Pages

  • RSS
Showing posts with label சக பதிவர். Show all posts
Showing posts with label சக பதிவர். Show all posts

22 September, 2011

வாழ்க வளமுடன்!!

இப்படி ஒரு ஆத்மார்த்தமான விஜய் ரசிகரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு கார்க்கி என்றதுமே நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம் விஜய் என்பதாய்த்தான் இருக்கும். விஜய் பற்றிய அத்தனை தகவல்களும் அப்படியே தெரிந்து வைத்திருக்கிறார். சமயத்தில் விஜயை விட்டுக்கொடுக்காமல் பேசுவது போல் தோன்றினாலும் அவரின் தவறுகள், குறைகளை சொல்லிக்காட்டுவதிலும் கலாய்ப்பதிலும் எப்போதும் முன் நிற்பார். விஜய் பற்றிய ஒரு தொடரை அழகிய தமிழ்மகன் விஜய் என்ற தலைப்பில் 600024.com என்ற என்ற இணையத்தளத்தில் எழுதி வந்தார். புதியதான தகவல்களோடு புதிய படங்களையும் சேர்த்து மிகவும் நன்றாக வந்திருந்தது அந்தத் தொடர்.


காவலனில் ஸ்டெப் ஸ்டெப் பாடல் வந்த பொழுது அதன் காட்சியமைப்பு இப்படியாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கற்பனை வரும் அளவுக்கு அந்தத் தொடரின் முதல் பாகத்தையே கலக்கலாக எழுதி இருப்பார். படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.


