Pages

  • RSS
Showing posts with label கொலைவெறி. Show all posts
Showing posts with label கொலைவெறி. Show all posts

18 January, 2012

நதி மனிதர்.

vente காத்திருத்தலின் அவசியமின்மையை

உணர்த்திப் போகின்றன

ஒப்புக்காய் ஆகிவிட்ட சந்திப்புகள். 

 

--------------------------------------------------------------------------------------------------------------

Whats-love இயல்பை மாற்றிப் போடும் காதலே

ஒரு கட்டத்தில்

இயல்பை எதிர்பார்க்கிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------------

elv கரையை அரித்துச் செல்வது தெரிந்தும்

ஓடிக் கொண்டிருக்கிறது நதி

மனங்களை அறுத்து

கடந்து செல்கின்றனர் மனிதர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------

THE VAMPIRE DIARIES கதகதப்பான உன் அணைப்பில்

இன்னமும் சுடுகின்றது

நீயறியாத என் கண்ணீர்.

 

---------------------------------------------------------------------------------------------------------------

kjærlighet-1 அன்பே இல்லாத இதயம்

என்னுள் தன் இருப்பை

உறுதி செய்து கொள்கிறது

அவ்வப்போது.

09 November, 2011

ஹாய்.

#####                                                                                                                           #####

முன்போல் இல்லை நீ

நானும் தான்.

solsikke blomster

#####                                                                                                                          #####

ஒன்று

இன்னொன்று

மற்றொன்று

மொட்டுகள் திறக்கும்வரை

தாவத்தான் செய்யும்

வண்ணத்துப் பூச்சி.

sommerfugle 1

 

 

 

 

 

 

 

#####                                                                                                                            #####

எதுவுமே இருப்பதில்லை

எதுவோ ஒன்று ஆகிறது

காதல் என்பதாய்.

sky

#####                                                                                                                           #####

குளிர் காய்ச்சல்

ஜலதோஷம்

இருந்துவிட்டுப் போகட்டும்

ஐஸ்வண்டி பார்த்ததும்

அடம்பிடிக்கும் குழந்தையாய்

அழும் என் மனதை

என்னதான் நான் செய்ய

உன்னைப் பார்த்த நொடி

கேட்கிறது

லவ் யூ சொல்லு

இறுக்கிக் கட்டிக்கோ

உம்மா கொடு..

33892_119613398099607_100001528424389_133933_4362116_n

 

 

 

 

 

 

 

#####                                                                                                                           #####

எப்போதும் அமைவதில்லை

இப்போதும் இனிக்கின்ற

வாழ்வின் சில கணங்கள்.

kissing babies

#####                                                                                                                           #####

02 November, 2011

மஷ்ரூம் பீஃபும் சோயா மட்டனும்.

'அம்மா.. தங்கா பெரியம்மா வீட்ல ஃபோறிகோல் சாப்டோம்மா.. அவ்வ்வவ்ளோ டேஸ்ட்ட்ட்ட்டா இருந்ததும்மா.. நீங்களும் செஞ்சு குடுக்கரிங்களா'

அப்டின்னு பசங்க ஒரு சேரக் கூறி(வி)னார்கள். அது ஒண்ணும் அவளவு கஷ்டமான ரெசிப்பி இல்லைங்க. கஷ்டம்னா கூட அது சாப்டுறவங்களுக்குதானே, செய்ற எனக்கு என்ன வந்தது. ஆனால் கோவா (முட்டைக்கோஸ்) + மட்டன்.. பார்க்க சூப் போல இருந்தாலும் மெயின் டிஷ்ஷே அதுதானாம். காம்பினேஷன் நல்லா இல்லையேன்னு விட்டிட்டன். இவங்க கேட்டதும் சரின்னு கூகிளாண்டவரிட்ட matpirat.no என்று வேண்டினேன்.. அவர் இதையா வேண்டினே சரியா பாருன்னு குட்டினதும் பார்த்தா pratக்கு பதில் piratனு டைப்பிட்டன். சரின்னு வேண்டப்பட்ட பொருளெல்லாம் லிஸ்ட் எழுத வேண்டியது இல்லாம ரோல்ஸ் செய்ய வாங்கி வச்ச மட்டன் கூடவே கோவான்னு பிரிஜ்ஜை திறந்ததும் சிரித்தன. வேறென்ன வேண்டும்?? ஓ.. என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டுமோ?? நோட்டிக்குங்க.

fårikål (எ) mutton stew.

