ஒரே நாளில் எத்த்த்தனை கொலை முயற்சி.. உஸ்ஸ்ஸ்.. ஒரு தடவை வீட்டை விட்டு வெளியே சென்றால் திரும்பி மீண்டும் வீட்டுக்குள் வருவேன் என்பதற்கு எந்த காரண்டியும் கிடையாது. தினமும் காலையில் ஆஃபீஸ் போகலாம்னு வண்டிய ஸ்டார்ட் செய்து ரிவர்ஸ் பண்ணா சர்ரென்று வழுக்கிக் கொண்டுபோகிறது. கம்பி வேலி மட்டும் இல்லாவிட்டால் நான் காலி. தப்பிச்சேண்டா சாமியென்று நினைப்பதற்குள் தண்ணி போட்ட ஆசாமியாட்டம் வண்டி சாமியாடும் நேர் ரோட்டிலேயே. அடிக்கடி வண்டி s எழுதியபடி போய்க்கொண்டிருக்கும்.
ரவுண்ட் அபவுட், சாலை வளைவுகள், திருப்பங்களில் எனக்காகக் காத்திருக்கும் அடுத்த கண்டம். பின்னாடி வரும் வண்டிகள் மட்டும் கவனமாக வராவிட்டால் நான் திருப்பும் வழி போகாது தன் வழியில் திரும்பிச் சுழன்று ஒரு c போட்டுத் திரும்பி நிற்கும் என் வண்டி அங்கேயே டமால்.
அதிலும் தப்பி இதயம் ஒரு சீராக இயங்க ஆரம்பிக்கும்போதுதான் கவனிப்பேன். எவண்டா இங்க இருந்த ரோட்டை ஆட்டைய போட்டதுன்னு. மேகம் அப்படியே தரை இறங்கி தேவலோக எஃபெக்டில் இருக்கும். புகை மூட்டத்தின் இடையே வாகனங்களின் லைட் வெளிச்சம் மிக அருகில் வந்ததும் தான் தெரியும். இல்லையென்றால் திடீர் கடும் பனிப் பொழிவால் முன்னே வெள்ளைத் திரை போட்டதுபோல் இருக்கும். இதில் சில பிரகஸ்பதிகள் வண்டியில் பல்ப் எரியாதது தெரியாமலே போய்க்கொண்டிருப்பார்கள். ஹெட்லைட்டை போட்டுவிட்டு எதிரே வரும் வாகனங்களில் இருந்தும், அடிக்கடி லைட்டாக பிரேக் அழுத்தி பின்னே வரும் வாகனங்களில் இருந்தும் இங்க ஒரு வாகனம் போய்க்கொண்டு இருக்கிறது பாத்து வாங்க சாமிகளா என்று சிக்னல் கொடுத்தபடி தப்பித்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு கண்டம் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஒரு வழியாய் ஃபர்ஸ்ட் கியரில் உருட்டியபடியே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஆஃபீஸ் வந்து சேர்வதற்குள்.. அதற்கு முன் இங்கே இந்த இடுகையின் முதல் வரியை காப்பி பேஸ்டிக்கறேன்.. ஒரே நாளில் எத்த்த்தனை கொலை முயற்சி.. உஸ்ஸ்ஸ்.. இயற்கைக்கு என் மேல் ஏன்தான் இத்த்த்தனை கோவமோ.. என் கண்ணாளன் பொண்டாட்டி பாக்கியம் ஸ்ட்ராங்கா இருக்கக்கொண்டு நான் தப்பித்தேன்.. இல்லையென்றால் ஏதோ ஒரு வின்டர் சீசனில் எனக்கான சங்கு எப்போதோ முழங்கி இருக்கும்.
