Pages

  • RSS

22 December, 2009

ஹைய்.. ஜாலி..

மார்கழி மாசம் வந்தாலே நத்தார் கொண்டாட்டம் எல்லார் வீட்லையும் களை கட்ட ஆரம்பிச்சிடும். வீட்டுல இண்டு இடுக்கு விடாம அலங்காரம் தூள் பறக்கும். இந்த வருஷம் white christmas வந்ததுல இங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. தேவைக்கு அதிகமாவே ஸ்னோ கு....விஞ்சு போய் கிடக்கு. இந்த ஸ்னோ இருக்கே அது ஒரு அழகான ஆபத்துங்க. போக்குவரத்துக்கு ரெம்ப தொல்லை பண்ணும். நடந்து போறவங்களும் ஸ்னோல வழுக்கி விழுந்து கைய கால உடைச்சுக்குவாங்க. நான் லீவுங்கிறதால பத்ரமா வீட்டுக்குள்ள இருக்கேன். என் கண்ணன தொல்லை பண்ணிக்கிட்டு.

எல்லோரும் எந்த வித இன மத நிற வேறுபாடும் இல்லாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம். பசங்களுக்காகவே நாங்களும் கிறிஸ்துமஸ் தடபுடலா கொண்டாடுவோம். திசம்பர் முதலாம் தேதிலேர்ந்து நத்தார் தினமான 25 ம் தேதி வரைக்கும் காலண்டர் கிஃப்ட்னு தினமும் காலேல பசங்களுக்கு குடுக்கணும். அத விட ஸ்பெஷல் கிஃப்ட் ஒண்ணும் வாங்கி வச்சிக்கணும். சரியா 24 ம் தேதி நள்ளிரவு பனிரண்டு மணிக்கு பரிசு பிரிச்சு மேயும் படலம் ஆரம்பமாகும். அத்தோட அன்பர்கள், ஆதரவாளர்கள் குடுக்கிற கிஃப்ட்டுகளும் கில்லி ஆடப்படும். (ஆஹா..நம்ம விஜய். சூப்பர்டி சுசி) ஆனந்த கூச்சல், ஏமாற்றம், பொறாமை, சில சமயம் அழுகைன்னு கிடைக்கிற பரிசுகளுக்கு ஏற்ப விதவிதமான பாவனைகள் வெளிப்படும். என்ன கிஃப்ட் வேணும் உங்களுக்குன்னு கேக்கவே தேவை இல்லை. இங்க இருந்து உங்கூர் நீளத்துக்கு ஒரு 'குட்டி' லிஸ்ட் எழுதி வச்சிருப்பாங்க.

வீட்டுக்குள்ள தேராட்டம் ஒரு கிரிஸ்த்மஸ் மரத்த அலங்காரம் பண்ணி அது கீழ அத்தன பரிசுகளையும் அடுக்கி வச்சுடுவோம். அடிக்கடி தங்களோட பங்கு சரியா இருக்கான்னு செக்கிங் வேற நடக்கும். அப்பப்போ ஏன் நாம முன்னாடியே பிரிச்சு பாக்க கூடாது. அது ஒண்ணும் தெய்வ குத்தம் கிடையாதேன்னு கேள்வி வேற. நாங்க வந்ததிலேர்ந்து பழகற, கொஞ்சம் க்ளோசா பழகற ரெண்டு நண்பர்கள் குடும்பங்கள் சேர்ந்துக்குவோம். வருஷத்துக்கு ஒருத்தர் வீட்ல ஒண்ணு கூடுவோம். ட்ரடிஷனல் நார்வேஜியன் சாப்பாடுகள், நம்மூர் சாப்பாடுகள் ரெண்டையும் கலந்து..கட்டுவோம். ரெண்டு நாளைக்கு எல்லாருமா ஒரே வீட்ல தங்கி செம ஜாலியா இருக்கும். இந்த வருஷம் ஒரு நண்பர் வீட்ல. நீங்களும் தாராளமா வந்து கலந்துக்கலாம்.