நாலு பேருக்கு.

1 1/2 கிலோ மட்டன்

1 1/2 கிலோ கோவா

4 ts முழு மிளகு

2 ts உப்பு

3 dl தண்ணீர்

உருளைக்கிழங்கு தேவைக்கு ஏற்ப.

 

063 பாத்திரம் கொஞ்சம் பெருசா இருக்கட்டும். இப்டிக்கா பெரிய துண்டா, எலும்பு இருக்கிறதா இருக்கணும் மட்டன். இங்க இப்டியே கிடைக்குது. கோவாவையும் இப்படியே பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளுங்க.

 

 

 

 

064 இடையிடையே மிளகையும் தூவிக்கணும். நான் 4 க்கு பதில் 8 டீ ஸ்பூன் சேர்த்தேன்.

 

 

 

 

 

 

067 அப்படியே முழுவதையும் கலந்து கட்டி அடுக்கிவிட்டு உப்பு சேர்த்து, தண்ணீரையும் ஊத்திக்கணும். இனி அதுபாட்டுக்கு  இரண்டு மணி நேரம் குறைஞ்ச தீயில வேகட்டும். இப்போ உருளைக்கிழங்கை தனியா வேக வைத்துக் கொள்ளுங்க. அது முடிய நீங்க வேற வேலை இருந்தா பாத்திட்டு வாங்க. சிம்ல இருக்கிறதால அடிப்பிடிக்க வாய்ப்புகள் குறைவு.

 

070 ஒன்றரை மணி நேரம் அவிந்ததும் நான் மேலும் காலிஃப்ளவர், புரோக்கலி, காரட் என சில பல சேர்த்துவிட்டேன். ஆனால் இவற்றை இறக்குவதற்கு ஒரு பத்து நிமிடம் இருக்கும்போது சேர்த்தாலே போதும். அரைமணி நேரமாக ஓவர் குக் ஆகிவிட்டது.

 

 

073 நம்பி சாப்பிடலாம்!! சுள்ளென்று மிளகு அவ்வப்போது கடிபட ம்ம்..

பாதியிலவே வாசனை வாயூற வைத்தது. வீட்டில் ஆரும் இல்லை. ஆசையாகக் கேட்ட பசங்க இல்லாமல் தனியே சாப்பிட மனமில்லாமல் அடிக்கடி கிச்சனுக்குப் போய் வாசனை பிடித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். நாலு மணிக்கு மேல் ஓவர் பசியாகி பாதி சாப்பிடும்போது வந்தார்கள். மீண்டும் வெளியே போக வேண்டி இருந்ததாலும், போன இடத்தில் எதுவோ சாப்பிட்டு விட்டதாலும் வந்து சாப்பிடுவதென்று மாம்ஸ் தீர்ப்பை வழங்கினார். திடீரென தடதடவென்று படியேறினார் அம்மு.

'எங்கம்மா போறீங்க.. கிளம்பலாம்' என்ற மாம்ஸ்க்கு

'அப்பா ஃபோறிகோல் மறந்திட்டேன்' என்ற பதில்தான் படியிறங்கிப் போனது. தடதடவென்று சது படியேறி வந்த சத்தத்தில் அம்முவின் 'ம்ம்..' கரைந்து போனது. இருவருக்குமே மீதியை ஊட்டிவிட்டு

'யம்மன் கொத் அம்மா.. நீங்கதான் ஃபோறிகோல் செய்றதில பெஸ்ட்' என்ற சர்ட்டிபிக்கேட்டோடு கிளம்பினோம். வரும்போது

'அது என்னடி ரெண்டு மணி நேரம் சமைச்சதா சொன்னே.. சூப் போல இருக்கு.. அதான் சாப்பாடா இன்னைக்கு' என்ற மாம்சுக்கு

'உங்கூர்ல சூப் ரெண்டு மணி நேரமா சமைப்பாங்களா' என்றதோடு நான் நிறுத்த சுவையின் புகழ் பரப்பினார்கள் நான் பெற்ற மக்கள். வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'அடியே.. பெரிய பீசா தூக்கிட்டு வந்தா அது கோவா.. இப்டியா என்ன ஏமாத்துவே நீ' என்று மாம்ஸின் குரல் கேட்டது.

