கள். சிரிப்புச் சுவை தூக்கலாக எழுதி இருக்கின்றார். மீண்டும் நன்றி கோபி.

இனி என் விஷயத்துக்கு வருவோம்.

navn

நான் பிறந்தது நவராத்ரி நேரம். அதுவும் சரஸ்வதிக்குரிய நாளில் பிறந்தேனாம். சரஸ்வதி கடாட்சம் கிடைக்கட்டும் என்று அம்மாவுக்கு கொள்ளை ஆசையாம். நல்லவேளை சரஸ்வதி என்று வைக்காமல் விட்டார்கள். நியூமராலஜியும் பார்க்கவில்லையாம். ஆனால் பின்னாளில் கூட்டெண் 5 வரும்படியாக எழுது என்று அப்பா சொல்லித் தந்தார். கல்யாணத்தின் பின் இனிஷியல் மாறியபோது அதையும் விட்டுவிட்டேன்.

எனக்கு என் பெயர் தவிர்த்து யாராவது செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது நினைவு தெரிந்த நாளில் இருந்து பிடிக்காது. எனக்கு நினைவு தெரியாத வயதுகளில் என்னை ச்செல்லமாக.. ரொம்பச் ச்செல்லமாக கூப்பிடுவார்களாம். ஒரு தடவை க மு வில் கண்ஸ் அம்மாவிடம் என் கூட சண்டை போட மேட்டர் சிக்காத நாளில் இது பற்றிக் கேட்டபோது அம்மா சொன்னார். ‘கூப்டோமே.. ஆனா நீங்க அதை சொல்லி கூப்ட முடியாதே’ன்னு. அப்போ கண்ஸ் வெக்கத்தோட சிரித்ததும், நான் அம்மாவை முறைத்த்த்ததும் இப்போதும் எனக்கு நினைவிருந்தாலும் கூடவே அவர் விதியும் சிரித்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

பக்கத்து வீட்டில் அம்மா உறவுமுறைப் பாட்டி ஒருவர். என்னை வெள்ளை ஆப்பம்னு கூப்பிடுவார். விடுங்க மக்கள்ஸ். அதான் பாட்டி என்று சொன்னேனே. அவர் கண்ணாடி கூட போட்டதில்லை. நான்காவது படிக்கும்போது போய்விட்ட பாட்டியோடு அந்தப் பெயரும் போய்விட்டது.

அம்மா வழி, அப்பா வழி உறவுகளில் அம்மாச்சி, செல்லம், ராசாத்தி இப்படியாக கூப்பிடுவார்கள். என் முன்னே பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரஜி.. மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள்.

நண்பர்கள் நான் மேலே சொன்ன காரணத்தால் வேறு பெயர் சொன்னதில்லை. ஆனால் கஸின்ஸ், நண்பர்ஸ் அவ்வப்போது நான் இருக்கும் கெட்டப்புக்கு ஏற்ப வனிதா, மனிஷா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நயன் தாரா, ஷாலினி, ஜெனிலியா இப்போ லேட்டஸ்ட்டா டப்சி என்பது வரைக்கும் கூப்பிடுவார்கள். எல்லோரும் ஒரு தடவை உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லி கொண்டீர்கள்தானே. என்னுடைய ஒரு ஃபோட்டோ பார்த்த அப்பா லைட்டா ஐஷ்வர்யா ராய் ஜாடை தெரிவதாகச் சொல்லி ஐஷ் என்று கூப்பிட்டதைக் கேட்டும் இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன் மக்கள்ஸ். எனவே அழுகை வேண்டாம். கொலைவெறி வேண்டவே வேண்டாம்.

ஐந்தாவது வரை என் பெயரில் யாரும் பள்ளியில் படித்ததில்லை. ஆறாவதுக்கு போனபோது அந்தப் பள்ளியில் எட்டாவதில் ஒருத்தர் இருந்தாங்க. எங்கள் ஊரில், சொந்தங்களில் மூவர் என் பெயரில் இருந்ததாக நினைவு. இங்கே வந்ததும் என் கலர் காரணமாக சாக்லெட் என்று கூப்பிடுகிறார்கள். அதை விட என் பெயர் இவர்கள் வாயில் படும்பாடு இருக்கிறதே.. கொடும்ம்மை.. இந்த ஊரில் என் பெயரில் யாருமே இல்லை. நான் மட்டும்தான். இங்கே இருப்பதே கொஞ்சம் தமிழர் என்பதால் இனிப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என் பெயர் யாரும் வைக்க மாட்டார்கள் என்ற பெரும் ஆறுதல் எனக்கு இருக்கிறது.

கண்ஸ் வீட்டில் இரண்டாவது பிள்ளை என்பதால் பெரியண்ணன் பேருக்குப் பொருத்தமாய் வைத்ததாக மாமியார் சொன்னார். அம்மு பிறந்தபோது எல்லாப் பொருத்தமும் பார்த்து மாமியாரே பெயர் வைத்தார். அழகு, லட்ஷணம் என்பதாகப் பொருள் வரும் அவர் பெயருக்கு. சதுவுக்கு என் சித்தப்பா வைத்த பெயர். எதிர்பாராமல் என் பிள்ளையாரின் பெயரே அமைந்ததில் அவ்வளவு சந்தோஷம் என்பதை விட எங்களோடு இப்போது இல்லாத சித்தப்பா நினைவாக அவர் பெயர் இருப்பது வரம்.