"சென்னையின் முக்கிய ஏரியாவில் இருக்கிறது அந்தக் கல்லூரி. படிப்பிற்கும் சரி.. மற்ற எக்ஸ்ட்ரா கரிக்குலருக்கும் சரி. பெயர் போன கல்லூரி அது. தமிழ் சினிமாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்கிய கல்லூரிகளில் முக்கியமானதும் கூட. ஒரு மழைக்கால மாலை வேளையில், பரந்து விரிந்த அந்தக் கல்லூரியின் வளாகத்தில் இருந்து வெளியே வந்தது மொத்தம் நான்கு பேர் கொண்ட குழு. அதில் ஒருவன் மட்டும் பார்க்க படு ஸ்மார்ட். சிறிய கண்கள். முறையாய் வாரப்பட்ட தலை. எளிமையான டிஷர்ட். அதற்கேற்ற ஜீன்ஸ். பார்ப்பதற்கு நம்ம ராஜாவா இவன் என்ற சந்தேகத்தை எல்லோருக்கும் எழுப்பும் உருவம் என்றாலும் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது அவனிடம். குறிப்பாய் அவனது கண்களில
நால்வரும் ஐஐடியில் நடக்கும் மகா மெகா கலை நிகழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். ஸ்மார்ட் பாய் தான் குழுத்தலைவன். அப்போது மரண ஹிட்டான ராக்கம்மா கையைத் தட்டு பாட்டிற்கும், மைக்கேல் ஜேக்ஸனின் பீட் இட் பாட்டிற்கும் ஒத்திகை எல்லாம் கனகச்சிதமாக முடித்திருந்தார்கள். முதல் பாதியில் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைலில் பட்டன் திறந்த சட்டையுடனும், எம்.ஜே பாடலுக்கு கருப்பு நிற மெட்டாலிக் உடையுடனும் ஆட திட்டம். மேடையேறும்போது ஒழுங்காய் இருந்த சட்டையை, இசைத்தொடங்கும் போது ஒவ்வொரு பட்டனாக கழட்டி, ரஜினி ஸ்டைலில் ஒரு முடிச்சு போட, அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கியது. 60 வயலின்களும் டன்..டன்ன்ன்டன்ன்ன் என்று தொடங்கிய நேரம் ஸ்மார்ட் பாய் ஆட ஆரம்பித்தான். உடன் இருந்தவர்கள் ஒவ்வொருவராக தொடர கைத்தட்டல் சத்தம் உச்சம் தொட்டது.
ரஜினி மாதிரி ஆடுறாண்டி.. செம ஸ்மார்ட் இல்லை. கண்ணை பாறேன்.. என ஸ்டெல்லா மேரிஸ்களும் எத்திராஜ்களும் கிசிகிசுக்க ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். திடிரென அரங்கெமெங்கும் இருள் கவ்வ, ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற சத்ததின் நடுவே விளக்குகள் மின்னின. மேடையில் ரஜினி போய் மைக்கேல் ஜேக்சன் வந்திருந்தார். உடன் வேறு யாரும் இல்லை. ஸ்மார்ட் பாய் மட்டும். பீட் இட் பாட்டின் பீட் ஒலிக்க ஆரம்பித்தது. ஸ்மார்ட் பாயின் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் அரங்கம் அதிர்ந்துக் கொண்டேயிருந்தது.
நிகழ்ச்சி முடிந்து பரிசுகள் அறிவிப்பின் போது பிரச்சினை வெடித்தது. வெத்தல் போட்ட சோக்குல என்று ஆடித்தீர்த்த ஒரு குழு தங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்க வேண்டுமென்ற சண்டையில் இருந்தனர். அரங்கம் முழுவதும் ஸ்மார்ட் பாயின் பெயரை சொல்லி கோரஸாக கத்த ஆரம்பித்தது. வெறுப்பின் உச்சிக்கு போனவர்கள் ஸ்மார்ட் பாயிடமே யார் ஆட்டம் என்று கேட்டனர். உங்க ஆட்டம்தான் சூப்பர் என்றான். முதல் பரிசு அவர்களுக்கு சென்று விட, இரண்டாம் பரிசு வாங்க மேடைக்கு வந்தவன் சொன்னான் “நான் ஸ்டேஜுல மட்டும்தான் ஆடினேன். அவங்க இறங்கியதக்கப்புறமும் ஆடுறாங்க.அதனால் அவங்களுக்குத்தான் முதல் பரிசு போகணும்”. மொத்த ஸ்டேடியமும் எழுந்தி நின்று கைத்தட்ட ஒரே நாளில் சூப்பர் ஹீரோவாக ஆனவன் சிரித்துக் கொண்டே சென்றான்.அந்தக் கல்லூரி லயோலா. அந்த ஸ்மார்ட் பாய் இளைய தளபதி.
நியாயப்படி விஜய் பற்றிய தொடர் அவரது ஸ்டைலில் இப்படித் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் விஜயின் சினிமாவுக்கு முந்தையை வாழ்க்கை அப்படி இருக்க வில்லை. வகுப்பில் கடைசி பென்ச், மற்ற விஷயங்களில் எதுக்குடா அதெல்லாம் நமக்கு என்ற எண்ணம். படிப்பில் சுமார், பார்க்க ரொம்ப சுமார் என்றே இருந்தார். கலைந்த தலை, ஒல்லியான தேகம், ஜிகினா சட்டை என ரோமியோக்களின் எந்த சாயலும் இல்லாமல் இருந்தார் நம்ம இளைய தளபதி. படிப்பிலும் நாட்டமில்லாமல், சினிமாவுக்கென எந்த தகுதியுமில்லாமல் இருந்த விஜய் எப்படி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமானார்? பார்க்கவும் சுமார், நடித்த அனுபவமும் இல்லை என்ற நிலையில் இருந்து விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை என்றழைக்கும் படி எப்படி வளர்ந்தார்? விஜயின் சினிமா பயணத்தை முடிந்தவரை விரிவாக அலசப்போகிறது இந்த தொடர்."


எனக்கு தியேட்டரில் போய் அந்த பாடல் காட்சி பார்த்ததும் சிறிது ஏமாற்றம் வந்தது பற்றி முன்னாடியே சொல்லி இருக்கிறேன். என்னதான் கதைக்காக அப்படியாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது விஜய் ரசிகையாக என் விருப்பம்.


இப்போதெல்லாம் கார்க்கி அதிகம் எழுதுவதில்லை என்ற குறை அதிகம் இருக்கிறது. ஆனாலும் அதற்கும் சேர்த்து வைத்து நடிப்போடு குறும்படத் தயாரிப்பிலும் கால் வைத்திருக்கிறார். இன்னும் பல வெற்றிகளோடு வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற என் பிள்ளையாரை மனதார வேண்டிக் கொள்கிறேன். அவரின் பிஸி ஷெட்யூலில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கென்று ஒரு முழு நாள் லீவ் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நாள் என்றால் இவருக்கு மட்டும் 23, 24 என இரண்டு பிறந்தநாள்கள். அதனால் ட்ரீட் வேணும் என்பவர்கள் உடனடியாக சாளரத்தைத் தட்டுங்கள். 