நான் போன போது எனக்கு நிறைய்ய்ய முழு பெப்பரும், நான்கைந்து கோவா பீசும், பாதி பொட்டாட்டோவுமே இருந்தது. அப்பாவியாய் பார்த்த எனக்கு

'அதான் நீங்க அப்போவே சாப்டிங்களே' என்று பதில் வந்தது அதே நான் பெற்ற மக்களிடம் இருந்து. இங்கே இலையுதிர்காலக் குளிருக்கு இதமாகவும், பனிக்காலக் குளிருக்கு உடலைத் தயார்ப்படுத்தத்  தேவையான கொழுப்பைச் சேர்க்கவும் என இது ஃபோறிகோல்  சீஸனாகிவிடுகிறது. அக்காச்சிக்கு இந்த ரிசிப்பி சொன்னேன்.

’செய்லாம்டி எங்க.. சஜோபனுக்கு இப்டியான டிஷஸ் பிடிக்காது. கருண் குட்டிமாமா செஞ்சு குடுத்த பிளாக் சிக்கன் தவிர வேற சாப்டாது. சேரன் எடுவை எடுத்திட்டு இருக்கும். அப்பாவுக்கு செஞ்சு குடுக்கறேன்’ என்றார்.

‘அது என்ன குட்டிமாமா செஞ்ச ப்ளாக் சிக்கன்?? ரஜி எப்போ இப்டிலாம் சமைக்க ஆரம்பிச்சான்??’ என்று ஆச்சரியமானேன்.

’அது நாங்க அங்க போயிருந்தப்போ ரஜி பறவை மீன பொரிச்சுக் குடுத்தான். மீன்னு சொன்னா கருண் சாப்டாரேனுட்டு சிக்கன்னு சொன்னேன்.. அது கருப்பா இருந்ததால அதுக்கு பிளாக் சிக்கன்னு கருண் பேர் வச்சிட்டார்' அப்டின்னா.

நான் கூட மஷ்ரூம் சமைச்சுட்டு பீஃப்னு சொல்லி வெள்ளிக்கிழமைல இவங்களுக்கு குடுத்திட்டு இருந்தேன். மாமியார் இது மஷ்ரூம் ஆனா பீஃப்னு சொல்லி அம்மா தருவாங்கன்னு சொல்லின நாளில இருந்து அவங்க உஷாராயிட்டாங்க. சமைக்க முடியலை. அப்புறம்தான் தெரிஞ்சது மாமியாருக்கு மஷ்ரூம் உவ்வேன்னு. ஆனால் சோயாமீட் மாமியாருக்கு பிடித்தம்ன்றதால இன்றுவரை வெள்ளில மட்டன்னு போயிட்டு இருக்கு.

27 March, 2011

வெற்று வார்த்தைகள்..

writing அறியாமல் வந்தது காதல்

உன்னைப் பற்றி

உன் மேல்

 

 

--

வலைகள் வேறு

ஆண் வேடர்கள்

பெண் மான்கள்

--

 

glemt உண்மைதான்

உன் போல் நான் இல்லை

இதில் கூட

 

 

 

--

கிணற்று நீர்

வெள்ளம் அள்ளாது

வற்றிப் போகும்

 

--

 

jeg savner deg உன் பெயர்

பேச்சில் அனிச்சையாய் வருகிறது

உன்னவள் பெயரும்

10 March, 2011

டார்லிங்ங்ங்..

