Pages

  • RSS

14 February, 2010

குடை கொண்டு வாங்க..

காதல்.. எனக்கு எப்பவும் பிடித்த ஒரு வார்த்தை.. உயிருள்ளவை மட்டுமன்றி உயிரற்றவையும் காதல் செய்வதாக கற்பனை செய்து கொள்வேன். காதலிப்பவர்களை பார்த்து குதூகலிக்கும் என் மனம் தோற்றுப் போகும் காதலைப் பார்த்தால் துவண்டும் விடும். காதலை காதலித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ மனதில் காதலனுக்கு மட்டும் இடம் கொடுக்க முடியவில்லை. அல்லது எனக்கான என் கண்ணனை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

இதுக்கு நான் வளர்ந்த விதமும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். காதல் பொல்லாதது, தெய்வ குத்தம்னு யாரும் சொல்லல. எட்டாவது படிக்கும்போது “அக்கா.. ட்யூஷன்லவே புக்க விட்டு வந்திட்டேன். உன் க்ளாஸ்மேட் விமலன் கொண்டாந்து குடுத்தான். அவன பாக்கும்போது நம்ம சின்னண்ணன் மாதிரி இல்ல” னு சொல்லி முடிக்கிரத்துக்குள்ள, “அதுக்குள்ளவே பசங்கள பத்தி பேச்சா.. ஆளப் பாரு” னு சொன்ன அம்மா பத்தாவது வந்தப்போ இவன் சிரிப்பு நல்லால்ல, அவன் சூப்பரா பேசரான் பாத்தியானு எங்க கூட அரட்டை அடிப்பாங்க. அப்பா கூட யாரோட லவ் எந்த லெவெல்ல இருக்குன்னு டிஸ்கஸ் பண்ணிக்குவோம். அண்ணன்களோட அத்தனை ஃப்ரண்ட்சும் எங்க வீட்டுக்கு வந்து போவாங்க. சிலருக்கு எந்த வேளையும் வந்து போகக் கூடிய சிறப்பு அனுமதியும் உண்டு. இருந்தும் எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.

குட்டிப் பொண்ணா இருக்கும்போது சித்தியோட காதல், அதுக்கு பெரிய மாமாவால வந்த எதிர்ப்பு, அம்மா அப்பா துணையோட நடந்த அவங்க கல்யாணம் எல்லாம் பிரமிப்பை குடுத்துது. அவங்க மேல இருந்த பாசம் காதல் மேல ஒரு ஈர்ப்பை எனக்குள்ள உருவாக்கிடுச்சு. அதே சமயத்தில ரெண்டாவது மாமா காதல் கல்யாணத்தால தள்ளி வைக்கப்பட்டதும், மாமாவ தன் தம்பியே இல்லன்னு சொன்ன அம்மா தனியா உக்காந்து அழும்போது ஏன்னு தெரியாமலே நானும் அவங்கள கட்டிக்கிட்டு அழுதிருக்கேன். அது காதல் மேல ஒரு பயத்தையும் குடுத்தது. இருந்தும் எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை. (சிரிக்காதீங்க மக்கள்ஸ்.. அஞ்சு, ஆறு வயசிலேயே சிலருக்கு லவ்வு ஸ்டார்ட் ஆயிடுதாம்ல..)

அதே குட்டிப் பொண்ணா இருக்கும்போது ஒரு தடவை அப்பா கிராமத்துக்கு போயிருந்தப்போ ஒரு உறவுக்காரர் என்ன எப்ப பாத்தாலும் பிடிச்சு வச்சுக்கிட்டு “அக்கா இவள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், உனக்கு கட்டிக் குடுக்க சம்மதம்தானே” ம்பார். இந்த அசட்டு அம்மாவும் (கோச்சுக்காதீங்க அம்மா.. அப்போ அப்டித்தான் தோணிச்சு) சிரிச்சுக்கிட்டே தலைய ஆட்டுவாங்க. அம்மா கிட்ட கேட்டதோட விட்டிருந்தா பரவால்ல. அவர் டைரக்டா என்கிட்டவே “குட்டிம்மா மாமாவ கட்டிக்கிரியா” னு கேட்டப்போ மிரண்டு போய்ட்டேன். அப்புறமென்ன.. அவ்..லாம் இல்ல.. டைரக்டா ஆவ்வ்வ்.. தான். அவர் மிரண்டு போய்ட்டார். அப்புறம் எல்லாரும் சேர்ந்து என்னன்னமோ சொல்லி சமாதானம் செஞ்சாங்க.

