’என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டாஆஆஆ’
செம ஜாலியாக ஆனந்தக் கூச்சல் போட்டுட்டு இருக்கார் என்னவர். வீட்டில் தனியாக இல்லை.. நண்பர்கள் கூட. ஒரு வார விடுமுறை. அம்மாவுக்கு இணையான என் சித்தி வீட்டுக்கு வந்திருக்கிறோம். சின்னம்மம்மா வீடு என்றதுமே குஷியாகி விட்டார்கள் குட்டீஸ். நான்கு வருடங்களின் முன்னர் நான்கு நாட்கள் சித்தி வீட்டுக்குத் தனியாக வந்ததற்கு அப்புறமாக இப்பொழுது தான் கண்ணாளனை விட்டுத் தனியாக வருகிறேன் என்பதாலோ என்னவோ பிரிவு கொஞ்சம் கசந்தது. மனம் எக்கச்சக்கமாகக் குழம்பிப் போயிருந்தது. அவரிடம் ஏர்போர்ட்டில் வைத்து ‘விண்டர் சமயம் ஃப்ளைட்ல போக கூடாதுப்பா` என்றேன்.‘அப்போ நில்லு. உன்னை யார் போக சொன்னா’ என்றார். நாங்கள் கிளம்பிய அன்று நார்வேயில் பயங்கர பனி வீழ்ச்சி. அவருக்கும் ஒரு இதுவாக(?) இருந்ததோ என்னவோ டென்மார்க் ஃப்ளைட் போர்டிங் என்று வரும்வரை பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக குறித்த நேரத்தில் ஃப்ளைட் கிளம்பியது. அப்பா வராததால் விமானப் பயணத்தின் சேஃப்டி குறித்து அத்தனை சந்தேகம் சதுருக்கு. அவருக்குத் தைரியமாகப் பதிலினாலும் எனக்குள் இருந்த கிலி இன்னும் கூடியது. கூப்பிட்டேன் கில்லியை. காவலனாய் உடன் வந்தார்.
சிக்கன் சான்விச்சை சாப்பிட்டு முடித்ததும் ஃப்ளைட் லேண்டாகப் போது பெல்ட்டை மாட்டுங்கள் என்றார் பைலட். இரண்டு ஹாட் சாக்லேட், பாதி கோக்கை பிடுங்கிக் கொண்டு போனார் ஏர்ஹோஸ்டஸ். கரியானது காசு என்று இப்போது போல் அப்போது தோன்றவில்லை. அத்தனை பனி மூட்டம், ஃப்ளைட்டின் ஆட்டம். போச்சுடா. இன்னைக்கு தரை இறங்கின மாதிரித்தான் என்று வேண்டுதலோடு ஆஃப் செய்த ஐபாடை பார்த்துக் கொண்டே ஸ்டெப் ஸ்டெப் என்று மனதுக்குள் பாட ஆரம்பித்தேன். உடன் தரை தட்டியது விமானம்.
கொடுமை கொடுமை என்ற கதையானது நம் நிலைமை. அங்கிருந்த பனிக்கு சற்றும் சளைக்காமல் இங்கும் அதி பனி வீழ்ச்சி இந்த வருடம். சித்தி ஏர்போர்ட் வரை காரில் வருவது பயம் என்பதால் தம்பி ட்ரெய்னில் வந்து எங்களை கூட்டிப் போவதாக பிளான் மாற்றப்பட்டது. மேட்ரோவும், ட்ரெயினுமாய் பயணம். அனுபவம் புதியதாக இருந்தது. இலவச நெட் வசதி செய்திருக்கிறார்கள் இரண்டுக்குள்ளும். சட்டென்று பிளாக் படிக்கலாமா என்று எழுந்த ஆசையை அடக்கிக்கொண்டு தம்பியோடு பேசியபடி வெளிப்புறத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.
ஸ்டேஷனில் சித்தி காரோடு காத்திருந்தார். வீட்டில் தங்கச்சியின் வரவேற்பு. அன்றிலிருந்து அவ்வப்போது பஸ்ஸில் எட்டிப் பார்க்க மட்டுமே நேரம். சித்தி கவனிப்பில் ‘என்னடி ரெண்டு நாள்லவே இப்டி குண்டாயிட்டே’ என்கிறார் ஸ்கைப்பில் கண்ணாளன். இரவு இரண்டு மணிக்குத் தூங்கி பகல் பனிரண்டு மணிக்கு எழுந்து செம பிஸியாக இருக்கிறேன். உங்கள் பதிவுகள் ஒழுங்காகப் படிக்கக் கூட முடியவில்லை. மன்னியுங்கள்.
