Pages

  • RSS

22 November, 2009

(பாவ) மன்னிப்பு...

வணக்க்....கம் மக்களே.... நலமா?
போன பதிவு போட்டதிலேர்ந்து கொஞ்சம் ஓவராத்தான் அழுதிட்டேன் போல இருக்கு. என்கூட சேர்ந்து கிட்டு இயற்கையும் மழையா அழுது தீர்த்திடிச்சா... தெருவெங்கும் வெள்ளம்... போக்குவரத்து சிக்கல்... மழை ரெஸ்ட்ல போய்ட்டாலும் என் அழுகை நிக்கல. கண்ணன் கூட இன்னமும்... அவ்வ்வ்வ்.... அது ஒரு புறம்னா இன்னைக்கு நான் எழுதப் போற விஷயம் மறு புறம். என் பதிவுகள படிக்க வச்சு உங்கள கொடுமைப்படுத்தி, உங்க பொன்னான நேரத்தையும் மண்ணாக்கறேன் இல்ல... ரெம்ப உறுத்துதுங்க. ஏற்கனவே மனசு சோர்ந்து போயிருக்கிற நேரத்தில அழுகை பொங்குது... நான் பதிவு எழுத வந்த கதைய சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு உறுத்தலே இல்லாம கொடுமைய கண்டினியூ பண்றத்துக்கு அருமையான சர்ந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த என் அன்புத் தம்பி கோபிநாத் உங்களுக்கு கோடி நன்றிகள். நல்லாருங்க தம்பி. ஏய் அடங்குடி... எதுக்கு இப்டி தலைய சுத்தி மூக்க தொடறே பாருங்க... ஒரு வித்யாசமான பில்டப்போட ஆரம்பிக்கலாம்னா .சா முறைக்குது. சரி வாங்க நாம கதைக்குள்ள குதிக்கலாம்.

எல்லாரையும் போலவே எனக்கும் ஃபார்வாட் மெயில் பண்ற ஒரு ஃப்ரெண்டு. அதில சிலபல பதிவுகளுக்கான லிங்கும் இருக்கும். பதிவுலகம் ரொம்ப பயங்கரமானதுங்கிற ஒரு தப்பான எண்ணத்தில நான் இருந்ததால டிலீட்ட அமுக்கிவிட்டுடுவேன். ஒரு நாள் ஃப்ரெண்டோட டார்ச்சர் ஒரு லிங்க போய் பாக்க வச்சிடுச்சு. அதுல பாருங்க கதவு வழியா ரைட் லெக்க வச்சு முறையா பதிவுலகத்துக்க போவேன்னு பாத்தா சாளரம் வழியா தொபுக்கடீர்னு உள்ள விழுந்துட்டேன். அதுதான் பதிவுலகம்னு மறுபடி தப்பா நினைச்சு அங்கனவே சுத்திகிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட எல்லா இடுகைகளும் படிச்சுட்டேன். அவ்வ்வ்வ்.... திடீர்னு ஒரு நாள் இவரெல்லாம் எழுதும்போது நாமளும் ஏன் எழுதக் கூடாதுன்னு (கார்க்கி நோ கோவம், பேசிக் கிட்டத விட இன்னும் போட்டுக் குடுத்திடுறேன். பீ கூல்... ஓகே..) தோணிச்சு. கம்பியூட்டர் கண்ணாம்பா + டெக்னிக்கல் தேனாம்பாவான நான் என்னதான் ரைமிங்கா இருந்தாலும் இப்டி ஒரு பேர் ரெம்ப ஓவருடி அதே ஃப்ரெண்டு துணையோட கொடுமைய ஆரம்பிச்சுட்டேன்.

என்ன எழுதலாம்னு ரொம்பல்லாம் யோசிக்கல. என்னப் பத்தி மட்டுமே எழுதுறதுன்னு உறுதியான முடிவோட இருந்தேன், இருக்கேன். அது தவிர விருதுகளுக்கு, வாழ்த்துக்களுக்குன்னு சிலது. அதையும் தவிர ஏகலைவியா என் குருநாதர் கார்க்கிக்கு குருதட்சணையா சில (டேமேஜ்) பதிவுகள். அம்புட்டுதேன். விவாதங்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள்னு என் அறிவுக்கு சம்பந்தமில்லாத எதையும் எழுத மாட்டேங்க. நானே என் இடுகைகள மறுபடி படிக்கிரதில்லேங்கிரப்போ உங்கள எக் காரணம் கொண்டும் என்னோட பழைய பதிவுகள படிச்சிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிறேன்.

