Pages

  • RSS

07 February, 2010

என் சின்னண்ணாவுக்கு..

நலமா நண்பர்களே? மன்னிச்சுக்கோங்க. இன்னைக்கும் பெரிய இடுகைதான். இன்னைக்கு என் சின்னண்ணன் பர்த் டே. அவனப் பத்தி உங்களுக்கு சொல்லணும்னு தோணிச்சு. முடிஞ்ச வரைக்கும் கொஞ்சமா சொல்ல ட்ரை பண்றேன். ஓகேவா?

----------------------*-----------------------------

me   r

என்னடா.. உன்ன சின்னண்ணான்னு கெத்தா தலைப்புல போட்டுட்டேன். நாந்தான் உன்ன எப்பவுமே பேர் சொல்லி கூப்டுவேனே.. மரியாதைய தலைப்போட விட்டுடறேன். அது என்னமோ அன்னியமா இருக்குடா.

நான் பிறந்தப்போவும் அப்புறமும் நீ ரெம்பவே அழுவியாம். அம்மா என் கூட இருந்தது உனக்கு பிடிக்கலையாம். அப்போ ஆரம்பிச்சது நமக்குள்ள பகை.. வீட்ல எல்லாரும் என்ன குட்டிப் பொண்ணுன்னு செல்லம் குடுத்தப்போ நீ மட்டும்தாண்டா என்ன விரோதியாவே பாத்தே. எப்பப் பாரு நாம டாம் & ஜெர்ரிதான். இப்போ சிரிப்பா இருக்கு. நீயாவது அடியோட விட்டுடுவே. நான் அவ்ளோ திட்டுவேனே. நாயி பேயி ஏழரைனு வரைட்டியா..

நம்மளோட கடைசி ஃபைட் நினைவிருக்கா? நீ கத்தி எடுத்துட்டு வந்து உன்ன ஒரே குத்துல கொன்னுடுவேண்டி.. அம்மாவுக்காக பார்க்கறேன்.. புஸ்ஸூ.. புஸ்ஸூ.. (இது கோவத்தில நீ விட்ட மூச்சு) முடிஞ்சா குத்துடா பார்ப்போம். நீ என் அண்ணனே இல்ல அப்புறம் எதுக்கு அம்மாவுக்காக பாக்கறே. குத்து.. புஸ்ஸ்ஸூ.. புஸ்ஸ்ஸூ (இது அத விட கோவத்தில கொஞ்சம் பயத்தோட நான் விட்ட மூச்சு) அப்போ கரெக்டா அட்டன்ஸ போட்டாய்ங்க நம்ம நாட்டாமை அக்கா. செம திட்டு ரெண்டு பேருக்கும். அன்னிக்கு நினைச்சேண்டா இனிமே உங்கூட ஒன்லி வாய்ச்சண்டைதான் போடறதுன்னு. அவ அத அம்மா அப்பா கிட்ட போட்டு குடுத்துடுவாளோன்ற பயத்தில எவ்ளோ எடுபிடி வேல செஞ்சேன் அவளுக்கு. உன்னய இவங்க திட்டுரத்துக்கு முன்னாடி என் பங்கு கொலை முயற்சியையும் சொல்லிடறேன். அடுத்த பத்தியில.

உன்னய விட ரெண்டு வயசு சின்னவளா இருந்தாலும், உருவத்தில எட்டாவது வரைக்கும் நான் பெரியவளா இருந்தேன். பாட்டி வீட்டுக்கு போய்ட்டு வரும்போது வேலியோரம் என்ன விட்டுட்டு ரோட்டோரம் நீ வந்திட்டு இருந்தே. லைட்டா ஒரு இடி விட்டேன் பொத்துன்னு கரெக்டா வந்த கார் முன்னாடி நீ சுருண்டு விழுந்தே. ஸ்பீட் ப்ரேக்கர் இருக்கப் போயி கார் ஸ்லோவா வந்ததுனால தப்பிச்சே. அடுத்த முயற்சி இது மாதிரி சத்தியமா எனக்கு நினைவில்லடா. குளிக்க வச்ச தண்ணி பக்கட் உள்ள உன் தலைய அமுக்கி பிடிச்சேனாம். அம்மா மட்டும் பாக்கலேன்னா.. பிள்ளையாரே.. நான் கொலைகாரி ஆயிருப்பேன். நீ பத்தாவது வந்தப்போ வளர்ந்தே பாரு கிடுகிடுன்னு.. ஒட்டடைக்குச்சி. நாந்தான் அண்ணன் சொன்னா மாதிரி அதுக்கப்புறம் சைடாவே வளர்ந்துட்டு இருக்கேன்.

