Pages

  • RSS

21 February, 2010

என் செல்ல அம்மாவுக்கு..

mother_child_79

அம்மா..

என் செல்ல அம்மா..

சமயத்தில்

அம்மா நானா

இல்லை நீங்களா

சந்தேகத்தில்

உங்கள் செல்ல மகள்.

------------x------------

ஆமாம் அம்மா.. எனக்கு அப்பப்போ இந்த சந்தேகம் வரும். நீங்க என் அம்மாவா? இல்ல நான் உங்க அம்மாவா? சிரிப்புதான் வரும் நினைச்சா. என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க இன்னமும் குழந்தைதாம்மா.. உங்க செயல், பேச்சு எல்லாத்திலேம் நான் பாக்கிறது ஒரு குட்டிப் பொண்ணதான்.

எப்பவும் உங்க கூடவே ஒட்டிட்டு இருப்பேன். எனக்கு நினைவு தெரிய முன்னமிருந்தே நான் அப்டிதான்னு சொல்வீங்க. நீங்க வந்து பக்கத்தில படுக்காம என்னைக்கும் நான் தூங்கினதில்ல. ஜில்லுன்னு இருக்கும் உங்க கை.. அதுவே பனிக்கு இதமா சூடாவும் இருந்தது எப்டீன்னு எனக்கு இன்னமும் புரியல. என்ன அணைச்சு கிட்டு கதை சொல்லும்போது என் முதுகில உங்க குரலோட அதிர்வ என் முதுகில மெதுவா உணர்ந்துப்பேன். அப்டியே தூங்கியும் போவேன். நான் ஏன்மா வளர்ந்தேன்??

எப்பவும் உங்க கூட இருந்ததால உங்களோட அத்தனை பேச்சுக்களையும் கவனிப்பேன். சந்தோஷம், கவலை, கோபம், ஆற்றாமை, எரிச்சல்னு எல்லாமே இருக்கும். அப்போ அது மத்தவங்க கிட்ட நீங்க சொல்றதா இருந்துது. இப்போ என் கிட்டவே. இப்போ சந்தோஷப்படறேன். நான் வளர்ந்த்ததுக்காக.

யார் செல்லம்டா நீ குட்டிம்மான்னு கேட்கப்பட்டப்போல்லாம் உடனவே சொல்வேன் அப்பா செல்லம்னு. சிரிப்பீங்க. என்னிக்கு உங்க கண்ல கொஞ்சூண்டு வருத்தமும் தெரிஞ்சுதோ அன்னிலேருந்து நான் அப்பா செல்லமும் அம்மா செல்லமும் ஆயிட்டேன். எல்லார் கிட்டவும் பாத்தீங்களா அப்டியே அவ அப்பா ஜாடைன்னு பெருமை பேசுவீங்க. அதுவே என் மனசிலேம் எனக்கு பொண்ணு பிறந்தா என் கணவர் ஜாடையில இருக்கணும்கிற விருப்பமா இருந்து நிறைவேறிடிச்சு.

அக்காவுக்கும் உங்களுக்கும் என்னிக்குமே ஒத்துக்காது. ஏங்க இவ இப்டி இருக்கான்னு நீங்க சொல்லும்போது விடுப்பா.. இவ என்ன இன்னைக்கா இப்டி இருக்கான்னு அப்பா சமாதானம் சொன்னாலும் உங்க மனசு ஆறலேன்னு எனக்கு தெரியும். அவ செய்யாததையும் சேத்து நான் செய்வேன். உங்கள திருப்திப்படுத்த. இன்னை வரைக்கும் உனக்காக இத வாங்கினேன், உனக்குன்னு இதை செஞ்சேன்னுதான் நீங்க சொல்லி இருக்கீங்களே தவிர உனக்கு இதை வாங்கட்டுமா, இதை செய்யட்டுமான்னு கேட்டதே இல்ல. என்ன இப்டி ஒரு ட்ரஸ் போட்டிருக்கே.. நல்லாவே இல்லனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாலும் பாத்தியா அவள நான் குடுத்தது ஒரு வார்த்தை பேசாம போட்டுட்டு போறானு நீங்க சொல்றதுதான் எனக்கு பிடிக்கும். இதனால சமத்தில அனியாயத்துக்கு அக்கா என் மேல கொலைவெறில இருந்தாங்கிறது வேற விஷயம்.

