அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள். இதை நான் அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா சொல்லலீங்கோ.
யார் கண்ணு பட்டுச்சோ.. இந்த வருஷம் இங்க கு..ளி..ர்.. வதைக்குதுங்க. டெம்பரேச்சர் -22 வரைக்கும் போச்சுதுங்க. கை சும்மாவே டைப்படிக்கும்போது எக்குத்தப்பா எதுனா எழுதிடுவேனோன்னு பயமா இருந்துதா, அதான் உங்க பதிவுகள படிக்கிறதோட நிறுத்திட்டேன். இப்போ -5 க்கு குறைஞ்சிருக்கு. உடன எழுத ஆரம்பிச்சுட்டேன்.
கடைசியா இந்தியால 2007 மார்ச், ஏப்ரல் காலப் பகுதியில தியேட்டர்ல பாத்ததுக்கு அப்புறம், தியேட்டர்ல பாத்த முதல் தமிழ் படம் இதுதான். கண்ணாளன் கேட்டதெல்லாம் உடனவே செய்யலேன்னா படம் பாக்க கூட்டிட்டு போக மாட்டேன்னு மிரட்டி வேலை வாங்கிட்டார். இந்த ஸ்னோ வேற விடுவேனா பார்னு கொட்டித் தள்ளிடுச்சு. அன்னிக்கு காலையில இருந்து நான் மட்டுமில்ல பசங்களும் அவர் எள்ளுன்ன முன்னம் எண்ணெயா இருந்தோம். வேலைக்கு போனவருக்கு மணிக்கொருதரம் ஃபோன் பண்ணி படம் பாக்க போகணும் ஞாபகம் இருக்கில்லன்னு சொல்லிக்கிட்டே இருந்தோம். வந்த உடனே சொன்னார். அம்மாவும் புள்ளேங்களும் ஒரு கோயில், கொண்டாட்டம் போணும்னா என்னிக்காவது இப்டி சீக்கிரம் ரெடி ஆயிருப்பீங்களா. இருங்கடி கவனிச்சுக்கிறேன்னு.
நாமதான் இப்டீன்னு நினைச்சுக்கிட்டு அங்கபோனா நமக்கு முன்னாடி அத்தனை பேரும் ஆஜர். ஸ்நோல கார் சிக்கிட்டதால டிக்கட் வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நொறுக்ஸ், கொறிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு எங்க நெருங்கிய நண்பர்கள் குடும்பங்கள் ரெண்டும் நாங்களுமா பேசிட்டு நின்னோம். கிட்டத்தட்ட சென்டர் ரோல சீட் கிடைச்சுது. அதிலயும் சென்டர் பாத்து நான் உக்காந்துட்டேன். எனக்கு இடது பொண்ணு, வலது பையன். என்னவர் ஓரத்துல, அஞ்சு சீட் தள்ளி உக்காந்திருந்தார். நல்ல வேளைங்க அவர் தள்ளி இருக்கிறது. பக்கத்தில உக்காந்திருந்தா உறுத்தலோட விஜய ரசிச்சிருக்கணுமேன்னு நான் ஃப்ரெண்டு கிட்ட சொன்னதோட படம் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சு. இருந்தாலும் என் கண்ணன் என் பக்கத்தில இல்லாதது கொஞ்சம் கஷ்டமாதாங்க இருந்துது.
ஒவொரு சண்டை காட்சிகள்லேம் பையன் சிலை மாதிரி உக்காந்து பாத்திட்டிருந்தார். விஜயோட ஒவொரு குறும்பையும் உடனவே எனக்கு செஞ்சு காட்டினார். பொண்ணு தன பங்குக்கு பாடல்கள், டான்ஸ பாராட்டினா. சின்னத்தாமரை.. அவ ஃபேவரிட். அதில விஜய் கெட்டப் சூப்பர்னா. எனக்கு வலது எல்லையில என்னவரும் ஃப்ரெண்டும் அவ்ளோ நல்லா சிரிச்சு என்ஜாய் பண்ணி பாத்தாங்க. இடது எல்லையில இருந்தவர் மட்டும் சைலண்டாவே இருந்தார். அவர் பக்கத்தில கொஞ்சம் ஸ்வீட் சிக்ஸ்டீன்ஸ். அவங்க போட்ட சவுண்டுல மிரண்டுட்டார்ங்க. நான்.. என்னோட பங்கு நொறுக்ஸ் மட்டும் அப்டியே இருந்துது.. எப்டி சாப்ட முடியும்? சுசின்னு விஜய் கூப்டத்துக்கு அப்புறமும்.. அவ்வ்வ்வ்.. என் பேர மாத்திடலாமான்னு யோசிச்சு கிட்டு இருக்கேன் ஆவ்வ்வ்வ்..
