Pages

  • RSS

22 November, 2010

திருக் கார்த்திகை விளக்கீடு.

திருக்கார்த்திகை தினத்தன்று இங்கே வீட்டின் ’பால்கனிகள் பூரா மெழுகுவர்த்தி (tealight) ஏற்றி வைக்கலாம்பா’ என்ற என் ஆசை ’பக்கத்திலேயே உக்காந்து பாத்துக்கோ.. வீடு மட்டும் பத்திக்கிச்சு இன்ஷூரன்ஸ் கம்பெனி பைசா காசு குடுக்காது’ என்ற நடைமுறை சாத்தியமான என்னவரின் பதிலோடு இன்றுவரை நிராசையாகவே. இருந்தாலும் வீட்டிற்கு உள்ளே எங்கெல்லாம் முடியுதோ அங்கெல்லாம் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பேன்.

அன்றைய தினம் ஊரில் அத்தனை வீடுகளும் ஜெகஜ்ஜோதியாய் இருக்கும். மின்விளக்குகளை அணைத்துவிட்டு சுட்டி விளக்கு (அகல் விளக்கு) வீட்டின் அத்தனை இடங்களிலும் வைப்போம். தடியில் துணி சுற்றி செய்த பந்தம் வீட்டைச் சுற்றி வைக்கப்படும். கேட்டுக்கு வெளியில் வாழை மரத்தை நட்டு வைத்து அதன் மேல் தேங்காய் மூடிக்குள் கற்பூரம் வைத்து ஏற்றினால் அது தான் மெயின் தீபம். எல்லாம் ஏற்றி ஆனதும் அப்படியே கோயிலுக்கு ஒரு விசிட். வீட்டுக்கு வரும்போது ஒரு முறை தீபங்களை மண் போட்டு அணைத்து வைத்திருந்தார்கள் வால் பசங்கள். அன்றிலிருந்து நாங்கள் கோயில் போகும் சமயம் அப்புச்சி காவற்காரன் பணியை மேற்கொள்ள, அவரிடம் சிக்கி கொட்டு வாங்கியவர்கள் அதிகம். கோயிலில் வாழை நட்டு அதைச் சுற்றி தென்னோலை கட்டி சொக்கப்பானை என்று எரிப்பார்கள். குளிருக்கு இதமாக நல்லா இருக்கும். படங்கள் கூகிளாண்டவர் உபயம். பாருங்கள்.

IMG_1240 

சர்வாலய தீபம், குமராலய தீபம் என்று வீடுகளிலும், ஆலயங்களிலும் ஏற்றப்படுவதை சொல்வார்கள் என்பதாய் ஞாபகம். அம்மாவுக்கு இப்போது கால் பண்ணி இதில் எது வீடு, எது கோயில் என்று கேட்டபோதுதான் ’ஐய்யோம்மா.. இண்டைக்கே அது.. அதுதான் நான் இண்டைக்கு மச்சம் சாப்பிடேக்க பல்லி சொன்னது`ன்னாங்க. ‘உங்க பல்லியெல்லாம் இருக்குதேம்மா?’ என்றேன். ‘இல்லையம்மா.. என்ர மனசுக்க சொல்லினது’ன்னாங்க. ரைட்டும்மா!! அம்மா குழம்பிவிட்டதால் அக்காச்சியிடம் ஃபோன் கொடுக்கப்பட்டு விஷயம் சொல்லப்பட்டது. ‘எனக்கு உதொண்டும் தெரியாது கண்டியோ.. இஞ்ச இவங்கள் சண்டை பிடிக்கிறாங்கள். இந்தா கருணோட கதை’ என்று ஃபோன் கருண் கைக்கு மாற்றப்பட்டது. ‘சித்தி.. அண்ணா அடிச்சுப்போட்டார்’ என்ற கருணின் கம்ப்ளெயிண்டுக்கு நான் நாட்டாமை ஆனதில் என் டவுட் அப்படியே டவுட்டாகவே இருக்கிறது.