நான் பேசறத விட நீங்க பேசறத நான் கேக்கறதுதான் உங்களுக்கு பிடிக்கும். அண்ணன்கள், அப்பா, அக்கா பத்தி பேசும் போது நான் எப்டி அவங்கள கூப்டுவேனோ அப்டியே சொல்லி பேசுவீங்க. ரஜி இருக்கானே இன்னைக்கு என்ன கோச்சுக்கிட்டாம்மா. நான் இப்டி சொன்னது தப்பா, அக்கா கூட போய் வாங்கி வந்து நட்ட ஆரஞ்சு ரோஸ் பூத்திடுச்சும்மா, இன்னைக்கு அண்ணா பேசினார், அப்பா கிட்ட சொல்லும்மா சரியா சாப்ட சொல்லி இப்டியே போகும். எப்பவாவது நான் கொஞ்சம் பிஸியா இருந்து கவனிக்காம இருக்கேன்னா வருமே உங்களுக்கு ஒரு செல்ல கோபம். சரிம்மா உன் வேலைய நான் கெடுக்கல, உனக்கு நேரம் இருக்கும்போது பேசு பரவால்ல பேசுங்கம்மானு இங்க நான் சொல்றத்துக்குள்ள அங்க டொக்னு ஃபோன வச்சிடுவீங்க. அம்மா அக்கா சொல்ரத கேளுங்கம்மா, கொஞ்சம் கவனமா சமையல் பண்ணுங்க. ரஜி பாத்துப்பான்மா அவன் கிட்ட அண்ணிய கவனமா பாத்துக்க சொல்லி அவன் பேசும்போதெல்லாம் சொல்லாதீங்கனு லைட்டா ஒரு அட்வைஸ் சொன்னா போதும். நீயும் ஆரம்பிச்சிட்டியா. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும் என்ன பத்தி. எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்ல. எனக்கு அட்வைஸ் பண்ரவங்கள பிடிக்காதுனு சொல்லிட்டு ஒண்ணு லைன் கட் ஆவும், இல்லன்னா அப்பா இல்ல அக்கா கைல ஃபோன் திணிக்கப்படும். அப்புறம் உங்கள சமாதானம் பண்ண நான் படற பாடிருக்கே.. குழந்தை..

ஒரு பத்து வயசு வரைக்கும் உங்க கிட்ட அப்பப்போ அடி வாங்கி இருக்கேன். கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா தலை வலிக்குது எனக்குனு திட்டு வாங்கி இருக்கேன். அப்போல்லாம் அம்மா ஏன் இப்டி இருக்காங்கன்னு புரியாம இருந்தது, நான் அம்மாவா ஆனதும் புரிஞ்சுது. ஆனா நான் முன்ன உன்ன அடிச்சத்துக்காகதான் கடவுள் என்ன உன் கிட்ட இருந்து தூரத்தில வச்சிருக்கார்னு நீங்க சொல்லும்போது எனக்கு ரொம்ப வலிக்குதும்மா. பொறுத்துக்கோங்க. நீங்க இங்க வந்து நான் எப்டி குப்பை கொட்றேன்னு கண்டிப்பா ஒரு நாள் பாக்கத்தான் போறீங்க. என் கையால உங்களுக்கு சமைச்சு போட்டு தண்டனை குடுக்கத்தான் போறேன்.

என்னதான் நான் சாதாரணமா பேசினாலும் சமயத்தில என் மனசு சரியா இல்லைங்கிறது எப்டித்தான் உங்களுக்கு புரியுதோ எனக்கு தெரிலம்மா. அப்போ மட்டும் எனக்கு அம்மாவா பேசுவீங்க.  தலைவலிக்குதும்மா, ஆஃபீஸ்ல வேலை ஜாஸ்தினு சொல்லி மழுப்புவேன். சூடா ஒரு டீ சாப்டுனு சொல்வீங்க. நானே போட்டு சாப்டுறத்துக்கு இஷ்டம் இல்லமானு சொல்வேன். என் செல்லம்ல.. அம்மாவுக்காக எந்திரிச்சு போய் செய்னு கெஞ்சலா சொல்வீங்க.  பேசிக்கிட்டே செஞ்சு குடிப்பேன். என்னைக்கும் என் மனசில இருக்கிற ஒரே ஆசை என் அம்மா எப்பவும் சிரிச்சுக்கிட்டு இதே குழந்தையா இருக்கணும். நான் உங்க அம்மாவா இருக்கணும். உங்கள சிரிக்க வைக்கிறத்துக்காக, இல்ல என் வேதனைய மறைக்கிறத்துக்காகவும்னும் சொல்லலாம், என் பேச்சு சமயத்தில கலர்ஃபுல்லா போய்டும். ச்சீய்.. இந்த பொண்ணு வெளிநாட்டுக்கு போயி ரொம்ப கெட்டுப் போச்சு, மருமகன் காதில விழுந்தா என்ன நினைப்பாரும்பீங்க. சமத்துன்னு நினைப்பாரு ஏன்னா கத்துக் குடுத்ததே அவர்தானேம்பேன். வெக்கத்தோட சிரிப்பீங்க.