இன்று போல் என்றும் உங்கள் மனதில் சந்தோசம் மலர்ந்து நிறையட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி.

இணைய தளபதிக்கு ஸ்பெஷலாக இளைய தளபதியின் பாடல் பரிசு.

22 September, 2010

தோழி(கள்) அப்டேட்ஸ்!!

nathiya

shalini

malavika 1

bavana 2

kajal-agarwal 1

sunaina 1

nayantara

எல்லாம் ஒரு கடிதம் செஞ்ச வேலை. நடிச்சா இணைய தளபதி கூடத்தான் நடிப்போம்னு ஆளாளுக்கு கால்ஷீட்டும் பொக்கேயுமா சாளரம் வாசல்லவே நிக்கறாங்க. மத்தவங்கள ஏதோ சமாளிச்சிட்டேன். இந்த மாளவிகாவதான் ஒழுங்கா ஒரு போட்டா பிடிக்கிறத்துக்குள்ள.. உஸ்ஸ்ஸ்ஸ்.. ஹீரோ ஃபோட்டோவ வேற பாத்திடுச்சா.. தானும் செக்ஸியாதான் வருவேன்னு ஒரே அட்ட்ட்டம்.

பரிசுகள், பண முடிப்புகள் என்னைச் சேரும். வாழ்த்துக்கள், பாமாலைகள் ’இன்ன பிற’.. ஹிஹிஹி.. அடுத்த லைன் படிக்காமலே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் யாரைச் சேரும்னு. மனதார வாழ்த்தி பரிசு/பண முடிப்புகள அள்ளி வழங்கிட்டு போங்க மக்கள்ஸ்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி!!

குறிப்ஸ் :- படங்கள் தந்துதவிய ஃபேஸ்புக்காண்டவருக்கும், கூகிளாண்டவருக்கும் நன்றிகள்.

30 May, 2010

ஏஞ்சல் வந்தாளே..

engle

இந்த வருஷத்துக்குரிய முதல் விருது.. வழங்கிய நண்பர் ஜெய்லானிக்கு என்னோட நன்றிகள். வா அழகே வானு கூப்டு அல்லாருக்கும் குடுத்திருக்காரு.

வழக்கமான எந்த ரூல்சும் போடலை ஜெய்லானி. அதாங்க.. எத்தனை பேருக்கு குடுக்கணும் நான்னு சொல்லல. இருந்தாலும் எனக்கு பிடிச்ச அஞ்சாம் நம்பர் சட்னு மைண்ட்ல வந்ததால அஞ்சு பேருக்கு குடுக்கலாம்னு இருக்கேன்.

1. சீமான் கனி

2. தியா

3. சந்தியா 

4. அப்பாவி தங்கமணி

5. மதுமிதா

இதையும் விட போன வருஷம் சின்ன அம்மிணியும், சுதா அண்ணாவும் விருது கொடுத்திருந்தீங்க. மறந்தே போய்ட்டேங்க. மன்னிச்சுக்கோங்க. ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும். தவறித் திருந்துவது மனித இயல்புதானே. (அடிங்.. நீயும் தத்துவம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா.. மொத்துவம் கிடைக்க முன்னாடி ஓடிப் போய்டு)

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. அதான் மறந்துட்டேனே.. அப்புறம் எங்கனு சொல்றது.

போய்டாதிங்க. இருங்கஅஅஅஅ.. இது சொல்ல மறந்த விஷயம் இல்லை. வேற. கொஞ்சம் ஒரு மாதிரியா.. மனக் கஷ்டமா இருந்த, இருக்கிற  விஷயம் பத்தி உங்க கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.

j 006

கார்க்கி.. நேற்றைய நர்சிம் பதிவு.. நான் என்ன சொல்ல வரேனு உங்களுக்கு புரியலைன்னா அத நான் நம்பமாட்டேன். ஏன்னா என்ன விட உங்களுக்கு பதிவர்கள், பதிவுலகம் பரிச்சயமானது. என்னதான் நான் இவ்ளோ தூரம் வந்திட்டாலும் பதிவுலகத்தில நடக்கிற பல பிரச்சனைகள் எனக்கு தெரியல, புரியல.