முதல்ல என்னை தொடர் பதிவுக்கு அழைத்த கோபிக்கு நன்றியை.. இல்லை இல்லை.. நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை தொடர்பதிவு எழுதுவதை விட தொடர யாரையாவது அழைப்பதுதான் அவ்வ்வ்வ்.. அப்படியே கோபி தன் பெயர்க்காரணம் சொன்ன பதிவை இங்கே சென்று படித்துப் பாருங்கள். சிரிப்புச் சுவை தூக்கலாக எழுதி இருக்கின்றார். மீண்டும் நன்றி கோபி.

இனி என் விஷயத்துக்கு வருவோம்.

navn

நான் பிறந்தது நவராத்ரி நேரம். அதுவும் சரஸ்வதிக்குரிய நாளில் பிறந்தேனாம். சரஸ்வதி கடாட்சம் கிடைக்கட்டும் என்று அம்மாவுக்கு கொள்ளை ஆசையாம். நல்லவேளை சரஸ்வதி என்று வைக்காமல் விட்டார்கள். நியூமராலஜியும் பார்க்கவில்லையாம். ஆனால் பின்னாளில் கூட்டெண் 5 வரும்படியாக எழுது என்று அப்பா சொல்லித் தந்தார். கல்யாணத்தின் பின் இனிஷியல் மாறியபோது அதையும் விட்டுவிட்டேன்.

எனக்கு என் பெயர் தவிர்த்து யாராவது செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது நினைவு தெரிந்த நாளில் இருந்து பிடிக்காது. எனக்கு நினைவு தெரியாத வயதுகளில் என்னை ச்செல்லமாக.. ரொம்பச் ச்செல்லமாக கூப்பிடுவார்களாம். ஒரு தடவை க மு வில் கண்ஸ் அம்மாவிடம் என் கூட சண்டை போட மேட்டர் சிக்காத நாளில் இது பற்றிக் கேட்டபோது அம்மா சொன்னார். ‘கூப்டோமே.. ஆனா நீங்க அதை சொல்லி கூப்ட முடியாதே’ன்னு. அப்போ கண்ஸ் வெக்கத்தோட சிரித்ததும், நான் அம்மாவை முறைத்த்த்ததும் இப்போதும் எனக்கு நினைவிருந்தாலும் கூடவே அவர் விதியும் சிரித்தது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

பக்கத்து வீட்டில் அம்மா உறவுமுறைப் பாட்டி ஒருவர். என்னை வெள்ளை ஆப்பம்னு கூப்பிடுவார். விடுங்க மக்கள்ஸ். அதான் பாட்டி என்று சொன்னேனே. அவர் கண்ணாடி கூட போட்டதில்லை. நான்காவது படிக்கும்போது போய்விட்ட பாட்டியோடு அந்தப் பெயரும் போய்விட்டது.

அம்மா வழி, அப்பா வழி உறவுகளில் அம்மாச்சி, செல்லம், ராசாத்தி இப்படியாக கூப்பிடுவார்கள். என் முன்னே பிறந்தவர்கள் அதிலும் குறிப்பாக ரஜி.. மாடு, எருமை, மூதேவி, சிலோங்கி (எதிலும் ஸ்லோ), சாக்குமூட்டை, நாய், பேய், பிசாசு, குரங்கு, சனியன் இப்படியாக இன்னும் பல பெயர்கள் சொல்லி அன்ன்ன்ன்ன்பா கூப்பிடுவார்கள்.

நண்பர்கள் நான் மேலே சொன்ன காரணத்தால் வேறு பெயர் சொன்னதில்லை. ஆனால் கஸின்ஸ், நண்பர்ஸ் அவ்வப்போது நான் இருக்கும் கெட்டப்புக்கு ஏற்ப வனிதா, மனிஷா, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நயன் தாரா, ஷாலினி, ஜெனிலியா இப்போ லேட்டஸ்ட்டா டப்சி என்பது வரைக்கும் கூப்பிடுவார்கள். எல்லோரும் ஒரு தடவை உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லி கொண்டீர்கள்தானே. என்னுடைய ஒரு ஃபோட்டோ பார்த்த அப்பா லைட்டா ஐஷ்வர்யா ராய் ஜாடை தெரிவதாகச் சொல்லி ஐஷ் என்று கூப்பிட்டதைக் கேட்டும் இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன் மக்கள்ஸ். எனவே அழுகை வேண்டாம். கொலைவெறி வேண்டவே வேண்டாம்.

