Pages

  • RSS

08 November, 2009

எனக்கும் புடிச்சிடுச்சு.

இந்த வாரம் எதப் பத்திடி மொக்கை போடப்போறே? கூடப் பொறந்தது அக்கறையா இப்டி கேட்டதுமே சட்னு உஷாராகி அதிசயம்னு சொல்லு இல்லேன்னா வ.போ உன்ன டியூப்லைட்னு குட்டியிருப்பா இல்லக்கா சின்ன அம்மிணி என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டுருக்காங்க, அத எழுதப் போறேன்னேன். உன்னப் போயின்னு ஆரம்பிச்சவ நிறுத்தி எதப் பத்தின்னா. பிடிச்ச பிடிக்காத பத்து எழுதணும். நிறையப் பேர் ரொம்ப சூப்பரா எழுதி இருக்காங்க. நானும் எதுனா வித்யாசமா யோசிக்கிறேன்னேன் . சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதோட நீ எப்டி எழுதினாலும் அத எழுத்துன்னே சொல்ல முடியாது. மூடிக்கிட்டு போயி முடிஞ்சத எழுதுன்னா. தன் அழகு மேல கண்ணு வைக்காதன்னு என் கிட்ட (கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம) சொன்ன என் நண்பன மாதிரியே என் எழுத்து மேல கண்ணு வைக்காத, இப்போ ஃபோன வைன்னு சொல்லிட்டு எழுத டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. எனக்கு சரியா எழுத வராததுக்கு டிவியும் ஒரு காரணமோ??? வாஸ்து சரியில்ல. இடத்த மாத்தணும்

பதிவ தொடர என்ன கூப்டதுக்கு நன்றி அம்மிணி. இன்னொரு நன்றி ரூல்ஸ் எதுவும் போடாததுக்கு.

1. அரசியல் தலைவர்
அரசியலே பிடிக்காது. அப்புறம் தலைவர்கள எங்கிருந்து பிடிக் க/காத.


2. எழுத்தாளர்
பிடித்தவர்
:- ரமணிச்சந்திரன் தொடங்கி அப்டியே என் பதிவ படிக்கிற நீங்க ஒரு பதிவுக்கு சொந்தக்காரர்னா உங்க வரைக்கும் லிஸ்டு நீளும்..
பிடிக்காதவர் :- வேற யாரு இத எழுதினவங்கதான்.

3. கவிஞர்:
எனக்கு கவுஜ கூட எழுத வராதுங்கிரதால எல்லா கவிஞருமே பிடிச்சவங்கதான்.


4. இயக்குனர்:
பிடித்தவர் :- மணிரத்னம்.
பிடிக்காதவர் :- இருங்க யோசிக்கிறேன்.....


5. நடிகர்:
பிடித்தவர் :- எப்போதும்
விஜய்.
பிடிக்காதவர் :- லிஸ்டு கொஞ்சம் பெருசு.


6. நடிகை:
பிடித்தவர் :- ஜோதிகா.
பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம்.


7.இசையமைப்பாளர்:
பிடித்தவர் :- இசைஞானி. இசைப்புயல், ஹாரிஸ், யுவன்.....
பிடிக்காதவர் :- இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு பிடிச்சா மாதிரி ஒரு பாட்டையாவது இசை அமைச்சிடுரதால பிடிக்காதவர் கிடையாது.அம்புட்டுதேன்.

8. பாடகர்:
பிடித்தவர் :- டிம்மி.

பிடிக்காதவர் :- குணா பாடல்லாம் மாட்டார். என்னங்க இது கேள்வி.

9. பாடகி:
என்ன விட நல்லா பாடுரதால எல்லாரையும் பிடிக்குமே...


10. விளையாட்டு வீரர்:
விளையாட்டா? அப்டீன்னா???

இனி அப்டியே அம்மிணி மாதிரியே மூணு பேர கூப்டு விட்டுடுறேன்.

கோபிநாத் என்னதான் நீங்க மாமாங்கத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் நாங்க அழைப்போமில்ல.

பிரியமுடன்......வசந்த் நீங்க தொடர் பதிவல்லன்னு தானே போட்டீங்க.

பித்தனின் வாக்கு சுதாண்ணா தொடர் கதைக்கு சின்னதா ஒரு பிரேக் குடுங்க.

இது நம்ம ஆளு மறுபடி வெளியூரா? வந்ததும் கண்டினியூ..