டென்மார்க்குக்கு முதல் முதலாய் விண்டர் சமயம் வந்தாலும் சித்தி ஃப்ரெண்ட்ஸ் திட்டித் தீர்க்கிறார்கள். நார்வே ஸ்னோவை இங்கே கொண்டு வந்துவிட்டேனாம். வந்த அன்று இரவு பனிப்புயல் வேறு. இந்த ஊர் பனி ரொம்ப மோசம். எனக்கு ஒத்து வராமல் காய்ச்சல். தொண்டை வேறு கட்டிக்கொண்டு பேசவும் முடியவில்லை. சித்தி வீட்டைச் சுற்றி எப்படிக் குவிந்திருக்கிறது பாருங்கள்.
தங்கச்சி எல்லார் கிட்டவும் என்னோட அக்கா வந்திருக்காங்க என்று சொல்லும்போது மருந்தில்லாமலே நடமாட முடிகிறது. அத்தனை மகிழ்வு அவருக்கு. சித்தப்பாவின் பேச்சு ஏதாவது ஒரு விஷயத்தில் எப்போதும் வந்து போகிறது. அவரில்லாத உணர்வை அழித்தும் போகிறது. முன்பு வரும் சமயம் பேசிய பழைய கதைகளெல்லாம் மறுபடி பேசுகிறோம். இம் முறை அம்மு, சதுரும் கேட்க ஆசைப்படுவதால். சித்தியின் டனிஷ் நண்பி வீட்டில்தான் கிறிஸ்துமஸ் விருந்து. எங்கள் உயிரையும் சேர்த்துக் கையில் பிடித்தபடி சித்தி காரில் அவர்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவர்களை முன்னரே சந்தித்திருந்தாலும் அதிகம் பேசியதில்லை. அந்நிய வீடு என்ற எண்ணமே இல்லாமல் பழகினார்கள். அவர்களுக்கும் அந்த உணர்வு வராதபடி நாங்களும் பழகியதாகச் சொல்லி சந்தோஷப்பட்டார்கள்.
ஒவொன்றிலும் நார்வே முறை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். டனிஷ் மக்கள் தொண்டைக்குள் உருளைக்கிழங்கை வைத்துக் கொண்டு பேசுவதாக நார்வே மக்களால் கிண்டல் செய்யப்படுவார்கள். அப்படி இருக்கும் அவர்கள் உச்சரிப்பு. அவர்கள் பேசியதில் எங்காவது ஓரிரு சொல்லைப் பொருத்திப் புரிந்து கொண்டேன். எதுவும் புரியாத இடத்தில் சும்மா சிரித்து வைத்தேன். இல்லை நீ புரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் அடம்பிடித்து பதிலை எதிர்பார்த்த சமயங்களில் சித்தி உதவிக்கு வந்தார். அன்பானவர்கள். சித்தி வழி நிறையவே அவர்கள் பற்றி அறிந்திருந்தாலும் நேரில் பழகியபோது அன்பு அதிகமானது.
சித்தியிடம் என்னைப் பற்றி அறிந்து வைத்திருந்ததால் கான்(Karen என்பதை இப்படித்தான் உச்சரிக்கிறார்கள்) எனக்குக் கொடுத்த க்ளாஸ். அம்முவுக்கு ப்ரின்சஸ், சதுருக்கு பென்குவின்.
என்னில் சித்தியின் சாயல் இருப்பதாக எல்லோரும் சொன்னார்கள். தம்பியின் சாயலில் அம்மாவின் அத்தனை சகோதரங்களதும் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை சித்தி சொன்னார். தங்கச்சியில் அக்காச்சியின் சாயல். உடனேயே ’அப்போ விஷால் யார் மாதிரிம்மா’ என்றார் தங்கச்சி. ‘அது யார் சித்தி விஷால்’ என்றேன் நான். முன்னரே உங்களுக்குச் சொன்னதாக நினைவு. ரஜியை விஷால் மாதிரி என்று சொல்லி வந்த தங்கச்சி இப்பொழுதெல்லாம் அவனை விஷால் என்றே சொல்கிறாராம். அவனும் கால் செய்யும்போது நான் விஷால் பேசறேன் என்றே சொல்கிறானாம். இதில் சிரிப்பு என்னவென்றால் தங்கச்சி மூலம் கான் குடும்பத்துக்கு விஜய், விஷால், சிம்பு, அசினைத் தெரிந்திருக்கிறது.
