என்னை அழ வைக்கவென்றே எல்லோரும் என்னோடு பழகுவது போதாதென்று திரைப்படங்களை வேறு என்னை அழ வைக்கவென்றே எடுக்கிறாங்க போல. என்ன செய்வேன் நான்??
மைனா.. என்ன சொல்ல.. நினைவில் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.. அந்த எளிமை, யதார்த்தமான நடிப்பு, நம்ப முடியாத ஆனால் சாத்தியமானதோ என்று நினைக்க வைக்கும் கதை.. சுருளி, மைனா, ஏட்டு, இன்ஸ்பெக்டர் என மனதில் நின்ற பாத்திரங்கள்.. பஸ் விழும் காட்சியும், கடைசி நேர காட்சிகளும் கொஞ்சம் அதிகமென்று நினைக்கத் தோன்றினாலும், இன்ஸ்பெக்டர் எடுத்த முடிவினால் எங்கோ ஒரு ஆறுதல் வரத்தான் செய்கிறது.
இத்தோடு விட்டிருக்கலாம் நான். தெரிந்தே பார்த்தேன் நந்தலாலா..
சிறுவனை அடிக்க முடியாமல் அழுதபடி போய்ப் போய்த் திரும்பி வரும் மிஷ்கினைப் போல கண்ணீரும் கண்ணை நிறைத்து நிறைத்து காய்ந்து கொண்டிருந்தது. தொண்டை அடைத்து, மனதைப் பிசைந்த வலி தலைவலியாய் மாறியும் தொடர்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லது பார்க்காமல் இருக்க முடியாமல் கட்டுப்பட்டிருந்தேன். அம்மாவை மிஷ்கின் பார்த்த கணம்.. இருந்த அமைதியை குலைத்தபடி கேட்டதே ஒரு குரல்..
’தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..’
அதன் பின் பொல பொலவென்று நில்லாது ஓடியது கண்களில் அருவி.. இங்கே என் வழக்கம் போல் ஆவ்வ்வ் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை.. அத்தனை பாரம் மனதில்.. அப்படியே உணர்வைக் குழைத்து குரலில் கொடுக்கும்படி இசை தெய்வத்தை படைத்த தெய்வத்துக்குக் கோடி நன்றி.. இப்போதும் தென்பாண்டி சீமையிலே அவர் குரலில் கேட்கும்போது என்னை அறியாது தொண்டைக்குள் எதுவோ சிக்கிக் கொள்ளும் ஒரு உணர்வு எனக்கு வரும். அதன் பின் இன்று இந்த வரியின் தாக்கம்.. இனி மனதை விட்டுப் போகுமா தெரியவில்லை.. மிஷ்கின் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போகத் தொடங்கியபோது பாடல் தொடர்ந்தாலும் இன்னமும் அந்த ஒற்றை வரி மட்டும் காதுக்குள் கேட்பதாய் ஒரு உணர்வு..
என் அம்மாவோட தூரத்து உறவில் ஒருத்தர் புத்திசுவாதீனம் இல்லாதவர். அவருடைய அம்மாதான் அத்தனையும் செய்து பார்த்துக் கொள்வார். எங்கள் ஊர் கோயில் திருவிழாவுக்கு தவறாமல் கூட்டி வருவார். நாங்கள் போய்ப் பார்க்கும்போது ஒரு தடவை பக்கத்தில் இருக்கச் சொல்லி என் கையைப் பிடித்துக் காட்டி எதுவோ கேட்டார் அவர் அம்மாவிடம். சட்டென்று பறித்துக் கொண்டு என் அம்மா பின்னே சென்று ஒளிந்து கொண்டேன். பின்னர் என்னை சமாதானம் செய்து கையை பிடிக்க விடும்வரை அவர் முகத்தில் அத்தனை கவலை, அப்படியே அங்கங்கே மிஷ்கின் முகத்தில் தெரிந்தது போல. டீ, காஃபி பொடி கண்டால் எடுத்து அப்படியே சாப்பிட்டு விடுவார். ஒரு குழந்தையை அதட்டுவது போல அவர் அம்மா அதட்டி பறித்து வைத்தது இப்போதும் நினைவிருக்கு. ஒரு தடவை திருவிழாவுக்கு அவர்கள் வராத காரணம் கேட்டபோது அம்மா சொன்னார்.. ‘அவருக்கு தண்ணி எடுத்து குடிக்க தெரியாதில்லையா.. வீட்ல அம்மா இல்லையாம்.. தாகமா இருந்திருக்கு போல.. வழக்கம் போல கிணத்தை எட்டிப் பாத்துட்டு இருந்திருக்கார்.. அப்டியே உள்ள விழுந்திட்டாராம்’ அவர் அம்மா இப்போது இருக்கிறாரா என்று தெரியவில்லை.
சிறுவன் ஸ்னிக்தாவை அம்மாவாக்கி முத்தமாய் கொடுக்கும்போது.. எப்படி சொல்வதென்று தெரியவில்லை.. சந்தோஷம் வருவதற்குப் பதிலாக மீண்டும் அழத்தான் முடிந்தது என்னால்..