விசில் சத்தம் தியேட்டர் அதிர்ந்துது. இதுக்கு முன்னாடியும் இங்க தமிழ் படங்கள் பாத்திருக்கேன். இப்டி ஒரு விசில் சத்தம் இதுவரை கேட்டதில்ல. கைக்காச போட்டு படத்த போட்டவர் சொன்னார் இத்தனை நாள் படம் போட்டிருக்கோம். இவ்ளோ கூட்டத்த பாத்ததில்லன்னு. ஹவுஸ் ஃபுல். லேட்டா வந்த சிலர் படீல இருந்தும் பாத்தாங்க. இங்க இன்டர்வல்லாம் கிடையாதுங்க. இருந்தும் அவ்ளோ நேரம் எப்டி போச்சுன்னே தெரீல.
வெளிய வந்ததும் எல்லாரும் சொன்னாங்க. ஏன் கண்ணாளன் கூட சொன்னார். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல படம் பாத்திருக்கோம்னு. பையன் கேட்டார் ஏம்மா இவ்ளோ சத்தமா விசில் அடிச்சாங்கன்னு. நான் சொன்னேன் நீங்களும் அவங்க வயசு வர இப்டிதாம்பா செய்வீங்கன்னு. இதில கடுப்பான சில முன்னாள் யூத்துங்க சொல்லிக்கிட்டது. என்ன இது விஜய் நின்னா விசில், நடந்தா விசில்னு பாத்தா யூரோப்ல இருந்துக்கிட்டு அனுஷ்காவுக்கு கிஸ் அடிச்சாக் கூட விசிலடிக்கணுமா?? பாவம் அவங்க கடுப்பு அவங்களுக்கு.
அனுஷ்கா அழகா இருந்தாங்களாம். சொன்னாங்க. (நான் அவர மட்டுந்தேன் பாத்தேனுங்க) தெரிஞ்சவங்க ஒருத்தங்க என்னவர என்ன நீங்களும் விஜய் ரசிகரான்னு கேட்டத்துக்கு இல்ல அவங்க ஜோடியோட ரசிகன்னு சொன்னார். எனக்கு பிடிக்காத நடிகைகள் லிஸ்ட்ல ஒண்ண சேத்துக்கிட்டேன். பசங்க கேட்டாங்க அம்மா உங்களுக்கு மறுபடி பாக்கணும் போல இல்லையான்னு. கண்டிப்பான்னேன். என்ன பண்ண.. இங்க ஒரு ஷோதான் போட முடியும்னுட்டாங்க. சிடி வந்ததும் வாங்கி பாக்கலாம்னேன். ஆளுக்கொண்ணு வாங்கி குடுக்கணும்னாங்க. கண்டிப்பா மூணு வாங்கிடலாம்னேன்.
அப்புறம் என்னோட சொந்த பந்தங்கள், அறிஞ்ச தெரிஞ்சவங்க கிட்டல்லாம் கேட்டுட்டேன். அனேகமா எல்லாருக்கும் பிடிச்சிருக்காம். அப்பா மட்டும் என்ன வழக்கமான ஒரு விஜய் படம்னார். வேணும்னு எனக்காக.
அப்புறம் என்னங்க. இத்தனை நாளா நினைச்சு நினைச்சு எழுதினதுல வழக்கம்போல நிறைய எழுதிட்டேன். நீங்க படிப்பீங்கங்கிற நம்பிக்கையும் ஒரு காரணம். (ஏன் அவங்க வருஷம் பிறந்து இவ்ளோ நாளா நிம்மதியா இருந்தது உனக்கு பொறுக்கலேன்னு சொல்லேன்) அப்டியே பொங்கல நல்லா கொண்டாடுங்க.
எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
வர்ட்டா..
தொழிலெனும் தியானம்
2 hours ago
28 நல்லவங்க படிச்சாங்களாம்:
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்
மீ த ஃப்ரஸ்ட்டா?
இந்த ஏரியா எந்த ஏரியான்னு ஆல் ஏரியாலும் வேட்டை ஹிட்தான்.. இப்படியெல்லாம் வேற எந்த நடிகரும் நினைச்சுக் கூட பார்க்க முடியாது (பெரிய தலைங்க விதிவிலக்கு)
//கண்டிப்பா மூணு வாங்கிடலாம்னே//
உஷார்தாங்க
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஹீட்டரைப்போட்டுட்டு இருங்க :)
சுசி ஹேப்பி பொங்கல்...
உறைஞ்சு போயிடப்போறீங்க உபி
வேட்டைக்காரண்டோய் வேட்டைக்காரண்டோய்...
ஆத்தா விமர்சனம் கூட கலக்கலா எழுதியிருக்கீங்க....
தியேட்டர்ல சுசின்னு யாரும் கிண்டல் பண்ணலயோ...