அப்பாடா... கரீட்டா மூணு பேர கூப்டாச்சுப்பா. வரட்டா மக்களே? நலமா இருங்க.

மு.கு. :- என் கண்ணாளன் செஞ்ச சதியால நேத்து என்னால பதிவு போட முடியலீங்க. ஃபோன்ல எதோ ப்ராப்ளம்னு நோண்டிக்கிட்டு அடிக்கடி நெட் கனேக்சனையும் கட் பண்ணி ரொம்ப கடுப்பேத்திட்டார். அதனால திங்க கிழமை எப்படா விடியும்னு காத்திருந்து என் பதிவ படிக்க ஆவலா வந்த உங்கள ஏமாத்த வேண்டியதாயிடுச்சு. ஜாரி...

பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்.....

32 நல்லவங்க படிச்சாங்களாம்:

பா.ராஜாராம் said...

//இந்த வாரம் எதப் பத்திடி மொக்கை போடப்போறே? கூடப் பொறந்தது அக்கறையா இப்டி கேட்டதுமே சட்னு உஷாராகி அதிசயம்னு சொல்லு இல்லேன்னா வ.போ உன்ன டியூப்லைட்னு குட்டியிருப்பா இல்லக்கா சின்ன அம்மிணி என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டுருக்காங்க, அத எழுதப் போறேன்னேன். உன்னப் போயின்னு ஆரம்பிச்சவ நிறுத்தி எதப் பத்தின்னா. பிடிச்ச பிடிக்காத பத்து எழுதணும். நிறையப் பேர் ரொம்ப சூப்பரா எழுதி இருக்காங்க. நானும் எதுனா வித்யாசமா யோசிக்கிறேன்னேன் . சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதோட நீ எப்டி எழுதினாலும் அத எழுத்துன்னே சொல்ல முடியாது. மூடிக்கிட்டு போயி முடிஞ்சத எழுதுன்னா. தன் அழகு மேல கண்ணு வைக்காதன்னு என் கிட்ட (கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம) சொன்ன என் நண்பன மாதிரியே என் எழுத்து மேல கண்ணு வைக்காத, இப்போ ஃபோன வைன்னு சொல்லிட்டு எழுத டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. எனக்கு சரியா எழுத வராததுக்கு டிவியும் ஒரு காரணமோ??? வாஸ்து சரியில்ல. இடத்த மாத்தணும்//

இதுக்கு சிரிக்கலைன்னா அப்புறம் எதுக்கு சிரிக்கிறது பாசு!இல்லை,எதுக்குன்றேன்...

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம் சுசி, பதிவும் பதில்களும்:)!

ராமலக்ஷ்மி said...

வாஸ்து எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது சுசி:)!

பித்தனின் வாக்கு said...

ஆகா சுசி மாட்ட வச்சுட்டியே, சின்ன அம்மினி தொடரில் உங்களை அழைத்ததும் நான் நினைத்தேன், நீங்கள் கண்டிப்பாய் என்னை அழைப்பீர்கள் என்று. அழைத்தும் விட்டாய். சரி சொல்லறது நம்ம சுசி தங்கை அல்லவா, பதிவு இடுகின்றேன். தொடரையும் இதையும் சேர்த்து இரண்டு பதிவுகளாக்கி விடலாம். நன்றி சுசி.

பித்தனின் வாக்கு said...

வழக்கம் போல நகைச்சுவையுடன் விசயங்களை தருகின்றீர்கள். நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

//சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம்.//

பொய்தான...

ப்ரியமுடன் வசந்த் said...

// டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. //

அதெப்படி ஒரே நேரத்தில் டிவி யும் மடிக்கணினியும்?

ப்ரியமுடன் வசந்த் said...

//5. நடிகர்:
பிடித்தவர் :- எப்போதும் விஜய்.//

வாழ்க சுசி...

ப்ரியமுடன் வசந்த் said...

//பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்.....//

பிரபல பதிவர்கள் நிறைய பேர வாசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

//
பிரியமுடன்......வசந்த் நீங்க தொடர் பதிவல்லன்னு தானே போட்டீங்க.//

அதுக்கு..

இவ்ளோ பெரிய தண்டணையா?

கலையரசன் said...

//எனக்கு கவுஜ கூட எழுத வராதுங்கிரதால எல்லா கவிஞருமே பிடிச்சவங்கதான்//
அவ்வ்வவ்வ்வ.. சூனியத்தை கேட்டு வச்சிகிறியேக்கா...!