உங்க அனைவருக்கும் என்னோட இனிய நத்தார் வாழ்த்துக்கள். அப்டியே எங்க வீட்டு பால்கனில இருந்து நான் போட்டா புடிச்ச இயற்கை காட்சிகள் சிலத போட்டிருக்கேன் பாத்து ரசிச்சு மகிழுங்க. அப்டியே நத்தார் பரிசுகளையும் மறக்..காம அனுப்பி வச்சிடுங்க.

ரொம்ப எதிர்பார்ப்போட இருந்த, ஆவலோட பார்த்துட்டு இருந்த, ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்த இன்னும் சிலபல இருந்தவான.. ஒரு விஷயம் இன்னைக்கு நிறைவேறப் போது. அதனால உங்கள வபோ கஷ்டப்படுத்த மனசு வர்ல. குட்டியா முடிச்சுக்கிறேன். சந்தோஷம்தானுங்களே.. வரட்டுங்களா..



39 நல்லவங்க படிச்சாங்களாம்:

சங்கர் said...

படங்கள் அற்புதமா இருக்கு, இப்படி ஒரு இடத்துல வீடா, ஹ்ம்ம்மம்ம்ம்ம்,

நம்ம கேபிள் அண்ணன் எடுக்க போற படத்துக்கு ஒரு லொகேஷன் தயார்ன்னு தோணுது

//அப்டியே நத்தார் பரிசுகளையும் மறக்..காம அனுப்பி வச்சிடுங்க//

நாங்க கேட்கறதுக்கு முந்தியே நீங்க கேட்டா, சரியா போச்சா, ஒழுங்கா பரிசா அனுப்பிவையுங்க

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்! (இதைவிட என்ன பரிசு வேண்டும், இல்லையா சுசி:)?) கொண்டாட்டத்தைப் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி.

ரம்மியமான காட்சிகளை அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.

தமிழ் உதயம் said...

கடல் கடந்து, பல தேசத்து எல்லை கோடு கடந்து வருகிறது... உங்களுக்கான வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சிசு

ஆமா உங்க பேர் ரொம்ப பிரபலமாயிட்டே இருக்கு உபி

வே கா ல அ கா வோட நா க சு சி தான் ஹ ஹ ஹா,,,

:)))))))

ப்ரியமுடன் வசந்த் said...

படங்கூட ரொ சூ ரா இ கு

கைவசம் போட்டோ எடுக்குற வித்தையும் வச்சுருக்கீங்க போல...

Anonymous said...

White x-mas - ஆ இந்த முறை உங்களுக்கு. வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு சுசி,

இருக்கிற காசை வைத்து,ஜோசப் அண்ணனின் அம்மா, மெர்சிக்கு வாங்கி தந்த ஸ்டார் நினைவு வருகிறது.

.போன வருடம் வரையில் நீ இல்லாதது தாண்டா குறை.(கிட்ட தட்ட இருவது வருடமாய் சொல்கிறாகள் அம்மா.மெர்சியின் பையன் இப்போ,mca..)

இது மட்டும்தான் நினைவு வரும்,கிறிஸ்மஸ் என்றாலே..

என்னவோ,முன் கூட்டியே நினைவு படுத்திவிட்டீர்கள்.

புலவன் புலிகேசி said...

ம் புகைப்படங்களருமை....பனி நத்தார் வாழ்த்துக்கள்

//(ஆஹா..நம்ம விஜய். சூப்பர்டி சுசி) //

அந்த கூட்டமா நீங்க...

thiyaa said...

ஆகா

கலையரசன் said...

நத்தார் கொண்டாட்டத்துக்கு வாழ்த்துக்கள் யக்கோவ்..
(முதல்ல.. நான் நாடார் கொண்டாட்டம்ன்னு படிச்சிருப்பேன்னு சொல்லாம புரிஞ்சிகிற புத்திசாலி நீங்க!!)

பதிவை விட, போட்டோஸ் அள்ளுது!!
ஏதோ ஹாலிவுட் த்ரில்லர்ல வர்ற லொக்கேஷன் மாதிரி அழகான அட்ரோசிட்டியா இருக்கு... (எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு!)

பதிவுல உங்க லக்க லக்க லக்கப்பு மிஸ்சிங்.. Although it laudable with photos!!

