Pages

  • RSS

24 November, 2010

உங்கள யாரு காப்பாத்த போறாங்க..

உங்கள யாரு காப்பாத்தப் போறாங்களோ தெரியலையே பிள்ளையாரப்பா.. இப்படி வந்திருக்கணும் தலைப்பு.. என் டீம் லீடர் இருக்காங்களே. இன்னைக்கு எனக்கு இல்லை உங்களுக்கு ஒரு கொடும் செய்தியை சொல்லிட்டாங்க. அவங்க ஃப்ரெண்டி அம்மாவுக்கு  95 வயசாம் இந்த வாரம். இதிலெந்த கொடுமையும் இல்லைங்க. இவளவு காலம் அவங்க உயிரோட இருந்தது சாதனை. அவங்க வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் சொல்லிட்டு வந்தாங்க. போன வருஷம்தான் முதல்முதலா சொன்னாங்களாம் ’நான் நினைக்கிறேன் எனக்கு கண்ணு கொஞ்சம் மங்கலா தெரியுது போல’ ன்னு. நானும் கலீக் ப்ரெட்டும்.. (அட அந்த ப்ரெட் இல்லைங்க.. இது Brett..) ம் கொட்டி தேவையான இடங்களில் மானே தேனே சொல்லி கேட்டுக் கொண்டிருந்தோம். இருங்க.. எதுக்கும் மறுபடி நினைவுபடுத்தி சரி பார்க்கறேன் அவங்க அதத்தான் சொன்னாங்களான்னு.

‘ஏய் அவங்க உன்னை மாதிரியேதான்.. ரொம்ம்ம்ம்ப அமைதி.. அதனாலதான் அவங்க இத்தனை வருஷம் உயிரோட இருக்காங்க.. நான் எங்க சொன்னேன்னு பாரு.. நீயும் நிறைய வருஷம் இருக்கப்போறே’ 

இதை கேட்டதும் நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். நீங்க கூட பரவால்லைங்க. தூர இருக்கிங்க. என் கண்ணாளனை நினைச்சுப் பாருங்க.. ஆவ்வ்வ்..

:(  :(

பசங்க பர்த்டேக்கு நான் செய்த ஐசிங். சது கேட்ட ஷாடோ என்ற கார்ட்டூன் ஃபிகர் சரியாக வந்தது. அம்முவோடது.. ஆவ்வ்வ்.. வெள்ளை நிறத்தில ஐபாட் கேட்டாங்க.. அது ஐ bad ஆகிவிட்டது. அம்மா மனம் நோகாமல் ‘இல்லைம்மா அது நல்லாருக்கு’ன்னு அவங்க ஆறுதல் சொல்லிட்டாங்க. நீங்களும்.. புரியுதில்லை?? அதையும் மீறினா கமண்ட் பப்ளிஷ் பண்ணமாட்டேன் சொல்லிட்டேன். இது எச்சரிக்கை இல்லை.. கட்டளை!!

DSCN0210 DSCN0211

:( :(

எல்லாரும் இன்னும் ஒரு தடவை தலைப்பை சொல்லிப்பாருங்கள். அதேதான். எனது அடுத்த தாக்குதல். பதிவுலக வரலாற்றில்.. அட என்னுடையதுங்க.. இரண்டாவது சமையல் குறிப்பு. பட்டர் கேக்.

முதலில் தேவையான பொருட்கள்.

IMG_0729 மா 500g

சீனி 500g

பட்டர்/மாஜரின் 500g

முட்டை 8 (படம் எடுக்கும்போது கோழி இடலை)

பேக்கிங் பவுடர் 4 தேக

வனிலா பவுடர் 4 தேக

 

முதலில் சீனி, மாஜரின் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒவொரு முட்டையாக சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். முட்டையை மொத்தமாக சேர்ப்பதைவிட ஒவொன்றாக சேர்த்தால் மெதுமெதுவென்று வருமாம் (வருகிறது) கேக். அது தடிப்பான கிரீம் மாதிரி ஆனதும் மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு பீட் செய்யுங்கள். கடைசியாக பேக்கிங்/வனிலா பவுடர்கள் சேர்த்து அதிகம் பீட் செய்ய வேண்டாம். செய்தால் கேக் கல்லாகிவிடும் (ஆகியது) அபாயம் நிறையவே இருக்கிறது. இனி கலவையை கேக் ட்ரேயில் பேக்கிங் பேப்பரோ இல்லை பட்டர் தடவியோ ஊற்றி 180c இல், அவனின்(அவனா ஓவனா?) நடுத் தட்டில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால்.. இப்படி வரும்.

IMG_0732

கத்தி லிஸ்ட்ல இல்லையே.. இப்போ எப்படி வந்தது என்று கேட்பவர்களுக்கு நான் செய்யும் கேக் செலவைப் பாராமல் பார்சலில் அனுப்பிவைக்கப்படும்.