//பிடிக்காதவர் :- இருங்க யோசிக்கிறேன்.....//
எம்மாம் நேரமா..? டைம்ஸ் அப்!

// பிடிக்காதவர் :- லிஸ்டு கொஞ்சம் பெருசு. //
எவ்வளவு பெருசு? ஒரு 4 கிலோமீட்டர் இருக்குமா?

//பிடித்தவர் :- டிம்மி//
என்னங்கடா பேரு இது? விட்டா.. ஜிம்மி,டம்மி,கும்மி ன்னு பேரு வைப்பானுங்க போல..?

ஆனா, யக்கா.. எல்லா பதில்களிலும் ஒரு எஸ் தெரியுது.. செல்லாது! செல்லாது!!

(குணா மாமா பாவவவம்ம்ம்! கொஞ்சம் ஓவராதான் அவரை கும்முறிங்க!!)

கார்க்கிபவா said...

என்னமோ போங்க. இவ்ளோ சீக்கிரம் நெட் சரியாகியிருக்க வேணாஆ

கோபிநாத் said...

\\//பிடித்தவர் :- டிம்மி// \\

இப்படி ஒரு ஆளு இருக்கா!? ;))

வழக்கம் போல குசும்பு ;))

நேசமித்ரன் said...

மனசு பாரமா இருக்கா போடா யாவரும் நலம் பக்கம்னு சொல்ரேன் நண்பர்களுக்கு எல்லாம்

ரொம்ப மகிழ்ச்சி சுசி

சுசி said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி பா.ராஜாராம்.சந்தோஷம்...
சந்தோஷம்.


நன்றி அக்கா... நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்போ அங்க உக்காந்தே எழுத்த தொடர்ந்திடலாம்:))

சுசி said...

நன்றி சுதாண்ணா.

மாட்டிவிட்டதா சொல்லிட்டு சூப்பரா எழுதி இருக்கீங்க???

சுசி said...

//பொய்தான...//
இல்ல வசந்து நிசம்தாம்பா...

//அதெப்படி ஒரே நேரத்தில் டிவி யும் மடிக்கணினியும்?//
ஹிஹிஹி... அங்கன சொல்றத கேட்டாவது கொஞ்சம் நல்லா எழுதலாமேன்னுதான்.

//வாழ்க சுசி...//
வாழ்க வசந்த்... நீங்களும் நம்ம கட்சிதானே...

//பிரபல பதிவர்கள் நிறைய பேர வாசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்...//
பின்ன... உங்க பதிவெல்லாம் படிக்கிறேன்... இந்த உர்ர்ர்.. கூட நேத்து கலை பதிவில லவட்டினதுதான்...

//அதுக்கு..இவ்ளோ பெரிய தண்டணையா?//
யார் சொன்னா 'தண்டணை' ன்னு... இது 'தண்டனை' ஆக்கும்....

சுசி said...

//அவ்வ்வவ்வ்வ.. சூனியத்தை கேட்டு வச்சிகிறியேக்கா...!//
அழுவாதீங்க கலை... அக்கா நல்ட்டவள் இல்லை.. அதான்... அவ்வ்வ்வ்.....

//எம்மாம் நேரமா..? டைம்ஸ் அப்! //
இது அழுகுணி ஆட்டம்... ஐ வான்ட் மோறு....

//எவ்வளவு பெருசு? ஒரு 4 கிலோமீட்டர் இருக்குமா? //
கூட ஒரு மூணரை சேத்துக்க....

//என்னங்கடா பேரு இது? விட்டா.. ஜிம்மி,டம்மி,கும்மி ன்னு பேரு வைப்பானுங்க போல..?//
ஏன்??? கலையரசன்,கொலையரசன்னு வைக்கும்போது டிம்மிக்கு என்ன???

//ஆனா, யக்கா.. எல்லா பதில்களிலும் ஒரு எஸ் தெரியுது.. செல்லாது! செல்லாது!! //
எல்லாம் செல்லும் செல்லும்... நீங்க முதல்ல செல்லும்....

//(குணா மாமா பாவவவம்ம்ம்! கொஞ்சம் ஓவராதான் அவரை கும்முறிங்க!!)//
ஹலோ... இந்த ஐசெல்லாம் செல்லாது.. மாமா ஸ்டில் வெயிட்டிங் ஃபார் தீபாவளி சீர்....

சுசி said...

