Pages

  • RSS

13 December, 2010

ரத்தத்துள் காதல்!! டம்டடடம்!!

ப்ரதாப்.. அந்த பாத்திரமாகவே அவர் மாறிவிட்டதால் எனக்கு அங்கே விவேக் ஓப்ராய் தெரியவில்லை.. பிரதாப் என்பதை விட ப்ரதாப் அவருக்கு பொருத்தமாக இருப்பதாகத் தோன்றியது.. அப்படி எழுதுவது தவறாகத் தெரிந்தாலும் ப்ரதாப் என்றே சொல்லிக் கொள்வோம். ப்ரதாப் ஜெயிலுக்கு வெளியே.. உள்ளே சூர்யா.. கண்கள் கூண்டுக்குள் அடைபட்ட புலியை நினைவுபடுத்தின.

’கனவு கண்டுக்கிட்டே இரு..’ 

’முடிஞ்சா நீ தூங்கு..’

இது ப்ரதாப்பும் சூர்யாவும் பேசிக் கொள்ளும் வசனம். ரசித்தேன். ஏன் ரசித்தேன் என்று நினைப்பீர்கள். ஆதலால் சொல்கிறேன். கொலைவெறியில் அவர்கள் பேசிக் கொண்டது இது. இதையே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் காதல்வெறி ஆகிவிடும் இல்லையா?? உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லிக் கொள்ளுங்கள் உங்களுக்கு கொலைவெறி குறையும்.

’சூர்யா எனக்கு தெரியும் சூர்யா.. உனக்கு நான் முக்கியம் இல்லைல்ல.. இதோ.. இந்த சிமெண்டு, செங்கல்லு, மண்ணு.. இதானே முக்கியம்’ என்னைப் போலவே ஆதங்கத்தோடு கேட்கிறார் பிரியா மணி.

‘நான் அப்டி சொல்லையே’ சமாளிக்கிறார் சூர்யா என் கண்ணனைப் போலவே.

‘என்னைக்காவது என்னை பத்தி பேசி இருக்கியா.. என்னையும் கொஞ்சம் யோசிப்பா’ கெஞ்சலோடான கோவம்.

தெரிந்து கொண்டே கேட்பவளிடம் என்ன சொல்வது என்பதாய் சிரிப்போடு தன் மனதிருக்கும் இடம் பார்த்து சூர்யா சொல்வார்..

’இங்க.. எவ்ளோ இருக்கு தெரியுமா?’

’ம்ஹூம்..’ பிரியா மணி உதட்டை சுளிக்கிறார் என்னைப் போலவே.   பின் கேட்கிறார். ‘சொல்லு’ கண்களில்  ஆர்வத்தோடு.  அதை விட ஆர்வம் என் கண்களிலும் இருக்கும்.

’மை கண்மணி..’ (இப்படித்தான் எனக்கு கேட்டது) சூர்யா ஆரம்பிக்க ஃபோன் ஒலிக்கிறது. என் கண்ணனுக்குப் போலவே. இப்படித்தான் எங்களுக்குள்ளும் ஆகிப் போகும். அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ஏதாவது ஒரு தடை வந்துவிடும். கல்லும், மண்ணும், சிமெண்டும் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் நான் கேட்பதும் அவன் மழுப்புவதும் என்னமோ அப்படியே காட்சியாகி இருந்தது. ரத்த சரித்திரத்துக்குள் என் காதலை பார்த்து சொக்கிப் போய் இருந்துவிட்டேன். மறுபடி உஸ்ஸ்ஸ்ஸ் சொல்லிக் கொள்ளுங்கள்.  உங்களுக்கு மறுபடி கொலைவெறி குறையும்.

k

ஜெயிலுக்குள் வரும் சண்டைக்காட்சி.. சூர்யாவின் சிக்ஸ் பேக் உடலுக்கு பொருத்தமாக இருந்தது. தைரியமாக சட்டை பற்றி சட்டை செய்யாமல் சண்டை போடலாம் சூர்யா.