நான் வெளியூருக்கு வேலைக்குப் போனப்போதான் முத முதலா உனக்கு என் மேல இருந்த பாசத்தை லைட்டா புரிஞ்சுக்கிட்டேன். வெள்ளி சாயந்தரம் வந்திடுவே கூட்டிப் போக. அத விட எங்க ரெண்டு பேர் ஸ்கூலும் எதுக்காவது சந்திச்சா நான் ஒண்ணு உன் கூட, இல்ல உன் ஸ்கூல் வண்டீல வீட்டுக்கு வந்திடுவேன். ரெண்டு ப்ரின்ஸிங்களும் சிரிப்பாங்க. அதுவும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி வேலைக்கு முழுக்குப் போட்டு உன் முதுகில சாஞ்சு அழுதிட்டே பைக்ல வந்தப்போ எப்பவும் நான் பேசறத கேட்டுட்டு வர்ற நீ அன்னிக்கு நிறைய்ய பேசிட்டு வந்தே.

ஸ்வஸ்திகம் + திரிசூலம் ஒரு சைடும், மகாலக்‌ஷ்மி மறு சைடும் போட்ட டாலர் ஒண்ண குடுத்துட்டு நான் கூட இல்லேன்னாலும் உன் பாதுகாப்புக்கு என்னோட சின்ன கல்யாணப் பரிசுன்னு சொன்னே. இப்பவும் அது எனக்கு பாதுகாப்பாய். ஊர விட்டு நான் புறப்படும்போது உன் தோளக் கட்டிக்கிட்டு அழுதப்போ சரிடி.. சரிடி.. அழாத சந்தோஷமா போய் வான்னு சொல்லி என்ன சீட்ல உக்கார வச்சிட்டு ஜன்னல் வழியா அடிக்கடி நீ எட்டிப் பாத்தது வார்த்தைகள் சொல்லாத உன் வேதனைய சொல்லிச்சுது. கண்ணீர்க் கண்களுக்குள்ள மறைஞ்சு போன உன் உருவம்.. இப்பவும் என் மனசில இருக்கு. அப்போ புரிஞ்சுதுடா உன் முழுமையான பாசம். அதுக்கப்புறம் எதோ ஒண்ணு நமக்குள்ள விலகினா மாதிரி நீ என்கிட்டயும் மனசு விட்டு பேச ஆரம்பிச்சே. நண்பனா, அண்ணனா சமயத்துக்கு ஏற்ப. அது பிரிவு தந்த பாசம் கிடையாது. நமக்கு நம்மை புரிய வைக்க கிடைச்ச சந்தர்ப்பம்.

என் கல்யாணத்துக்கு நீயும், அக்கா கல்யாணத்துக்கு அண்ணனும் மாப்பிள்ளைத் தோழனா இருக்கணும்கிர எங்க ஆசை எனக்கு மட்டும் நிறைவேறலேன்னாலும் உன் கல்யாணத்துக்கு நான் தோழியா மட்டுமில்லாம ஒரு வகையில காரணமாயும். சிரிக்கிறியா.. அந்த கதைய ஒரு தனி இடுகையா போடறேன் பாரு.

என்னவர் மேல உனக்கு இருக்கிற மரியாதை. உங்களுக்குள்ள இருக்கிற நட்பும் உறவும் கலந்த ஒரு பாசம். எப்போ ஃபோன் பண்ணாலும் என்னடியப்பா.. என்ன செய்றே.. அத்தான் எப்டி இருக்கார்னுதான் உன் பேச்சு தொடங்கும். பசங்களயும் அத்தானையும் கவனமா பாத்துக்கோன்னு முடியும். நீங்கல்லாம் உயிர் பிழைச்சு வருவீங்களாங்கிற நிலமையில கூட உன் பேச்சு மாறல.

