திசம்பர் 10.
என் வாழ்க்கேல ரெண்டு முக்கிய, மறக்க முடியாத நிகழ்வுகள நடத்திய நாள்.
எனக்கு டைரி எழுதுற பழக்கம் (இப்பவும்) இருந்திருந்தா திசம்பர் பத்து அன்னிக்கு இப்டி எழுதி இருந்திருப்பேன். ஒண்ண சொன்னேன்னா என் கண்ணன் கோச்சுக்குவான். சோ.. இன்னொண்ண மட்டும் சொல்றேன்.
திசம்பர் பத்தோட சரியா ரெண்டு வருஷமாச்சு நான் வேலைக்கு சேர்ந்து. என் திறமைக்கும்(?) அவங்க பொறுமைக்கும்(!) இடையில ரெண்டு வருஷம் எப்டி போச்சுன்னு தெரீலிங்க. இப்போ ரெண்டு வாரம் லீவ் எனக்கு. உண்மைய சொல்லணும்னா வெள்ளி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர மனசே வரல. வேலைக்குப் போம்போது எப்படா லீவ் கிடைக்கும்னு இருக்கும். லீவுன்னு வந்ததும் லைட்டா ஒரு ஃபீலிங் எட்டிப் பாக்கத்தான் செய்யுது. இனி கொஞ்ச நாள் இங்க வர முடியாதேன்னு. என் டெஸ்க்ல வச்சிருக்கிற ஆர்கிட்டுக்கெல்லாம் (ஆர்குட் இல்லப்பா) டாட்டா சொல்லி பத்ரமா பாத்துக்க சொல்லி ஒரு கலீக் கிட்ட பொறுப்பு குடுத்திருக்கேன்.
ஒருத்தங்க லீவ்ல போராங்கன்னாவே என்னமோ நாமளே லீவ்ல போறா மாதிரி இருக்கும். இன்னும் எத்தனை நாள்ல உனக்கு லீவுன்னு தினமும் நாட்களை எண்ணிக் கிட்டே இருப்போம். இனிமே கிறிஸ்துமஸ் முடிஞ்சுதான் ஆபீஸ் போவேங்கிரதால கலீக்ஸ் அன்ப கொஞ்சம் அதிகமாவே காமிச்சாங்க. பல் வலின்னு போனவளுக்கு டென்டிஸ்ட் கண்ட மேனிக்கு ஊசிய குத்தி ட்ரீட்மென்ட் செஞ்சதில கன்னம் வீங்கி செம வலி. அதையும் மறந்து ஆ கோ ல அதே கன்னத்தில இறுக்கி முத்தம் குடுத்துட்டு சாரி சொல்லி அப்பாவியா அவங்க முழிச்சப்போ வலி மறந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். (பட்ட கால்ல மட்டும் படாதோ? பழமொழிய மாத்த சொல்லணும்) அதோட சிலபல பறக்கும் முத்தங்கள், அணைப்புகள்னு எனக்கு மட்டும் இல்லாம கண்ணாளன் + பசங்களுக்கும் குடுக்க சொல்லி கிடைச்சுது. அப்டியே கிரிஸ்த்மஸ் பரிசு பரிமாற்றங்களும்.
முதல்ல ட்ரெய்னியா ஆபீசுக்குள்ள ரைட் லெக்க வச்சப்போ நல்லாவே கககாவி மாதிரி இருந்திச்சு. எங்க ரூம விட்டு வெளிய வந்தா மறுபடி போக தெரியாம சுத்தி சுத்தி வந்திருக்கேன். எல்லா ரூமையும் ஒ..ரே ப்ளான்ல கட்டி வச்சிருக்குதுங்க. (இப்போ புதுசா வர்றவங்களுக்கு நான் வழிகாட்டி). அதிலயும் என் நிறப் பிரச்சனை சிலரால இன்னமும் ஒத்துக்க முடியாத ஒண்ணு. (அதுக்குன்னு நாம சிவாஜி ரஜினி சார் மாதிரியா பண்ண முடியும்) பாக்க பிடிக்கலேன்னா அது அவங்க பிரச்சனை இல்லையா. எங்க டிபார்ட்மெண்டுக்கு இண்டர்நஷனல் டிபார்ட்மெண்டுன்னு செல்லப் பேரு. எங்க ஏழு பேர்ல ரெண்டு பேர்தான் நார்வேஜியன்ஸ். மீதி அஞ்சு பேரும் அஞ்சு நாட்டுக்காரங்க. ஜெர்மன், சிலி, சவுத் ஆபிரிக்கா, செச்சீனியான்னு மத்தவங்களுக்கு ஒன்லி இனப் பிரச்சனைதான். நமக்குதான் இனம் + நிறம்.
