Pages

  • RSS

22 December, 2009

ஹைய்.. ஜாலி..

மார்கழி மாசம் வந்தாலே நத்தார் கொண்டாட்டம் எல்லார் வீட்லையும் களை கட்ட ஆரம்பிச்சிடும். வீட்டுல இண்டு இடுக்கு விடாம அலங்காரம் தூள் பறக்கும். இந்த வருஷம் white christmas வந்ததுல இங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. தேவைக்கு அதிகமாவே ஸ்னோ கு....விஞ்சு போய் கிடக்கு. இந்த ஸ்னோ இருக்கே அது ஒரு அழகான ஆபத்துங்க. போக்குவரத்துக்கு ரெம்ப தொல்லை பண்ணும். நடந்து போறவங்களும் ஸ்னோல வழுக்கி விழுந்து கைய கால உடைச்சுக்குவாங்க. நான் லீவுங்கிறதால பத்ரமா வீட்டுக்குள்ள இருக்கேன். என் கண்ணன தொல்லை பண்ணிக்கிட்டு.

எல்லோரும் எந்த வித இன மத நிற வேறுபாடும் இல்லாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம். பசங்களுக்காகவே நாங்களும் கிறிஸ்துமஸ் தடபுடலா கொண்டாடுவோம். திசம்பர் முதலாம் தேதிலேர்ந்து நத்தார் தினமான 25 ம் தேதி வரைக்கும் காலண்டர் கிஃப்ட்னு தினமும் காலேல பசங்களுக்கு குடுக்கணும். அத விட ஸ்பெஷல் கிஃப்ட் ஒண்ணும் வாங்கி வச்சிக்கணும். சரியா 24 ம் தேதி நள்ளிரவு பனிரண்டு மணிக்கு பரிசு பிரிச்சு மேயும் படலம் ஆரம்பமாகும். அத்தோட அன்பர்கள், ஆதரவாளர்கள் குடுக்கிற கிஃப்ட்டுகளும் கில்லி ஆடப்படும். (ஆஹா..நம்ம விஜய். சூப்பர்டி சுசி) ஆனந்த கூச்சல், ஏமாற்றம், பொறாமை, சில சமயம் அழுகைன்னு கிடைக்கிற பரிசுகளுக்கு ஏற்ப விதவிதமான பாவனைகள் வெளிப்படும். என்ன கிஃப்ட் வேணும் உங்களுக்குன்னு கேக்கவே தேவை இல்லை. இங்க இருந்து உங்கூர் நீளத்துக்கு ஒரு 'குட்டி' லிஸ்ட் எழுதி வச்சிருப்பாங்க.

வீட்டுக்குள்ள தேராட்டம் ஒரு கிரிஸ்த்மஸ் மரத்த அலங்காரம் பண்ணி அது கீழ அத்தன பரிசுகளையும் அடுக்கி வச்சுடுவோம். அடிக்கடி தங்களோட பங்கு சரியா இருக்கான்னு செக்கிங் வேற நடக்கும். அப்பப்போ ஏன் நாம முன்னாடியே பிரிச்சு பாக்க கூடாது. அது ஒண்ணும் தெய்வ குத்தம் கிடையாதேன்னு கேள்வி வேற. நாங்க வந்ததிலேர்ந்து பழகற, கொஞ்சம் க்ளோசா பழகற ரெண்டு நண்பர்கள் குடும்பங்கள் சேர்ந்துக்குவோம். வருஷத்துக்கு ஒருத்தர் வீட்ல ஒண்ணு கூடுவோம். ட்ரடிஷனல் நார்வேஜியன் சாப்பாடுகள், நம்மூர் சாப்பாடுகள் ரெண்டையும் கலந்து..கட்டுவோம். ரெண்டு நாளைக்கு எல்லாருமா ஒரே வீட்ல தங்கி செம ஜாலியா இருக்கும். இந்த வருஷம் ஒரு நண்பர் வீட்ல. நீங்களும் தாராளமா வந்து கலந்துக்கலாம்.

உங்க அனைவருக்கும் என்னோட இனிய நத்தார் வாழ்த்துக்கள். அப்டியே எங்க வீட்டு பால்கனில இருந்து நான் போட்டா புடிச்ச இயற்கை காட்சிகள் சிலத போட்டிருக்கேன் பாத்து ரசிச்சு மகிழுங்க. அப்டியே நத்தார் பரிசுகளையும் மறக்..காம அனுப்பி வச்சிடுங்க.