எனக்கு பிடிக்காத நடிகைகள் லிஸ்ட்ல ஒண்ண சேத்துக்கிட்டேன். //
எனக்குத்தெரியும் உங்கபேர அவங்க வச்சுருக்காக்கன்றதுக்காகதான இப்பிடி சொல்றீங்க....
அதே அதே.. நீங்கதான் ஃபர்ஸ்ட்டு கார்க்கி :))
நான் அத சொன்னா ஒத்துக்க மாட்டேங்குராங்கப்பா.. //(பெரிய தலைங்க விதிவிலக்கு// நீங்களும் உஷார்தாம்பா.
&&&&&
நன்றி அம்மிணி. ஹீட்டர் போட்டிருக்கோம். fireplace ம் ஜகஜ்ஜோதியா இருக்கு. இருந்தும் கொடுங்குளிரா இருக்கே :((
&&&&&
நன்றி உ.பி. ஹஹாஹா.. கண்ணன் இருக்கான்ல. உறைஞ்சு போய்ட மாட்டேன்.
கிண்டல் பண்ணல பொறாமையா பாத்தாங்க :))
அதில்ல.. என்னவருக்கு அவங்கள பிடிக்குதே அதான்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்..... எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
happy pongal
//டெம்பரேச்சர் -22 வரைக்கும் போச்சுதுங்க. கை சும்மாவே டைப்படிக்கும்போது எக்குத்தப்பா எதுனா எழுதிடுவேனோன்னு பயமா இருந்துதா//
இத்தனை நாளா எழுதாம இருந்ததுக்கு இதுதான் காரணமா?
கை தானா டைப்படிக்குதில்ல, ஒழுங்கா கீபோர்டுல வச்சிருந்தா எங்களுக்கு ஒரு முன்/பின்/நடு நவீனத்துவ காவியம் கிடைச்சிருக்குமே, தப்பு பண்ணிட்டீங்களே
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அது சரி வெயில அதிகமானாதான் கொஞ்சம் அப்டி இப்டி ஆவும்பாங்க.. அதிக குளிர்லயுமா?
பொங்கல் நல்வாழ்த்துக்கள்:-)
இருந்தாலும் உங்களுக்கு எவ்ளோ தைரியம் உங்களுக்கு....சகோ
இனிய பொங்கல் வாழ்த்துகள்...
பின்நவீனத்துவ விமர்சனமா யக்கா??? இருந்தாலும் விஜயை பிடிக்கிற எங்களுக்கே கொஞ்சம் ஒவராதான் இருக்கு! வாரத்துக்கு ஒரு பதிவாது எழுதுங்க டாக்..
உங்களுக்கும், இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள்!!
பொங்கல் வாழ்த்துக்கள் ;))
\\அன்பர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இனிய புது வருட வாழ்த்துக்கள்\\
என்ன இது சவுண்டு ஒரு மாதிரி இருக்கு...புதுசாக காட்சி ஏதாச்சும் தொடங்க போறிங்களா!!?? ;))
\\ அவ ஃபேவரிட். அதில விஜய் கெட்டப் சூப்பர்னா. \\
ஆகா...நல்லா தானே இருந்திங்க...ஏன் இப்படி கொலைவெறி விஜய் மேல ;)))
\\பையன் கேட்டார் ஏம்மா இவ்ளோ சத்தமா விசில் அடிச்சாங்கன்னு. நான் சொன்னேன் நீங்களும் அவங்க வயசு வர இப்டிதாம்பா செய்வீங்கன்னு.\\
அது...விசில் அடிக்க எப்படி என்ன எதுன்னு விபரம் வேணுமுன்னா இலவசமாக சொல்லி கொடுக்கப்படும் ;))
\\\ஒருத்தங்க என்னவர என்ன நீங்களும் விஜய் ரசிகரான்னு கேட்டத்துக்கு இல்ல அவங்க ஜோடியோட ரசிகன்னு சொன்னார்\\
அப்படியா..என்னக்கு என்னாமே இதுல அம்மணி கொஞ்சம் டல்லாக தான் இருக்கிற மாதிரி பீல் ;)
அடிக்கடி பதிவு போடுங்க...ஏன் என்னை மாதிரியே எல்லாரும் இருக்கிங்க..;)))
நன்றி கருணாகரசு.
&&&&&
நன்றி சக்தி.
&&&&&
அப்டி பண்ணி இருக்கணுமோ?? அடுத்த வின்டர் பாத்துக்கிறேன் சங்கர் :)))
நன்றி சொல்லரசன்.
&&&&&
அண்ணாமலையான் அடுத்த வின்டருக்கு இந்த குளிர அனுபவிக்கும்படி செஞ்சுடுங்க பிள்ளையாரே..
&&&&&
நன்றி இயற்கை.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீமாங்கனி. இல்லைங்க.. நான் ரொம்ப பயந்தவ.
