Pages

  • RSS

15 December, 2009

திசம்பர் 10.

திசம்பர் 10.
என் வாழ்க்கேல ரெண்டு முக்கிய, மறக்க முடியாத நிகழ்வுகள நடத்திய நாள்.


எனக்கு டைரி எழுதுற பழக்கம் (இப்பவும்) இருந்திருந்தா திசம்பர் பத்து அன்னிக்கு இப்டி எழுதி இருந்திருப்பேன். ஒண்ண சொன்னேன்னா என் கண்ணன் கோச்சுக்குவான். சோ.. இன்னொண்ண மட்டும் சொல்றேன்.


திசம்பர் பத்தோட சரியா ரெண்டு வருஷமாச்சு நான் வேலைக்கு சேர்ந்து. என் திறமைக்கும்(?) அவங்க பொறுமைக்கும்(!) இடையில ரெண்டு வருஷம் எப்டி போச்சுன்னு தெரீலிங்க. இப்போ ரெண்டு வாரம் லீவ் எனக்கு. உண்மைய சொல்லணும்னா வெள்ளி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர மனசே வரல. வேலைக்குப் போம்போது எப்படா லீவ் கிடைக்கும்னு இருக்கும். லீவுன்னு வந்ததும் லைட்டா ஒரு ஃபீலிங் எட்டிப் பாக்கத்தான் செய்யுது. இனி கொஞ்ச நாள் இங்க வர முடியாதேன்னு. என் டெஸ்க்ல வச்சிருக்கிற ஆர்கிட்டுக்கெல்லாம் (ஆர்குட் இல்லப்பா) டாட்டா  சொல்லி  பத்ரமா பாத்துக்க சொல்லி ஒரு கலீக்  கிட்ட  பொறுப்பு  குடுத்திருக்கேன்.


ஒருத்தங்க லீவ்ல போராங்கன்னாவே என்னமோ நாமளே லீவ்ல போறா மாதிரி இருக்கும். இன்னும் எத்தனை நாள்ல உனக்கு லீவுன்னு தினமும் நாட்களை எண்ணிக் கிட்டே இருப்போம். இனிமே கிறிஸ்துமஸ் முடிஞ்சுதான் ஆபீஸ் போவேங்கிரதால கலீக்ஸ்  அன்ப கொஞ்சம் அதிகமாவே  காமிச்சாங்க. பல் வலின்னு போனவளுக்கு டென்டிஸ்ட் கண்ட மேனிக்கு ஊசிய குத்தி ட்ரீட்மென்ட் செஞ்சதில கன்னம் வீங்கி செம  வலி. அதையும் மறந்து ஆ கோ ல அதே கன்னத்தில இறுக்கி முத்தம்  குடுத்துட்டு  சாரி சொல்லி அப்பாவியா அவங்க முழிச்சப்போ வலி மறந்து சிரிக்க  ஆரம்பிச்சிட்டேன். (பட்ட கால்ல மட்டும் படாதோ? பழமொழிய மாத்த  சொல்லணும்)  அதோட  சிலபல பறக்கும் முத்தங்கள், அணைப்புகள்னு எனக்கு மட்டும் இல்லாம கண்ணாளன் + பசங்களுக்கும் குடுக்க சொல்லி கிடைச்சுது. அப்டியே கிரிஸ்த்மஸ் பரிசு  பரிமாற்றங்களும். 