இந்த ஸ்னோ மீது டயர் போகும்போது ஒரு சத்தம் வரும் பாருங்கள். ஆங்கிலப் படங்களில் ஆழ்கடலில் போகும் கப்பலின் அடித்தளத்திலோ, இல்லை நீர்மூழ்கிக் கப்பலிலோ போவதுபோல் சீன் வந்தால் அங்கே ஒரு பின்னணி இசை குடுப்பார்களே.. இனிமேல் கவனித்துக் கேளுங்கள்.. அப்படி இருக்கும் அந்தச் சத்தம். உறை பனியில் டயர்கள் வழுக்கிச் செல்லும்போது அடி வயிற்றுக் கிலியோடு கேட்கும் கரகரவென்று ஒரு சத்தம். அம்முவே சொல்வார்.. ’அம்மா இந்த சத்தம் எனக்குப் பிடிக்கிறதே இல்லம்மா’ன்னு.
பசங்க ஸ்விம்மிங், கராத்தே, ஐஸ் ஸ்கேட்டிங் போன்றவற்றுக்கு விடுமுறை விட்டுவிடுவதால் கடவுளுக்கு, குறிப்பாக என் பிள்ளையாரப்பாவுக்கு நிம்மதி. இல்லையென்றால் வீட்டிலிருந்து கிளம்பி, மீண்டும் திரும்பி வருவதற்குள் என் வேண்டுதல் கேட்டு என்னைப் பாதுகாப்பதிலேயே அவர்கள் உஸ்ஸ்ஸ்ஸ் என்பார்கள்.
ஐஸ் ஸ்கேட்டிங்கில் விண்டர் ஷோ.. என்ன ஷோ வைத்தென்ன.. எங்கும் அனுமதி இலவசம் இல்லை. ஒவொரு பிரிவாக அவர்கள் பழகியதை செய்து காட்டினார்கள். இசையோடு உறை பனியை சர்ரென்று கிழித்துக் கொண்டு போகும் கால்களும், அவர்களின் பாலன்ஸ் செய்யும் லாவகமும், நிரை மாறி சற்று முன்னேயும் பின்னேயுமாய் சென்று விட்டு, பழக்குனர்களின் உதவியுடன் மீண்டும் நிரையாக வழுக்கிச் செல்லும் வாண்டுகளைப் பார்க்கும்போது மனம் உறை குளிரிலும் குளிர்ந்துதான் போனது. தொப்பென்று ஆங்காங்கே சிலர் விழுந்தபோது.. திட்டாதிங்க சித்ரா.. உங்க நினைவு வந்து போனது.
Taekwondo என்ற ஒரு வகையான martial art கத்துக்கறாங்க பசங்க. அதைப் பற்றிய மேலதிக விபரம் தெரியணும்னா இங்கே கிளிக்குங்கள். அநேகமாக இந்த வருஷத்தோடு முழுக்குப் போடப்படும் நிலையில் உள்ளது. இந்த தடவை மஞ்சல் பெல்ட்டில் பச்சை கோடு கிடைத்துள்ளது. அடுத்து பச்சை பெல்ட். சதுருக்கு இரண்டு நாளும் ஃபுட்பால் பிராக்டிஸ் இருப்பதாலும், அம்மணி தனியாக போவதை விரும்பாததாலும் இந்த முடிவு, அவர்கள் முடிவு. Grading முடிந்து பெல்ட் வழங்கும் நிகழ்வுக்கு போன பொழுது அவர்களின் கட்டுப்பாடு மலைப்பைத் தந்தது இம் முறையும். ஒற்றைச் சொல்லில் தட் தட் என்று குதிக்கும் கால்கள் அடுத்த கட்டளை வந்ததும் குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவில் ஒரே நேரத்தில் அமைதி காத்தன. அத்தனை குரல்களும் ஒரு சேர பயிற்சி முடிவில் ‘ஹே’ என்று சொல்லும்போது எங்கோ ஒரு கீச்சுக் குரல் மட்டும் சற்றுத் தாமதமாக கேட்டபோது சிரிப்பில் அரங்கம் அதிர்ந்தது. ஆனால் அவர்கள் அடுத்த நொடி அடுத்த மான்ஸ்டர் செய்யத் தயாராயிருந்தார்கள்.