ரெண்டாவது தடவை நாங்க ஊருக்கு வந்தப்போ அண்ணி மேல எதுக்கோ உனக்கு கோவம். அங்கவே கத்தாம உள்ள கூட்டிப்போய் டோஸ் விட்டு அனுப்பினது நீ ஒரு நல்ல கணவன்னு சொல்லிச்சு. குட்டிப் பொண்ணுங்க ரெண்டும் பண்ற அப்பா ஜபம், அதிலேம் குட்டிப் பொண்ணு உன்ன விட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்கிரது நீ அன்பான அப்பான்னு சொல்லிச்சு.

எல்லாத்துக்கும் மேல அண்ணா, அண்ணி, பசங்களுக்கு நீ செஞ்ச, செய்றத்துக்கெல்லாம் உன் காலத் தொட்டு கும்பிடணும்டா. எனக்கான அத்தனை ஜென்மத்துக்கும் உனக்கு நான் தங்கையா பிறக்கிற குடுப்பினைய குடுக்க சொல்லி என் பிள்ளையார தினமும் வேண்டிக்கிறேன்.

உனக்கு எதாவது ஒரு நல்லது நடக்கணும்னா ரொம்ப அலைய வச்சு, கடைசீல நடக்காதோன்னு நினைக்கும்போது தான் அது கை கூடும். இதில உனக்கு வருத்தம் இருந்தாலும் உன் முயற்சிய விடாம போராடறே பாரு.. எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமையா இருக்கும்.

இன்னைக்கு எங்க எல்லார் மனசிலேம் இருக்கிற சந்தோஷம் என்னைக்கும் நிலைச்சிருக்கணும். நீ என்னைக்கும் தீர்க்காயுசோட சந்தோஷமா அண்ணி, பசங்க கூட வாழணும். ஹாப்பி பர்த்டேடா ரஜி..

பி.கு – சித்தி பொண்ணு உன்னய விஷால் மாதிரி இருக்கேன்னு சொன்னதா செய்தி வந்துதே.. சிக்கிட்டேடா சின்னண்ணா..

பி.கு 2 – உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்னு தெரீலடா. ஆனா இப்போ உன் காலர் ஐடி புலி உறுமுது போடலாம்னா அதிலேம் ஒரு சின்ன சிக்கல். வீடியோ க்ளிப்பிங் போட ஹெல்ப் பண்ண வேண்டிய ஃப்ரெண்டு கொஞ்சம் பிசியா இருக்கு.. அது வந்ததும் போடறேன். ஓக்கேவா.. கோச்சுக்காத..

22 நல்லவங்க படிச்சாங்களாம்:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பதிவு. உங்கள் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

பதிவு நிறைய ஈரமா இருக்கு அக்கா... சின்ன அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!

கார்க்கிபவா said...

அண்ணனுக்கு வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் பிரதர்...!

சுசி said...

நன்றி ஜமால்.

¤¤¤¤¤

நன்றி அண்ணாமலையான்.

¤¤¤¤¤

நன்றி அக்கா.

சுசி said...

நன்றி தமிழ் பிரியன். பாசம்ல..

¤¤¤¤¤

நன்றி குரு.

¤¤¤¤¤

நன்றி உ.பி.

பா.ராஜாராம் said...

ரொம்ப நெகிழ்வான பதிவு சுசி.

கடா முடா வென தொடங்கி சைலென்ட் ஆர்ட் மூவியாய் முடிச்சிட்டீங்க.

பேசக் கூட தோணலை.கை தட்ட வேண்டிய இடத்திலும்.

கலை!

Anonymous said...

நெகிழ்வான பதிவு சுசி. அண்ணனுக்கு என் வாழ்த்துக்களைச்சொல்லுங்க

புலவன் புலிகேசி said...

//அம்மா மட்டும் பாக்கலேன்னா.. பிள்ளையாரே.. நான் கொலைகாரி ஆயிருப்பேன். நீ //

என்னா வில்லத்தணம். அப்பக்கூட என் அண்ணனை இழந்திருப்பேன்னு சொல்லாம கொலைகாரி ஆயிருப்பேன்னு....

இப்புடி ஒரு பாசமுள்ள அண்ணன கொலப் பண்ண பாத்துருக்கீங்களே...

அண்ணனுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பித்தனின் வாக்கு said...