முதல்ல ட்ரெய்னியா ஆபீசுக்குள்ள ரைட் லெக்க வச்சப்போ  நல்லாவே  கககாவி மாதிரி இருந்திச்சு. எங்க ரூம விட்டு வெளிய வந்தா மறுபடி போக தெரியாம  சுத்தி   சுத்தி வந்திருக்கேன். எல்லா ரூமையும் ஒ..ரே ப்ளான்ல கட்டி வச்சிருக்குதுங்க.   (இப்போ புதுசா வர்றவங்களுக்கு நான் வழிகாட்டி).  அதிலயும் என் நிறப் பிரச்சனை சிலரால இன்னமும் ஒத்துக்க முடியாத ஒண்ணு. (அதுக்குன்னு நாம சிவாஜி ரஜினி சார் மாதிரியா   பண்ண  முடியும்)  பாக்க பிடிக்கலேன்னா அது அவங்க பிரச்சனை இல்லையா. எங்க டிபார்ட்மெண்டுக்கு  இண்டர்நஷனல் டிபார்ட்மெண்டுன்னு செல்லப் பேரு. எங்க ஏழு பேர்ல ரெண்டு பேர்தான் நார்வேஜியன்ஸ். மீதி அஞ்சு பேரும் அஞ்சு நாட்டுக்காரங்க. ஜெர்மன், சிலி, சவுத் ஆபிரிக்கா, செச்சீனியான்னு மத்தவங்களுக்கு  ஒன்லி  இனப்  பிரச்சனைதான். நமக்குதான் இனம் + நிறம்.


குடுக்கிற வேலைய ஒழுங்கா செய்றவ, சிரிச்ச முகத்தோட(?) வளைய வர்றவ, பழக இனிமையானவ, அன்பானவ, கலர் கலரா டிரஸ் பண்ணி  அதுக்கு பொருத்தமா  ஆக்சசரீஸ் போடரவ, என்னதான் நாட்டுக்கேத்தா மாதிரி இருந்தாலும் தான் வளர்ந்த விதம் மறக்காம தன்னோட எல்லை எதுன்னு தெரிஞ்சவ இப்டி  நிறையா சொல்லி இருக்காங்க கலீக்ஸ் என்னப் பத்தி (ம்க்கும். படிக்கிறவங்க இங்க வரமாட்டாங்கங்கிற தைரியம்.. நடத்து நடத்து)  எல்லாத்துக்கும் மேல என் கோபத்த இதுவரை யாரும் பாக்கலையாம் (நல்லவேளை.மனசுக்குள்ள கெ.வா லாம் சொல்லி திட்டுறது  யாருக்கும் கேக்கல சாமியோவ்) இதாவது தேவலைங்க சமயத்துல ஏன் உன் கன்னம் திடீர்னு சிவந்திருக்குன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்கு காரணம் என் கண்ணன்னு எப்பூடி சொல்வேன்.. அவ்வ்வ்..


சில பதிவுகள,  கமன்ட்ஸ  படிச்சிட்டு டங்குன்னு தலைய டெஸ்க்ல மோதும்போதும் (என் பதிவ எழுதுறதோட சரி, நான் அத மறுபடி படிக்கிறதில்ல. சோ.. அவசரப்பட்டு கமன்ட ரெடியாக வேண்டாம்) லைட்டா ஃபீலாகி உக்காந்திருக்கும்போதும், கெக்கேபிக்கேன்னு சிரிக்கும்போதும் கொஞ்சம் இல்ல நல்லாவே மிரண்டு போயிடறாங்க. அப்புறம் சாரி சொல்லி விஷயத்த விளக்க வேண்டியதாயிடுது. நெட்ல மேயிறத்துக்கு சம்பளம் குடுக்கல பரவால்ல. ஆனா இப்டி ட்ரான்ஸ்லேஷன்லாம் செஞ்சு விளக்கம் குடுக்கிறதுக்கு எதுனா தரணும் இல்ல? அடுத்த PDD ல பேசணும்.. மறக்காம.


மொத்தத்தில ரொம்ப நல்ல ஆபீஸ், திருப்தியான வேலை, அன்பான கலீக்ஸ். இவளுக்கு போயி இங்க வேலையான்னு நம்ம மக்களிடையே பொறாமை வர்ற அளவுக்கு ஆகிப்போச்சு. குறிப்பா கண்ணாளன். 09:00 - 14:00 தவிர மீதி நேரம் என் இஷ்டத்துக்கு போய் வர்றது, நினைச்சதும் மட்டம் போடுறது, ஜன்னலோரம்  உக்காந்து  தெருவ  வேடிக்கை  பாக்குறது (ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க்  இருந்தா  அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது  அறிவ  வளர்க்கிறதும்   தப்புங்களா?)  மூணும் அவர கடுப்பேத்துற விஷயங்கள்ல அடங்கும்.