ஐந்தாவது வரை என் பெயரில் யாரும் பள்ளியில் படித்ததில்லை. ஆறாவதுக்கு போனபோது அந்தப் பள்ளியில் எட்டாவதில் ஒருத்தர் இருந்தாங்க. எங்கள் ஊரில், சொந்தங்களில் மூவர் என் பெயரில் இருந்ததாக நினைவு. இங்கே வந்ததும் என் கலர் காரணமாக சாக்லெட் என்று கூப்பிடுகிறார்கள். அதை விட என் பெயர் இவர்கள் வாயில் படும்பாடு இருக்கிறதே.. கொடும்ம்மை.. இந்த ஊரில் என் பெயரில் யாருமே இல்லை. நான் மட்டும்தான். இங்கே இருப்பதே கொஞ்சம் தமிழர் என்பதால் இனிப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என் பெயர் யாரும் வைக்க மாட்டார்கள் என்ற பெரும் ஆறுதல் எனக்கு இருக்கிறது.

கண்ஸ் வீட்டில் இரண்டாவது பிள்ளை என்பதால் பெரியண்ணன் பேருக்குப் பொருத்தமாய் வைத்ததாக மாமியார் சொன்னார். அம்மு பிறந்தபோது எல்லாப் பொருத்தமும் பார்த்து மாமியாரே பெயர் வைத்தார். அழகு, லட்ஷணம் என்பதாகப் பொருள் வரும் அவர் பெயருக்கு. சதுவுக்கு என் சித்தப்பா வைத்த பெயர். எதிர்பாராமல் என் பிள்ளையாரின் பெயரே அமைந்ததில் அவ்வளவு சந்தோஷம் என்பதை விட எங்களோடு இப்போது இல்லாத சித்தப்பா நினைவாக அவர் பெயர் இருப்பது வரம்.

அம்முவும் சதுவும் என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவார்கள். அதிலும் அம்மு அம்ம்ம்மா என்று அழுத்திச் சொல்லும்போதும், என்னாம்மா என்று சதுர் அடிக்குரலில் சொல்லும்போதும் நான் சரணாகதி. என் கண்ணன் என்னை கண்ணம்மா, தங்கம்மா என்று உருக வைப்பான். உபரியாக டா, டி வேறு. கோவம் வந்தால் மட்டும் கண்ணாளனாகி முழுதாகப் பெயர் சொல்வான்.

இப்பொழுது நானும் சிலரை தொடருக்கு அழைக்கலாம் என்றால் கடைசிப் பத்தி தரும் இதம் வேறு யோசிக்க விடவில்லை. சும்மாவே கைகாட்டிவிடுவது சுலபமில்லை. அத்தோடு ஓரளவுக்கு எல்லோரும் எழுதி வேறு ஆகிவிட்டது. தொடர அழைப்பவர்கள் முன்பே எழுதி இருந்தால் எனக்கு அல்ல கோபிக்கு ஆட்டோவோ லாரியோ அனுப்பிக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துக் கொல்லுங்கள். விருப்பமும் நேரமும் இருந்தால் தொடர்ந்து எழுதுங்கள்.

என் உடன் பிறப்பு ப்ரியமுடன் வசந்த்

என் மனதிலிருந்து ப்ரியா

வெறும்பய ஜெயந்த்

வினு வினோத்

கூர்வாள் கயல்

மாணவன்

அக்கம் பக்கம் அமுதா கிருஷ்ணா

மனசு சே. குமார்

வர்ட்டா..

24 November, 2010

உங்கள யாரு காப்பாத்த போறாங்க..