அவர் வயசில என்ன விட சின்னவரா இருந்தாலும் நான் இந்த பதிவுலகத்துக்குள்ள குதிக்க காரணமானவர். இதுக்கு முன்னாடியும் அவர பத்தி எழுதி இருக்கேன்.. ஆனா இப்டி ஒரு விஷயம் அதாவது குருவுக்கு அட்வைஸ் பண்றா மாதிரி எழுதுவேன்னு நினைக்கல.

இருந்தாலும் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதில்லைங்கிற என் கொள்கையையும் மீறி அவருக்காக சில வரிகள். தயவு செஞ்சு யாரும், முக்கியமா கார்க்கி.. அவரோட சகா/சகிகள்.. தப்பா எடுத்துக்காதிங்க.   அவங்க பிரச்சனை எனக்கு புரிந்தும் புரியாமலுமா ஓரளவுக்கு புரிஞ்சுது. ஓரளவுக்கு புரிஞ்ச விஷயம் பத்தி பேசக் கூடாதுன்னுதான் நான் எந்தக் கருத்துமே, எங்கேயுமே சொல்லல. ஆனா நான் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கிற ஒரு நல்ல பதிவர் கார்க்கி இப்டி செய்தது சரி இல்லை. அவர் கமண்ட்ஸ் இன்னமும் பிரச்சனைய பெருசாக்கினா மாதிரி எனக்கு தோணுது. அவர் கோபம், துணிவு, இடுக்கண் களையும் நட்பு எல்லாம் பதிவுகள் மூலமா தெரிஞ்சிருந்தாலும் நேத்து அவர் காட்டியது கொஞ்சம் அதிகப்படியான அக்கறையோனு தோணுது.. இன்னொரு வகையில பாத்தா அவர் இத சீரியஸா எடுத்துக்காம விளையாட்டா கமண்ட்ஸ்ல கும்மினாரான்னும் தெரியல.

அவர் பதிவ அதிகம் படிக்கிற ஒரு வாசகி என்கின்ற முறையில இத எழுத நினைச்சேன். இருந்தாலும் இது சரியா, தவறா, இல்லை நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கேனா.. எனக்குத் தெரியல.. என் நண்பர்கள் நீங்களும்தானே மக்கள்ஸ்.. அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டேன். உங்களுக்கு தோணுறதை சொல்லுங்க. சண்டை வேண்டாம். ரத்தம் வேண்டவே வேண்டாம். திட்டு?? பாத்து.. பாவம் நான்.

என் வழக்கமான ’வர்ட்டா’ சொல்ல மனசு வர்லை.. என்னமோ போங்கப்பா.. இந்த பதிவர்களையே புரிஞ்சுக்க முடியல..

22 September, 2009

எல்லோரும் கொண்டாடுவோம்...

இப்போ கொஞ்சநாளாவே என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சு. கேள்வி இதுதான் தலைவி என்ன செய்யப் போறீங்க? அதுதாங்க நம்ம கலை என்ன அனைத்துலக கார்க்கி ரசிகர் மன்ற தலைவீன்னு அறிவிச்சதால வந்த வினை. நல்லாருங்க கலை!!! முன்னாடியே உங்களுக்கு சொல்லி இருந்தேனே மன்ற வேலைகள் இருக்குன்னு. ஞாபகம் இருக்கில்ல? மன்றத்தோட திட்டங்கள ஒழுங்கா நடைமுறை படுத்திடணும் தம்பி. இல்லேன்னா கொபசெ பதவியில இருந்து தூக்கிடுவேன்.

இனி விஷயத்துக்கு போவோமா..