கார்க்கிபவா said...

நாத்தனார்.. ச்சே நத்தார் வாழ்த்துகள்

உங்க வீட்டு பாலகனிய நினைச்சா பொறாமையா இருக்குங்க. படஙக்ள் சூப்பர்..

//ரொம்ப எதிர்பார்ப்போட இருந்த, ஆவலோட பார்த்துட்டு இருந்த, ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்த இன்னும் சிலபல இருந்தவான./

வேட்டைக்காரன் பார்த்தாச்சா?

இளவட்டம் said...

படங்கள் அருமை சுசி.வாழ்த்துக்கள்.

நினைவுகளுடன் -நிகே- said...

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
படங்கள் அருமை சுசி.

சுசி said...

நன்றி சங்கர்.கேபிள் சங்கர் படத்துக்கு லொக்கேஷன் தயார் சரி. விஜய் வந்தாதான் ஷூட்டிங் அலவுட். அதையும் சொல்லி வச்சிடுங்க.
நான் அனுப்பின பரிசதான் பார்த்து ரசிச்சிட்டீங்களே. நீங்க அனுப்புங்க.

=====

ரொம்ப நன்றி அக்கா. நிஜமா இதுவே போதும்கா. ஹிஹிஹி.. நான் சும்மா எடுத்தேன். நீங்க வந்தா எவ்ளோ சூப்பரா படம் எடுப்பீங்க தெரியுமா.

=====

ரொம்ப நன்றி தமிழ் உதயம்.

CS. Mohan Kumar said...

இனிய நினைவுகளை அருமையா எழுதிருக்கீங்க
//அப்டியே எங்க வீட்டு பால்கனில இருந்து நான் போட்டா புடிச்ச இயற்கை காட்சிகள் சிலத போட்டிருக்கேன் பாத்து ரசிச்சு மகிழுங்க//
நிஜமாவா? இப்படி ஒரு இடத்திலா இருக்கேங்க? Fantastic.

எதேச்சையாக பார்த்த போது எனது -blogம் " இவங்க எழுத்தும் படிக்கலாம்" என நீங்கள் சுட்டியிருப்பது தெரிந்தது. ஆச்சரியம் + மகிழ்ச்சி. நாம் ஒருவருக்கொருவர் அதிகம் comment-டியது இல்லை. எனவே பரிச்சயமும் அதிகம் இல்லை. இருந்தும் நீங்கள் சுட்டியது அறிந்து மகிழ்வாக உணர்கிறேன்

சுசி said...

ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ எரிச்சல் ஆகாது உபி. உடனவே என் பேர மாத்திட்டீங்க. மீதில்லாம் புரிஞ்சுது. இந்த நா க மட்டும் புரியலப்பா எனக்கு. வித்தையாஆ???

=====

ஆமா அம்மிணி. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

=====

ராஜாராம்.. உங்க நினைவுகள் பத்தி உங்க பதிவில தேடிப்பாக்கிறேன். சொல்றது உங்க அம்மாவா?

சுசி said...

நன்றி புலவரே.
ஆமாம். அதேஅதே :))))

=====

தியா உங்க பதிவு பக்கம் போக முடியல. எர்ரர்னு எச்சரிக்குது. என்னன்னு கொஞ்சம் பாக்கறீங்களா?

=====

கிர்ர்ரர்ர்ர்.... என்ன புத்திசாலின்னு சொன்னத்துக்கு நாடாரே தேவலை கலை. வயித்தெரிச்சல் படறவங்களுக்கு நீங்க சொல்ற பதில நான் சொல்ல மாட்டேன். அக்கா ரிலாக்ஸா இருக்கேம்பா. அதான் பதிவு இப்டி இருக்கு. அடுத்த தடவை போட்டா புடிக்குரப்போ ஒரு வெகு வையும் சேர்த்து பிடிக்கனும்னுதான சொல்ல வரீங்க? மைண்ட்ல போட்டாச்சு.

மணிஜி said...

இன்னைக்குத்தான் வந்தேன்.நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள் சுசி...

நர்சிம் said...

வாழ்த்துக்கள்ங்க..வாழ்க.

சுசி said...