தமிழ்ல எழுதுறத்துக்கு google.com/transliterate/indic/Tamil பாவிக்கிறேன். இப்போ இன்னொரு ஃப்ரெண்டு கிட்ட ஈகலப்பைய வாங்கி வச்சிருக்கேன். இன்னும் சரியா அதில உழவு ஆரம்பிக்கல.

பதிவுலகத்துக்குள்ள வரு முன்னர் நான் இருந்த மனநிலை.... என்ன யார்னே தெரியாத ஒரு இடத்தில போய் ஒளிஞ்சுக்க மாட்டோமான்னு நான் நினைச்சது மனசளவில கை கூடியிருக்கு. உன்னைய ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு அவங்க நினைக்கப் போறது உறுதி என் மனதுக்கு இதமாய், என்னை திசை திருப்பி ஒரு புது உலகுக்குள்ள கொண்டு போய் விட்ட பதிவுகள் எத்தனை.... என்னை பார்த்திராத, என் கூட பேசியிராத எத்தனை நண்பர்கள் என் கூட இப்போ... என்னமோ ரொம்ப நாளா பழகின மாதிரி ஒரு உணர்வு. இத்தனை நாளா இப்டியான உறவுகள இழந்திட்டு இருந்திருக்கேனேன்னு நிஜமான கவலை. ஒவொருத்தர் பதிவ படிக்கும்போதும் அவங்க திறமைய பார்த்து அப்டி வியந்து போவேன். பதிவர்களுக்குள்ள இந்த நட்பும் ஒற்றுமையும் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்னு என்னை அறியாமலே வேண்டிக்கிற அளவுக்கு பதிவுலகம் என்னை மாத்திடிச்சு. என்றாவது ஒருநாள் உங்களில் யாரையாவது நான் நேரில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. அவங்களுக்கு இந்தக் கொடுமை வேறயா???

அப்புறம் என்னங்க.. என்னையும் மதிச்சு தொடர் பதிவுகளுக்கு கூப்ட, விருதுகள் வழங்கிய, என்னை பின் தொடர்கின்ற அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றிகள். உங்க யாரையாவது என் பதிவுகள் மூலமா, என் பின்னூட்டங்கள் மூலமா நான் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க. இப்போ மாதிரியே எப்பவும் என் கொடுமைய பொறுத்துக் கிட்டு என் கூட நண்பர்களா இருங்க. என்னோட பதிவ படிக்கிற அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போ நான் இத தொடர்ந்து கொண்டு போறத்துக்கு கூப்பிட போறவங்க இவங்கதான்.

தியாவின் பேனா பேசுகிறது...
பார்த்ததும் படித்ததும் சங்கர்.
பிரியமுடன்......வசந்த்
பித்தனின் வாக்கு சுதாண்ணா.
எடக்கு மடக்கு R.கோபி.
வடலூரான் கலை.
இது என்னோட இடம். தமிழ்பிரியன்.
சொல்லரசன்
சந்ருவின் பக்கம்

பத்து பேருக்குமான சிறு குறிப்பு :- நீங்க முன்னாடியே உங்க கதைய எழுதி நான் அத படிக்காம மிஸ் பண்ணி இருந்தேன்னா கமன்ட்ல கும்மிடுங்க... வரட்டுங்களா...

26 நல்லவங்க படிச்சாங்களாம்:

thiyaa said...

என்னப்பா இது வில்லங்கமாப் போச்சு

thiyaa said...

நன்றி சுசி உங்களின் அழைப்புக்கு
நான் என்னைத் தயார்ப் படுத்திவிட்டு எழுதுகிறேன்

ராமலக்ஷ்மி said...

எழுத வந்த கதைக்கு நல்லா வைத்தீர்கள் தலைப்பு:))! தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள்!

பா.ராஜாராம் said...

வழக்கம் போல்,leg-byes ல ஒரு சிக்ஸ்சர் பாஸ்!(விளையாட்டா?அப்படீனா?..ன்னு பழைய பதிவுல பதில் சொன்ன நினைவு சுசி...அதுனால இந்த லெக்-பைஸ் சை,ரொம்ப தோண்ட வேண்டாம்!)

உங்கள் தோழிக்குத்தான் நன்றி சொல்லவேணும்...

கார்க்கி...girrrrrrrrrr? :-))

கலக்கி இருக்கீங்க சுசி!

சங்கர் said...