--
//சில நாட்களாக என் உயிர்த் தோழி ஒருத்திக்கு வாழ்க்கை சோதனையாகவே உள்ளது. மனது எப்போதும் அவளையே நினைத்துத் தவித்து, துடித்துக் கொண்டிருப்பதால் அதிகமாக பதிவுலகுக்குள் வர முடியவைல்லை. குழந்தைகளுக்காக எவளவோ பொறுத்துப் போய்க் கொண்டிருக்கும் அவளுக்கு எல்லா வகையிலும் என் ஆறுதலை, உறுதுணையை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்/றோம். என்னவருக்கும் அவளை நன்கு தெரியுமென்பதால் சிரித்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தின் பின்னே இத்தனை சோக ரேகைகளா என்று ஆடிப்போய்விட்டார். எத்துணை அற்புதமான ஒரு ஜீவன் அவள். எல்லோருக்குமாகவும் பொறுத்துப் போகிறாள். அம்மாவோடு அப்பாவும் பிள்ளைகளுக்கு வேண்டும் என்பதற்காக தைரியத்தை அடக்கி வைத்து, கோழையாக அல்ல.. அம்மாவாக வாழ்கிறாள். உன் கண்ணீருக்கு தகுதியான ஒருத்தர் இல்லை அவர் என்று சொல்லி இருக்கிறேன். அவளுக்கும் சேர்த்து நான் அழுது கொண்டிருக்கிறேன். அவளின் பொறுமையை பொசுக்கும்படியான ஒரு நிலை அவளுக்கு உருவாகாமல் இருக்கட்டும். பிள்ளையார் துணையிருப்பார்..//
23 நல்லவங்க படிச்சாங்களாம்:
திட்டாதிங்க சித்ரா.. உங்க நினைவு வந்து போனது.
.....அவ்வ்வ்வ்....நான் மறக்க நினைத்தாலும் மறக்க விட மாட்டீங்க போல.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,....
அம்மாவோடு அப்பாவும் பிள்ளைகளுக்கு வேண்டும் என்பதற்காக தைரியத்தை அடக்கி வைத்து, கோழையாக அல்ல.. அம்மாவாக வாழ்கிறாள்.
......உங்கள் தோழியின் நிலை அறிந்து வருத்தமாக உள்ளது. நிச்சயம், இறைவன் அருளால் சரியான முடிவு எடுத்து, பிரச்சனைகளில் இருந்து சுமூகமாக மீண்டு வர பிரார்த்திக்கிறேன்.
me the firstttttttttu
adap pongappaaa oru comment pottaaa, udaneaa athai podaama parents signature vera vaangittu varanumaa; yaaruyaa intha systeththai kandu pidichchathu
ippa naan firstaa illay thoppi vaangapporeannaanu theriyalyyeaaaa
awwwwwwwwwwwwwww
enaathu ithukkum parents sgnature venumaaaa
awwwwwwwwwwwwwwwww
awwwwwwwwwwwwwwwwwww
awwwwwwwwwwwwwwwwwww
:) :(
intha parents signature panjaayaththula postai padikkaama close pannittu poitean appuramaathaan niyabagam vanthathu eathaiyoooo marantha maathiri irrukeaannu so again back poi ost padichuttu vanthu comment poduren he he he innumum kooda padikkalai innimeathaan ungakittea materai sollittu pogalaamunu vanthen..............
vartoooongalaaa
தப்பிச்சேண்டா சாமியென்று நினைப்பதற்குள் தண்ணி போட்ட ஆசாமியாட்டம் வண்டி சாமியாடும்
ithukkuthaan nightttu oru quater adichaaa early morning oru tambler moru[you knoe the milk product] kudikkanum appathaan stedy yaa irrukum........
appala unga thozi matter konjam sogam thaan [naan ungalukku thoziyaay irrupaathaik kurippidavillai] jokes apart, i wish may her life get more happyier
byeeeeeeeeeeee
உங்க வண்டியோட்டுற அனுபவம் எனக்கே உதறுதே! பத்திரமா பார்த்துக்கங்க சுசி!
உங்கள தோழியின் வருத்தங்களை பங்கிட்டுக் கொள்ளும் உங்களுக்கும், தோழிக்கும் என் பிரார்த்தனைகளும்.