அதுக்கு அடுத்த வருஷம் பெரிய மாமா வீடு போயிருந்தப்போ மாமியோட கடைசி தம்பி அதே கேள்விய கொஞ்சம் மாத்திக் கேட்டார். “இவள நான் கல்யாணம் பண்ணிக்கிரதுன்னா உறவு முறை சரியா இருக்குமாக்கா.. கொஞ்சம் பாத்து சொல்லேன்” லைட்டா பயம் வந்தாலும் அம்மா முன்னாடி சொன்ன சமாதானத்துல இது மட்டும் கொஞ்சம் நம்பும்படியா இருந்ததால சொன்னேன், “குட்டிப் பொண்ணுங்கள பெரியவங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. உங்களுக்கு தெரியாதா மாமா” என்னதான் எல்லாரும் சிரிச்சிட்டாங்கன்னாலும் அதுக்கப்புறம் அவர் வடக்க வந்தா நான் தெற்க போய்டுவேன். பச்சப் புள்ளய என்னம்மா மிரட்டி வச்சிருக்காங்க பாருங்க. ரெண்டும் ஒரே மாட்டர்ங்கிரதால இதுக்கு முந்தைய பத்தியில இத சொல்லல. எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.

முடிவு பண்ணிட்டேங்க. எனக்கு ரொம்ப பிடிச்ச காதலையே தொடர் பதிவா எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப நாளா தொடர் பதிவு எழுதணும்னு நினைச்சிருந்தாலும் இதுதான் சரியான சந்தர்ப்பம்னும் தோணிச்சு. இது பத்தின உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க. பிடிக்கலேன்னா இங்கவே முற்றும் போட்டிடலாம்.

இன்னைக்கு இங்க ரொம்ப ஸ்பெஷல். ஏன் தெரியுமா? காதலர் தினம் மட்டுமில்லாம அன்னையர் தினம் + Fastelaven னு சொல்லி கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுற ஒரு நாள்.அன்னையர் தினத்துக்கு எல்லா அம்மாக்களுக்குமான பரிசு இதோ..j 011

ஃபாஸ்தெலாவென்(Fastelaven) னு சொன்னா இன்னையில இருந்து 40 நாட்களுக்கு அதாவது ஈஸ்டர் வரைக்கும் விரதம் இருப்பாங்களாம். அதுக்காக உடலை தயார்படுத்துற சின்ன கொண்டாட்டம்தான் இது. இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் பன் செஞ்சு, நிறைய்ய்ய்ய்ய ஃப்ரெஷ் க்ரீம் + ஜாம் வச்சு சாப்டுவாங்க. விரதத்துக்கு தயாரா உடல்ல நிறைய கொழுப்பு சேத்துக்குவாங்களாம். அப்டீன்னு சொன்னாங்க. நாம சம்பிரதாயப்படி பன் சாப்பிடறதோட சரி. மேலதிக விபரங்கள் தெரியல. உங்களுக்கும் இதோ..

1.1854492!img1854474

அத்தோட ப்யொர்க் (Bjørg) னு ஒரு மரத்தோட தடியில குட்டி குட்டியா அரும்புகள் வந்திருக்கும். இந்த வருஷ ஓவர் குளிரால இன்னும் வரல. அதில சாயம் போட்ட இறகுகளால அலங்கரிப்பாங்க. குறிப்பா நர்ஸரி பசங்க வேலை இது. அதும் பேரு ஃபாஸ்தெலாவென்ஸ்றீஸ் (Fastelavensris). அதையும் பாருங்க.

Fastelavensris

அப்புறம் என்னங்க.. எல்லா அன்பு இதயங்களுக்கும் என்னோட காதலர் தின வாழ்த்துக்கள். சந்தோஷமா, என்னைக்கும் இதே அன்போட இருங்க. வரட்டுங்களா..

26 நல்லவங்க படிச்சாங்களாம்:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்..

ப்ரியமுடன் வசந்த் said...

உ.பி.போஸ்ட் செம்ம இண்ட்ரெஸ்ட்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஃபாஸ்தெலாவென்ஸ்றீஸ் (Fastelavensris)...

உங்க தமிழாக்க ஆர்வத்தை என்ன சொல்லி பாராட்டுறதுன்னு தெரில... அய்யோ அய்யோ...

ப்ரியமுடன் வசந்த் said...

//எனக்கு ரொம்ப பிடிச்ச காதலையே தொடர் பதிவா எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். //

ஒருவாட்டி முடிவெடுத்தெட்டா நம்ம பேச்ச நம்மளே கேக்ககூடாது ஆமா....

பா.ராஜாராம் said...

என்ன சுசி நீங்க..

இவ்வளவு அருமையான இடத்தில் வந்து தொடரும் போட்டுட்டீங்க.

சீக்கிரம் தொடருங்க.

:-)

வாழ்த்துக்கள்!

Chitra said...

உங்கள் சிறு வயது பயங்கள் அறிந்து சிரித்து விட்டேன். Fastelaven , அமெரிக்காவில் Mardi Gras கொண்டாட்டம் போல இருக்குமோ?

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

//எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.//

எப்போதுதான் அறிந்தீர்கள்:)? ஆவலாகக் காத்திருக்கிறோம்!