நன்றி கார் கீ.. ச்சே கார்க்கி. யூ டூ கார்க்கி.. இருந்தும் என்ன பயன்??? (குத்து வைக்கும்போது சரியா வைப்பா. பாரு பாலகனி, படஙக்ள் னு என்னதிது..)அப்பாடா.. நீங்கதான் சரியா ககபோ கார்க்கி.

=====

நன்றி இளவட்டம்.

=====

நன்றி நிகே.

சுசி said...

நன்றி மோகன்குமார். நிஜமா இங்கதான் இருக்கேன். அதனால என்ன. இனிமே பரஸ்பரம் கமன்டிகிட்டா போச்சு. அது குத்தோ, கும்மியோ எதுவானாலும் :))

=====

தங்கள் வரவு நல்வரவாகட்டும் தண்டோரா. நன்றி.

=====

நன்றி நர்சிம். நீங்களும் வாழ்க.

பூங்குன்றன்.வே said...

இடுகையும்,படங்களும் நன்று சுசி.

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!!

கோபிநாத் said...

\\நாத்தனார்.. ச்சே நத்தார் வாழ்த்துகள்\\

கார்க்கிக்கு ஒரு ரீப்பிட்டு ;))) என்னென்னா நானும் அப்படி தான் படிச்சேன் ;))))

ஆமா உண்மையிலேயே இது உங்க வீட்டு பக்கத்துல இருக்குற இடங்களா!!! ? ;))

\\ ஒரு விஷயம் இன்னைக்கு நிறைவேறப் போது. அதனால உங்கள வபோ கஷ்டப்படுத்த மனசு வர்ல. குட்டியா முடிச்சுக்கிறேன். சந்தோஷம்தானுங்களே.. வரட்டுங்களா.. \\

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

;)) என்ஜாய்

நேசமித்ரன் said...

நத்தார் வாழ்த்துகள் சுசி உங்களுக்கும்

புகைப்படங்கள் பனிப்படலங்கள் அருமை

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் அக்கா! பனிப்படலம் ரம்மியமா இருக்கு.. ;-)

வெற்றி said...

நத்தார் வாழ்த்துக்கள்..
அழகான நாட்டில இருக்கீங்க :)

தாரணி பிரியா said...

உங்க வீட்டை பாத்தா பொறாமையா இருக்குங்க :). நத்தார் வாழ்த்துக்கள் சுசி

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்க்கள்.

சுசி said...

நன்றி பூங்குன்றன்.

=====

நீங்களும் கார்க்கி படிச்ச ஸ்கூல்லதான் படிச்சீங்களா கோபி? சொல்லவே இல்ல. ஆமாம்பா ஆமாம். என்னையும் சேத்து போட்டா புடிச்சு உங்கள எல்லாம் மிரட்டக் கூடாதுன்னு விட்டது தப்பாயிடுச்சோ? ரொம்....ப என்ஜாய் பண்ணேன்.

=====

நன்றி நேசமித்திரன்.

சுசி said...

நன்றி தமிழ் பிரியன்.

=====

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெற்றி.

=====

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தாரணி பிரியா. உங்க கண்ண பாத்தா எனக்கு பொறாமையா இருக்குங்க.

சுசி said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கருணாகரசு.

பித்தனின் வாக்கு said...

// ரொம்ப எதிர்பார்ப்போட இருந்த, ஆவலோட பார்த்துட்டு இருந்த, ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்த இன்னும் சிலபல இருந்தவான.. ஒரு விஷயம் இன்னைக்கு நிறைவேறப் போது. //
என்னது அது. எஞ்சாய். நல்ல பதிவு.
சுசி எப்ப டைரக்டர் எல்லாம் ஆனிங்க?
நல்ல படங்கள். நன்றி சுசி.

இது நம்ம ஆளு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

happy new year

Admin said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சுசி:)!

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

thiyaa said...

விடுமுறை முடிந்து எப்ப அடுத்த இடுகை போடுவிங்க

Anonymous said...

சுசி, ஒரு தொடர்பதிவுக்கு உங்களுக்கு அழைப்பு
http://chinnaammini.blogspot.com/2010/01/blog-post.html