மருமகன்கள், மகள்கள் எல்லாம் உங்களுக்கு மறுமக்கள்தான். நானும் அக்காவும் சொல்லிக்குவோம் அண்ணிங்க குடுத்து வச்சவங்கன்னு. என் கல்யாணம் முடிஞ்சு மாமியார் ஊருக்கு திரும்பின அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு அழுதப்போ ரெண்டு மாசத்தில மறுபடி பாக்க போறீங்க. அவதான் நார்வே போறா. நீங்க இல்லனு நாங்க கிண்டல் பண்ணாலும் நீங்க வெறும் சம்பந்திங்க இல்லைன்னு எல்லாருமே புரிஞ்சுக்கிட்டோம்.

உங்களுக்கு இப்போ என்ன பாட்டும்மா பிடிக்கும்னு நேத்து கேட்டப்போ முதல்ல ராதையின் நெஞ்சமேன்னீங்க. அப்புறம் நான் தேடும் செவ்வந்தி பூவிது.. இல்ல இல்ல மார்கழிப் பூவே.. இல்லம்மா சினேகாவோட ஒரு பாட்டு.. நீங்க யோசிச்ச காப்ல பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் அதுவான்னேன். அதில்லம்மா.. ஆங்.. ஒவ்வொரு பூக்களுமே.. அதான் அதான் எனக்கு பிடிக்கும் இப்போ. அடுத்த வாரம் ஒரு பர்த்டே பார்ட்டில நீங்க அத பாடறத்துக்கு லிரிக்ஸ் அனுப்பறதா நான் சொன்னதோட பேச்சு முடிஞ்சது. இனிமேதான் உங்களுக்கு விஷ் பண்ண போறேன். அதுக்கு முன்னம் இங்க சொல்லிக்கிறேன்.

ஹாப்பி பர்த்டேம்மா.. உம்ம்ம்ம்மா..

சொல்ல மறந்துட்டேன். இன்னமும் என் ஃப்ரெண்டு கிட்ட கேட்டு கத்துக்கலை.. அதனால பாடல் இணைக்க முடியல. சாரிம்மா.. ஆனா எங்க நாலு பேரையும் நீங்க அணைச்சு வச்சிட்டு எடுத்த ஒரு ஃபோட்டோ போடறேன் பாருங்க. அப்பா.. நீங்க ஆஃபீஸ் போன சமயத்தில ஃபோட்டோ எடுத்தது என் தப்பில்ல. ஓக்கேவா.. உங்கள ரொம்ம்ம்ப ஒட்டிக்கிட்டு இருக்கிறது நானு.. தள்ளிப் போயி பட்டும் படாமலும் நிக்கிறது ஹிஹிஹி.. நீதான்கா.

svane mor

25 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

முதலில் உங்கள் அம்மாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நெகிழ்வான பகிர்வு சுசி.

//அப்போல்லாம் அம்மா ஏன் இப்டி இருக்காங்கன்னு புரியாம இருந்தது, நான் அம்மாவா ஆனதும் புரிஞ்சுது.//

எல்லோருக்கும் நிகழ்வது:)!

விரைவில் உங்கள் அம்மா நீங்கள் அருமையாகக் குடித்தனம் நடத்துவதைப் பார்க்க அங்கு வந்திடவும் வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...
This comment has been removed by the author.
ப்ரியமுடன் வசந்த் said...

அம்மா ஹேப்பி பர்த்டே டூ யூ...

சே சுசி முந்திட்டா...

சுசி ரெம்ப பாசமானவளா?

//என்னிக்கு உங்க கண்ல கொஞ்சூண்டு வருத்தமும் தெரிஞ்சுதோ அன்னிலேருந்து நான் அப்பா செல்லமும் அம்மா செல்லமும் ஆயிட்டேன்//

உங்க குணம் இங்கயே தெரிஞ்சுடுதுக்கா...

சீமான்கனி said...

(சுசி) அம்மா ஹேப்பி பர்த்டே டூ யூ...

அம்மா......
இதயம் கடந்தகாலம் நோக்கி கடந்து கனத்து போகிறது...கண்களில் ஏன் இந்த நீர்கசிவு புரியவில்லை...

அம்மா......ஆத்மாவோடு கலந்த சுவாசம்..

வாழ்த்துகள்...

கோபிநாத் said...

அம்மாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ;-)

அம்மான்னு நினைச்சவுடன் அடிச்சி தள்ளிட்டிங்க போல!!...;)

கோபிநாத் said...

படங்கள் இரண்டும் அழகு ;)

பா.ராஜாராம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.

Chitra said...

உங்கள் அம்மாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன் நீங்கள் அம்மாவுக்கு வாழ்த்திய விதம் அழகு.

*இயற்கை ராஜி* said...

அம்மா ஹேப்பி பர்த்டே டூ யூ...:-)

Anonymous said...

அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இப்படி நெகிழ்வா எழுதினா பிறந்தநாளன்னிக்கு அம்மா அழுதிட்டு இருப்பாங்க.

புலவன் புலிகேசி said...

அம்மாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...உங்களின் பாசத்திற்கு என் வணக்கங்கள்...

அன்புடன் நான் said...

உங்க தளத்திற்கு நான் புதியவன்.... இந்த பதிவு மிக நேர்த்தியா நெகிழ்வா இருந்தது....

வயது மீறிய வாழ்த்துக்கள் அம்மாவுக்கு.

சங்கர் said...

ஒரே மாதத்தில் நாலு பதிவா ?? இது சுசியக்கா பதிவு தானே :))

படிச்சிட்டு வந்து சொல்றேன்

கார்க்கிபவா said...

வாழ்த்துகள்..

உலகிலே அதிகம் கஷ்டப்பட்டது உங்க அம்மாவாகத்தான் இருக்கும்..

:)))

Unknown said...

நன்றி அக்கா. உங்கள் வாழ்த்து பலிக்கட்டும் அக்கா.

"""""

கேள்வி வேறயா உ.பி?? உங்களுக்கு தெரியாது?? நன்றிப்பா.

"""""

//அம்மா......ஆத்மாவோடு கலந்த சுவாசம்.. //
அருமையா சொல்லி இருக்கீங்க சீமான் கனி. நன்றி.

Unknown said...

ஹிஹிஹி.. உங்க அக்காவாச்சே.. நன்றி கோபி..

"""""

நன்றி பா.ரா.

"""""

நன்றி சித்ரா.

Unknown said...

நன்றி இயற்கை.

"""""

நன்றி அம்மிணி. ம்.. அழுதாங்க.. ஆனந்தம், நெகிழ்ச்சி, பாசம், பெருமைனு கலவையா..

"""""

நன்றி புலவரே.

Unknown said...

நன்றி சி.கருணாகரசு.

"""""

இவ்ளோ நேரமா படிக்கிறீங்களா சங்கர்??

"""""

குருஊஊ.. கிர்ர்ர்.. உங்க அம்மாவ விடவா??
தங்கள் சிரிப்பின் அர்த்தம் என்னவோ??

Anonymous said...

ஹயோ சுசிமா சூப்பரா இருக்கு..
உங்க பதிவு படிச்சு அம்மா நினைவு வந்து உடனே வீட்டுக்கு
அலைபேசி அழைத்து பேசி
நேற்று தானே பேசின அப்டின்னு அம்மாகிட பேசிட்டு சந்தோஷ பட்டது வேற விசியம்.

உங்க பதிவில் பிடித்த பதிவும் எதுவும் ஒன்று.
அப்போ மத்தது எல்லாம் அப்படின்னு கேக்கபிடாது!!! பிடிக்கும்.

இப்படிக்கு எபோதும் சேட்டை செய்து epபோது சமத்து பிள்ளை ஆகிவிட்ட
காம்ப்ளான் சூர்யா.

வாழ்கவளமுடன்
V.v.s Group
(athanga varuthapadtha valipar sangam).

சுசி said...

நன்றி சூர்யா.. தமிழ்ல எழுத ஆரம்பிச்சத்துக்கும்.

பித்தனின் வாக்கு said...

ஹிகும்,, ஹிகும் இதை படித்து விட்டு நான் போட்ட பின்னூட்டத்தைக் காணேம். இதுக்கு இண்டர்போலில் புகார் செய்யலாமா?. நல்ல பதிவு சுசி. இயற்கையாக தாயும்,தந்தையும் தங்கள் மகளுக்குத் தோழி போல பழகி. தங்களின் குடும்பத்தில் நல்ல புரிந்த, ஆண்பிள்ளைகளுடன் சகஜமாக பழக அனுமதிக்கும் பெண்கள் இது போல காதல் கத்திரிக்காயில் விழுவது இல்லை. ஆண்கள் என்றால் ஒரு அபூர்வ வஸ்து, கல்யாணம், காமம் என்று தடுக்கப் படும் பெண்கள்தான் எதிர்பாலின ஆர்வத்தில் காதலில் ஈடுபடுகின்றார்கள். சுதந்திரமாய் வளரும் வாண்டுகள்(உன்னை மாதிரி) காதல் போன்ற வலையில் ஈடுபாடு காட்டுவதில்லை. நன்றி சுசி.

Unknown said...

கமண்டுக்கு என்னாச்சுன்னு தெரில அண்ணா.. பிளாக்காண்டவர் கிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சு பாக்கலாம்..

உங்க கருத்துக்கு நன்றி அண்ணா.

Unknown said...

அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Unknown said...

அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

அழகான வாழ்த்து சுசி. அம்மா பொண்ணுக்குள்ள நெருக்கம் உங்கள் வரிகளில் ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க. அம்மாவிற்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளும்.