கடவுள் அருளால எந்த பிரச்சனையும் எனக்கோ, என் ஆபீசுக்கோ வரலேன்னா தொடர்ந்து அங்கனவே குப்பைய கொட்டலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. ஏன் ஆணி புடுங்கலாம்னு சொல்லலைன்னு பாக்கறீங்களா? அதாம்பா ஆபீசும், கலீக்சும்  என் குடும்பம் மாதிரி ஆயிடிச்சுன்னு ஜிம்பலக்கடியா சொல்றேன்.
வரட்டுங்களா.. 

30 நல்லவங்க படிச்சாங்களாம்:

நேசமித்ரன் said...

:)

விட்டாச்சு லீவுங்கிரதையும்
இப்படி ஒரு கோணத்துல சொல்ல உங்களால தான் முடியும் சுசி

உங்களோட கடமை உணர்வுக்கு சல்யூட்டு

சங்கர் said...

ஏனுங்கக்கா, எங்கேயும் சுருக்கெழுத்து கிளாஸ் சேர்ந்துட்டீங்களா?

சங்கர் said...

//நெட்ல மேயிறத்துக்கு சம்பளம் குடுக்கல பரவால்ல. ஆனா இப்டி ட்ரான்ஸ்லேஷன்லாம் செஞ்சு விளக்கம் குடுக்கிறதுக்கு எதுனா தரணும் இல்ல? அடுத்த PDD ல பேசணும்.. //

நியாயமான கோரிக்கை, தரலைனா சொல்லுங்க, உண்ணாவிரதம் ஆரம்பிச்சிரலாம்

சங்கர் said...

//ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க் இருந்தா அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது அறிவ வளர்க்கிறதும் தப்புங்களா? //

தப்பே இல்லீங்க, அது ஆபீஸ் ஜன்னலானாலும் சரி கம்ப்யுட்டர் ஜன்னலானாலும் சரி, எட்டிப்பார்த்தா பொதுஅறிவு நிச்சயம் வளரும்

இளவட்டம் said...

ரெண்டு வாரம் லீவா?இங்க அரபு தேசத்துல ஒரு நாளைக்கே வழி இல்ல.

கலையரசன் said...

எய்க்கா... ம், கலகலப்பு பெடலெடுக்குது!!

ஆப்பீஸ்க்கு ஏன்டா போறோம்ன்னு நான் இங்க "ரீஃபோர்ஸ்ட்" ஆகிகிட்டு இருக்கேன்! நீங்க என்னடான்னா, போலைன்னா போர் அடிக்கும் பம்பு செட்டு அடிக்குமுன்னு "கூலா" செப்புறீங்க!!

ரைட்டு.. நல்லாயிருங்க!!

கலையரசன் said...

கககாவி, ஆ கோ ல, கெ.வா,..
இதெல்லாம் என்னக்கா? திங்கிற பொருளா?
எல்லாத்துலேயும் ரெண்டு ரெண்டு பார்சர் கட்டி அனுப்பு!!

எப்டியா இருந்தாலும் 15 நாளைக்கு சும்மாதான் இருப்பீங்க... டெய்லி ஒரு பதிவு போட்டு பதிவர்களை தெறிக்க விடுங்க!!
(அவ்வ்வ்வ்வவ.. வாய வச்சிகிட்டு சும்மா இருக்கமாட்டேன் நானு!)

கார்க்கிபவா said...

//நெட்ல மேயிறத்துக்கு சம்பளம் குடுக்கல பரவால்ல. ஆனா இப்டி ட்ரான்ஸ்லேஷன்லாம் செஞ்சு விளக்கம் குடுக்கிறதுக்கு எதுனா தரணும் இல்ல//

குச்சி மிட்டாய்? குருவி ரொட்டி?

