சின்ன அம்மிணி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு தொடர்பதிவுக்கு என்ன கூப்டிருந்தாங்க. அவங்க மறந்திருப்பாங்க. நானும் அப்டியே விட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா..
நாம எப்பவுமே விழிப்பா இருக்கணும். விழிப்புணர்வு வாரத்தில மட்டும் விழிப்பா இருந்திட்டு அப்புறமா தூங்கிட்டே ட்ரைவ் பண்ணக் கூடாதில்லையா. இப்டி ஒரு எண்ணம் எனக்குள்ள வந்ததோட விளைவுதான்.. அதே அதே.. புரிஞ்சுக்கிட்டீங்களே.. சமத்து.. அது மட்டுமில்லாம இங்க விண்டர்ல நாம விழிவிழிப்பா இருக்கணும்ங்க. வெளிநாடு வாழ் என் வாசகர்கள மனதில் கொண்டு நான் இந்த சாலைப் பாதுகாப்பு தொடர தொடர நினைச்சேன்னும் சொல்லலாம்.
நான் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்த கதைய நானே தனிய்யா.. ஒரு தொடர் பதிவு போடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதால இந்த தொடர் பதிவில அது பத்தி சொல்லல. இப்போ என் கிட்ட லைசன்ஸ் இருக்குங்கிறத மனசில வச்சிக்கிட்டு வாங்க விழிப்புணர்வ வளத்துக்கலாம்.
இங்க இப்போ அத்தனை தொடர்பாடல் சாதனங்களும் கூவிக்கிட்டு இருக்கிறது..
*வளைவுகள்ள ஸ்பீடா போகாதீங்க.
*ஸிக்னல்ல நிக்கும்போதும், போம்போதும் நிதானமா போங்க.
*Round about ல சுத்தும்போது முடிஞ்ச அளவுக்கு ஸ்லோவா போங்க.
இதோட தினமும் என் அம்மாவும், அப்பப்போ என் கண்ணனும் வேற அட்வைசுறாங்க, பாத்துப் போ, கவனமாப் போன்னு. ஆனா ஒண்ணுங்க ஸ்னோல ஸ்லிப்பாச்சுன்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதுவுமே நம்ம கைல இல்ல. சர்ர்ர்னு போயி முட்டிக்க வேண்டியதுதான். நம்மளுக்கு டேமேஜ்னா பரவால்ல. நம்மளால யாருக்கும் இல்ல எதுக்கும் எதுவும் ஆயிடக் கூடாது. இது அனைத்து ஜீவராசிகளுக்கும், அனைத்து சக்கர வாகனங்களுக்குமான குளிர் காலப் பொது நியதி.
இதில இந்த சைக்கிள்காரங்க பண்ற அலப்பர இருக்கே.. சைக்கிள் பாதை தனியா இருந்தாலும் அவங்க பாட்டுக்கு ரோட்ல இறங்கிடுவாங்க. அப்புறமென்ன? அவங்களுக்கும் நாலு சக்கர வாகனத்துக்கு இருக்கிர அத்தனை ரைட்ஸும் இருக்கு. அவங்க எப்போ கொஞ்சம் சைடுக்கு போவாங்க நாம ஓவர் டேக் பண்ணலாம்னு பொறுமையா பின்னாடியே போணும்.
அடுத்து நடந்து போறவங்க. நேரா போய்ட்டேடேடே.. இருப்பாங்க. நடைபாதைய இவங்க கடக்கப் போறதில்லன்னு நினைக்குறத்துக்குள்ள குபீர்னு குதிச்சு கடக்க ஆரம்பிச்சிடுவாங்க. சடனா ப்ரேக்க போட வேண்டியது நம்ம பாடு. ரோடே அவங்களுக்காக போடப்பட்டதாவும் நாங்க என்னமோ தெரியாத்தனமா வண்டிய ஓட்டிட்டுப் போறா மாதிரியும் தெனாவட்டா போய்ட்டே இருப்பாங்க. நாமதான் ஓரமா ஒதுங்கி போணும்.