அம்முவும் சதுவும் என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். அதிலும் அம்மு அம்ம்ம்மா என்று அழுத்திச் சொல்லும்போதும், என்னாம்மா என்று சதுர் அடிக்குரலில் சொல்லும்போதும் நான் சரணாகதி. என் கண்ணன் என்னை கண்ணம்மா, தங்கம்மா என்று உருக வைப்பான். உபரியாக டா, டி வேறு. கோவம் வந்தால் மட்டும் கண்ணாளனாகி முழுதாகப் பெயர் சொல்வான்.

இப்பொழுது நானும் சிலரை தொடருக்கு அழைக்கலாம் என்றால் கடைசிப் பத்தி தரும் இதம் வேறு யோசிக்க விடவில்லை. சும்மாவே கைகாட்டிவிடுவது சுலபமில்லை. அத்தோடு ஓரளவுக்கு எல்லோரும் எழுதி வேறு ஆகிவிட்டது. தொடர அழைப்பவர்கள் முன்பே எழுதி இருந்தால் எனக்கு அல்ல கோபிக்கு ஆட்டோவோ லாரியோ அனுப்பிக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துக் கொல்லுங்கள். விருப்பமும் நேரமும் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள்.

என் உடன் பிறப்பு ப்ரியமுடன் வசந்த்

என் மனதிலிருந்து ப்ரியா

வெறும்பய ஜெயந்த்

வினு வினோத்

கூர்வாள் கயல்

மாணவன்

அக்கம் பக்கம் அமுதா கிருஷ்ணா

மனசு சே. குமார்

வர்ட்டா..

30 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

அம்மா வழி, அப்பா வழி உறவுகளில் அம்மாச்சி, செல்லம், ராசாத்தி இப்படியாக கூப்பிடுவார்கள். என் முன்னே பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரஜி.. மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள்.


........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சிரிச்சு முடியல.... இத்தனை பேர்களா?

மாணவன் said...

வணக்கம் மேடம்,

பெயர்க்காரணம் ரொம்பவும் சுவாரசியமா நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கீங்க அருமை :)

மாணவன் said...

தொடர்பதிவு லிஸ்ட்ல நானும் இருக்கேனா? நன்றிங்க மேடம்

நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் :)

எல் கே said...

இதெல்லாம் சரி....வேற ஒரு பேரு பதிவுலகில் உங்களுக்கு இருக்காமே ... அதை ஏன் சொல்ல வில்லை. மக்களே யாருக்காவது அந்த பெயர் தெரியணும்னா

Rs 1001 en bank accountku transfer pannunga

vinu said...

me firsttttttttu

vinu said...

adch cheaa thoppiyaagip poyirumooooooo

Anonymous said...

//செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது நினைவு தெரிந்த நாளில் இருந்து பிடிக்காது //

அம்புட்டு நல்லவுங்களா நீங்க சுசி?! ;)

//இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள் //

எவ்வளோ நிக் நேம்! ம்.. ம்..! :))

//அதை விட என் பெயர் இவர்கள் வாயில் படும்பாடு இருக்கிறதே.. கொடும்ம்மை //

இவ்வளோ சின்ன பெயர் வச்சும் கொடுமையா?! அப்ப நானெல்லாம் எங்க போய் முட்டிகிறது?! ;)

'பரிவை' சே.குமார் said...

அக்கா... நல்லா எழுதியிருக்கீங்க... விரிவாகவும் இருக்கு....
ஆமா கடைசியில நம்மளையும் மாட்டிட்டிங்களே... நண்பர் சிநேகிதன் அக்பர் காதல் பற்றி தொடர் அழைப்புக்கு அழைத்து ஒரு மாதமாகிறது. வேலையின் காரணமாக இன்னும் எழுதவில்லை. அடுத்தது பெயர்க்காரணமா? சரி எழுதுகிறேன்... எப்பன்னு நான் சொல்லமாட்டேன்.....

r.v.saravanan said...

me first

r.v.saravanan said...

என்னைப் பொறுத்தவரை தொடர்பதிவு எழுதுவதை விட தொடர யாரையாவது அழைப்பதுதான் அவ்வ்வ்வ்

ஹா ஹா

அமுதா கிருஷ்ணா said...

கொள்ளைக்காரி யாரு வைச்சதுப்பா..தொடர் பதிவு அழைப்பிற்கு நன்றி.

sakthi said...

பின்னாளில் கூட்டெண் 5 வரும்படியாக எழுது என்று அப்பா சொல்லித் தந்தார்

அட

வெள்ளை ஆப்பம்

ஜஸ்

வனிதா, மனிஷா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நயன் தாரா, ஷாலினி, ஜெனிலியா இப்போ லேட்டஸ்ட்டா டப்சி என்பது வரைக்கும் கூப்பிடுவார்கள்.