உங்கள யாரு காப்பாத்தப் போறாங்களோ தெரியலையே பிள்ளையாரப்பா.. இப்படி வந்திருக்கணும் தலைப்பு.. என் டீம் லீடர் இருக்காங்களே. இன்னைக்கு எனக்கு இல்லை உங்களுக்கு ஒரு கொடும் செய்தியை சொல்லிட்டாங்க. அவங்க ஃப்ரெண்டி அம்மாவுக்கு  95 வயசாம் இந்த வாரம். இதிலெந்த கொடுமையும் இல்லைங்க. இவளவு காலம் அவங்க உயிரோட இருந்தது சாதனை. அவங்க வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் எல்லாம் சொல்லிட்டு வந்தாங்க. போன வருஷம்தான் முதல்முதலா சொன்னாங்களாம் ’நான் நினைக்கிறேன் எனக்கு கண்ணு கொஞ்சம் மங்கலா தெரியுது போல’ ன்னு. நானும் கலீக் ப்ரெட்டும்.. (அட அந்த ப்ரெட் இல்லைங்க.. இது Brett..) ம் கொட்டி தேவையான இடங்களில் மானே தேனே சொல்லி கேட்டுக் கொண்டிருந்தோம். இருங்க.. எதுக்கும் மறுபடி நினைவுபடுத்தி சரி பார்க்கறேன் அவங்க அதத்தான் சொன்னாங்களான்னு.

‘ஏய் அவங்க உன்னை மாதிரியேதான்.. ரொம்ம்ம்ம்ப அமைதி.. அதனாலதான் அவங்க இத்தனை வருஷம் உயிரோட இருக்காங்க.. நான் எங்க சொன்னேன்னு பாரு.. நீயும் நிறைய வருஷம் இருக்கப்போறே’ 

இதை கேட்டதும் நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன். நீங்க கூட பரவால்லைங்க. தூர இருக்கிங்க. என் கண்ணாளனை நினைச்சுப் பாருங்க.. ஆவ்வ்வ்..

:(  :(

பசங்க பர்த்டேக்கு நான் செய்த ஐசிங். சது கேட்ட ஷாடோ என்ற கார்ட்டூன் ஃபிகர் சரியாக வந்தது. அம்முவோடது.. ஆவ்வ்வ்.. வெள்ளை நிறத்தில ஐபாட் கேட்டாங்க.. அது ஐ bad ஆகிவிட்டது. அம்மா மனம் நோகாமல் ‘இல்லைம்மா அது நல்லாருக்கு’ன்னு அவங்க ஆறுதல் சொல்லிட்டாங்க. நீங்களும்.. புரியுதில்லை?? அதையும் மீறினா கமண்ட் பப்ளிஷ் பண்ணமாட்டேன் சொல்லிட்டேன். இது எச்சரிக்கை இல்லை.. கட்டளை!!

DSCN0210 DSCN0211

:( :(

எல்லாரும் இன்னும் ஒரு தடவை தலைப்பை சொல்லிப்பாருங்கள். அதேதான். எனது அடுத்த தாக்குதல். பதிவுலக வரலாற்றில்.. அட என்னுடையதுங்க.. இரண்டாவது சமையல் குறிப்பு. பட்டர் கேக்.

முதலில் தேவையான பொருட்கள்.

IMG_0729 மா 500g

சீனி 500g

பட்டர்/மாஜரின் 500g

முட்டை 8 (படம் எடுக்கும்போது கோழி இடலை)

பேக்கிங் பவுடர் 4 தேக

வனிலா பவுடர் 4 தேக

 

முதலில் சீனி, மாஜரின் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒவொரு முட்டையாக சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். முட்டையை மொத்தமாக சேர்ப்பதைவிட ஒவொன்றாக சேர்த்தால் மெதுமெதுவென்று வருமாம் (வருகிறது) கேக். அது தடிப்பான கிரீம் மாதிரி ஆனதும் மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு பீட் செய்யுங்கள். கடைசியாக பேக்கிங்/வனிலா பவுடர்கள் சேர்த்து அதிகம் பீட் செய்ய வேண்டாம். செய்தால் கேக் கல்லாகிவிடும் (ஆகியது) அபாயம் நிறையவே இருக்கிறது. இனி கலவையை கேக் ட்ரேயில் பேக்கிங் பேப்பரோ இல்லை பட்டர் தடவியோ ஊற்றி 180c இல், அவனின்(அவனா ஓவனா?) நடுத் தட்டில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால்.. இப்படி வரும்.