தூக்கக் கலக்கத்தோட ட்ரைவிங் வேண்டாம். அதிலயும் லாங் ட்ரைவ் போறீங்கன்னா குட்டியா ஒரு தூக்கத்த போட்டுட்டு பயணத்த தொடருங்க.
ஓவர் டேக் பண்ணும்போது ரொம்ப கவனமா இருக்கணும். விண்டர்ல வேண்டவே வேண்டாம். ரோட்ல சேர்ந்திருக்கிர ஸ்னோ நீங்க லைன் சேஞ்ச் பண்ணும்போது நிச்சயம் வழுக்கும்.
வண்டி மேல சேர்ந்திருக்கிர ஸ்னோவ தட்டி க்ளீன் பண்ணாம ஓட்டக் கூடாது. ட்ரைவர் தன் முன்னாடி மட்டும் தட்டி விட்டுட்டு உத்து பாத்துக் கிட்டே போவாங்க. அவங்க வண்டி மேல இருக்கிர ஸ்னோ அப்டியே காத்தில பறந்து பின்னாடி போற வண்டி மேல கொட்டி.. இந்த ட்ரைவர் கண்ண மறைச்சு.. அப்புறமென்ன? அது மட்டுமில்லாம பார்க்கிங் ஏரியாவையே ஒரு மினி குளமா ஆக்கிடும் கரைஞ்சு போற ஸ்னோ.
இங்க அனாவசியமா ஹாரன் அடிக்க கூடாது. ஹெட் லைட் போட கூடாது. இவங்க சும்மா இருப்பாங்களா? எதிர்க்க போற வண்டிக்காரன் தெரிஞ்சவனா இருந்திட்டா ஹாய் சொல்றத்துக்கு உடனவே ஹாரன், இல்ல ஹெட்லைட். இதனால சமயத்தில என்னமோ நாமத்தான் தப்பா ஓட்டரோமோன்னு பயப்பட வேண்டியதிருக்கு. அதுக்கும் மேல ஹாரன் கேட்டதும் ஸிக்னல்ல வெயிட் பண்ரவங்க க்ரீன் விழுந்திடுச்சின்னுதான் இவங்க ஸிக்னல் குடுக்கிரதா நினைச்சு [ஏன்னா அது எங்காவது வாய் பாத்துட்டு இருக்கும், இல்ல ஃபோன்ல பேசிட்டு இருக்கும்] ரெட்லவே வண்டிய எடுத்து.. வேற என்ன?
கிவ் வேல யாராவது விட்டு குடுக்கிராங்கன்னா, கிடைச்சது வழின்னு உடன போய்டாதீங்க. ஒண்ணு அவங்க ஹெட் லைட் போட்டு காமிக்கணும், எடுலே உனக்காகத்தான் வெயிட் பண்றேன்னு கைய காமிக்கணும் இல்ல அவங்க ஸ்லோ பண்ணணும். சிலர் இதுக்கெல்லாம் கவலைப்பட மாட்டாங்க. அவங்க பாட்டுக்கு போய்ட்டே இருப்பாங்க. ப்ரேக்க உதைச்சு ஆக்ஸிடண்ட் ஆகாம பாத்துக்கிரது அடுத்தவங்க பாடு.
என் கண்ணாளன் எனக்கு எப்பவுமே சொல்ரத்த இப்போ நான் உங்களுக்கு சொல்ரேங்க. நீ இன்னைக்குத்தான் முத முதலா ட்ரைவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு கார் கீய கைல எடுத்துக்கோ. அப்போதான் எப்பவும் கவனம் இருக்கும்பார். சரிதானே அவர் சொன்னது?
இவ்ளோ கஷ்டம் எதுக்குங்க.. முடியலையா? தைரியம் இல்லையா? பயமா இருக்கா? பஸ்ல போய்டுங்க. உங்கள மாதிரித்தான் என்ன ஒருத்தங்க கேட்டாங்க. அது மட்டும் ஸ்லிப்பாகாதான்னு. பேஷா ஆகும். அது பஸ் ட்ரைவரோட பிரச்சனை. நான் ஏன் கவலைப்படணும்? இதுவும் சரிதானே?
