Pages

  • RSS

04 November, 2010

ஓ இதான் தீபாவளி(லி)யா??

deepavali-may-this-d-1255385323

காலையில் எழுந்து, தலைக்கு குளிச்சு, புது ட்ரெஸ் போட்டு, குடும்பமா கோயிலுக்கு போய் வந்து அம்மா செய்ற மட்டன் பிரியாணியை ஃபுல் கட்டு கட்டிட்டு, சாயந்தரம் பலகாரங்களை ஒரு கை பாத்தோம்னா முடிந்தது எங்கள் தீபாவளி கொண்டாட்டம்.

முன்னர் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்களும், பின்னர் கிறிஸ்தவ நண்பர்களும் வந்து சாப்பிட்டு போவாங்க. அரிசிமா, உழுத்தம்மா, எள்ளு சேர்த்து, எண்ணெயில் பொறித்த பின்னர் சர்க்கரைப் பாகு காய்ச்சி ஊற்றி அம்மா செய்யும் இனிப்பு முறுக்கு ரொம்பப் பிரபலம். பட்டாசும், மத்தாப்பும் சமயத்தில் எங்களுக்கு செலவில்லாமல் அரசாங்கமே வெடித்ததுண்டு. பெரும்பாலும் போர்நிறுத்தம் அமுலில் இருந்தாலும் கூட.

நான் குட்டிப் பெண்ணா இருந்தப்போ அப்பாவின் சிங்கள நண்பர்கள் குடும்பங்களாய் வருவார்கள். வீரா மாமா மட்டும் இன்னமும் நினைவில் ஒல்லியாய், உயரமாய் சிரித்தபடி. முஸ்லிம் நண்பர்களும் அயலவர்களாய் இருந்தார்கள். வந்தார்கள். பின்னர் அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டபின் கிறிஸ்தவ நண்பர்கள் மட்டும் வந்து போனார்கள். இன்னும் சற்று காலம் சென்றதும் விடுதலைப்புலி வீரர்கள். வந்து, இருந்து, மகிழ்ந்து, போகும்போது மனதில் கனத்தோடு கண்ணீரும் தந்து போவார்கள். சிலசமயம் அண்ணா விடுமுறையில் வருவார். அப்போதுதான் எங்கள் வீட்டில் பண்டிகையே களை கட்டும்.

தீபாவளி அன்று தீபங்கள் எல்லாம் ஏற்ற மாட்டோம். அதற்குத் தனியாக கார்த்திகை விளக்கீடு என்று ஒரு நாள் வரும். நேற்று அம்மாவிடம் கேட்டு அறிந்து கொண்ட வரைக்கும் இந்த மாதம் இருபதாம் திகதி வர இருப்பதாக அறிந்து கொண்டேன். அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன். எனக்கும் ஒரு இடுகைக்கு.. புரிகிறதுதானே?

இனி கொசுவத்தியை விட்டு விட்டு நடப்புக்கு வருவோம் என்றால் இற்றைக்கு பனிரெண்டு வருஷத்துக்கு முன் நான் இங்கு வந்ததும் லைட்டாக கொசுவத்தி ஆகி விட்டது. பொறுத்தருள்க. இங்கு வந்த புதிதில் நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்தோம். பாவம் அவர்கள். பின்னர் குழந்தைகள் பிறந்ததும் எல்லோரும் பிசியாகி விட்டோம். எப்போதாவது நினைவு வந்தால் வாழ்த்துவார்கள். தமிழ்த் தொலைக்காட்சிகளின் புண்ணியத்தால் இப்போதெல்லாம் மறக்காமல் வாழ்த்துகின்றார்கள். கொண்டாட்டம் இல்லாவிட்டாலும் இன்று இன்ன பண்டிகை என்றளவில் பசங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன். அவர்கள் வளர்ந்ததும் புரிந்து கொள்ளட்டும்.

எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மக்கள்ஸ். ஏனோ இந்த வருடம் உங்களோடு சேர்ந்து கொண்டாடும் நிலையில் என் மனம் இல்லை. எனக்கும் சேர்த்து நீங்கள் மகிழ்வாய் இருங்கள். மகிழ்வின் அலைகளை எனக்கு அனுப்பி வையுங்கள். எனக்காக இந்த பாடலை மட்டும் சேர்த்து வைக்கிறேன். பார்த்து மகிழுங்கள். எம் இளைய தளபதி இல்லாத தீபாவளியா? அது ஆவ்வ்வ்வ் இல்லாத சுசி போஸ்ட் ஆயிடுமே. அப்படியே பாடல் தந்த யூ டியூபுக்கும், கூடல்.காமின் படம் தந்த கூகிளாண்டவருக்கும் நன்றிகள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!! 
வாழ்த்தில கிளிக்குங்க.. பாடல் வரும்..

வர்ட்டா..

13 நல்லவங்க படிச்சாங்களாம்:

R. Gopi said...

\\ஏனோ இந்த வருடம் உங்களோடு சேர்ந்து கொண்டாடும் நிலையில் என் மனம் இல்லை. எனக்கும் சேர்த்து நீங்கள் மகிழ்வாய் இருங்கள்.\\

புரிகிறது சுசி

எஸ்.கே said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சுசி!

கோபிநாத் said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ;))

பாட்டு வரல...நீங்கு வேலை செய்யவில்லை யக்கோவ் ;)

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

சுசி said...

புரிஞ்சு போச்சா கோபி..

நன்றி எஸ் கே.

நன்றி அக்கா.

சுசி said...

என்ன கோப்ஸ்.. நீங்கு வேலை செய்லையாஆவ்வ்வ்.. வீட்டுக்கு போய் சரி பண்றேம்பா.

நன்றி வெறும்பய.

கார்க்கிபவா said...

தீபாவளி வாழ்த்துகள்ள்ள்

விஜி said...

சுசி. இங்க வா செல்லம், தீபாவளி மட்டுமில்ல எல்லாமே ஒரே நாளில் கொண்டாடிடுவோம், நோ வொர்ரிஸ்டி

ஜெய்லானி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சுசி said...

நன்றி கார்க்கிகிகிகிகி..

நான் வந்தா உனக்கு தான் விஜி வொர்ரிஸ்.. நீ என்னய ஷாப்பிங்லாம் கூட்டிப் போணும்டி :((

ரொம்ப நன்றி ஜெய்லானி. நலமா??

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சுசி said...

நன்றி குமார்.