//டெய்லி ஒரு பதிவு போட்டு பதிவர்களை தெறிக்க விடுங்க!

உங்களுகுத்தான் எவ்ளோ பெரிய மனசு கலை?

கோபிநாத் said...

ஆகா...லீவா!!!!!!!!!!! ஜாலி தான் அப்போ ;))

ம்ம்..ஒரு விஷயத்தை சொல்லவேல்ல ரைட்டு ;) பல்வலி போயிகிடுச்சா!?

பரிசு பெருட்கள் அது இதுன்னு எல்லாத்தையும் கொடுத்து வேலை செய்யவில்லைன்னா ஏன்னு கேள்வி கேட்கமால். ஜன்னால் பக்கத்துல சீட்டு..எப்போ வேணுமுன்னாலு லீவு...யக்கா உண்மையை சொல்லுங்க உண்மையில் இப்படி ஒரு ஆபிசு இருக்கா!!!!!!!!!!!!! ;))

என்ஜாய் பண்ணுங்க ;)

கோபிநாத் said...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இந்த கலை சொல்ற பேச்சை எல்லாம் கேட்காதிங்க...;)

ப்ரியமுடன் வசந்த் said...

// ஒண்ண சொன்னேன்னா என் கண்ணன் கோச்சுக்குவான். சோ.. இன்னொண்ண மட்டும் சொல்றேன்.
//

ஏன் கண்ணா கோச்சுக்குறான்? இன்னாமேட்டரு?

ப்ரியமுடன் வசந்த் said...

//திசம்பர் பத்தோட சரியா ரெண்டு வருஷமாச்சு நான் வேலைக்கு சேர்ந்து. என் திறமைக்கும்(?) அவங்க பொறுமைக்கும்(!) இடையில ரெண்டு வருஷம் எப்டி போச்சுன்னு தெரீலிங்க.//

ஹெ ஹெ ஹே...

சுசியோட திறமை

ப்ரியமுடன் வசந்த் said...

// பல் வலின்னு போனவளுக்கு டென்டிஸ்ட் கண்ட மேனிக்கு ஊசிய குத்தி ட்ரீட்மென்ட் செஞ்சதில கன்னம் வீங்கி செம வலி. //

டாக்டர்க்கு சரியான வைத்தியம் தெரில பல்லுல ஊசி போடறதுக்கு பதிலா கன்னத்தில ஊசி போட்ட்ட்டாரு போல...

ப்ரியமுடன் வசந்த் said...

கககா

ஆகோ

என்னது உபி

ப்ரியமுடன் வசந்த் said...

லீவுக்கு ஒழுக்கமா புள்ளைகள ஊர்சுத்திக்காட்டணும் பதிவு கிதிவுன்னு வந்தாமாதிரி இருந்துச்சு குணாக்கு கால் பண்ணி சுசிய பத்து நாளும் ஜெயில்ல போடசொல்லிடுவேன்..

சுசி said...

ரொம்ப நன்றி நேசமித்திரன்.

+++++

வொய் சங்கர்? இன்னும் எழுதி இருக்கணும்கறீங்களாஆ?
அனேகமா அடுத்த வருஷம் உவி இருக்க வேண்டியது வரும். ரெடியா இருங்க.
நீங்களும் ஜன்னலோரம்தான் ஆபீஸ்ல இருக்கீங்களா?

+++++

அச்சச்சோ.. இங்க கட்டாயம் வருஷத்துக்கு அஞ்சு வாரம் லீவ் எடுத்தாகணும் இளவட்டம்.

சுசி said...

ஆபீசுக்கு சைட்ட எதிர்பார்த்து போனா அப்டித்தான் இருக்கும் கலை.
பார்சலாஆ? ஏன் தம்பி. பாம்பு பல்லி தவிர மீதில்லாம் இப்போதானே சாப்டீங்க. அது முதல்ல செரிக்கட்டும்.

