✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿
ரொம்பத் தூரம் சென்று விட்டான்
என் கண்ணன்
மனதுக்குள் கதவுகளை
ஒவ்வொன்றாய்
மறக்காமல் மூடிச் செல்கின்றான்
ஒற்றை ஜன்னல் மட்டும்
எப்போதும் மூடத் தாயாராய்
இறுகப் பிடித்தபடி நான்..
✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿
நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ
என் கண்ணனாயும் இரு
நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.
✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿
சிலையாய் செதுக்கினாய்
சிதைந்து கொண்டிருக்கிறேன்
செதுக்கியதோடு
உன் கடமை முடிந்துவிட்டதால்.
✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿
ஈரக் கையில் ஒட்டிய முடியாய்
உதறியும் விழாமல் உன் நினைவுகள்
உலரும் வரை காத்திருக்கிறேன்
தானாக விழுந்திடுமென்ற தவிப்புடன்!!
✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿
இப்போதெல்லாம் முன் போல்
கனவுகள் வருவதேயில்லை
முன்போல் உன்னோடான கனவுகள்..
✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿ ✿♥‿♥✿
30 நல்லவங்க படிச்சாங்களாம்:
//சிலையாய் செதுக்கினாய்
சிதைந்து கொண்டிருக்கிறேன்
செதுக்கியதோடு
உன் கடமை முடிந்துவிட்டதால்//
அருமையான வரிகள்!
அழகான கவிதைகள்! வாழ்த்துக்கள்!
\\ரொம்பத் தூரம் சென்று விட்டான் என் கண்ணன் மனதுக்குள் கதவுகளை ஒவ்வொன்றாய் மறக்காமல் மூடிச் செல்கின்றான் ஒற்றை ஜன்னல் மட்டும் எப்போதும் மூடத் தாயாராய் இறுகப் பிடித்தபடி நான்.. \\
பற்றிய இறுக்கம் தளருமுன்
திரும்ப வருவானா என் கண்ணன்?
\\சிலையாய் செதுக்கினாய் சிதைந்து கொண்டிருக்கிறேன் செதுக்கியதோடு உன் கடமை முடிந்துவிட்டதால். \\
என்னை சிலையாய் செதுக்கினாய்
உன் கடமை முடிந்ததுவிட்டது
நான் உயிர் கொண்டுவிட்டேன் என்பதை நீ அறிவாயோ?
\\இப்போதெல்லாம் முன் போல் கனவுகள் வருவதேயில்லை முன்போல் உன்னோடான கனவுகள்.. \\
சதா என் நினைவிலேயே நீ இருப்பதால் கனவில் தனியாக வருவதில்லை
/இப்போதெல்லாம் முன் போல்
கனவுகள் வருவதேயில்லை
முன்போல் உன்னோடான கனவுகள்..//
ஏங்க என்ன ஆச்சு?
அனைத்து கவிதைகளும் அருமை கவிஞியே (கவிஞருக்கு பெண்பால் )
//சிலையாய் செதுக்கினாய்
சிதைந்து கொண்டிருக்கிறேன்
செதுக்கியதோடு
உன் கடமை முடிந்துவிட்டதால்.//
பென்டாஸ்டிக் சுசி!
கவிதையும் அதை பிரதிபலிக்கும் படங்களும் அருமை! :)
ஈரக் கையில் ஒட்டிய முடியாய்
உதறியும் விழாமல் உன் நினைவுகள்
உலரும் வரை காத்திருக்கிறேன்
தானாக விழுந்திடுமென்ற தவிப்புடன்!!
..... The best!!!! Super!
//நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ
என் கண்ணனாயும் இரு
நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.//
//இப்போதெல்லாம் முன் போல் கனவுகள் வருவதேயில்லை முன்போல் உன்னோடான கனவுகள்.. //
இது ரெண்டும் பிடிச்சிருக்கு பழகிகிட்டாலும் நல்லாயிருக்கும் அன்றாட தவிப்புகளாவது மிஞ்சும்.. அழகிய கவிதைகள் உணர்வுகளின் வெளிப்பாடு..
Feelings?!?!?!
இப்போதெல்லாம்
கனவுகள் வருவதேயில்லை
முன்போல் உன்னோடான கனவுகள்..
nijamm; varuththathudan vaazthukkaludanum commentugireaaan
//மனதுக்குள் கதவுகளை ஒவ்வொன்றாய் மறக்காமல் மூடிச் செல்கின்றான் ஒற்றை ஜன்னல் மட்டும் எப்போதும் மூடத் தாயாராய் இறுகப் பிடித்தபடி நான்..//
அருமையான வரிகள்!
அனைத்து கவிதைகளும் அருமை.
சிதைந்த சிலையும், ஈரக் கையில் ஒட்டிய முடியும் ரசனை சுசிக்கா... ஒற்றை கதவு வழியே
இதுபோல் கவிதையும்
இன்னும் வரட்டும்
நானும் கதவு மூடாமல்
பிடித்துகொள்கிறேன்...