&&&&&
உங்கூர்ல பொங்கலுக்கு இவ்ளோம் சாப்டீங்களா கலை? இன்னமும் டாக்டராஆ? இதுக்கு நீங்க குடுத்த பட்டமே தேவலை. இருந்தாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலி கலை.
&&&&&
வாங்க கோபி.. பொங்கலோட பொங்கிட்டீகளோ.. கட்சி ஏற்கனவே தொடங்கிட்டேனே.. தெரியாதா? டிக்கட்ட அனுப்புங்க குடும்பத்தோட வந்து மருமகனுக்கு விசில் கத்துக்கிடுறோம்.
அக்காவ சரியா புரிஞ்சுகிட்டீங்க. ஃபீல் பாதி.. கொலைவெறி மீதி :))
நிஜமா சொல்றேன் உங்கள மாதிரி இருக்கிறதும் நல்லாத்தான் இருக்கு.
//விசில் சத்தம் தியேட்டர் அதிர்ந்துது. இதுக்கு முன்னாடியும் இங்க தமிழ் படங்கள் பாத்திருக்கேன். இப்டி ஒரு விசில் சத்தம் இதுவரை கேட்டதில்ல. கைக்காச போட்டு படத்த போட்டவர் சொன்னார் இத்தனை நாள் படம் போட்டிருக்கோம். இவ்ளோ கூட்டத்த பாத்ததில்லன்னு. ஹவுஸ் ஃபுல். லேட்டா வந்த சிலர் படீல இருந்தும் பாத்தாங்க. இங்க இன்டர்வல்லாம் கிடையாதுங்க. இருந்தும் அவ்ளோ நேரம் எப்டி போச்சுன்னே தெரீல.//
படம் வெளிநாட்டிலும் பட்டய கெளப்புறதா கேள்விப்படும் போது சந்தோசமா இருக்குங்க.. :))))
:)))))))))))))))
ரொம்ப லேட்டாயிருச்சு சகா..
விடுங்க,வீன்ஸ் படம்தானே..(கார்க்கி,கண்ணன் வார்த்தையை சொல்வார். விடுங்க.பழக்கம்தானே...)
மக்கா,
ஆயிரத்தில் ஒருவன் அடுத்து ரிவைவ் பண்ணுங்க..நல்லா இருக்குன்னு கேள்வி..(டேய்,அவனை வெட்டுடான்னு ஒரு குரல் கேட்க்குது..கூப்பிடீங்களா கார்க்கி மக்கா?..)
மக்காவில்தான் பொழப்பு ஓடுது சுசி.
அதகளம் வார்த்தை போதலையே சகா..great!
உங்கள் ட்ரேட் மார்க்!
ஆகா விஜய்க்கு இப்படி ஒரு ரசிகரா?. இதுபோல இருந்தா எப்படிவேனா நடிக்கலாம் போல. நான் ரொம்ப வருஷமா திரைப்படம் பார்ப்பதில்லை. அதுனால தெரியவில்லை. என்னுடைய பதிவில் பதிவர்கள் வீட்டு சமையல் அறையில் என்ற பதிவு போட்டுள்ளேன். படித்துவிட்டு திட்டவும். நன்றி.
:)))))))))))))))
பரவாயில்லையே..
சே...என்னவோ சொல்ல வந்துட்டு மறந்துட்டேன்...சாரிங்க...
.
.
.
ஞாபகம் வந்துருச்சு...
வாழ்த்துக்கம்...
..
..
..
எதுக்கா............?
படம் பார்த்துட்டு வெற்றிகரமா தியேட்டருக்கு வெளியே வந்ததுக்கு...
ஹா..ஹா
எனக்கும் சந்தோஷம் வெற்றி.
&&&&&
சிரிப்புக்கு நன்றிங்க தாரணி பிரியா.
&&&&&
நான் உங்க பேச்சு கா பா.ரா.
பதிவு எழுதின என்னைய விட்டுட்டு கார்க்கிக்கு கமன்ட் போட்டிருக்கீங்களே..
கார்க்கி.. பாருங்க..
பா.ரா //கார்க்கி மக்கா?..)// ன்னு சிரிச்சுக்கிட்டே கேட்டிருக்கார்.
நான் என்னமோ உங்கள புத்திசாலின்னு நினைச்சுட்டு இருக்கேன் :)))
படிச்சுட்டு திட்டல அண்ணா.. ரொம்ப சிரிச்சுட்டேன்.. அட படம் பார்க்கிறது இல்லையா? எப்டிண்ணா? அண்ணி வந்தப்புறம் சேர்ந்து பாருங்க. ஓக்கேவா.
&&&&&
முதல் வருகைக்கு நன்றி பாத்திமா.
&&&&&
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பட்டாபட்டி. உங்க பெயர் ரொம்ப நல்லாருக்குங்க.
Post a Comment