ஊரில் விளக்கீட்டுக்கு முதல் நாளே அரிசிமா, உழுத்தம் மா, சீனி கலந்து தேங்காய்ப்பால் விட்டுப் பிசைந்து, அதை குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி, ஆவியில் அவித்து, சீனி சேர்த்துக் கொதிக்க வைத்த கெட்டித் தேங்காய்பாலில் கொட்டி பால் புட்டு என்று ஒன்று அம்மா செய்வார். அடுத்த நாள் காலையில் (அண்ணா எனும் இரண்டு கால் பூனையால் இரவே சுவை பார்க்கப்பட்டு) அப்படியே கெட்டியாகி இருக்கும். அதை பாளம் பாளமாக வெட்டிக் கொடுப்பார். ஹூம். அதன் சுவையின் நினைவு தந்த பெருமூச்சு இது. அன்று அம்மா கொழுக்கட்டையும் செய்வார். விளக்கீடு அன்று நாள் முழுவதும் அசைவம் கிடையாது.

இனி என் வீட்டு விளக்கீட்டைப் பாருங்கள். எனக்குத் தெரியாததால் நோ கொழுக்கட்டை, நோ பால் புட்டு.

IMG_0032 IMG_0034 IMG_0035

IMG_0036 IMG_0038 IMG_0042

IMG_0043 IMG_0044 IMG_0045

IMG_0046 IMG_0047 IMG_0048

IMG_0049 IMG_0050 IMG_0053

IMG_9985 IMG_9986 IMG_9987

IMG_0051 IMG_9990IMG_0055 

முழு நிலவு எதிரே மலை உச்சியில் எட்டிப் பார்த்தது. அதையும் கிளிக்.

IMG_0031IMG_0028 IMG_0030 

இன்னமும் இருட்டானதும் அழகா(?) எடுக்கணும்னு நினைத்துக் கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு வந்து பார்த்தால் பயபுள்ளை எங்கள் வீட்டுக்கு பின் பக்கமாய் மறைந்துவிட்டது. மலையில் எங்கள் வீட்டுக்கு மேலே இருக்கும் வீடுகளை இடித்துவிட்டு ஒளிந்திருக்கும் நிலவை படம் எடுக்க முடியாதென்பதால் இன்னொரு முழு நிலா நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். சரிதானே என் முடிவு??

வர்ட்டா..

27 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

ரொம்ப அழகா கார்த்திகை கொண்டாடி இருக்கீங்க சுசி.
கார்த்திகை அப்போ அம்மா மாவிளக்கு செஞ்சு அதுல நெய் போட்டு விளக்கு ஏத்துவாங்க, அது எரியும் போது நெய்வாசமும் மாவு லேசாக கருகும் வாசமும் வீடே நிறைஞ்சு இருக்கும், ரொம்ப மிஸ் பண்றேன் அத :(
படம் 49 & 9987 சூப்பர்..

எல் கே said...

படங்கள் அருமை சுசி

சி.பி.செந்தில்குமார் said...

யாரது மிட்நைட்ல பதிவு போட்டு எங்க தூக்கத்தை கெடுக்கறது?ஓ ஃபாரீன் பதிவரா/?இருங்க படிச்சுட்டு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

அட்,உங்க எழுத்துல எள்ளல்,துள்ளல்.நகைச்சுவை மின்னுதே ஓக்கே ஃபாலோ பண்ணிடறேன்.

>>>கோயிலில் வாழை நட்டு அதைச் சுற்றி தென்னோலை கட்டி சொக்கப்பானை என்று எரிப்பார்கள். >>>

நிங்க இங்கே இருந்தப்ப கிராமம்னு நினைக்கிறேன்,மண் வாசம் அடிக்குது

R. Gopi said...

சூப்பர். எல்லா போட்டோவும் நல்லா இருக்கு

ராமலக்ஷ்மி said...

இனிய நினைவுகள்.

உங்க வீட்டு விளக்கீடு படங்கள் யாவும் மிக அருமை. ஒளியப் பார்க்கும் முழுநிலா அழகு.

sakthi said...

வீட்டிற்கு உள்ளே எங்கெல்லாம் முடியுதோ அங்கெல்லாம் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பேன்.


அழகு
மிக அழகான மெழுகுவர்த்தியின் சுடரின் புகைப்படங்கள்.

தினேஷ்குமார் said...

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் தோழி

சொக்கபானைனு சொன்னதும் ஊர் ஞாபகம் வந்திருச்சு

Unknown said...

meeeeeeeee

the first..

susi akka..enda blog pakamum vaanga..