ரொம்ப எதிர்பார்ப்போட இருந்த, ஆவலோட பார்த்துட்டு இருந்த, ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்த இன்னும் சிலபல இருந்தவான.. ஒரு விஷயம் இன்னைக்கு நிறைவேறப் போது. அதனால உங்கள வபோ கஷ்டப்படுத்த மனசு வர்ல. குட்டியா முடிச்சுக்கிறேன். சந்தோஷம்தானுங்களே.. வரட்டுங்களா..



15 December, 2009

திசம்பர் 10.

திசம்பர் 10.
என் வாழ்க்கேல ரெண்டு முக்கிய, மறக்க முடியாத நிகழ்வுகள நடத்திய நாள்.


எனக்கு டைரி எழுதுற பழக்கம் (இப்பவும்) இருந்திருந்தா திசம்பர் பத்து அன்னிக்கு இப்டி எழுதி இருந்திருப்பேன். ஒண்ண சொன்னேன்னா என் கண்ணன் கோச்சுக்குவான். சோ.. இன்னொண்ண மட்டும் சொல்றேன்.


திசம்பர் பத்தோட சரியா ரெண்டு வருஷமாச்சு நான் வேலைக்கு சேர்ந்து. என் திறமைக்கும்(?) அவங்க பொறுமைக்கும்(!) இடையில ரெண்டு வருஷம் எப்டி போச்சுன்னு தெரீலிங்க. இப்போ ரெண்டு வாரம் லீவ் எனக்கு. உண்மைய சொல்லணும்னா வெள்ளி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர மனசே வரல. வேலைக்குப் போம்போது எப்படா லீவ் கிடைக்கும்னு இருக்கும். லீவுன்னு வந்ததும் லைட்டா ஒரு ஃபீலிங் எட்டிப் பாக்கத்தான் செய்யுது. இனி கொஞ்ச நாள் இங்க வர முடியாதேன்னு. என் டெஸ்க்ல வச்சிருக்கிற ஆர்கிட்டுக்கெல்லாம் (ஆர்குட் இல்லப்பா) டாட்டா  சொல்லி  பத்ரமா பாத்துக்க சொல்லி ஒரு கலீக்  கிட்ட  பொறுப்பு  குடுத்திருக்கேன்.


ஒருத்தங்க லீவ்ல போராங்கன்னாவே என்னமோ நாமளே லீவ்ல போறா மாதிரி இருக்கும். இன்னும் எத்தனை நாள்ல உனக்கு லீவுன்னு தினமும் நாட்களை எண்ணிக் கிட்டே இருப்போம். இனிமே கிறிஸ்துமஸ் முடிஞ்சுதான் ஆபீஸ் போவேங்கிரதால கலீக்ஸ்  அன்ப கொஞ்சம் அதிகமாவே  காமிச்சாங்க. பல் வலின்னு போனவளுக்கு டென்டிஸ்ட் கண்ட மேனிக்கு ஊசிய குத்தி ட்ரீட்மென்ட் செஞ்சதில கன்னம் வீங்கி செம  வலி. அதையும் மறந்து ஆ கோ ல அதே கன்னத்தில இறுக்கி முத்தம்  குடுத்துட்டு  சாரி சொல்லி அப்பாவியா அவங்க முழிச்சப்போ வலி மறந்து சிரிக்க  ஆரம்பிச்சிட்டேன். (பட்ட கால்ல மட்டும் படாதோ? பழமொழிய மாத்த  சொல்லணும்)  அதோட  சிலபல பறக்கும் முத்தங்கள், அணைப்புகள்னு எனக்கு மட்டும் இல்லாம கண்ணாளன் + பசங்களுக்கும் குடுக்க சொல்லி கிடைச்சுது. அப்டியே கிரிஸ்த்மஸ் பரிசு  பரிமாற்றங்களும். 