நினைத்ததை முடித்து வண்டியை ஓட்டியபடி ஜெயிலுக்குத் திரும்பி வரும் சூர்யா.. முதலில் ப்ரதாப்பை தப்ப விட்டுவிட்டு வரும் சூர்யாவுக்கு நேர் எதிர். கோபம், சந்தோஷம், வருத்தம், ஆற்றாமை என கலவையாய் ஒரு அபார நடிப்பு.. ஹாட்ஸ் ஆஃப் டூ யூ சூர்யா..

அதே ஜெயிலுக்குள் கட்சி ஆள் சூர்யாவை சந்திக்க வருகிறார்.. ஃபேன் சுற்றும் சத்தம் மட்டும் கேட்கிறது அந்த நிசப்தத்தில்.. இப்படியாகச் சில காட்சிகளும் பின்னணியும் பிடித்திருந்தது.

ஒன்றிரண்டு தவிர்த்து மீதி காட்சிகள் ஸ்லோமோஷனில் போகும்போதெல்லாம் சீக்கிரம் போங்களேன் என்று பிடித்துத் தள்ளிவிட வேண்டும்போல் இருந்தது.

இசையிலேயே ரத்தம் தெறிக்கிறது. ஒரு Hardrock concert கேட்டதுபோல், சண்டைக்காட்சிகளில் பார்த்ததுபோல் இருந்தது. பின்னணியும் மிரட்டுகிறது. பாடல்கள்.. பயந்துவிட்டேன் கேட்டு.. ஆனால் இந்த ’துணிஞ்சு வெட்டுவேன்..’ மட்டும் எனக்கு பிடித்து விட்டது.

’மரணம் துரத்துது.. மரணம் துரத்துது..

கனவில் கூட பயத்தைக் கொடுக்கும் மரணம் துரத்துது..

வேட்டை நடக்குது.. வேட்டை நடக்குது..

உயிரைப் பறிக்கும் உயிரைப் பறிக்கும் வேட்டை நடக்குது..

டம்டடடம் டம்டடடம் டம்டடடம் வெறியாட்டம்

டம்டடடம் டம்டடடம் டம்டடடம்  டடம்டம்’

கண்முன்னே ரத்தசரித்திரத்தைப் பார்த்த ஒரு உணர்வை இந்தப் பாடல் தருகிறதென்னவோ உண்மைதான்.

குழந்தையில் கொண்டு வந்து முடித்த விதம்.. எல்லாவற்றையும் எங்கள் ஊகத்துக்கே விட்டு விட்டது. இல்லை இதை யாராவது தொடர்ந்து பார்ட் டூவாக எடுக்க ஏதுவாய் அப்படி முடித்தார்களா தெரியவைல்லை. ஆனால் தைரியமாக பார்ட் டூ எடுக்கலாம். நான் பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு பொறுமை ஜாஸ்தியாம். ஊரில் சொல்லிக் கொல்கிறார்கள். உங்கள் கொலைவெறியை மனதில் வைத்து ‘ல்’ சரியாகத்தான் டைப்பியுள்ளேன்.

வர்ட்டா..

23 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

தைரியமாக பார்ட் டூ எடுக்கலாம். நான் பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு பொறுமை ஜாஸ்தியாம். ஊரில் சொல்லிக் கொல்கிறார்கள். உங்கள் கொலைவெறியை மனதில் வைத்து ‘ல்’ சரியாகத்தான் டைப்பியுள்ளேன்.


......பொறுமை மட்டும் இல்லை - உங்களுக்கு சூர்யாவை அம்பூட்டு .............. பிடிக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டோம். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

மாணவன் said...

//இதை யாராவது தொடர்ந்து பார்ட் டூவாக எடுக்க ஏதுவாய் அப்படி முடித்தார்களா தெரியவைல்லை. ஆனால் தைரியமாக பார்ட் டூ எடுக்கலாம். நான் பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு பொறுமை ஜாஸ்தியாம். ஊரில் சொல்லிக் கொல்கிறார்கள். உங்கள் கொலைவெறியை மனதில் வைத்து ‘ல்’ சரியாகத்தான் டைப்பியுள்ளேன்//

பார்ட் 2 அய்யயோ இதே முடியல....

ஹிஹிஹி...

அருமையான விமர்சனம்....

தொடருங்கள்.......

மாணவன் said...

என்னங்க இண்ட்லி ஓட்டுப்பட்டயைக் காணவில்லை....

