Pages

  • RSS

18 January, 2012

நதி மனிதர்.

vente காத்திருத்தலின் அவசியமின்மையை

உணர்த்திப் போகின்றன

ஒப்புக்காய் ஆகிவிட்ட சந்திப்புகள். 

 

--------------------------------------------------------------------------------------------------------------

Whats-love இயல்பை மாற்றிப் போடும் காதலே

ஒரு கட்டத்தில்

இயல்பை எதிர்பார்க்கிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------------

elv கரையை அரித்துச் செல்வது தெரிந்தும்

ஓடிக் கொண்டிருக்கிறது நதி

மனங்களை அறுத்து

கடந்து செல்கின்றனர் மனிதர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------

THE VAMPIRE DIARIES கதகதப்பான உன் அணைப்பில்

இன்னமும் சுடுகின்றது

நீயறியாத என் கண்ணீர்.

 

---------------------------------------------------------------------------------------------------------------

kjærlighet-1 அன்பே இல்லாத இதயம்

என்னுள் தன் இருப்பை

உறுதி செய்து கொள்கிறது

அவ்வப்போது.

8 நல்லவங்க படிச்சாங்களாம்:

நட்புடன் ஜமால் said...

லேபிள் தவிர்த்து யாவும் நலம் :)

கோபிநாத் said...

3வது குட் ;-)

கார்க்கிபவா said...

இது வேற‌ ஆரம்பிச்சாச்சா???ரைட்டு

பித்தனின் வாக்கு said...

imm nadakkattum nadakkattum.

amma ithu kavithaiya?. good nalla irukku.

Madumitha said...

ரொம்ப நாளாச்சு.
யாவரும் நலம்தானே?

Anonymous said...

சுசி எல்லாமே ஒரு நிகழ்வை தொட்டுவிட்டு செல்ல தவறவில்லை..
பிடிச்சிருக்கு அரும்புகள் அத்தனையும்!!!

சுசி said...

அப்டியா ஜமால்.. லேபிளை தூக்கிடறேன் :)

@@

கோப்ஸ் மீதி பெஸ்ட்டா??

@@

கார்க்கி.. ரைட்டுன்னா ரைட்டு.

சுசி said...

அண்ணாஆஆஆ.. இல்லிங்ணா :)

@@

நலமே மதுமிதா. நீங்கள் யாவரும் நலமா??

@@

தமிழ்.. உன் கமண்டே கவிதைடா :)