//போங்க//
எங்க போக சொல்றீங்க கார்க்கி????

பக்கத்துல இருந்தவங்க கிள்ளிட்டாங்களா என்ன?
//வேணாஆ//
ன்னு அலறினத அப்டியே எழுதிட்டீங்க....

உனக்கு கூட வலி தெரியுதாப்பா??????

சுசி said...

அவ்வ்வ்வ்வ்..... யூ டூ கோபி???? இருக்கார் கோபி இருக்கார். யார் குசும்ப சொல்றீங்க நீங்க?



நன்றி நேசமித்ரன். நண்பர்கள் இத படிக்கிரத்துக்கு நம்ம கவலையே தேவலைன்னு நினைச்சிட்டாங்களோ? யாரும் வரதா காணோம்... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நேசமித்ரன் :)))

நர்சிம் said...

முன்குறிப்பிற்காக இந்தப் பின்னூட்டம்.(பின்குறிப்பிற்காக இட்டதும் நினைவிருக்கிறது)

திங்கள்கிழமை மேட்டர் சூப்பர்.

சுசி said...

நன்றி நர்சிம்.

அடுத்தது சைடு குறிப்பு போட்டு ஒரு பதிவு எழுதிடுறேன்... :)))

Anonymous said...

//பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம்//

ஏன் இந்தக்கொலைவெறி குணா மேல. :)

லேட்டா வந்ததுக்கு மாப்பு குடுத்துருங்க.

Anonymous said...

//கோபிநாத் என்னதான் நீங்க மாமாங்கத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் நாங்க அழைப்போமில்ல.//

போட்டா எங்க ஊர்ல மழை கொட்டுமில்ல. (வெயில் பொளந்து கட்டுதுப்பா- இத்தனைக்கும் Spring Season)

Anonymous said...

//அப்பாடா... கரீட்டா மூணு பேர கூப்டாச்சுப்பா. வரட்டா மக்களே? நலமா இருங்க.
//

அப்ப கோபிய நீங்க கணக்கில எடுத்துக்கலையா !!!

விக்னேஷ்வரி said...

பிடிக்காதவர் :- வேற யாரு இத எழுதினவங்கதான். //
நீங்க சொல்லிட்டீங்க. எங்களால சொல்ல முடியல. சரி, விடுங்க.

பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம். //
ஹாஹாஹா...

பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்..... //
அந்த பயம் இருக்கட்டும். ஆனா, எப்போவும் இப்படி புத்தியா இருக்காதீங்க. பாருங்க உங்க பதிவை முழுசா படிச்சிட்டேன். ;)

சுசி said...

//ஏன் இந்தக்கொலைவெறி குணா மேல. :)//
ஹிஹிஹி... இது கொலைவெறி கிடையாது அம்மிணி... அதீத அன்பால வந்த உரிமை.

//லேட்டா வந்ததுக்கு மாப்பு குடுத்துருங்க.//
ம்க்கும்... அடுத்த கமண்டில கோபியோட கோவத்த மூட்டி விட்டுருக்கீங்களே அதுக்கு என்ன குடுக்கட்டும்??? :)))

//போட்டா எங்க ஊர்ல மழை கொட்டுமில்ல. (வெயில் பொளந்து கட்டுதுப்பா- இத்தனைக்கும் Spring Season)//
கோபி... ஆவன செய்யுங்க.....

//அப்ப கோபிய நீங்க கணக்கில எடுத்துக்கலையா !!!//
அவ்வ்வ்வ்வ்..... கோபி... அக்கா பாவம்... இது அம்மிணி வேலை....

சுசி said...

//நீங்க சொல்லிட்டீங்க. எங்களால சொல்ல முடியல. சரி, விடுங்க.//
ஆஹா... விக்னேஷ்வரிக்கு ஃபீவர் குணமாயிடிச்சா?

//அந்த பயம் இருக்கட்டும்.//
இப்போ நான் ஹாஹாஹா...

//ஆனா, எப்போவும் இப்படி புத்தியா இருக்காதீங்க. பாருங்க உங்க பதிவை முழுசா படிச்சிட்டேன். ;)//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............

thiyaa said...

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு தெரிவு
நால்லாய்த்தான் இருக்கு

உங்கள் எழுத்துநடை அருமை.

சுசி said...

ரொம்ப நன்றி தியா.

Admin said...

நல்ல தெரிவுகள்

சுசி said...

நன்றி சந்ரு.