முக்கிய அறிவிப்பு. மாஜரின் அல்லது பட்டர் அல்லது இரண்டும் கலந்து பாவிக்கலாம். ஆனால் பட்டர் சுவை தனி. அத்தோடு விருப்பமாயின் அன்னாசி எஸன்ஸ் ஒரு தேக சேர்த்துக் கொண்டால் அதன் மணமே தனி. விருப்பமான கலர் சேர்த்து இரண்டு லேயராக ஊற்றி பேக் செய்தால் அதன் அழகே தனி. படத்தில் கரையை மட்டும் கரெக்டா வெட்டி வச்சிருக்கேனே.. அந்தக் கரையோட சுவையே.. அதே தாங்க..

வர்ட்டா..

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

இரண்டு கேக்ஸ்ம் நல்லா வந்து இருக்குங்க. உங்களுக்கு ஆனாலும், ரொம்பவே தன்னடக்கம்.......
ரெசிபிக்கும் நன்றி. :-)

Anonymous said...

//ரொம்ம்ம்ம்ப அமைதி. //

நம்பணுமா?! ;)

//ஆறுதல் சொல்லிட்டாங்க. நீங்களும். //

ஹா ஹா நானும் சொல்லிடுறேன் ஆறுதல் சாரி சாரி பாராட்டு.. ;)

//எத பத்தின்னா கொலைவெறி //

:)) எவ்ளோ பெரிய மனசு...

மாணவன் said...

தகவல்களும் சமையல் குறிப்புகளும் அருமை,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

R. Gopi said...

கேக் டிசைன் சூப்பர்.

நீங்க அமைதியானவர்தான் சுசி, என்னையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது

எல் கே said...

//ஏய் அவங்க உன்னை மாதிரியேதான்.. ரொம்ம்ம்ம்ப அமைதி.//

என்னக் கொடுமை சுசி இது ????

எல் கே said...

//கேக் செலவைப் பாராமல் பார்சலில் அனுப்பிவைக்கப்படும். முக்கிய அறிவிப்பு.//

அனுப்புங்க அனுப்புங்க. இங்க ரெண்டு பேரு ரொம்ப நாளா பிரச்சனை தராங்க.அவங்களுக்கு கொடுக்கறேன். இல்லாட்டி அவங்க தலையில் போட்டுடலாம்

ராமலக்ஷ்மி said...

கலரை விடுங்க. அருமையா வ்ந்திருக்கு ஐபாட். குழந்தைகளுக்கு இனிய வாழ்த்துக்கள்!

பேக்கிங் பவுடரும் கடைசியிலா சேர்ப்பீர்கள்? நான் மாவுடனேயே சலித்து விடுவேன். இப்படியும் முயன்று பார்க்கிறேன்.

Madumitha said...

‘ஏய் அவங்க உன்னை மாதிரியேதான்.. ரொம்ம்ம்ம்ப அமைதி.. அதனாலதான் அவங்க இத்தனை வருஷம் உயிரோட இருக்காங்க.. நான் எங்க சொன்னேன்னு பாரு.. நீயும் நிறைய வருஷம் இருக்கப்போறே’

அவங்க சொன்னது பலிக்கட்டும்.

பார்க்கும் போதே சுவை கண்களுக்குத்
தெரிகிறது.

S Maharajan said...

//ஆவ்வ்வ்.. வெள்ளை நிறத்தில ஐபாட் கேட்டாங்க.. அது ஐ bad ஆகிவிட்டது. அம்மா மனம் நோகாமல் ‘இல்லைம்மா அது நல்லாருக்கு’ன்னு அவங்க ஆறுதல் சொல்லிட்டாங்க. நீங்களும்.. புரியுதில்லை?? அதையும் மீறினா கமண்ட் பப்ளிஷ் பண்ணமாட்டேன் சொல்லிட்டேன். இது எச்சரிக்கை இல்லை.. கட்டளை!!//


நல்லா இருக்குங்க!
என்ன செய்ய நான் பொய்யே சொல்ல மாட்டேன்
உங்களுக்காக சொல்லுறேன்.
நல்லா இருக்கு!
நல்லா இருக்கு!

அமுதா கிருஷ்ணா said...

ஐஸிங் சூப்பரா இருக்கு சசி..

அமுதா கிருஷ்ணா said...

ஐஸிங் சூப்பரா இருக்கு சுசி..

logu.. said...

Eppa paru Thingarathulaye irukangappa...


mmmmmudila.. eathachum kavithai podalamulla.. inimel intha pakkam varumpothu oru aruval konduvaralamnu iruken.

கோபிநாத் said...

கேக் படங்களில் நன்றாக வந்திருக்கு ;)

sakthi said...

வாவ் கேக் பார்க்க நல்லாயிருக்கு சுசி ஜி

சாப்பிட எப்படியிருந்தது என்பதை சாப்பிட்டவுங்க சொல்லட்டும்!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

nampi senju paakkalaamaa...

Ravi kumar Karunanithi said...

// குறிப்புகள அருமை, vazhthukkal.

r.v.saravanan said...

தகவல்களும் சமையல் குறிப்புகளும் good