கார்க்கிபவா said...

ரைட்டு..

வாழ்த்துகள்..

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

he he he..

hahaha ennada epdi startpanrenu pakrengala..

unga padivu padichutu vaivitu siricpa enkooda eurntha staff ellam oru matirii aitunga..

kalakalana padivunga.

hmm etha chonaudney enakum old memories..

na china pilya erunthapa..(epovum na chinapilaithanga..)pakathuvetu ponuku lover letter kuduthena..athavathu n3vagupu padikupothu...antha ponu paditchu pathu kilichu potuta..keten neriya spelling mistakesnu cholita..

epo kooda anta ponu enna pathu sirikum athu vera visiam...

so muthathila entha padivila enga groupey nanichtomnga...supera erunchunga..
//எனக்கான என் கண்ணனை நான் இப்போதும் அறிந்திருக்கவைல்லை.//yarunga anta puniyam citha nalavar."
Avaludan ethir parkirom...

Valga Valamudan
V.v.s Group

நினைவுகளுடன் -நிகே- said...

உங்கள் பதிவு அருமை
காதலை பற்றி நீங்கள் எழுதும் தொடரை
நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

malarvizhi said...

நல்ல பதிவு .தொடரட்டும் பயணம். காத்திருக்கிறோம் .........

சுசி said...

நன்றி அண்ணாமலையான்.

#####

அப்டியா உ.பி.. ஹிஹிஹி.. இங்க அப்டிதாம்பா உச்சரிக்கணும். அதான் ஒரு ஆ.கோ ல எழுதிட்டேன்.. ஆஹா.. நம்மாள் சொன்னதில்ல.. நினைவு படுத்தினத்துக்கு தாங்க்ஸ்பா..

#####

நன்றி பா.ரா. தொடர்ந்திடலாம்.

சுசி said...

அதேதானாம் சித்ரா.. வீக்கியாண்டவர் சொல்றார்.. :)))

#####

நன்றி அக்கா.. சொல்றேன்..

#####

ரைட்டா.. ஓ.. தொடர்ந்து எழுத சொல்றீங்களா?? நன்றிகள் குரு..

சுசி said...

நன்றி தமிழ் பிரியன்.

#####

நன்றி காம்ப்ளான் சூர்யா. இப்போவும் உங்கள பாத்து சிரிக்கிறாங்களா??
தைரியசாலி போல.. :)))

#####

நன்றி நிகே.

சுசி said...

நன்றி மலர்விழி.

சொல்லரசன் said...

//இது பத்தின உங்க கருத்தையும் சொல்லிட்டு போங்க.//

ஆரம்பிங்க உங்க தொல்லை... சாரி தொடர் பதிவை

சீமான்கனி said...

தொடரா....அப்போ தொடர்ந்து வந்துருவோம் ...நல்லா இருக்கு...
//கும்மியோ குத்தோ வாழ்த்தோ.. உங்க இஷ்டம் மக்கா...
ஆனா எழுதிட்டு மட்டும் போங்க.//
ஐ...:-))))))

கோபிநாத் said...

ரைட்டு...ஒரு வாழ்த்துக்களை போட்டுகிறேன் ;-))

நீங்க எழுதினா அது காதல் தொடர் அதுவே மாமாஸ் எழுதினா!!??

என் சோக கதையை கேளு தாய்குலமேன்னு இருக்குமா!! ;-)))

கலக்குங்க ;)

சுசி said...

நன்றி இயற்கை.

#####

நன்றி சொல்லரசன். நல்லாருங்க.

#####

நன்றி சீமான் கனி. எதுக்கிந்த 'ஐ' ??

சுசி said...

கோபி.. உங்கள படிக்கத்தானே சொன்னேன்.. என் போஸ்ட படிக்க சொன்னேனா??

கிர்ர்ரர்ர்ர்ர்..

ரைட்டு.. நானும் ஒரு நன்றிகள போட்டுக்கிறேன் :))

சீமான்கனி said...

//எதுக்கிந்த 'ஐ' ??//
chumaa..

சுசி said...

இப்டி சும்மால்லாம் மிரட்ட கூடாது சீமான் கனி :)

பித்தனின் வாக்கு said...

வழக்கம் போல இப்பவும் லேட்தான். வாழ்த்துக்கள் சுசி, அதுதான் இப்ப கண்ணாளன் வந்துட்டாருல்ல. நல்ல பதிவு.

பித்தனின் வாக்கு said...

/// என் சோக கதையை கேளு தாய்குலமேன்னு இருக்குமா!! ;-))) //
இரகஸ்யத்தை எல்லாம் வெளியில்ல சொல்லக் கூடாது. பாவம் மச்சான், பாடக்கூட முடியாது. ஹா ஹா

Anonymous said...

தொடருக்கே தொடரும் போட்ட நீங்க பெரிய ஆளுதான். :)