//என்றாவது ஒருநாள் உங்களில் யாரையாவது நான் நேரில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. //

வரும்போது சொல்லுங்க ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்,

ப்ரியமுடன் வசந்த் said...

//இத்தனை நாளா இப்டியான உறவுகள இழந்திட்டு இருந்திருக்கேனேன்னு நிஜமான கவலை.//

அது...

சுசிக்கா இந்த சந்தோசம் எனக்கும் உண்டு..உங்களை மாதிரி ரொம்ப நல்லவங்க இருக்குறதாலதான் இந்த பதிவுலகம் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கு..அவ்வ்வ்வ்வ்....

ம்ம்ம்..தொடர் போட்டாச்சு...ஆனா தொடரில்ல...

நன்றி

Anonymous said...

//விவாதங்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள்னு என் அறிவுக்கு சம்பந்தமில்லாத எதையும் எழுத மாட்டேங்க.//

டெரர்தான் நீங்க போலி டாக்டர். :)

malarvizhi said...

நன்றாக உள்ளது . தொடரட்டும் பயணம் .

கோபிநாத் said...

யப்பாடி..எப்படியே மீண்டும் ஒலை அனுப்பவதுக்கு முன்னாடி பதிவு போட்டமைக்கு நன்றி ;))

கார்க்கி தான் அந்த புண்ணியவானா! ;)) நல்லாயிரு சகா ;))

\\பதிவர்களுக்குள்ள இந்த நட்பும் ஒற்றுமையும் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்னு என்னை அறியாமலே வேண்டிக்கிற அளவுக்கு பதிவுலகம் என்னை மாத்திடிச்சு\\

;))) இதான் இதான்...இதுக்கு தான்...;)

பித்தனின் வாக்கு said...

மாமியார் உடைச்சா மண்பானை, மருமக உடைச்சா அது பொன் பானை என்பார்கள், ஆனா எங்க சுசி உடைச்சா அது பானையும் அல்ல உடைக்கவும் இல்லை என்றுதான் கூறுவேம். ஆதலால் பாவ மன்னிப்பு கேக்கும் அளவுக்கு நீ ஒன்றும் பண்ணி விடவில்லை (இடுகையும் சேர்த்து).
இருந்தாலும் நீ கேக்கறதுனால இதுவரைக்கும் போட்ட பதிவுகளை மன்னித்தேம். ஆனா இனி வாரம் இரண்டு அல்லது மூன்று இடுகைகள் போடா விட்டால் மன்னிக்க மாட்டேம் என்பதை அன்புடன் கண்டித்துக் கொள்கின்றேன். நன்றி சுசி.

இளவட்டம் said...

கலக்கல் சுசி.
பதிவு முழுதும் இழையோடும் பகடி அருமை.

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்வ்வ்.. வரலாறு என்னை மன்னிக்காதே!!! என்ன செய்யப் போறேன்.. எழுதி நான் செய்ற கொடுமை பத்தாதுன்னு இது வேறயான்னு பின்நவீனத்துவாதிகள் கேட்பாங்களே!!! ஆண்டவா...

:)))

கலையரசன் said...

//ஏய் அடங்குடி... எதுக்கு இப்டி தலைய சுத்தி மூக்க தொடறே பாருங்க... //

மூக்க தொடல... அடுத்த பக்க காதையே இல்ல தொடுறீங்க!

ரைட்டுக்கா... உங்களால முடிஞ்ச சூனியமா? எழுதிடுவாம்!!

நேசமித்ரன் said...

சமீப காலங்களில் உங்கள் இடுகைகளில் எதோ மாற்றஙள் நிகழ்ந்து வருவதாக உணர்கிறேன் சுசி

நகைச்சுவை கடந்த இன்னொரு திரை
அசைகிறது ஒரு நவீன ஓவிய சாயலுடன் ....

விக்னேஷ்வரி said...

இவரெல்லாம் எழுதும்போது நாமளும் ஏன் எழுதக்கூடாதுன்னு //
இப்படி நினைச்சு தான் பல பேர் பதிவுலகம் வந்ததா கேள்வி.

நானே என்இடுகைகள மறுபடி படிக்கிரதில்லேங்கிரப்போ உங்கள எக் காரணம்கொண்டும் என்னோட பழைய பதிவுகள படிச்சிடாதீங்கன்னு கெஞ்சிகேட்டுக்கிறேன். //
நீங்க ரொம்ப நல்லவங்கங்குறதை அடிக்கடி நியாபகப்படுத்துறீங்க.

நமக்கு ஏதுங்க வரலாறெல்லாம். என்னத்த எழுத சுசி...