போதுமா சுசி

கோபிநாத் said...

\\என் முன்னே பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரஜி.. மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள்\\

என்னாமே தெரியலக்கா இந்த பத்தி மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது ;))

R. Gopi said...

:-), சில பெயர்கள் மிக நன்று. குறிப்பாக //மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் //

பித்தனின் வாக்கு said...

good

சுசி said...

இன்னமும் இருக்கு சித்ரா.. :)

@@

எழுதுங்க மாணவன்.

@@

கார்த்திக்.. கொழுத்திப் போட்டாச்சா.. டேங்க்சு :)

சுசி said...

புரியலை வினு..

@@

இல்லை பாலாஜி.. சின்ன/பெரிய பெயர்லை இல்லை. இவங்க உச்சரிப்பாலை கொலை செய்வாங்க. உங்க பேரு பாலாயி சாறாவானா ன்னுதான் வரும் :)

@@

நேரம் கிடைக்கும்போது எழுதுங்க குமார்.

சுசி said...

சிரிப்பா சரவணன்?? அடுத்த தொடர் பதிவுக்கு இப்போதே அழைப்பு விட்டாச். மருவாதையா எழுதிடணும் சொல்ட்டேன்.

@@

அட அது விட்டுப் போச்சில்லை அமுதாக்கா.. சரி இன்னொரு சந்தர்ப்பத்திலை சொல்லிடாம்.

@@

இன்னும் இருக்கு சக்தி. என்னாலையே தாங்கிக்க முடியாதப்போ நீங்க பாவம்னு விட்டிட்டேன் :)

சுசி said...

அப்டியா கோப்ஸ்.. இதோ லட்டுவுக்கு கால் பண்ணேன்னா எனக்கும் அவ்விடத்து நிலவரம் தெரிஞ்சுட்டு போவுது :)

@@

கோபி.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

@@

அண்ணா.. நலமா அண்ணா??

ப்ரியமுடன் வசந்த் said...

//வனிதா, மனிஷா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நயன் தாரா, ஷாலினி, ஜெனிலியா இப்போ லேட்டஸ்ட்டா டப்சி// நெம்பவே ஓவர்க்கா

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு ஃபோட்டோ பார்த்த அப்பா லைட்டா ஐஷ்வர்யா ராய் ஜாடை தெரிவதாகச் சொல்லி ஐஷ் என்று கூப்பிட்டதைக் கேட்டும் இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன் மக்கள்ஸ். // நான் மயக்கம் போட்டேன் யாராச்சும் என்னை காப்பாத்துங்களேன்

ப்ரியமுடன் வசந்த் said...

// இங்கே வந்ததும் என் கலர் காரணமாக சாக்லெட் என்று கூப்பிடுகிறார்கள்.// ஹ ஹ ஹா அப்போ ஆப்ரிக்கா பிரவுன் கலரா நீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

//என் உடன் பிறப்பு ப்ரியமுடன் வசந்த்/./

நன்றிக்கா

கண்டிப்பா அடுத்த போஸ்ட் அதான் யாரும் கூப்பிட மாட்டேன்றாங்களேன்னு நினைச்ச போஸ்ட் ஞாபகம் வச்சு கூப்பிட்டதுக்கு மிக்க நன்றிக்கா

சீமான்கனி said...

சுசிக்கா...ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹி .. ஹி .. ஹி .. ஹி .. சிரிச்சு முடியல....

Anonymous said...

சரியான காரணங்களை சரியான இடத்தில் கூறியிருக்கிறீர்கள்.சில சமயங்களில் செல்ல பெயர் என்று ஒரு பட்ட பெயரை வைத்து விடுவார்கள்.

Madumitha said...

உங்கள் பெயர்கள்
மட்டுமல்ல
உங்கள் எழுத்தும்
ரசிக்க வைக்கிறது.

சுசி said...

// நெம்பவே ஓவர்க்கா//
அதை அவங்களுக்கு சொல்லுங்க வசந்து..

இப்போ மயக்கம் தெளிஞ்சிட்டிங்க இல்லை..

ஹிஹிஹி.. அதே கலர்தான்..

எழுதுங்க எழுதுங்க..

@@

என் பொழைப்பு உங்களுக்கு சிரிப்பா கனி.. :)

@@

எனக்கு அப்டி பட்டப்பெயர் எதுவும் வெளி ஆளுங்க வைக்கலை புலி.

சுசி said...

நன்றி மதுமிதா.

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கீங்க சுசி:)!

கீறிப்புள்ள!! said...

உங்க பேர் தான் இங்க இழுத்துட்டு வந்தது.. ஆனா நல்லா எழுதிருக்கீங்க.. ஹா ஹா ஹா.. இத படிங்க அதே பேர்ல ஒரு கேரக்டர் வரும்..
http://minnalkeeetru.blogspot.com/2011/03/scene-1.html