+++++

குச்சி மிட்டாய், குருவி ரொட்டி ரெண்டையுமே அனுப்பி வச்சிடுங்க கார்க்கி.சாப்டு ரெம்ப நாளாச்சு. (உங்களுக்கு மட்டும் காட்ஸில்லா கையால பீசாவும் கோக்கும் இல்ல?) ஏன் கலைய திட்டறீங்க. நான் பதிவு போடப் போறதில்ல. போதுமா???

+++++

தம்பி.. கோபி.. அவ்வ்வ்.. இது பாசம். பல்வலி போய்டுச்சுப்பா. இந்த சலுகை எல்லாருக்கும் கிடையாது. என்ன மாதிரி கடமை, கண்ணியம், கட்டுப்பாடோட வேலை பாக்கறவங்களுக்கு மட்டுந்தேன்.
பயப்பிடாதீங்க கோபி. கலை பேச்ச கேக்க மாட்டேன். என் மேல கடுப்பில இருக்கிறதால அவர் குடுத்த (மோசமான)ஐடியா இதுன்னு தெரியுது எனக்கு.

சுசி said...

சொல்லிடுவேன் வசந்து.. கோச்சுகிட்டா பரவால்ல. இப்போ அடிப்பேன்னும் சொல்லிட்டான். பல்லில இல்ல ஈறில போட்டுட்டாங்க. அதான்.
இது தெரியலையா? கண்ண கட்டி காட்ல விடுறது, ஆர்வ கோளாறு. (பார்ரா.. ஒண்ண மட்டும் கரீட்டா புரிஞ்சுகிச்சு)
ரைட்டு. அப்போ உங்க பதிவும் படிக்கல உபி.

விக்னேஷ்வரி said...

குடுக்கிற வேலைய ஒழுங்கா செய்றவ, சிரிச்ச முகத்தோட(?) வளைய வர்றவ, பழக இனிமையானவ, அன்பானவ, கலர் கலரா டிரஸ் பண்ணி அதுக்கு பொருத்தமா ஆக்சசரீஸ் போடரவ, என்னதான் நாட்டுக்கேத்தா மாதிரி இருந்தாலும் தான் வளர்ந்த விதம் மறக்காம தன்னோட எல்லை எதுன்னு தெரிஞ்சவ இப்டி நிறையா சொல்லி இருக்காங்க கலீக்ஸ் என்னப் பத்தி //
கொசுத் தொல்லை தாங்க முடியல.... ;)

ஏன் உன் கன்னம் திடீர்னு சிவந்திருக்குன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்கு காரணம் என் கண்ணன்னு எப்பூடி சொல்வேன் //
ஆஹா...

சில பதிவுகள, கமன்ட்ஸ படிச்சிட்டு டங்குன்னு தலைய டெஸ்க்ல மோதும்போதும் //
நீங்க இதை பண்ணும் போது பார்த்தா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்கிறேன். ஹாஹாஹா....

ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க் இருந்தா அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது அறிவ வளர்க்கிறதும் தப்புங்களா? //
இப்படி அப்பாவியா நீங்க கேக்குறது நல்லாருக்கு. :)

Good Entertaining Post Susi. Rock.

பா.ராஜாராம் said...

ஆமாம்ப்பா ஆமாம்!

கொள்ளை காரியே!

பா.ராஜாராம் said...

ஒரு விருது இருக்கு மக்கா.நம் தளத்தில்.

நேரம் வாய்க்கிறபோது ஒரு நடை..

Chitra said...

ஆபீசில் வேலை பற்றியும் லீவு பற்றியும் நல்லா தமாஷா கலக்குறீங்களே..............விருதுக்கு வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

:))

சுசி said...

அப்டியா விக்கி? திருப்பூர்ல ரூம் போட்டு தொல்லை பண்றத விடவாம்மா??

//Good Entertaining Post Susi. Rock.//
இப்டி கெட்ட வார்த்தேல அக்காவ திட்டக் கூடாது தங்கச்சி.

சுசி said...