முதல்ல ட்ரெய்னியா ஆபீசுக்குள்ள ரைட் லெக்க வச்சப்போ  நல்லாவே  கககாவி மாதிரி இருந்திச்சு. எங்க ரூம விட்டு வெளிய வந்தா மறுபடி போக தெரியாம  சுத்தி   சுத்தி வந்திருக்கேன். எல்லா ரூமையும் ஒ..ரே ப்ளான்ல கட்டி வச்சிருக்குதுங்க.   (இப்போ புதுசா வர்றவங்களுக்கு நான் வழிகாட்டி).  அதிலயும் என் நிறப் பிரச்சனை சிலரால இன்னமும் ஒத்துக்க முடியாத ஒண்ணு. (அதுக்குன்னு நாம சிவாஜி ரஜினி சார் மாதிரியா   பண்ண  முடியும்)  பாக்க பிடிக்கலேன்னா அது அவங்க பிரச்சனை இல்லையா. எங்க டிபார்ட்மெண்டுக்கு  இண்டர்நஷனல் டிபார்ட்மெண்டுன்னு செல்லப் பேரு. எங்க ஏழு பேர்ல ரெண்டு பேர்தான் நார்வேஜியன்ஸ். மீதி அஞ்சு பேரும் அஞ்சு நாட்டுக்காரங்க. ஜெர்மன், சிலி, சவுத் ஆபிரிக்கா, செச்சீனியான்னு மத்தவங்களுக்கு  ஒன்லி  இனப்  பிரச்சனைதான். நமக்குதான் இனம் + நிறம்.


குடுக்கிற வேலைய ஒழுங்கா செய்றவ, சிரிச்ச முகத்தோட(?) வளைய வர்றவ, பழக இனிமையானவ, அன்பானவ, கலர் கலரா டிரஸ் பண்ணி  அதுக்கு பொருத்தமா  ஆக்சசரீஸ் போடரவ, என்னதான் நாட்டுக்கேத்தா மாதிரி இருந்தாலும் தான் வளர்ந்த விதம் மறக்காம தன்னோட எல்லை எதுன்னு தெரிஞ்சவ இப்டி  நிறையா சொல்லி இருக்காங்க கலீக்ஸ் என்னப் பத்தி (ம்க்கும். படிக்கிறவங்க இங்க வரமாட்டாங்கங்கிற தைரியம்.. நடத்து நடத்து)  எல்லாத்துக்கும் மேல என் கோபத்த இதுவரை யாரும் பாக்கலையாம் (நல்லவேளை.மனசுக்குள்ள கெ.வா லாம் சொல்லி திட்டுறது  யாருக்கும் கேக்கல சாமியோவ்) இதாவது தேவலைங்க சமயத்துல ஏன் உன் கன்னம் திடீர்னு சிவந்திருக்குன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்கு காரணம் என் கண்ணன்னு எப்பூடி சொல்வேன்.. அவ்வ்வ்..


சில பதிவுகள,  கமன்ட்ஸ  படிச்சிட்டு டங்குன்னு தலைய டெஸ்க்ல மோதும்போதும் (என் பதிவ எழுதுறதோட சரி, நான் அத மறுபடி படிக்கிறதில்ல. சோ.. அவசரப்பட்டு கமன்ட ரெடியாக வேண்டாம்) லைட்டா ஃபீலாகி உக்காந்திருக்கும்போதும், கெக்கேபிக்கேன்னு சிரிக்கும்போதும் கொஞ்சம் இல்ல நல்லாவே மிரண்டு போயிடறாங்க. அப்புறம் சாரி சொல்லி விஷயத்த விளக்க வேண்டியதாயிடுது. நெட்ல மேயிறத்துக்கு சம்பளம் குடுக்கல பரவால்ல. ஆனா இப்டி ட்ரான்ஸ்லேஷன்லாம் செஞ்சு விளக்கம் குடுக்கிறதுக்கு எதுனா தரணும் இல்ல? அடுத்த PDD ல பேசணும்.. மறக்காம.


மொத்தத்தில ரொம்ப நல்ல ஆபீஸ், திருப்தியான வேலை, அன்பான கலீக்ஸ். இவளுக்கு போயி இங்க வேலையான்னு நம்ம மக்களிடையே பொறாமை வர்ற அளவுக்கு ஆகிப்போச்சு. குறிப்பா கண்ணாளன். 09:00 - 14:00 தவிர மீதி நேரம் என் இஷ்டத்துக்கு போய் வர்றது, நினைச்சதும் மட்டம் போடுறது, ஜன்னலோரம்  உக்காந்து  தெருவ  வேடிக்கை  பாக்குறது (ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க்  இருந்தா  அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது  அறிவ  வளர்க்கிறதும்   தப்புங்களா?)  மூணும் அவர கடுப்பேத்துற விஷயங்கள்ல அடங்கும்.