கார் s, c என்று இங்கிலீஷ் படிக்குதா??ஜாக்கிரதையாக போங்க.போன மாதம் இண்டர்நேஷனல் taekwondo vizak-ல் நடந்தது என் கஸினிற்கு துணையாக 5 நாள் நான் போய் வந்தேன். கட்டுப்பாடு நிறைந்த ஒரு கேம்.
உங்கள் தோழிக்கு கடவுளின் ஆசி பரிபூரணமாக கிட்ட கடவுளிடம் வேண்டுகிறேன் சுசி !!!
புகை மூட்டத்தின் இடையே வாகனங்களின் லைட் வெளிச்சம் மிக அருகில் வந்ததும் தான் தெரியும். இல்லையென்றால் திடீர் கடும் பனிப் பொழிவால் முன்னே வெள்ளைத் திரை போட்டதுபோல் இருக்கும். இதில் சில பிரகஸ்பதிகள் வண்டியில் பல்ப் எரியாதது தெரியாமலே போய்க்கொண்டிருப்பார்கள்.
பத்திரம்
கண்டம் விட்டுக் கண்டம் போனதும் பனியில் மாட்டிக்கிட்டோமே!
போனபுதுசுலே பழைய வண்டி ஒன்னு வாங்கிக்கிட்டு அதால் நான் பட்ட கஷ்டம் ......அதுவும் பனியில்.......
போகட்டும் இன்னொரு நாள் கச்சேரியை வச்சுக்கறேன்.
நல்ல அருமையா எழுதி இருக்கீங்க.
உங்கள் தோழியின் நிலை அறிந்து மனம் வருந்துகிறேன்.
அம்மான்னா சும்மா இல்லை!
nalla pullaiyar.. kapathuvar..
பனி பொழிவை அனுபவிக்கனும்னு ஆசை எனக்கு ஆனா குடுப்பினைதான் இல்லை...
கண்டிப்பா அனுபவிப்பேன் விரைவில்
முதல் பகிர்வு அருமை. நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு சித்ரா நினைவு வந்திருக்கும்:)!
உங்கள் தோழிக்காக என் பிரார்த்தனைகளும். விரைவில் வாழ்க்கை சுமுகமாகட்டும்.
அங்க பனியில தான் கண்டம் இங்க தெருவுல இறங்கினாலே கண்டம் ஆரம்பிச்சிடுதுக்கா ;)
குட்டிஸ் கலக்குறாங்க ;)
நானும் பிராத்திக்கிறேன்...
பாலாஜி சரவணன் சொல்வது போல நீங்க ஒரு மாதிரி மூட்ல எழுதியிருந்தாலும் படிக்கவே உதறுது.
டிஸ்கவரியில் சமயங்களில் ஐஸில் வழுக்கிச்செல்லும் கார்கள் நினைவில் வந்து போகிறது.
ஜாக்ரதையா வண்டி ஓட்டுங்க.
உங்கள் தோழி பற்றி, என்னால் கடவுளிடம் வேண்டிக் கொள்ள மட்டுமே செய்யமுடியும். அதை நிச்சயம் செய்கிறேன்.
//ஒரே நாளில் எத்த்த்தனை கொலை முயற்சி.. //
சுத்திப்போடுங்க , கண்ணு பட்டிருக்கும்...சுத்திப்போட முடியலனா எங்களுக்கு ஒரு கெடா வெட்டு விருந்து வைய்யுங்க... சரியாயிடும்....
//உங்கள் தோழிக்காக என் பிரார்த்தனைகளும். விரைவில் வாழ்க்கை சுமுகமாகட்டும்.//
உங்கள் தோழிக்காக என் பிரார்த்தனைகளும். விரைவில் வாழ்க்கை சுமுகமாகட்டும்.
சுசிக்கா ஒரே பதிவு ஜில்லுனும் ஜிவ்வுனும் இருக்கு எப்படித்தான் சமாளிக்க முடியுதோ ஆண்டவனே...தோழி அக்காக்கு என்னுடைய பிராத்தனைகளும்....
உங்கள் தோழியின் நிலை அறிந்து வருத்தமாக உள்ளது.உங்கள் தோழிக்காக என் பிரார்த்தனைகளும். விரைவில் வாழ்க்கை சுமுகமாகட்டும்.
Post a Comment