ஹிஹிஹி... நன்றி ராஜாராம். விருதுக்கும் கொள்ளைக்காரீங்கிரத ஒத்துக்கிட்டத்துக்கும்.

+++++

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சித்ரா.

+++++

முதல் வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி பூங்குன்றன்.

Anonymous said...

//அதோட சிலபல பறக்கும் முத்தங்கள், அணைப்புகள்னு எனக்கு மட்டும் இல்லாம கண்ணாளன் + பசங்களுக்கும் குடுக்க சொல்லி கிடைச்சுது.//

கிறிஸ்மஸ் நேரத்துல இதுங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஒன்பது வருஷம் நியூஸில பழகின நட்புக்களுக்கு நேத்துதான் வாழ்த்துக்கள் சொன்னேன்.

விழாக்கால நல்வாழ்த்துக்கள் சுசி.

சுசி said...

அம்மிணி.. பிடிங்க மாப்ப.
இந்த தடவை மன்னிப்பு கிடையாது :)

நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

அண்ணாமலையான் said...

ஒஹோ..ஜன்னல எட்டிப்பாத்தா பொதுஅறிவு நிச்சயம் வளருமா? நல்ல புது தகவல்..

பித்தனின் வாக்கு said...

// குடுக்கிற வேலைய ஒழுங்கா செய்றவ, சிரிச்ச முகத்தோட(?) வளைய வர்றவ, பழக இனிமையானவ, அன்பானவ, கலர் கலரா டிரஸ் பண்ணி அதுக்கு பொருத்தமா ஆக்சசரீஸ் போடரவ, //
ஆகா பொய் சொல்லவதற்கும் ஒரு அளவு இல்லையா? இது எல்லாம் நம்ம பரம்பரைக்கே தெரியாதே! எங்க கத்துக்கிட்ட? நல்லது, வாழ்த்துக்கள்.
// என்னதான் நாட்டுக்கேத்தா மாதிரி இருந்தாலும் தான் வளர்ந்த விதம் மறக்காம தன்னோட எல்லை எதுன்னு தெரிஞ்சவ //
என் தங்கையல்லவா!! இப்படித்தான் இருப்பா.

// சில பதிவுகள, கமன்ட்ஸ படிச்சிட்டு டங்குன்னு தலைய டெஸ்க்ல மோதும்போதும் //
என் பதிவு எல்லாம் படிக்கறதோட நிறுத்திக்கனும், இப்படி எல்லாம் பீல் பண்ணக் கூடாது.

// மொத்தத்தில ரொம்ப நல்ல ஆபீஸ், திருப்தியான வேலை, அன்பான கலீக்ஸ். //
வாழ்த்துக்கள், மொதல்ல திருஷ்டி சுத்திப் போடனும்.
// என் இஷ்டத்துக்கு போய் வர்றது, நினைச்சதும் மட்டம் போடுறது, ஜன்னலோரம் உக்காந்து தெருவ வேடிக்கை பாக்குறது (ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க் இருந்தா அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது அறிவ வளர்க்கிறதும் தப்புங்களா?) //
இன்னமும் பராக்கு பார்க்கின்ற வழக்கம் போகலையா?

// ஏன் உன் கன்னம் திடீர்னு சிவந்திருக்குன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்கு காரணம் என் கண்ணன்னு எப்பூடி சொல்வேன்.. //
மிக்க மகிழ்ச்சி, விடுமுறை சிறக்க (சிவக்க) வாழ்த்துக்கள்.
நல்ல மகிழ்வான சந்தோசம் தரும் பதிவு. நன்றி சுசி.


பல்லை கவனமாக பார்த்துக் கொள்ளவும், வேண்டுமென்றால் ஒரு கிலோ சாக்கெலட்டும், மாங்காய் மற்றும் ஜஸ்கீரிம் அனுப்பி வைக்கின்றேம். நன்றி.

thiyaa said...

லீவு நன்றாக அமைய
என் வாழ்த்துக்கள்!