IMG_0732

கத்தி லிஸ்ட்ல இல்லையே.. இப்போ எப்படி வந்தது என்று கேட்பவர்களுக்கு நான் செய்யும் கேக் செலவைப் பாராமல் பார்சலில் அனுப்பிவைக்கப்படும்.

முக்கிய அறிவிப்பு. மாஜரின் அல்லது பட்டர் அல்லது இரண்டும் கலந்து பாவிக்கலாம். ஆனால் பட்டர் சுவை தனி. அத்தோடு விருப்பமாயின் அன்னாசி எஸன்ஸ் ஒரு தேக சேர்த்துக் கொண்டால் அதன் மணமே தனி. விருப்பமான கலர் சேர்த்து இரண்டு லேயராக ஊற்றி பேக் செய்தால் அதன் அழகே தனி. படத்தில் கரையை மட்டும் கரெக்டா வெட்டி வச்சிருக்கேனே.. அந்தக் கரையோட சுவையே.. அதே தாங்க..

வர்ட்டா..

10 August, 2010

யாராவது.. ப்ளீஸ்..

உன் முன்னால் இருக்கும்போதெல்லாம்

உயிர் பிரிக்கும் எதையும்

என் கண்படாமல் வைத்து விடுகிறேன்

மிகக் கவனமாக

உன்னை எதுவும் செய்யும்

உரிமை எனக்கில்லை

என்னை நானே கொலை செய்துவிடும்

எண்ணம் எனக்கிருக்கிறது

இப்பொழுது புதிதாக.. பயமாக..

1 1 1 1 1

செத்துப் பார்க்க ஆசை

அப்போது உன் நினைவு

என்னுள் எப்படி இருக்கிறதென்று

உணர்ந்து பார்க்க வேண்டும்

யாராவது என்னைக் கொல்லுங்களேன்

ஒரே ஒரு தடவை..

1 1 1 1 1

புதைத்து விட்டதாய்

நான் நினைத்திருந்த

ஆசையொன்று

நேற்றிலிருந்து மீண்டும்

விரைந்து படர்கின்றது

மன வெளி முழுதும்

முன்னை விட

வேகமாய்

வீரியமாய்

எப்போது நான் உன்னை

கொல்லப் போகின்றேன்??”

1 1 1 1 1

இன்னைக்கு என் பயணத்தை தொடரலாம்னு தான் இருந்தேங்க. முடியலையே. குரு என்னடான்னா கனவு கண்டு மிரட்டுறார். தாமிரா என்னடான்னா காமிராவால விரட்டுறார். நர்சிம் ஒரு படி மேல போய் கொலையே பண்ணிட்டார்னா பாருங்களேன்.

என்ன செய்வேன் நான்?? எழுத வந்த பயண விபரம் மறந்து போச்சுங்க. நான் பாவம் மட்டுமில்லை. பயந்தவளும் கூட. இது உங்களுக்கும் தெரியும் இல்லையா. இதுக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சேன். பயத்த பயத்தாலதான் எடுக்கணும்னு யாரும் சொல்லலைங்க. நானே எனக்கு சொல்லிக்கிட்டேன். அதோட விளைவு தான் இந்த இடுகை. இப்போதான் மனசு அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடான்னு சொல்லுது.

வர்ட்டா..

21 July, 2010

நானும் ரவுடிதான்!!

