Pages

  • RSS
Showing posts with label கேட்டதில் பிடித்தது. Show all posts
Showing posts with label கேட்டதில் பிடித்தது. Show all posts

30 June, 2011

உன்னுள் வாழ்கிறேன்..

எங்கிருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆஃபீஸில் என் காதுகளுக்கு மட்டும். ’சீக்கிரமே உனக்கு காது அவுட்டாகப் போது பாரு` என்று சக ஊழியர்கள் கிண்டல் செய்தாலும் ஐபாட், இயர்ஃபோன் மறந்து போகும் நாள் எனக்கு சாபக்கேடு. என் நண்பர்களுக்கும். நல்லதா ஒரு பாட்டு சொல்லு என்று அடம்பிடிப்பேன். அவர்கள் சொல்லும் பாட்டின் வரிகள் மறந்துவிட்டால் கூகிளாண்டவர் துணையோடு மனதுக்குள்ளும், தனியாக இருக்கும்போது முணுமுணுத்தும் பாடிக்கொண்டிருப்பேன். என்னை எங்கோ இழுத்துச்செல்லும் பாடல்களில் ஒன்றை இன்று எஃப் எம் உதவியோடு கேட்க நேர்ந்தது. இன்னமும் வெளிவர முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். அல்லது வர விரும்பாமல் உள்ளேயே இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

முதல் முதல் கேட்டபோதே மனதை அழுத்திய பாடல் இது. அதன் பின் எப்போது கேட்டாலும் கனம் குறைவதில்லை. எதுவோ ஒரு சோகம், பாரம், தவிப்பு இப்படிக் கலவையாய் ஒரு உணர்வு வந்து போகும். காலையிலிருந்து இப்போது இந்தக் கணம் வரை திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  கொஞ்சம்  தனிமை.  நிறைவாய்க் கண்ணீர். இந்த மன அழுத்தம் போக தேவையாய் இருக்கிறது. உடனேயே உனக்கென்ன இப்போ என்று கேட்காதீர்கள். எனக்கு எதுவும் இல்லை. சில நேரங்கள் அப்படித்தான். ஏதோ ஒன்று எதுவோ ஒன்றின் காரணமாய் தேவைப்படுகிறது. தேவைப்படுத்திக் கொள்கிறேன். தொடர்பே இல்லாமல், என்னவென்றே புரியாமல். சிரிப்பும், அழுகையும் எதுவோ ஒன்றின் நினைவுபடுத்தலாய் வருவது வாழ்வில் இயல்பே.

பாடலைக் கேளுங்கள். யுவன், நா.முத்துக்குமார் சேர்ந்து படைத்த அற்புதம். ஷ்ரேயா கோஷலின் குரல். இது தமிழில் அவரின் ஆரம்ப காலப் பாடலாக இருக்க வேண்டும். எனக்கு சரியாகத் தெரியவில்லை. உச்சரிப்பைக் கவனியுங்கள்.  7G, ரெயின்போ காலனி படத்திலிருந்து என்னைத் தின்றுகொண்டிருக்கும் பாடல்.

நினைத்து நினைத்துப் பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு..

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்..

10 April, 2011

என் கண்ணன்..

சீடன். எதிர்பார்க்கவே இல்லை இப்படிப்பட்ட ஒரு படமாக இருக்குமென்று. விமர்சனங்கள் படிக்காமல், கேட்காமல் படம் பார்த்து மலைப்பதும் வித்தியாசமான அனுபவம்தான். எனக்குப் பிடித்த காதல். எனக்குப் பிடித்த வலியோடான காதல். அடுத்து நடக்கப் போவதை மட்டுமில்லாமல் முடிவைக் கூட முன்னாடியே ஊகிக்க முடிந்தது. எந்த திடீர்திருப்பங்களும் இல்லை. இருந்தாலும் ஏனோ மென்மையாய்.. மயிலிறகாய் வருடியது கதை.. படம்.

எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு கண்ணன் படம் எப்போதும் இருந்தது. செப்பு வாயும், வட்டக் கண்களும், அலை அலையாய் கருமுடியும், எதையோ சொல்வதாய்/எதிர்பார்ப்பதாய் அந்தக் கண்களில் வழியும் கருணையும்,  பஞ்சுக் கை உயர்த்தி வெண்ணெயை எமக்குத் தருவதாய் இரு கால் நீட்டி உட்கார்ந்திருப்பான் குறும்புக்காரன். என் பொல்லாத போக்கிரிக் கண்ணன் என்னைக் கை நீட்டி  அழைப்பதாகவே என் கண்ணுக்குத் தெரியும். அப்போதிருந்து அவனுக்குத் தனியாகப் பூ வைக்க ஆரம்பித்தேன். காதல் என்றால் கண்ணன் என்று புரியத் தொடங்கியதில் இருந்து அவனோடான என் உறவும் நெருக்கமாய் ஆனது. நாங்கள் இடம்பெயர்ந்து எங்கு போனாலும் அங்கே அவன் வந்துவிடுவான். அவனில்லாத இடத்தில் மயிலறகில் அவன் உருவம் பொருத்தி வணங்கிய நாட்களும் உண்டு.

012 இங்கே வந்த புதிதில் பூஜை அறையில் அவன் இல்லாத கவலையை அடுத்த வருடமே காலண்டர் வடிவில் வந்து போக்கினான். கன்சீவ் ஆகி இருந்த சமயங்களில் அந்தக் குழந்தைக் கண்ணனின் குறும்பு முகத்தைப் பார்க்கத் தெவிட்டுவதே இல்லை. இப்போது போலவே.

 

மீண்டும் சீடன். மனதை அழுத்திய வலியோடு அசையாது பார்த்துக்கொண்டிருந்தேன். ’நீயும் நானும் மட்டும்தான் இங்க இருக்கோம்னு நினைச்சுப்பாடு’ என்று பாட்டிம்மா சொல்ல மகா பாடத் தொடங்கியதும் கண்ணீர் கட்டுக்குள் இருக்கவில்லை. சுகமான அழுகையோடு இன்னொன்றும் தோன்றியது. சித்ரா அற்புதமாகப் பாடி இருந்தாலும் அனன்யாவுக்கு அவரின் குரல் கொஞ்சமாய் பொருந்தவில்லை. நன்றாக நடித்திருக்கிறார் அனன்யா. தனுஷ் முருகனாய் காட்சி கொடுத்த இடத்துக்குப் பக்கத்தில் சேவல் காணிக்கை செலுத்துமிடம் என்று எழுதப்பட்டிருந்தது சின்னதாய் ஒரு சிரிப்பைத் தந்தது.

தினாவின் இசையில் பா.விஜயின் வரிகள் காதலின் வலியை அழகாய்ச் சொல்கின்றன. முருகனிடம் பாடலைக் கேட்கும் நானும் வேண்ட ஆரம்பித்துவிட்டேன். நீங்களும் கேட்டு, பாருங்க.

--

ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்
மறுநாள் அந்த செடியில் 
அந்த மலர் வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்..

(ஒரு நாள்..)

கண்பார்வை பறித்து எனை காண சொல்கிறாய்
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்
நான் சரியா இல்லை தவறா
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா..

(ஒரு நாள்..)

உன் மீது சிந்தும் நீர் தீர்த்தமானதே
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே
உருகியே கேட்கிறேன் அடுத்த என் பிறவியில்
மனம் இரங்கி அருள் வழங்கி
உன் கோயில் படிகள் ஆகப் பிறக்கும் வரம் தா..

முருகா என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும் முருகா
இந்த ஜனனம் ஜனனம் போதும் போதும் முருகா
உன் சரணம்.. சரணம் முருகா..


09 June, 2010

கலைந்த கனவு..

இது நடந்தது நான் விண்ணைத் தாண்டிய அன்று. அப்போ ஏன் அப்போவே சொல்லலன்னு நீங்க சொல்றது கேக்குது. அப்டியே நீங்க சொல்லலைன்னாலும் கூட நான் சொல்ல வேண்டியது ஒரு பதிவரா (அப்டின்னா??) என்னோட தலையாய கடமை. அதனால சொல்லிடறேன். (ஸ்ஸ்ஸப்பா.. ஒரு பத்தி ஆச்சா)

படம் முடிஞ்சு அழுது வீங்கின கண்களோட கூட்டத்தை விடுத்து.. தப்பி ஓட வழியில்லாம ஒரு ஃப்ரெண்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம், அன்னிக்கு எனக்கு.  தெரிஞ்சவங்க தள்ளி நின்னுட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் இசை பிடிக்கும்னு தெரியும்.

”எப்டிங்க பாட்லாம் அசத்தல் இல்லை” இது நானு.

“ஆமா.. பைத்தியம் பிடிச்சிடுச்சு.. ஆனா ஒரு பாட்டு படத்தில வர்ல. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்” இது அவங்க.