நம்ம பதிவுலக பிரபலம்,
மொக்கைகளின் சாமி,
சினிமா சின்னசாமி,
அப்பப்போ சீரியஸ் சாமி,
புட்டிக் கதைகளின் புகலிடம்,
அஞ்சா நெஞ்சன்,
ஏழுவை வாழ வைக்கும் தெய்வம்,
சிறுகதை, கவிதை, விமர்சனம், காதல், அரசியல் என்று கலந்து கட்டி அடிக்கும்
காக்டெயில் கார்க்கி
சாரி.. சாளரம் கார்க்கியின் பிறந்த நாள்....

அதை பதிவுலகமே அதிரும்படியா கொண்டாட
வேண்டாமா? வேண்டாமா? வேண்டாமா?

கொண்டாடிடுவோம்!


நிகழ்வுகள் பின்வருமாறு.

-மொக்கை குட்டி சாமி, வருங்கால பிரபல பதிவர் பப்லுவ சந்திச்சு கூட நின்னு போட்டோ எடுத்து அவரோட ஆட்டோக்ராஃப் வாங்கிக்கலாம். (இதுக்கு மட்டும் கட்டணம் கிடையாது)

-ஏழுவ சந்திச்சு பேசி அப்புறம் நீங்க ஏழரையோட வீட்டுக்கு போகலாம்.

-சைடு வாங்கிகிட்டு நிக்கிற கார்க்கியோட கட் அவுட்டுக்கு (இப்போ வேற ஃபோட்டோ போட்டிருக்காரா பிரஃபைல்ல) பால் அபிஷேகம்(?) பண்ண வசதியா சைடாவே ஏணி கட்டப்பட்டிருக்கும். மத்தபடி கொலைவெறியோடு வரும் ரசிகர்கள் அழுகின தக்காளி, முட்டை போன்ற 'தேவைப்பட்ட' பொருட்களை தாங்களே எடுத்துட்டு வரணும். இதுக்கான தனி வழி + கட்டண விபரம் அறிய கொலைவெறி கொபசெ வை அணுகவும்.

-அவர் உயிரை வாங்கிய காஜல் அகர்வால கூப்டா கார்க்கிய மறந்து கூட்டம் அங்க போய்டும்னு எச்சரிக்கப் பட்டதால அந்த திட்டம் அமுலாகலை. பதிலுக்கு ஷக்கீலா டக்கீலாவோட வந்து ஒரு குத்தாட்டம் போடுவாங்க.

-ஆண்ட்ரியா வந்து பாடினா இவர் ரெக்கை முளைச்சு பறந்து விடும் அபாயம் இருக்கிறதுனால பறவை முனியம்மா தேனீ குஞ்சரம்மாவோட சேர்ந்து கும்மி அடிச்சு குலவை பாடுவாங்க.

-ஆதி எடுத்த நீ எங்கே படம் முழு நாளும் தொடர்ச்சியா திரையிடப்படும். இது பார்க்காம யாரும் எஸ்கேப் ஆக முடியாது என்பது பின் குறிப்பு.

-முக்கியமா விழாவுக்கு வரும் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஒண்ணு படி ஒரு சாளரம் இவர் நினைவா குடுக்கப்படும்.

-குறிப்பா பாதுகாப்பு பொறுப்ப மன்றத்தோட தானை தளபதி என்ற ரீதியில என் கண்ணாளன் குணாளன் பாத்துப்பார்.

பி.கு- நான் அடுத்த பதிவு போடும்வரை கொண்டாட்டம் நடைபெறும்.
பி.கு டூவு - மக்கள் கொண்டு வரும் பரிசுகளும் பணமுடிப்பும் தலைவிக்கே சொந்தம். மத்த பிற டேமேஜுகள் விழா நாயகனையே சேரும்.
பி.கு மூணு-ஒரு பாட்டு அவருக்காக மன்றம் சார்பா போட்டிருக்கேன். இஷ்டப்பட்டவங்க பாத்துக்குங்க.
பி.கு லாஸ்ட்டு - அப்டியே அவங்க அவங்க பர்த்டே எப்பன்னும் மறக்காம பின்னூட்டத்தில போட்டுட்டு போங்க. உங்கள வாழ்த்திர சாக்கில நானும் ஒரு பதிவு போட்டுடுவேன் இல்ல... (நீ சமத்துடி சுசி விருதுக்கும் வாழ்த்துக்குமே பதிவ போட்டுடுரே.. கீப் இட் அப்.)