அவர்கள் வீட்டின் டனிஷ் பேசும் குருவி. பெயர் நினைவில்லை. துணையின்றி இருந்தது வருத்தமாக இருந்ததால் நான் படம் எடுக்கவில்லை. அம்மு எடுத்தார்.
gingerbread house பக்கத்தில் கான் வைத்திருந்த மெழுகுவத்திகளை நான் எடுத்த இந்தப் படம் தம்பிக்குப் பிடித்திருந்ததால் இதையும் சேர்த்திருக்கின்றேன்.
எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் நன்றாக அமைந்திருக்கும். அந்த மகிழ்வோடு இருக்கும் உங்களை அதிகம் தொல்லை செய்யாமல் மீதியை அடுத்த இடுகையாக எழுதலாமென்று நினைக்கிறேன். சரிதானே?
வர்ட்டா..
22 நல்லவங்க படிச்சாங்களாம்:
பயணங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை,
புகைப்படங்களும் அழகாக உள்ளன
பகிர்வுக்கு மிக்க நன்றிங்க....
அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......
காட்சியை விவரிச்சி படங்களை போட்டு உங்களோடு வந்த உணர்வை ஏற்படுத்திட்டீங்க சுசி...எப்பா செம குளிர்...
அவ்ளோ பனியா பெய்கிறது? கஷ்டம்தான்.
சித்திஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஊர்ல கொண்டாட்டம் எல்லாம் சூப்பரு ;)
அங்கையும் பனியா!! கடைசி படம் தூள் ;)
nalaaaaaaaaa irukupa
அச்சோ எவ்வளவு பனி..
பயணங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை.
நல்லா இருக்கு புகைப்படத்தில் பனியை பார்க்கும் போதே குளிர் அடிக்குது...
\\கூப்பிட்டேன் கில்லியை. காவலனாய் உடன் வந்தார்\\
Vera aale kedaikaliya?
ரொம்பா அழகா இயல்பான உங்க நடையில கிறிஸ்துமஸ் நாள் நினைவுகள் :)
கடைசிப் படம் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு சுசி!
உங்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மாணவன்.
@@
நன்றி தமிழ்.
@@
ஆமாம் கோபி. நீங்க எஸ்ஸாகிட்டிங்க.
கோப்ஸ்.. ஹஹாஹா.. சித்தி முடிஞ்சாலும் இது மறக்காதில்லை..
@@
நன்றி வினு.
@@
கொஞ்சம் எடுத்துக்கோங்க அமுதா. அள்ளி கொட்ட முடியலை.
நன்றி குமார்.
@@
சௌந்தர்.. நானும் வீட்டுக்குள்ளை இருந்தே பாத்திட்டு இருக்கேன். வெளிய போறதில்லை.
@@
வேற ஆளே வேணாம் லோகு :))
ரொம்ப நன்றி பாலாஜி.
@@
நன்றி கார்க்கி.
@@
அட இது யாரு இன்னொரு கார்க்கி?? ஒரு கார்க்கியே பதிவுலகுக்கு போதுமே.. ஆவ்வ்வ்..
இந்த மாதிரி சொந்தகத சொல்றதுலயும் ஒரு சொகமிருக்கு இல்லியா சுசி?
மொபைல்ல இருக்குற காவலன் வால்பேப்பர்தான் இப்போ என்னோட லேப்டாப் வால்பேப்பரும் தலைவர் ஸ்டைலுக்காகவும் அசின் புன்னகைக்ககவும் பார்த்ததும் பிடிச்சது...
அழகான படங்களுடன் அருமையான பகிர்வு சுசி.
//gingerbread house பக்கத்தில் கான் வைத்திருந்த மெழுகுவத்திகளை நான் எடுத்த இந்தப் படம் தம்பிக்குப் பிடித்திருந்ததால்//
எனக்கும் மிக மிகப் பிடித்திருக்கிறது:)!
.// டனிஷ் மக்கள் தொண்டைக்குள் உருளைக்கிழங்கை வைத்துக் கொண்டு பேசுவதாக நார்வே மக்களால் கிண்டல் செய்யப்படுவார்கள். அப்படி இருக்கும் அவர்கள் உச்சரிப்பு. அவர்கள் பேசியதில் எங்காவது ஓரிரு சொல்லைப் பொருத்திப் புரிந்து கொண்டேன். எதுவும் புரியாத இடத்தில் சும்மா சிரித்து வைத்தேன்//
:-))
அழகாக பகிர்ந்துள்ளீர்கள் புகைப்படங்களும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு சுசி!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
புத்தாண்டு நல்வாழ்த்துகள் சுசி
உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் சுசி!.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)
http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html
Post a Comment