R. Gopi said...

Your glass is half full

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லா சொல்லியிருக்கீங்க..

ஆனால் எனக்கு தமிழ் படத்தை விட ஹிந்தியிலும் தெலுங்கிலும் வந்த முதல் பாகம் தான் மிகவும் பிடித்தது. அந்த ஒரு படத்தை தான் தமிழில் முதல் 25 நிமிடங்களாக சுருக்கி வெளியிட்டிருப்பார்கள். அந்த படத்தில் சூர்யா கடைசி ஒரு நிமிடம் தான் வருவார்,, அதுவும் இரண்டாவது பாகம் இருக்கிறது என்பதை சொல்வதற்காக தான்..

vinu said...

me presenttu

கோபிநாத் said...

\\இதையே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் காதல்வெறி ஆகிவிடும் இல்லையா?? \\

முதல் உஸ்ஸ்ஸ்ஸ்...

\\இசையிலேயே ரத்தம் தெறிக்கிறது. ஒரு Hardrock concert கேட்டதுபோல், சண்டைக்காட்சிகளில் பார்த்ததுபோல் இருந்தது. பின்னணியும் மிரட்டுகிறது. \\

\\ஆனால் தைரியமாக பார்ட் டூ எடுக்கலாம். நான் பார்ப்பேன். \\

3வது உஸ்ஸ்ஸ்ஸ்...ஏன்னா இதுவே பார்ட் டூ தான் ;)

2வது உஸ்ஸ்ஸ்ஸ்....

அருண் பிரசாத் said...

ரைட்டு!

logu.. said...

mm.. etho konjam velanguthu..

Ratha sarithiram padatha pathi sonneengala? hi..hi..

logu.. said...

mm.. etho konjam velanguthu..

Ratha sarithiram padatha pathi sonneengala? hi..hi..

'பரிவை' சே.குமார் said...

//தைரியமாக பார்ட் டூ எடுக்கலாம். நான் பார்ப்பேன். ஏனென்றால் எனக்கு பொறுமை ஜாஸ்தியாம். ஊரில் சொல்லிக் கொல்கிறார்கள். உங்கள் கொலைவெறியை மனதில் வைத்து ‘ல்’ சரியாகத்தான் டைப்பியுள்ளேன்.


......பொறுமை மட்டும் இல்லை - உங்களுக்கு சூர்யாவை அம்பூட்டு .............. பிடிக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டோம். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....//

Repeat Chitra akka.

ராமலக்ஷ்மி said...

ரசனையோடு எழுதியுள்ளீர்கள் சுசி:)! பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது.

பித்தனின் வாக்கு said...

இம்ம் நல்ல விமர்சனம், ஜஸ் பற்றிய பதிவைப் படித்தேன், ஜாக்கிரதையாக செல்லவும்.

r.v.saravanan said...

ஏனென்றால் எனக்கு பொறுமை ஜாஸ்தியாம். ஊரில் சொல்லிக் கொல்கிறார்கள்.

ஹிஹிஹிஹி

சீமான்கனி said...

யக்கோவ்...உண்மையிலேயே உங்களுக்கு அவ்ளோ மன தைரியாமா...எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு...நானும் சூர்யவுக்க்காகதான் பார்த்தேன்...ஆனால் முடியல....நமக்கு ஹர்ட்டு கொஞ்சம்!! இல்ல ரெம்பவே வீக்கு....தைரிய சங்கத்தலைவி சுசிக்காவுக்கு பாராட்டுகள்........

கார்க்கிபவா said...

இதுவே பார்ட் 2 தான்..

ராமலஷ்மி மேடம், வேண்டாம். அப்புறம் உங்க இஷ்டம் :))

Anonymous said...

ரத்த சரித்தரத்துல உங்க காதல் பிளாஷ் பேக்கா? ரைட்டு :))

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

Admin said...

பார்த்தேன், இரசித்தேன், சிரித்தேன்...

எல் கே said...

ஹ்ம்ம் படம் பார்க்கவில்லை

போளூர் தயாநிதி said...

\இதையே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் காதல்வெறி ஆகிவிடும் இல்லையா?? \\

போளூர் தயாநிதி said...

\இதையே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் காதல்வெறி ஆகிவிடும் இல்லையா?? \\parattugal

vizhi said...

:)