மாம்ஸ் முன் ஜென்மம் பாத்திட்டு இருந்தார். போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணி இவள்ட்ட மாட்டிக்கிட்டம்னு தெரிஞ்சுக்க போறாரோன்னு நினைச்சன். நிகழ்ச்சி முடிய என்ன முடிவு எடுத்திருக்காருன்னு கேட்டேன். நான் இந்த ஜென்மம் போலவே போன ஜென்மமும் நல்லவனாத்தான் இருந்திருப்பேன். நீ வேணா போய் கேட்டுப்பாரு. போன ஜென்மத்தில பாம்பா பிறந்திருப்பாய்ன்னு சொன்னார். முறைச்சதும் உனக்கு தான் பூன்னா பிடிக்குமே தேனியா பிறந்திருப்பாய்னார். பாம்பு கொத்தும், தேனி கொட்டும். மாம்ஸ் பாவம்தான் இல்லை.
$$$$$
சஜோபன் யூ டியூபில் தங்க்லீஷ் லிரிக்சோடு பாடல்களை கேட்டு, அப்படியே அழகாகப் பாடுகிறார். மெலடி சாங்க்ஸ் அவருக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நேற்று முன் அந்திச் சாரல் நீ பாடினார். பிள்ளைத் தமிழில் ச்செல்லமாகப் பாடும்போது கேட்க அவளவு இனிமை. உடனே கருண் தானும் பாடிக் காட்டுவதாகச் சொல்லிப் பாடினார்.
‘முன் அன்பு பாரமே.. உன் நெஞ்சம் சாதமே’ நானும் அக்காச்சியும் சிரித்த சிரிப்பில் அங்கே சேரனதும், இங்கே மாம்சினதும் தூக்கம் கலைந்துவிட்டது.
$$$$$
அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். கனடா வந்ததுக்கு இதுதான் முதல் முறையா தாய்மண்ணை மிதித்திருக்கிறார். ஸ்கைப்பில் வந்ததுமே நான் கையில் துவாயோடு இருந்தேன். சிரிக்க ஆரம்பிச்சிட்டார். ஏன்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க. வயலோட வாழ்ந்த எனக்கு அண்ணாவோட வயல சுத்திப் பாக்கிறப்ப வெறுங்காலோட நடக்கும்போது வலிக்குது, அவ்ளோ வேர்த்து கொட்டுது மோனைன்னு சிரித்தார். ஜெயாண்ணா ரஜிக்கு சொன்னாராம். வழக்கம்போல வாடா, போடான்னெல்லாம் என்னைய சொல்ல கூடாது. அங்கிள் இருக்கும்போது வாங்கோ ஜெயாண்ணா இருங்கோ ஜெயாண்ணான்னு மரியாதை குடுத்து பேசணும்னு. ஸ்கைப்ல வரதா சொன்ன அண்ணா வரலை. அடுத்தநாள் கேட்டப்ப நேத்து அப்பா ஒரு பாட்டில் குடுத்தார்டி. தூக்கம் விசுக்கிடிச்சு. அதான் வர்லைன்னார். பாட்டில்ல என்னண்ணா எழுதி இருந்திச்சுன்னேன். அது என்னமோ விசுக்கின்னு இருந்திச்சுடின்னார். 3 கறுவல் கொண்டு வந்திருக்கிறன் மோனை என்று சிரித்த அப்பாவின் முகத்தில் அவளவு நிறைவு.
$$$$$
அக்காச்சி ஃப்ரெண்ட் என்னோட ஒரு ஃபோட்டோவ பத்தி சொன்னாங்களாம். நீ அதில அழகாத்தாண்டி இருந்தாய்ன்னு சொன்னா. எங்க.. எல்லாம் காமராவோட மகிமையா இருந்திருக்கும். நேர்ல மட்டும் பாத்தாங்க.. என் வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும்னேன். அப்ப்ப்ப்டி சிரிச்சா. அவங்க என்னய நேர்ல பாத்து மிரள்றது போல நினைச்சிருப்பா போல. தெளிஞ்சு தெளிஞ்சு சிரிச்சா. அடிப்பாவி. அப்ப இத்தனை நாள் பொய்தான் சொன்னியா நீயின்னு கேட்டா இல்லடி சித்தி கூட இப்டித்தான் நான் என் வெயிட் எவ்ளோன்னு சொன்னதும் விழுந்து விழுந்து சத்த்தமா சிரிச்சாங்க. இதெல்லாம் கிண்டல்ச் சிரிப்பில்ல. மனதார்ந்த சிரிப்புன்னா. கண்ணு வச்சிடாதிங்க மக்கள்ஸ். அம்மா, சித்தி, அக்காச்சி, மாம்ஸ், நான்னு வயசு வேறுபாடு இல்லாம அல்ல்லாரும் ஒத்துமையா ஒரே நிறையில இருக்கிறோம்.
$$$$$
தமிழ் படிக்கோணும். எல்லாம் மறந்திட்டன். மறந்ததெல்லாம் திரும்ப படிக்கோணும். தடக்காம வாசிக்க பழகோணும். ஒவொரு நாளும் காலமேல 4 குறள் பாடமாக்கோணும்.
இதச் சொன்னது சாட்சாத் மாம்ஸேதான். சொன்னதோட நிக்காம நீயெல்லாம் நான் சொன்னா கேக்க மாட்டாய். பார் இதில என்ன சொல்லி இருக்கிறாங்களெண்டுன்னு உடனவே எடுத்துக்காட்டோட பேசறார். அது மட்டுமில்ல தினமும் என் மெயிலுக்கு வந்திட்டு இருக்கு.
தங்கள் நண்பரிடமிருந்து ஒரு பழமொழி
மாம்ஸில் தொடங்கி மாம்ஸில் முடிச்சிட்டேன். வர்ட்டா..
6 நல்லவங்க படிச்சாங்களாம்:
பழமொழி சூப்பர்...அதுவும் மாம்ஸ் எழுதியது என்றால் சூப்பரோ சூப்பர் ;))
போன ஜென்மத்தில என்ன பாவம் பண்ணி இவள்ட்ட மாட்டிக்கிட்டம்னு தெரிஞ்சுக்க போறாரோன்னு நினைச்சன்
haa....haa....
கோப்ஸ்.. ம்க்கும் :)
@@
சரவணன் :)
rombave vaaariddeeengo!
எதையும் அழகுபடச் சொல்லியிருக்கும் விதம் அருமை
எல்லாம் அருமை
ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?
Post a Comment