நல்ல மலரும் நினைவுகள். சுசிக்கு கொலை பண்ணும் அளவு கோபம் வருமா? நினைத்தாலே வயத்தை பிசையுது. பார்த்தும்மா நாங்க எல்லாம் பாவம். சைடுல வளர்கின்றேன். நீ மட்டும் இல்லை. கல்யாணம் ஆன எல்லாரும் அப்படித்தான் என நினைக்கின்றேன். நன்றி சுசி.

Unknown said...

அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,

R.Gopi said...

மலரும் நினைவுகள் பிரமாதம்... பழையதை அசை போடுதலே ஒரு தனி சுகம் தானே...

நல்லா யோசிச்சு நிறைய எழுதி இருக்கீங்க...

அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்....

அப்படியே உங்களுக்கும் தான் சுசி... இவ்ளோ அழகா எழுதினதுக்கு....

கோபிநாத் said...

அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)))

கோபிநாத் said...

இப்படி எல்லாம் பதிவு போட்டு கொசுவத்தியை சுத்தவச்சி...கண்ணு தண்ணி வரவச்சதுக்கு என்னோட நெகிழ்ச்சியான கண்டனங்கள் ;)))

\\நம்மளோட கடைசி ஃபைட் நினைவிருக்கா? நீ கத்தி எடுத்துட்டு வந்து உன்ன ஒரே குத்துல கொன்னுடுவேண்டி.. அம்மாவுக்காக பார்க்கறேன்.. புஸ்ஸூ.. புஸ்ஸூ.. (இது கோவத்தில நீ விட்ட மூச்சு) முடிஞ்சா குத்துடா பார்ப்போம். நீ என் அண்ணனே இல்ல அப்புறம் எதுக்கு அம்மாவுக்காக பாக்கறே. குத்து.. புஸ்ஸ்ஸூ.. புஸ்ஸ்ஸூ (இது அத விட கோவத்தில கொஞ்சம் பயத்தோட நான் விட்ட மூச்சு) அப்போ கரெக்டா அட்டன்ஸ போட்டாய்ங்க நம்ம நாட்டாமை அக்கா. \\

அய்யோ..அய்யோ...என்ன கொடுமை இது...இதே புஸ்ஸ்ஸூ கதை ஏன்கிட்டையும் இருக்கு...

உங்க இடத்துல நான் - அண்ணனுக்கு பதில் அக்கா..பஞ்சாயத்துக்கு அம்மா...அப்புறம் கத்தி இல்லை கத்திரிக்கோல் ;))))

\\என் கல்யாணத்துக்கு நீயும், அக்கா கல்யாணத்துக்கு அண்ணனும் மாப்பிள்ளைத் தோழனா இருக்கணும்கிர எங்க ஆசை எனக்கு மட்டும் நிறைவேறலேன்னாலும்\\

\\உனக்கு எதாவது ஒரு நல்லது நடக்கணும்னா ரொம்ப அலைய வச்சு, கடைசீல நடக்காதோன்னு நினைக்கும்போது தான் அது கை கூடும். இதில உனக்கு வருத்தம் இருந்தாலும் உன் முயற்சிய விடாம போராடறே பாரு.. எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமையா இருக்கும்.\\

என்னை மாதிரியே இருக்காரு அண்ணாச்சி ;))

thiyaa said...

உங்களின் பாசமான பதிவுக்கும் உங்கள் சின்னன்னாவுக்கும் வாழ்த்துகள்

Unknown said...

எத்தன கொல முயற்சி...,

அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

Chitra said...

சின்ன அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதை அழகாய் சொல்லிய தங்கைக்கும் வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

சுவாரசியமான அண்ணன் தங்கைகள். பாசம் தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Anonymous said...

"Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn "

Yaro oru nanbar neram kalam thirma commedy panikitu erukar.....

athu erukatum vidunga akka..

first time i am reading your blog..

ethanala thiryama pochey...sari sari ellam nalthukuthan...

akka munnapola erukamatengalaey..

enaku akka ellaey endra kurai unga
blog padithathum neriveritu....

Supera erunthchukka...(sorry tamila enaku avlo vegama type panavarala..)next time try panren..

China annavuku matum ellai ungalku enda piranthanall valthukal..

Valga Valamudan..
Eppadiku
V.v.s.Groups..
Athanga Varuthapadtha Valiba Sangam..

நினைவுகளுடன் -நிகே- said...

வாழ்த்துக்கள்...