காமரா இஷ்டத்துக்குக் கவிதை வடித்திருக்கிறது. ஒற்றைத் தெரு.. பச்சை வயல்.. சோவென்ற மழை.. எல்லாம் பழசுதான்.. அத்தனை அழகாய், புதுமையாய் எடுத்த விதம்.. படம் பாருங்கள்.. புரியும்.
மனநிலை சரி இல்லாதவர் போடப் போகும் சண்டை எப்படி இருக்குமோ என்று ஒரு பயத்தோடு இருக்கும்போது, அப்படியே எங்கள் மனதில் இருக்கும் பதட்டம், எதிர்பார்ப்பு புரிந்து இசைஞானி ஒரு பின்னணி கொடுத்திருப்பார்.. கேளுங்கள்.. தெய்வம்டா.. படத்தோடு முழு நேரமும் புலனைப் பிணைத்துப் போட்டு வைத்ததில் பெரும்பங்கு இளையராஜா என்ற இசை தேவனுடையது.
குளிர்க் கண்ணாடியை சிறுவனிடம் வாங்கிப் போட்டு விட்டு ’அய்யோ ராத்ரி ஆய்டிச்சு’ என்று மிஷ்கின் சொல்லும்போதும், குடிசையில் இருந்து இளநீரோடு எட்டிப் பார்க்கும்போது தப்பி ஓடி விட்டானோ சிறுவன் என்று நான் நினைக்க தள்ளி நின்று பார்க்கும் சிறுவனைக் காட்டி அப்படியே சைக்கிளோடு தோட்டக்காரன் காமராவுக்குள் வரும்போதும், சட்டென்று பியர் பாட்டிலால் இளைஞன் தலையில் மிஷ்கின் அடிக்கும்போதும் இயல்பாய் சிரிப்பு வருகின்றது இதம்.
உங்கள் எல்லாருக்கும் மிஷ்கின் வழியில் நானும் கொடுக்கிறேன். பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்னைக்கும் வர்ட்டா சொல்ல மனசு வர்லை..
30 நல்லவங்க படிச்சாங்களாம்:
இவ்வளோ நெகிழ்வா எழுதியிருக்கீங்களே சுசி, நான் இந்த வாரக் கடைசிலதான் படம் பார்க்கப் போறேன்...
பாடல்கள் கேட்டேன், இளையராஜா மறுபடியும் தனி ஆவர்த்தனம் நடத்தியிருக்கார்.
கூழாங்கல் எதோட குறியீடுன்னு படம் பார்த்து தெரிஞ்சிக்கிறேன்.. :)
நல்லா ரசிச்சுப் பாத்துருக்கீங்க.
கவிதை எழுதி ரொம்ப நாள் ஆகுது போலயே. ஏதாவது எழுதுங்களேன்
நதியினடியில் உருளும்
கூழாங்கற்கள் போல்
மனசுக்குள் நீண்ட நாட்கள்
உருண்டு கொண்டிருக்கும்
உங்கள் விமர்சனம்.
உண்மையில் அந்த படம் ஒரு வாழ்க்கை...சின்ன கட்சிகள் எல்லாம் சிறப்பாக நடித்து இருப்பார் மிஷ்கின்
சோக பாரம்!
நான் இன்னும் படம் பார்க்கலை... ஆனா உங்க உண்ர்வை சொன்ன பிறகு இருந்த எதிர்ப்பார்ப்பு டபுள் ஆகிடுச்சி சுசி
பாரம்!!!
அழுகணும் என்று பயம் இன்னும் இரண்டு படமும் பார்க்கலை..
நல்ல பகிர்வு ;)
\\இருந்த அமைதியை குலைத்தபடி கேட்டதே ஒரு குரல்.. ’தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.... \\
இந்த குரல் அவருக்கு வரமும் இருக்கு சாபமும் இருக்கு! அந்த பாடலை முத்துலிங்கம் எழுதியிருக்கார்.
\\தென்பாண்டி சீமையிலே அவர் குரலில் கேட்கும்போது என்னை அறியாது தொண்டைக்குள் எதுவோ சிக்கிக் கொள்ளும் ஒரு உணர்வு எனக்கு வரும்\\
நாயகன் படத்தில் பெயர் போடும் போது வரும் அவரோட குரலில் அப்போது எந்த இசையும் இருக்காது அவரோட குரல் மட்டுமே ஒலிக்கும். !
\எங்கள் மனதில் இருக்கும் பதட்டம், எதிர்பார்ப்பு புரிந்து இசைஞானி ஒரு பின்னணி கொடுத்திருப்பார்.. கேளுங்கள்.. தெய்வம்டா.. படத்தோடு முழு நேரமும் புலனைப் பிணைத்துப் போட்டு வைத்ததில் பெரும்பங்கு இளையராஜா என்ற இசை தேவனுடையது. \\
அந்த ஆட்டோக்காரன் அடிவாங்கும் காட்சின்னு நினைக்கிறேன்.