Unknown said...

me the second..
ஹே ஹே

நாங்களும் கார்த்திகை அன்று மூன்று அகல் விளக்கு
ஏத்தி வைத்தோம் வீட்டுவாசலில் .

உங்க புகைப்படம் எல்லாம் மிக அழகை இருக்கு
உங்கட பதிவை போல

logu.. said...

mmm.. vealkethrathu nallathuthan..

athukaga konjam unarchivasapattu
computer Cpu kulla eathiratheenga.

பித்தனின் வாக்கு said...

படங்கள் அருமை, நீங்க சொன்ன அயிட்டங்கள் எனக்கும் சாப்பிட ஆசை.விளக்கு ஒளியில் வீடு அருமையாக உள்ளது.

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அருமை.

r.v.saravanan said...

படங்கள் அருமை சுசி

உங்கள் பதிவு படிக்க சுவாரஸ்யமா இருக்கு

கோபிநாத் said...

படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கு...விளக்குகள் எல்லாம் மாமாவோட தேர்வா!? ;))

எனக்கும் வீட்டுக்குள்ள போகும் போது தான் தெரிஞ்சது அட இன்னிக்கு தீபான்னு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா எழுதி இருக்கீங்க..
விளக்குகளும் அழகு..

நானும் நல்லவேளை முதல் நாளே தெரிந்துகொண்டேன்..:)

Chitra said...

Beautiful photos. Superb, Susi!

கார்க்கிபவா said...

சூப்பர் ஃபோட்டோஸ்...

கயல் said...

ரசனைக்காரிங்க நீங்க! அத்தனியும் அழகு.

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப அழகான விளக்குகள்

அந்த விளக்குகள் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் ம்ம்

எனக்கு பிடித்த மாதங்கள் கார்த்திகையும் மார்கழியும் கார்த்திகை விளக்குகளுக்காகவும் மார்கழி குளிருக்காகவும்...

முதல் நிலாதான் அழகு!!!

சுசி said...

பாலாஜி.. எங்க ஊர்லயும் மாவிளக்கு விரதம் அனுஷ்டிப்பாங்க.. இப்போ நீங்க சொன்னதும் நினைவு வருது :))

--

நன்றி கார்த்திக்.

--

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்குமார். வெளிநாட்டு மண்ணுக்கு வந்திட்டாலும் கிராமத்து மண்ணை மறக்கக் கூடாதுங்களே :))

சுசி said...

நன்றி கோபி.

--

நன்றி அக்கா.. :))

--

நன்றி சக்தி :))

சுசி said...

படீர் படீர்னு அது வெடிச்சு வெடிச்சு எரியுறது நினைவு வந்திச்சா தினேஷ்குமார்?? இத சேர்த்திருக்கணும்.. மறந்துட்டேன் :))

--

நன்றி சிவா.

--

லோகு.. ரைட்டு!!

சுசி said...

அண்ணா.. எனக்கும் சாப்பிடத்தான் தெரியும்ணா.. இல்லேன்னா இவளவுக்கு பார்சல் வந்திருக்கும் :))

--

நன்றி குமார்.

--

நன்றி சரவணன்.

சுசி said...

கோப்ஸ்.. ஓடிப் போயிடுங்க..
அது சரி.. அது யாரு தீபா??

--

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலெட்சுமி. நல்லவேளைங்க.. உங்களுக்கு முன்னாடியே மனசுக்குள்ள பல்லி சொல்லி இருக்கு :))

--

நன்றி சித்ரா.

சுசி said...

நன்றி கார்க்கி.

--

உங்கள விடவா கயல் :))

--

விளக்கா வசந்து.. விளக்கிட்டா போச்சு..
சிலது நண்பர்கள் அன்பளிப்பு.. சிலது நானே வாங்கினது.. மெழுகுவர்த்தி நானே வாங்கினது..
எனக்கும் மார்கழி ஊர்ல இருக்குற வரைக்கும் பிடிச்சுது வசந்த். இங்க வந்து இந்த குளிர்ல மார்கழின்னாலே கிலி பிடிக்குது.. :))

கோபிநாத் said...

\\கோப்ஸ்.. ஓடிப் போயிடுங்க..
அது சரி.. அது யாரு தீபா??\\

ம்க்கும்.. என்னை அசிங்கபடுத்தலைன்னா தூக்கம் வராதே உங்களுக்கு...தீபம்ன்னு அடிச்சிருக்கனும் ;))