சுசிக்கா !!!அருமையா இருக்கு ஒவ்வொன்றும்.
கவிதையும் அசத்தல் படங்களும் அசத்தல்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சுசி
:)
நடத்து நடத்து :))
;))
நன்றி எஸ்கே.. வாழ்த்துக்களாஆஆவ்வ் :)
-----
கோபி.. பின்னிட்டிங்க போங்க.. அப்டியே நான் சொல்லாதுவிட்ட வரிகள்.. கடைசி தவிர.. :))
-----
எதுவுமே ஆகலை கார்த்திக்.. அதுக்காக நீங்க என்ன திட்டல்லாம் கூடாது :)
நன்றி பாலாஜி..
-----
உங்க ஃபோட்டொவும்தான் சித்ரா.. இதுவரை பாத்ததில //The best!!!! Super!//
-----
ரொம்ப நன்றி தமிழ். பழக ட்ரை பண்றேன்.. முடியலையே..
அருண்.. டவுட்டே வேணாம். அதான்.
-----
வினு.. வொய் வருத்தம்.. வொய் வொய் வாழ்த்து??
-----
நன்றி குமார்.
வாங்க கனி.. ஜன்னல நீங்க பிடிச்சுக்கிற கேப்ல நான் இன்னும் ரெண்டு மொக்ஸ் எழுதிடறேன் :))
-----
நன்றி சரவணன்.
-----
அய்.. கார்க்கி சிரிச்சிட்டாரு.
விஜி.. சொல்லிட்டே இல்லை.. இனிமே பாரு..
-----
சிரிக்காதிங்க கோப்ஸ் :)
எல்லாமே அருமை சுசி.
இவை கூடுதல் சிறப்பு.
//ஒற்றை ஜன்னல் மட்டும்
எப்போதும் மூடத் தாயாராய்
இறுகப் பிடித்தபடி நான்..//
//செதுக்கியதோடு
உன் கடமை முடிந்துவிட்டதால்//
கடைசி கவிதை அசத்தல் A +
அழகான கவிதைகள்! வாழ்த்துக்கள்!
சுசி சான்ஸே இல்ல எல்லாமே அழகு கவிகள்
//தானாக விழுந்திடுமென்ற தவிப்புடன்
மிக அருமை...
\\நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ
என் கண்ணனாயும் இரு
நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்\\
Arumainga..
Otrai jannalai iruga pidithalum..
sithainthukondirukkum silaium..
ularatha ninaivugalum..
rombave nallarukkunga..
ithupola innum neraiya venum.
Pictures ellame super..
engernthuthan pudikkirangalooooo...
அருமை ஒவ்வொன்றும் காதலின் தூறல்கள் கனமாக வீழ்ந்துள்ளன தொடருங்கள் சுசி
இப்போதெல்லாம் முன் போல்
கனவுகள் வருவதேயில்லை ..
இப்ப எக்கச்சக்கமான கனவு வருதேக்கா...
ஒற்றை ஜன்னல் மட்டும்
எப்போதும் மூடத் தாயாராய்
இறுகப் பிடித்தபடி நான்..
-------------
அதையும் மூடுவதற்கு விட்டுவிடாதீர்கள்...
கதவுகளை விட ஜன்னலை மூடும்போதுதான்
நாம் நிறைய இழப்பது போல தோன்றுகிறது.....
”சிலையாய் செதுக்கினாய் சிதைந்து கொண்டிருக்கிறேன் செதுக்கியதோடு உன் கடமை முடிந்துவிட்டதால்”
வரிகள் ஒவ்வொன்றும் அருமை....
அழகாக உணர்வுகளின் வெளிப்பாட்டை பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
மாணவன்
வாழ்க வளமுடன்
தயாராய்..ம்ம்
மிகப்பிடித்தது முதல்கவிதை
//நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ
என் கண்ணனாயும் இரு
நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.//
இச்டுபிட் குணா
//சிலையாய் செதுக்கினாய்
சிதைந்து கொண்டிருக்கிறேன்
செதுக்கியதோடு
உன் கடமை முடிந்துவிட்டதால்.//
எழுத்தாளர் ராணியம்மா :)))
குணாவுக்கு ரிப்பீட்டேய்...
//ஈரக் கையில் ஒட்டிய முடியாய்
உதறியும் விழாமல் உன் நினைவுகள்
உலரும் வரை காத்திருக்கிறேன்
தானாக விழுந்திடுமென்ற தவிப்புடன்!!
//
சூப்பர்ப்..
கவிதைகளை பிரித்திருக்கும் இரு இதயங்களுக்கிடையேயான ஒற்றைப்புன்னகை சொல்லிவிட்டது அத்தனை காதலையும்
Post a Comment