மொத்தத்தில் இசை தெய்வத்துக்கான படம் அதை மிக சரியாக கவனமாக படைத்திருப்பார். ;)
Avlo nallava irukku?
Pathura vendiyathuthan.
Nalla padama thodarnthu parpatharku valthukkal. myna really a very gud movie nandhalala parthitu solren!!!
இன்னும் படம் பார்க்கலை சுசி
ஒரு நல்ல ஆக்கம் ...
பாராட்டு பெறுவது
மட்டுமல்ல ...
மாற்றத்தை உண்டாக்க
வேண்டும் ...
பாராட்டுகள்
போளூர் தயாநிதி
சோகம்தான்..
கண்டிப்பா பாருங்க பாலாஜி.. பாத்துட்டு எங்க கூடவும் பகிர்ந்துக்குங்க :))
--
ஹிஹிஹி.. இப்போல்லாம் அந்த கொலைவெறி அவ்ளவா வரதில்லை கோபி :))
--
படம் பாருங்க மதுமிதா. இது படத்துக்கு அழகா பொருந்தும் :))
சரியா சொன்னிங்க சௌந்தர்.
--
அதே சித்ரா.
--
கண்டிப்பா பாருங்க அருண்.
நலமா கனி??
--
ஹஹாஹா.. சும்மா பாருங்க அமுதா. ஆனா அழுவிங்க :))
--
கோப்ஸ்.. எத்தனை தடவை படம் பார்க்கிறதா ஐடியா??
:))
பாருங்க லோகு.
--
பாருங்க சக்தி. மைனாவும் சோகக் கவிதைதான் இல்லை.. :))
--
பாருங்க சரவணன்.
கண்டிப்பா தயாநிதி. இப்டியான படங்கள் வரணும்.
--
நன்றி எஸ்.கே.
--
ஆமாம் இர்ஷாத்.
உங்கள் வாழ்வில் சந்தித்த நபரையும் நினைவு கூர்ந்து.. படத்தோடு ஒன்றி ரசித்து நெகிழ்ந்து.. பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் பகிர்வு. நல்ல விமர்சனம்.
//மனநிலை சரி இல்லாதவர் போடப் போகும் சண்டை எப்படி இருக்குமோ என்று ஒரு பயத்தோடு இருக்கும்போது, அப்படியே எங்கள் மனதில் இருக்கும் பதட்டம், எதிர்பார்ப்பு புரிந்து இசைஞானி ஒரு பின்னணி கொடுத்திருப்பார்.. கேளுங்கள்.. தெய்வம்டா.. படத்தோடு முழு நேரமும் புலனைப் பிணைத்துப் போட்டு வைத்ததில் பெரும்பங்கு இளையராஜா என்ற இசை தேவனுடையது//
உண்மை தான்.. ராஜா ராஜா தான்..
//நதியினடியில் உருளும்
கூழாங்கற்கள் போல்
மனசுக்குள் நீண்ட நாட்கள்
உருண்டு கொண்டிருக்கும்
உங்கள் விமர்சனம்.//
வழிமொழிகிறோம்...
எங்க பார்த்தீங்க?
பாருங்க அக்கா.. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாரத் பாரதி.
--
கார்க்கீஈஈஈஈ.. அடப்பாவி.. போலீசையும் அனுப்பி வச்சிடுவிங்க போல.. ஆவ்வ்வ்..
////மனநிலை சரி இல்லாதவர் போடப் போகும் சண்டை எப்படி இருக்குமோ என்று ஒரு பயத்தோடு இருக்கும்போது, அப்படியே எங்கள் மனதில் இருக்கும் பதட்டம், எதிர்பார்ப்பு புரிந்து இசைஞானி ஒரு பின்னணி கொடுத்திருப்பார்.. கேளுங்கள்.. தெய்வம்டா.. படத்தோடு முழு நேரமும் புலனைப் பிணைத்துப் போட்டு வைத்ததில் பெரும்பங்கு இளையராஜா என்ற இசை தேவனுடையது//
படத்திற்கு உயிர் நாதமே ராகதேவன்தானே...
மனதை பிசையும் இசையை வேறு யாரால் தர இயலும் என் இசைஞானியை தவிர.
//தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....//
பாடலைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன் நேரமிருந்தால் பாருங்கள்
http://urssimbu.blogspot.com/2010/11/blog-post_28.html
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
நன்றி
ரொம்ப நெகிழ்வான பதிவுங்க...
padam parka thundugirathu pathivu..analum ungalai mathiri aaidumonu payam athanaga ithuku vera azhanumeynu thaan...
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் நண்பரே.
நன்றி!
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_07.html
நீங்கள் உணர்ந்ததை அழகா சொல்லியிருக்கீங்க.. நீங்கள் சொன்ன உண்மைக்கதை இன்னும் பாரம் தந்தது.
Post a Comment