இப்போ இன்று பிறந்தநாள் காணும் விழா நாயகன் கார்க்கி அவர்களை சாளரம் வழியே ஜம்பி வந்து புட்டிய ஓபன் பண்ணி சாரி.. ரிப்பன கட் பண்ணி விழாவை தொடக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
சென்னையின் சிங்கமே ஹைதையின் தங்கமே வாங்க கார்க்கி வாங்க....


16 August, 2009

கார்க்கி - மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

யாவரும் நலமா மக்களே....


நானும் நலம்தான்.


இன்னைக்கு தோரணை படம் பார்த்தேன். என்னது வில்லு ரிலீஸ் ஆய்டுச்சாமான்னு கேட்றாதீங்க. இங்க தியேட்டர்ல தோரணை போடலை. நான் நெட்லயும் பாக்கறதில்ல. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்களை சன் போடும்போதோ இல்ல block buster movie ன்னு கலைஞரும் ஐங்கரன் இன்டர்நேஷனலும் கூட்டு சேர்ந்து போடும்போதோதான் பார்ப்பேன். லண்டன் போனப்போ நிறைய்ய படங்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். தோரணை பார்த்திட்டு இருக்கும்போது சட்னு ஒரு விஷயம் தெரிஞ்சுது. இந்த ஸ்டைல நான் எங்கேயோ பார்த்திருக்கேனேன்னு. அத நேரடியாவே சம்பந்தப் பட்டவர் கிட்ட கேட்ரலாம்னுட்டு பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன். இதனால மானாட மயிலாடவுக்கு வரலைன்னு கலா மாஸ்டர் வேற கோச்சுக்கப் போறாங்க.


இவர பார்த்திருக்கீங்களா? பார்த்தவங்க படிக்கறத தொடருங்க. பார்க்காதவங்க ஷகீலா (அ) டக்கீலான்னு கூகிளாண்டவர கேட்டீங்கன்னா இவர் பக்கம் கைய காமிப்பாருன்னு இவரே சொல்லி இருக்கார்.


அப்டியும் சிக்கலேன்னா சாளரம்







இப்போ இவங்கள்ல ஸ்ரேயாவ விட்டுட்டு விஷால மட்டும் பாருங்க.


பாத்தீங்களா! அதே டிரெஸ்ஸிங் ஸ்டைல்.. அதே தொப்...பி..... இத லக்கலக்க ரஜனி ஸ்டைல்ல சொல்லிக்குங்க. அதே கண்ணாடி..







இப்போ ஷ்ரேயாவ ஜூஸ் குடிக்க அனுப்பிட்டு விஷால் பின்னாடி ஒரு மரத்த வச்சா...........???





இப்பிடி இருக்கும்.....!!!!!





அதே கண்ணாடி... அதே ஹேர் ஸ்டைல்..









இப்டி வழக்க விரோதமா உக்காந்து கிட்டார் ப்ளே பண்ண கார்க்கிகிட்டதான் விஷால் கத்துக் கிட்டாராம். கார்க்கி வித் கிட்டார் ஸ்டில் கிடைக்கல.




இப்போ மறுக்கா மேலே போயி பதிவோட தலைப்ப படீங்க..


அதே தான்....

இவ்ளவுக்கும் இவர் ஒரு விஜய் ரசிகராமாமாம்.


என்னதான் இவர் நாங்க யாரு தெரியுமில்ல!!! ன்னு சொன்னாலும், தெரீல....

இவர் யார் ரசிகர்னு....



பின் குறிப்பு (அ) முன் குறிப்பு :-


நான் மேற் சொன்ன நபர்களுக்கும் இந்த படத்தில் சிரிப்பவருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறேன்.
இதை மனதில் கொண்டு பின்னூட்டத்தை போடவும்.




பி.கு :- கார்க்கியின் ஸ்டில்ஸ் அவர் பதிவிலேயே சுடப்பட்டவை.
பி.கு. க்கு பி.கு :- இந்த பாடலில் கார்க்கியை அல்ல விஷாலை பார்க்கலாம், கூட ஸ்ரேயாவும் பலரும்.

இப்போ மறுமறுக்கா அல்லாரும் மேலே போய் தலைப்பை படீங்க... சுசி ஜூட்டேய்....