ரொம்ப நாளாவே எனக்கொரு ஆசைங்க. பதிவுலகத்துக்குள்ள குதிச்சு ஒரு வருஷத்துக்கு மேலாகியும் இன்னமும் ஒரு சமையல் குறிப்பு கூட  எழுதலையேன்னு. தெரிஞ்சாத்தானேன்னு மனசாட்சிய முந்தி நானே சொல்லிட்டேன். அதிலும் இந்த ரெசிப்பி என்னவர் ஒரு அமெரிக்கன்  பொண்ணு குடுத்ததுன்னு கொண்டு வந்தார். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அட.. இந்த கேக்க சொன்னேங்க. இன்னும் பேர் சொல்லலை இல்லை. இது பேரு banana cake. நீங்க உங்க இஷ்டத்துக்கு வேற பெயர் வேணா வச்சுக்கலாம். இப்போ கம்மு.. சமையல ஸ்டார்ட் பண்ணலாம்.
DSCN0214
நல்ல்ல்லா படத்த பாத்துக்கோங்க. முட்டை, பால் எடுத்து வைக்க மறந்துட்டேன். oven தூக்கிட்டு வந்து இங்க வைக்க முடியல. அதுக்கு மேல இதை எல்லாம் அடுக்க முடியல. இப்போதான் மத்யான சமையல் முடிச்சதால hot plate சூடா இருக்கு. இம்புட்டுதான். கரெக்டா எல்லாம் எடுத்து வச்சுக்குங்க. அளவு அடுத்த பத்தி. முக்கியமா சாப்ட ஆள் வேணுங்க. உங்க வீட்டுக்கு குடும்பத்தோட ஆஜராக நான் தயார். டிக்கட் செலவு உங்களது. மருத்துவ செலவு என்னது.
ஆயில்  125g
சர்க்கரை  250g
முட்டை 2
வாழைப்பழம் (நன்கு கனிந்தது) 3 – 4
மா 500g
பேகிங் சோடா 1ts
உப்பு 1/2 ts
பேகிங் பவுடர் 1 ts
வெனிலா பவுடர் 1 ts
பால் 3 tabs
அப்டியே நான் சொல்லி இருக்கிற அளவில, ஒண்ணொண்ணா சேர்த்து நல்லா பீட் பண்ணிக்கோங்க. இதுல பால் அவங்க சொன்னத விட நான் ஒரு நாள் தப்பா 300ml சேர்த்துட்டேன். அது கூட நல்லாத்தான் இருந்துது. அப்டியே ஒரு ப்ரெட் ஃபோர்ம்ல விட்டுக்கோங்க.
DSCN0215
இப்போ oven 160c ல செட் செஞ்சுக்கோங்க. ஹீட் வந்ததும் அவனோட lowest rack ல வச்சு ஒண்ணரை மணி நேரம் பேக் செய்யணும். உங்களுக்கு விருப்பம்னா  90 நிமிஷமும் பேக் செய்யலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
DSCN0216
என்ன சிரிப்பு?? இதுக்குத்தான் சொன்னேன் பெயர் உங்க இஷ்டம்னு. இது ப்ரெட் ஃபோர்ம்ல செய்றதுனாலையோ என்னமோ பாக்குறத்துக்கு ப்ரெட் மாதிரியே இருக்கும்ங்க.
DSCN0220  DSCN0219
சமையல் எப்டி இருந்தாலும் ப்ரசண்டேஷன் நல்லா இருக்கணுமாம். இதிலயும் ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன்.
ஒண்ணு - பாதி வெட்டின வெங்காயத்தை நடுவுல வச்சிங்கன்னா குட்டி விசிட் வரவங்க அத சாக்கு வச்சு அழுறத்துக்கு ஈஸியா இருக்கும்.
டூவு - அப்டியே நடுவுல ஒரு முழு வெங்காயத்தை வச்சிட்டிங்கன்னா உங்க மாலை நேரத்த முழுசா முழுங்க வந்தவங்க சாவகாசமா தோலுறிச்சு அழ வசதியா இருக்கும்.
இத பாத்து, படிச்சு அழுகை வருது ஆனா அழ முடியலைன்னு நினைக்கிறவங்க தயவு செஞ்சு அழுதிடுங்க. பிளீஸ்.. மனசுக்குள்ள கவலைய அடக்கி வச்சா உடம்புக்கு ஆகாதாம்.
வர்ட்டா..