கடவுள் அருளால எந்த பிரச்சனையும் எனக்கோ, என் ஆபீசுக்கோ வரலேன்னா தொடர்ந்து அங்கனவே குப்பைய கொட்டலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. ஏன் ஆணி புடுங்கலாம்னு சொல்லலைன்னு பாக்கறீங்களா? அதாம்பா ஆபீசும், கலீக்சும்  என் குடும்பம் மாதிரி ஆயிடிச்சுன்னு ஜிம்பலக்கடியா சொல்றேன்.
வரட்டுங்களா.. 

06 December, 2009

அம்மாவாய் எனக்கு ஒரு தோழி..

சிட்டுக்குருவியாய்  சிறகடித்துப் பறந்தாள்  பதினைந்து வயது வரை ஒரு சின்னப் பெண். முதல் காதல் கை கோர்க்க ஊரைச் சுற்றியது அந்த அழகு தேவதை பதினெட்டு வயது வரை.  பெற்றவரால் நடாத்தப்பட்ட கட்டாயக் கல்யாணம். கைவிரலில் மோதிரத்தோடு  கால்களிலும்  சங்கிலியை  மாட்டினான் கணவன். அடுத்தடுத்து இரண்டு பிள்ளைச் செல்வங்கள், ஆணொன்றும்   பெண்ணொன்றுமாய். சிறிதளவேனும் வாழ்வில் பிடிப்பு வந்ததே அதன்பின்தான். ஆனாலும் சித்ரவதைகள் குறையவில்லை. பொறுத்துக் கொள்ள முடியாத எல்லையை அடைந்த பின்னர் தோழியின் உதவியோடு நாட்டை விட்டே வெளியேறினாள்.

அயராத உழைப்பு + தன்னம்பிக்கையால் பிள்ளைகளுக்கு நல்ல நிலையைக் கொடுத்து தனக்கும் ஒரு துணையை தேடிக் கொண்டாள். துணைக்கு வந்தவன் தொல்லை செய்ய ஆரம்பித்தான் சுயநலமாய். அவ்வப்போது பத்திரங்கள் நீட்டப்பட்டன, முடிவு செய் நானா பிள்ளைகளா என்ற கேள்வியுடன். ஒவொரு தடவையும் ஒப்பமிட்டு முகத்தில் எறிவாள். மிரட்டமட்டுமே தெரிந்தவன் மறுபடி துணையாவான்.

மகனுக்கு வந்தது தொல்லை மருமகள் வடிவில். அவர்கள் சண்டை நாட்களில் பேரன் பாட்டி வீட்டில் தூங்க  ஆரம்பித்தான். பிள்ளை என்ற நூலால் கட்டப்பட்ட வாழ்க்கை தொடர்கிறது அவர்களிடையே. அறுந்து போகாமல் முடிச்சை இறுக்கிப் போடும் முழு முயற்சியில் இவள்.

இவளைப் போலவே தைரியசாலி மகள் என்ற இவளின் பெருமிதத்துக்கு இடியாய் அழுதபடி வந்தாள் மகள். எத்தனை சித்ரவதைகள் அனுபவித்திருக்கின்றது அந்த இருபத்து மூன்று வயதுப் பெண். எட்டு வயது முதல் ஒன்றாகப் படித்தவர்கள் வாழ்விலும் இணைந்து  கொண்டதற்கு அந்த மனிதமிருகம் கொடுத்த பரிசுகள் அத்தனையும்.  பிள்ளைகளுக்காக கொலையும் செய்ய தயங்கமாட்டாள் இவளென்று புரியாத அந்த மிருகம் கொலை மிரட்டல் விடுகிறது இவளுக்கே.

*************************************************
இது என்னோட ஒரு தோழியோட நிலை. அவங்க பேச்சுல எப்பவும் இருக்கிறது பிள்ளைங்க, பேரப் பிள்ளைங்கதான். அந்த மிருகம் தவிர அத்தனை பேரையும் நான் சந்திச்சிருக்கேன். ஒரு தடவை ஆபீஸ் பக்கத்தில இருக்கிற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல கண்ணில, கன்னத்தில வீக்கத்தோட அவங்க மகளை பாத்தேன். நான் என்னன்னு கேக்காமலே பல்வலின்னு சொன்னா. அவ்ளோ குட்டியா இருப்பாங்க. எப்டி மனசு வந்துது அந்த ராட்சஷனுக்கு. மனசால,உடலால எவ்ளவு சித்ரவதைகள அனுபவிச்சிருக்கா. இத்தனை வருஷமா ஒரு வார்த்தை கூட ஏன் சொல்லலைன்னு கேட்டத்துக்கு நீங்க அனுபவிக்கிறது போதும்மா. நானும் குடுக்க வேண்டாம்னு பாத்தேன். ஆனா இதுக்கு மேல என்னால முடியலம்மான்னு இவங்கள கட்டிக்கிட்டு அவ அழுதப்போ எப்டி வலிச்சிருக்கும் இவங்களுக்கு.. இந்த அம்மாவோட கண்ணீருக்கு கண்டிப்பா அந்த மிருகம் பதில் சொல்லி ஆகணும்ங்க.