R.Gopi said...

மற்றுமொரு ”டெர்ரர் பதிவு” எழுதிய சுசி வாழ்க......

தொடரை தொடரும் மக்கள் கூட்டத்தில் என் பெயரையும் கண்டேன்... மகிழ்ந்தேன்....

ஓகே... ஜூட்ட்ட்ட்ட்ட்ட்.........

சுசி said...

நன்றி தியா... நிச்சயம் எழுதுங்க.


நன்றி அக்கா. நீங்க மன்னிச்சிட்டீங்க இல்லையா.


'leg-byes' கண்ணாளன் கிட்ட (என் பாதுகாப்புக்காக) தூர நின்னு கேட்டு தெரிஞ்சுக்கிறேன் ராஜாராம். ஏதும் அடிகிடி சமாச்சாரமோ என்னமோ. தோழிக்கு நன்றியாஆ??? கார்க்கிக்கு சொன்ன கிர்ர்ர்ர்.... டபுளா அவளுக்கு கிடைச்சிருக்கணும்.

சுசி said...

வேண்டாம் சங்கர். பதிவர்கள் பாவம். விட்டுடலாம்.


இங்கயும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் வசந்த். ரெம்ப ஃபீலாவி அக்காவையும் அழ வச்சிட்டீங்க பாருங்க.. அவ்வ்வ்வவ்..


அம்மிணி எழுதினத எல்லாரும் படிச்சுக்குங்கப்பா... நாமளும் டெரராதான் எழுதறோம்!!!


முதல் வருகைக்கு நன்றி மலர்விழி.


ஓலைக்கு முன்னாடி மிரட்டல் என்றத விட்டுட்டீங்களே கோபி... ஆமா.... அதான் அதான் அதுக்குத்தான்.

சுசி said...

நன்றி சுதாண்ணா... நானும் தினமும் எழுதணும்னு பெரிய ஆசையோடதான் இருக்கேண்ணா... நேரம் மட்டும் கிடைக்கவே மாட்டேங்குது. போற போக்கை பாத்தா வாரம் ஒரு பதிவே சிக்கலாகும் போல இருக்கு.


நன்றி இளவட்டம்.


என்ன குரு... நீங்க 'புவியியல்'னுல்ல சொல்வீங்க??? அதான் 'நான் என்ன செய்யப் போறேன்'னு ஒரு பதிவு போட்டுட்டீங்க இல்ல. ஃப்ரீயா விடுங்க. நல்ல வேளை சிரிச்சுட்டு போயிருக்கீங்க. எங்க குருதட்சணையா எழுதுறத விட்டுட்டு போய்டுன்னு சொல்லிடுவீங்களோன்னு ரொம்ப பயத்...தில இருந்தேன்.

சுசி said...

என்ன கலை... அக்கா உங்களுக்கெல்லாம் சூனியம் வைப்பேனா... இது அன்பில எழுத சொன்னதாக்கும். உங்க ஸ்டைல்ல ஜமாய்ங்க.


நேசமித்திரன்??? அத கூட எவ்ளோ அருமையா எழுதி இருக்கீங்க பாருங்க. அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. நானும் ஒரு சாதாரண மனிதப் படைப்புதானே...


விக்னேஷ்வரி... ஹாஹாஹா.. அப்போ நம்மள மாதிரித்தான் நிறைய தப்பி வந்த கருப்பாடுங்க ப.உ ல சுத்துதுங்களா??? இப்டில்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. சீக்கிரம் எழுதுங்க. உங்க நல்ல அக்காவுக்காக.


மக்கள் கூட்டமா.... கிர்ர்ர்ர்ர்ர்...... ஜூட்டெல்லாம் செல்லாது R.கோபி. டெர்ரர்னு சொல்லிட்டீங்க இல்ல? எழுதியே ஆகணும்!

Admin said...

அழைப்புக்கு நன்றிகள் விரைவில் பதிவிடுகிறேன்.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி துரை. படிச்சாச்சு... வாழ்த்தியாச்சு.


நன்றி சந்ரு.

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள், சும்மா கலக்குங்க :-)

thiyaa said...

எப்பாலும் வாறிங்க ரஜனி படம் போல

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி.. கலக்கிடலாம்...


போங்க தியா... காமடி பண்றீங்க.

CS. Mohan Kumar said...

நல்லா இருக்குங்க உங்க history. உங்க புண்ணியத்தில் இப்போ விக்னேஸ்வரி என்னை எழுத சொல்லியிருக்கார். ம்.. எழுதணும்