நீங்க இந்த ஊருக்கு வரும்போது கீழ இருக்கிரத கவனமா பாத்துட்டு வாங்க. கணிசமான விபத்துக்களுக்கு டூரிஸ்டும் ஒரு காரணம்.
அப்புறம் ஸீட் பெல்ட் போடுன்னா யாரும் கேக்கலைன்னுட்டு இப்டி அங்கங்க பானர் வச்சாங்க. வித்யாசமா இருந்துது. அத வெறும் பெல்ட்னு நினைக்காதப்பா.. உனக்கு வேண்டியவங்க அணைச்சுக்கிராங்கன்னு நினைச்சுக்கோன்னு சொல்றா மாதிரி.
என்னதான் இதுக்கு ஃபைன் அதுக்கு ஃபைன்னு போட்டாலும் பணத்த கட்டிட்டு அடுத்த நிமிஷம் ஒன் வேல போறவங்கள என்ன பண்ணலாம்?? என் பதிவோட லிங்க் குடுத்திடலாமா??
இந்த தொடர் பதிவோட முக்கியத்துவம் கருதி இத்தோட விடாம இன்னும் ஐந்து பேர தொடர அழைக்கிறேன். உங்க பங்குக்கு நீங்களும் கொஞ்சம் விழிப்புணர்வ வளர்த்திடுங்க நண்பர்களே..
1. குருவே வாங்க நீங்கதான் ஃபர்ஸ்ட்டு. சாளரம் கார்க்கி.
2. உ.பி பிரியமுடன்......வசந்த்
3. சிங்கப்பூர் அண்ணா பித்தனின் வாக்கு சுதாகர்.
4. டெல்லித் தங்கை விக்னேஷ்வரி
5. உங்கள இத தொடர சொல்ரது ரொம்ப பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன் புலவன் புலிகேசி – வழிப்போக்கன். உங்க சமூக சேவை பத்தி படிச்சிட்டு வரதால.
அப்டியே நீங்களும் எத்தனை பேர வேணா கூப்டுங்க. சின்ன அம்மிணி எந்த ரூல்சும் போடலை. வரட்டுங்களா..
21 நல்லவங்க படிச்சாங்களாம்:
நல்லாருக்கு உங்க ஒர்க்கு.. வாழ்த்துக்கள்...
நல்லா இருக்குங்க..சீட் பெல்ட் படம் சூபருங்கோ...
//நடைபாதைய இவங்க கடக்கப் போறதில்லன்னு நினைக்குறத்துக்குள்ள //
எங்கப்பா நியூஸி வந்திருந்தப்போ இப்படித்தான். திடீர்னு க்ராஸ் பண்ணினா நிறுத்துவாங்களான்னு ட்ரை பண்ணிப்பாத்த்தாராம். எத்தனை பேர் திட்டீட்டு போனாங்களோ :)
விரைவில் எழுதுறேங்க...
நான் சீட் பெல்ட் போடாம ஓட்டறதே இல்லை. Proud of myself
தெளிவா ஒண்ணொண்ணா சொல்லிட்டு வந்திருக்கீங்க. சீல்ட் பெல்ட் படத்துக்கான குறிப்பும் நன்று.
நல்ல கட்டுரை. மிக அருமை பயனுள்ளது. சீட் பெல்ட் படம் சூப்பர். என் கிட்ட காரு, வண்டி எல்லாம் கிடையாது. நடராஜ சர்வீஸ்தான். நான் எப்படி பதிவு போட முடியும். சரி தங்கை சொன்னா தட்ட முடியாது. இப்ப எழுதற தொடர் முடிந்ததும் பதிவு போடுகின்றேன். நன்றி சுசி. அழைப்புக்கும், பகிர்வுக்கும்.