“அப்டியா.. ம்ம்ம்.. எல்லாமே வந்துதே.. என்ன பாட்டு அது”

“கனவெல்லாம்னு.. செம பாட்டுங்க”

”கனவெல்லாமா.. அப்டி ஒண்ணு நான் வி தா வ ல கேட்டதே இல்லையே”

“இல்லை.. நீங்க யூ டியூப்ல பாருங்க.. அதையும் சேர்த்திருக்கலாம். வேற எதுனா இழுவை சீன கட் பண்ணிட்டு”

பேச்சு தொடர்ந்து, முடிந்து வீட்டுக்கு வந்து மறந்தே போய்ட்டேன். இன்னைக்கு மன்னிப்பாயா கேட்டு மனசு கனத்துப் போயி இருக்கும்போது இது திடீர் நினைவு வந்து ஆராய்ச்சிய பண்ணேன். யப்பா.. என்ன ஒரு பாட்டு. ஃப்ரம் திலிப் வர்மான்னு இருக்கு. யார்னு தெரில. ஆனா வீடியோல ப்ரசண்ட் பை எஸ். ஜனஹன்னு இருக்கு. ரெண்டு பேருக்குமே நன்றிகள். படத்தோட ஸ்டில்ஸ் ஸ்லைட்ல போது. அதனால தான் அவங்க இது வி தா வனு நினைச்சிருக்காங்க. பாடல் வரிகள், இசை ரெண்டுமே மனசை பிசையுதுங்க. கேட்டுட்டே இருக்கேன். அவ்வ்வ்..

நான் கேட்டத எழுதி இருக்கேன். அதாவது என் காதில வரிகள் இப்டித்தான் கேட்டுது.

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே

பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே

--

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை விழி பார்த்தேன்

நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப் பூவாய் நீ குறுக

எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி

நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

அப்படியே கண் மூடி ரசிச்சுட்டு இருக்கும்போது மியூசிக் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இல்லாமலே போயிடுது. இது காதல் தோல்வியில பாடினதா இல்லை காதலிகிட்ட தன் காதலோட ஆழத்தை சொல்ற மாதிரி பாடினதா தெரில. ஆனா வரிகள் மனதில பதிஞ்சு போகுது. பாடகரோட குரல் கொஞ்சமே உன்னி கிருஷ்ணன நினைவுபடுத்தும் விதமா இருக்கு. எனக்கென்னமோ இது காதலி நினைவில காதலன் பாடினதாத்தான் இருக்கும்னு தோணுது. ஏன்னா கேக்கும்போது ஒரு விதமான வலி  தானா உருவாகுது. அப்டியே ஒரு ஜோடி மைண்ட்ல நிழலா வராங்க. அவங்களுக்கு இடையிலான காதல், பிரிவு, வேதனைனு காட்சிகள் ஆட்டோமேட்டிக்கா பிளே ஆகுது.. நின்று போகும் இசையோடு சேர்ந்து காட்சிகளும் கலைஞ்சு போகுது.. எனக்குள்ள.. ஆவ்வ்வ்..

அவங்களுக்கு என்ன ஆயிருக்கும்னு தெரிஞ்சுக்க மீதியும் கேட்டே ஆகணும்னு மனசு அடம்பிடிக்குதுங்க.. எங்கு போவேன்.. யாரைக் கேப்பேன்னெல்லாம் தவிக்கலைங்க நானு. அதான் நீங்க இருக்கிங்களே.. யாராவது இந்த பாட்டு முன்ன பின்ன கேட்டிருந்தா சொல்லுங்க. நீங்க.. உங்க குடும்பம்.. உங்க நட்பு.. உங்க தெரு.. உங்க ஊர்.. ஏன் உங்க நாடே நல்லாருக்கும். நீங்களும் பாருங்க, கேளுங்க மக்கள்ஸ்..

வர்ட்டா..

11 June, 2009

அயன் - நெஞ்சே நெஞ்சே....


ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் என் சேர்கிறாய்..
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே....

கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் இம் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே பேரன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே
வெயிற் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீழும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் மலராகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே

கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காத்து நம் பூமி தனை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாது
ஏய் மஞ்சள் தாமரையே என் உச்ச தாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்..... ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

படம் : அயன்
பாடியவர் : ஹாரிஸ் ராகவேந்திரா, மகதி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பி.கு:- குளிர்மையான காட்சிகள், மகதியின் இனிமையான குரல், எல்லாத்துக்கும் மேல ஹாரிஸின் இசை என எல்லாம் சேர்ந்து இந்த பாடலை ரசிக்க வைத்தது.