எங்க ஆபீஸ்லையே ரொம்பத் தைரியமான பொண்ணுன்னு பேரெடுத்தவங்க பலசமயம் என்னால இதுக்கு மேல முடியலன்னு சொல்லி அழும்போது.. தனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குதுன்னு கேக்கும்போது.. அவ மனசுக்கு ஆறுதலா பேசி,  அழுகையும் சில சமயம் மனச இலகுவாக்கும்கிரதால கொஞ்சமா அழ விட்டு, அவ கண்ணீரைத் துடைச்சு, சிரிக்க வச்சுட்டுதான் அவ ரூம விட்டு மறுபடி என் இடத்துக்கு போவேன். இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றேம்பா.. ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி இறுக்கி  அணைச்சுக்குவா. கண்ணீரால கலைஞ்சு போன மேக்கப்ப சரி செஞ்சு, லிப்ஸ்டிக்கோட சிரிப்பையும் சேத்து பூசிக்கிட்டு அடுத்த நொடி அவ வேலை பாக்க ஆரம்பிக்கும்போது இவதானா கொஞ்சம் முன்னாடி அழுதான்னு மலைப்பா இருக்கும்.

அவ கிட்ட அவளோட மனத்திடம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே. என் உறவுகள நினைச்சு நான் தவிச்சப்போல்லாம் எனக்கு அவ்ளோ ஆறுதலும், நம்பிக்கையும் குடுத்தா. அவ பேரன்கள் ரெண்டு பேரும் என்கூட ஒட்டிக்கிட்டதில ரொம்ப சந்தோஷப்படுவா. மூணு வருஷம் முன்னாடி அவங்கள விட்டுப் போன அம்மா செஞ்சு குடுத்த ஷால் ஒண்ண அவங்க ஞாபகமா எனக்கு பிரசன்ட் பண்ணி இருக்கா.

ஒண்ணு மட்டும் சொல்றேன் சுசி, என் பொண்ண அவன் எதுனா பண்ணினான்னா அவன கொல்லவும் தயங்கமாட்டேன்னு சொல்லும்போது அவ கண்கள்ல கவலையையும் மீறி அப்டி ஒரு திடம் தெரியும்.  அப்டீல்லாம் ஆகாது, அவன் அந்தளவுக்கு போகமாட்டான்னு சொல்லி பேச்ச மாத்துவேன். அவன் இவங்களையும் நேர்லயும், ஃபோன்லையும் நிறைய தடவை மிரட்டி இருக்கான். என்னதான் போலீஸ், சட்டம்னு எல்லாம் பக்காவா இருந்தாலும் உயிருக்கு ஒண்ணு ஆனத்துக்கு அப்புறம் எதுவும் தேவை இல்லையே. அந்த அன்பான அம்மா நிம்மதியா இருக்கணும்னா பசங்க வாழ்க்கை சரி ஆகணும். பொண்ணோட மனசு சரியாகி எல்லா துன்பங்கள்ள இருந்தும் வெளிய வரணும். அதுக்காக எப்பவும் கடவுள வேண்டிக்குவேன்.

ஒருத்தங்களோட சந்தோஷத்தில இல்ல, துக்கத்தில பங்கெடுத்திக்கிறது தான் ரொம்ப பெரிய விஷயம்னு என் உயிர் நட்புகிட்ட  சொல்வேங்க. குட்டியா ஒரு அணைப்பு, கையில், தோளில்   சின்னதாய் ஓர் அழுத்தம், முதுகில் ஒரு வருடல், ஆறுதலாய் ரெண்டு வார்த்தை, புரிதலாய் ஒரு பார்வை.. இப்டி எத்தனையோ விதத்தில அடுத்தவங்க துக்கத்தில நாமளும்  பங்கெடுத்துக்கலாம்ங்க. செஞ்சு பாருங்க, அனுபவிச்சுப் பாருங்க.. நான் சொன்னது சரிதான்னு நீங்களும் சொல்வீங்க..
வரட்டுங்களா..