
26 May, 2009
25 May, 2009
கவர்ச்சியான உதடுகளை பெற !!!
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அவலட்சணமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும். (முக்கியமா சிம்பு பக்கத்தில வராம பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்புங்க)
மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும். தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.
லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வொஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு விற்றமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.
உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் குளொஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் குளொஸ் தடவப்பட வேண்டும். லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்
பி.கு:- பாய்ஸ்! இத ஏன் நீங்க படிச்சு உங்க கேள் பிரண்டுக்கு சொல்ல கூடாது? அட்லீஸ்ட் கடல போட ஒரு டாப்பிக்காவது கிடச்சிருக்கில...
20 May, 2009
நான் பார்த்ததில் ரசித்தது...
13 May, 2009
மனிதம் எங்கே இந்த நாட்டில்?
ஏன் இந்த கொடுமை?
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்......
அரும்புகள், மலர்கள், காய்கள், கனிகள் ஏன் காய்ந்த சருகுகளைக் கூட விடவில்லையே....
ஒரு சுனாமி வந்து காவு கொண்டது போதாதா?
இன்னும் வேண்டுமா கொடியவனே உனக்கு?
என்று தணியும் உந்தன் இன வெறி ஆசை?
என்று முடிப்பாய் இந்த போரை?
அம்மா வயிற்றில் ஆனந்தமாய்
ஒரு சிசு இருப்பது கூட உனக்கு பிடிக்கவில்லையே....
அதனால் தான் அது உலகைப் பார்க்க முன்னமே
பிய்த்துப் போட்டாயா?
ஒரு தமிழ் தாய் வயிற்றில் கருவானதற்கு
உன் தண்டனை இதுதானா?
ஏன் இந்த கொடுமை?
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்.......
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்......
அரும்புகள், மலர்கள், காய்கள், கனிகள் ஏன் காய்ந்த சருகுகளைக் கூட விடவில்லையே....
ஒரு சுனாமி வந்து காவு கொண்டது போதாதா?
இன்னும் வேண்டுமா கொடியவனே உனக்கு?
என்று தணியும் உந்தன் இன வெறி ஆசை?
என்று முடிப்பாய் இந்த போரை?
அம்மா வயிற்றில் ஆனந்தமாய்
ஒரு சிசு இருப்பது கூட உனக்கு பிடிக்கவில்லையே....
அதனால் தான் அது உலகைப் பார்க்க முன்னமே
பிய்த்துப் போட்டாயா?
ஒரு தமிழ் தாய் வயிற்றில் கருவானதற்கு
உன் தண்டனை இதுதானா?
ஏன் இந்த கொடுமை?
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்.......
(ஒன்னும் இல்லைங்க! இங்க தீஈபம்னு ஒரு டிவில ஜெயா டிவி உங்களில் யார் அடுத்த பிரபு தேவா பார்த்தனா அதில போன வாரம் சிலோங்காரங்க பிரச்சன பத்தின டான்ஸ்.... தாங்க முடில... நா வேற ரொம்ப நல்லவளா.. அழுதிட்டேன் போங்க. அதோட ராமோட ப்லக்லேம் இத பத்தி பாத்தேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் இல்லையா? ரொம்ப சென்டியா டச் பண்றேனோ? பாவம்க. ஏதோ நம்மால முடிஞ்சது. ஒரு நிமிஷம் அவங்களுக்காக பிரார்த்தனை பண்ணலாமில்ல? ப்ளிஇஸ்.....)
(இது காயத்ரிக்கு... ரொம்ப காண்டி ஆயிட்டேன். நினச்சத எழுத முடில. எப்டிதான் நீங்கல்லாம் தமிழ்ல பின்னி பிடல் எடுக்கரிஇங்கோ மக்கா?)
02 May, 2009
vanakkam

முதல் முதல் முதலாய் முயல்கின்றேன்.
எங்கோ ஓர் தொலைவில் உறவுகளை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் அயல் நாட்டு வாழ்வில் ஏதோ ஒரு வகையில் ஒரு சின்ன இளைப்பாறல் எங்கு கிடைக்கும் என்று மனம் ஏங்குகின்றது.
இது எனக்கு மட்டுமா?
சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படித்தான் தாய் நிலம் தேடி என் நினைவுகளை ஓட வைக்கின்றனவோ நான் அறியேன்.
ஏக்கமும் எதிர்பார்ப்பும் நடப்பு வாழ்வின் சுகங்களையும் சந்தோஷங்களையும் நொடிப் பொழுதில் பொசுக்கி விடுகின்றனவே? ஏன்?
யார் தப்பு யார் சரி?
பிரிவினை வேண்டாமே... மனிதரை மனிதராய் மட்டும் பார்ப்போம்.
இங்குள்ள ஒரு செல்லப் பிராணி முற்பிறவியில் செய்யாத எதை நாம் செய்தோம் மனிதராய் பிறந்து மனம் குமைய?
என்னிடம் விடை இல்லை.
உங்களிடம் உள்ளதா?
மீண்டும் வருவேன் உங்கள் நலம் அறிய என் ஆனைமுகன் துணையுடன்.
நலமாய் இருங்கள்!!!!