// முத முதலா ட்ரைவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு கார் கீய கைல எடுத்துக்கோ. அப்போதான் எப்பவும் கவனம் இருக்கும்பார். //
நல்ல அட்வைஸ்தான். அதுக்காக எல் போர்டு மாட்டிக்கிட்டுத்தான் ஓட்டுவேன் என்று அடம்பிடித்தால் எப்படி?
இதுக்கே இப்படின்னா, அங்கல்லாம் நம்ம சென்னை ஆட்டோ வந்துட்டா என்ன ஆகும் :))
தாமதமாக வந்துவிட்டேனோ சிஷ்யையே!!!
டிராஃபிக் அதிகம். கவனமாக வந்தேன்:)))
நிறைய விடயங்கள் கூறியுள்ளீர்கள்.
பதிவு சூப்பரு..
பனிய நான் எங்க ஃப்ரீசர்ல பாக்குறதோட சரி..!!
பாதுகாப்பா பத்திரமா போங்க பனியில..!!
டேக் கேர்.
நல்ல பதிவு ;))
சீட் பெல்ட் படம் கலக்கல் ;) கவனமாக பயணம் செய்யுங்கள் அனைவரும்.
????? ??????? said...
// நான் சீட் பெல்ட் போடாம ஓட்டறதே இல்லை. Proud of myself //
அமாம்மா அவங்க எப்பவும் சீட் பெல்ட் போடாம ஓட்ட மாட்டாங்க. என்ன ஒரு சின்ன பிரச்சனைன்னா அவங்களுக்கு கார்ல பிரேக் எங்க இருக்குன்னு தெரியாது அவ்வளவுதான். ஹா ஹா ஹா
அருமையான பதிவு சகோ...
நிறய தகவல்..தந்து இருக்கீக...
படங்கள் எல்லாம் அருமை.....
பதிவு நன்றாக உள்ளது , சுசி. நல்ல தகவல்கள்.
"தூக்கக் கலக்கத்தோட ட்ரைவிங் வேண்டாம். அதிலயும் லாங் ட்ரைவ் போறீங்கன்னா குட்டியா ஒரு தூக்கத்த போட்டுட்டு பயணத்த தொடருங்க.".
மிக சரியான வரிகள் .
//நாம எப்பவுமே விழிப்பா இருக்கணும். விழிப்புணர்வு வாரத்தில மட்டும் விழிப்பா இருந்திட்டு அப்புறமா தூங்கிட்டே ட்ரைவ் பண்ணக் கூடாதில்லையா. இப்டி ஒரு எண்ணம் எனக்குள்ள வந்ததோட விளைவுதான்.. அதே அதே.. புரிஞ்சுக்கிட்டீங்களே.. சமத்து..//
என்னா ஒரு நக்கலு....
//நான் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்த கதைய நானே தனிய்யா.. ஒரு தொடர் பதிவு போடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதால //
சீக்கிரம்.....
ட்ரைவர் சுசி அனுபவம் பேசுது ஒவ்வொரு விஷயமும் நுணுக்கமா எழுதியிருக்கீங்க கிவ்வ்வே இப்பிடி சொன்னாலே நீ போலாம் ரைட்டுன்னு சிக்னல் தானே அப்புறமெதுக்கு நிப்பாட்டணும்?
சீட் பெல்ட் போட்டோ சூப்பர் செலகசன் நல்ல விஷயம் ...
என்ன ஏனுங்க்கா மாட்டிவிட்டீக எனக்கு வண்டி ஓட்டவே தெரியாது டூவீலரே ஒன் வீலர் மாதிரிதான் ஓட்டுவேன் ம்ஹ்ஹும் ஒகே ட்ரை பண்றேன்...
என்னங்க ஆச்சு, பின்னூட்டத்திற்கு பதிலும் இல்லை, பதிவும் இல்லை. எங்களின் பதிவுப் பக்கமும் வரவில்லை. மறுபடியும் உடல் நலம் சரியில்லையா? அல்லது பணிச்சுமை காரணமா?. எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா?
Post a Comment