குடுக்கிற வேலைய ஒழுங்கா செய்றவ, சிரிச்ச முகத்தோட(?) வளைய வர்றவ, பழக இனிமையானவ, அன்பானவ, கலர் கலரா டிரஸ் பண்ணி அதுக்கு பொருத்தமா ஆக்சசரீஸ் போடரவ, என்னதான் நாட்டுக்கேத்தா மாதிரி இருந்தாலும் தான் வளர்ந்த விதம் மறக்காம தன்னோட எல்லை எதுன்னு தெரிஞ்சவ இப்டி நிறையா சொல்லி இருக்காங்க கலீக்ஸ் என்னப் பத்தி (ம்க்கும். படிக்கிறவங்க இங்க வரமாட்டாங்கங்கிற தைரியம்.. நடத்து நடத்து) எல்லாத்துக்கும் மேல என் கோபத்த இதுவரை யாரும் பாக்கலையாம் (நல்லவேளை.மனசுக்குள்ள கெ.வா லாம் சொல்லி திட்டுறது யாருக்கும் கேக்கல சாமியோவ்) இதாவது தேவலைங்க சமயத்துல ஏன் உன் கன்னம் திடீர்னு சிவந்திருக்குன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்கு காரணம் என் கண்ணன்னு எப்பூடி சொல்வேன்.. அவ்வ்வ்..
சில பதிவுகள, கமன்ட்ஸ படிச்சிட்டு டங்குன்னு தலைய டெஸ்க்ல மோதும்போதும் (என் பதிவ எழுதுறதோட சரி, நான் அத மறுபடி படிக்கிறதில்ல. சோ.. அவசரப்பட்டு கமன்ட ரெடியாக வேண்டாம்) லைட்டா ஃபீலாகி உக்காந்திருக்கும்போதும், கெக்கேபிக்கேன்னு சிரிக்கும்போதும் கொஞ்சம் இல்ல நல்லாவே மிரண்டு போயிடறாங்க. அப்புறம் சாரி சொல்லி விஷயத்த விளக்க வேண்டியதாயிடுது. நெட்ல மேயிறத்துக்கு சம்பளம் குடுக்கல பரவால்ல. ஆனா இப்டி ட்ரான்ஸ்லேஷன்லாம் செஞ்சு விளக்கம் குடுக்கிறதுக்கு எதுனா தரணும் இல்ல? அடுத்த PDD ல பேசணும்.. மறக்காம.
மொத்தத்தில ரொம்ப நல்ல ஆபீஸ், திருப்தியான வேலை, அன்பான கலீக்ஸ். இவளுக்கு போயி இங்க வேலையான்னு நம்ம மக்களிடையே பொறாமை வர்ற அளவுக்கு ஆகிப்போச்சு. குறிப்பா கண்ணாளன். 09:00 - 14:00 தவிர மீதி நேரம் என் இஷ்டத்துக்கு போய் வர்றது, நினைச்சதும் மட்டம் போடுறது, ஜன்னலோரம் உக்காந்து தெருவ வேடிக்கை பாக்குறது (ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க் இருந்தா அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது அறிவ வளர்க்கிறதும் தப்புங்களா?) மூணும் அவர கடுப்பேத்துற விஷயங்கள்ல அடங்கும்.
கடவுள் அருளால எந்த பிரச்சனையும் எனக்கோ, என் ஆபீசுக்கோ வரலேன்னா தொடர்ந்து அங்கனவே குப்பைய கொட்டலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. ஏன் ஆணி புடுங்கலாம்னு சொல்லலைன்னு பாக்கறீங்களா? அதாம்பா ஆபீசும், கலீக்சும் என் குடும்பம் மாதிரி ஆயிடிச்சுன்னு ஜிம்பலக்கடியா சொல்றேன்.
வரட்டுங்களா..
Showing posts with label ஆ..பீஸ். Show all posts
Showing posts with label ஆ..பீஸ். Show all posts