சிட்டுக்குருவியாய் சிறகடித்துப் பறந்தாள் பதினைந்து வயது வரை ஒரு சின்னப் பெண். முதல் காதல் கை கோர்க்க ஊரைச் சுற்றியது அந்த அழகு தேவதை பதினெட்டு வயது வரை. பெற்றவரால் நடாத்தப்பட்ட கட்டாயக் கல்யாணம். கைவிரலில் மோதிரத்தோடு கால்களிலும் சங்கிலியை மாட்டினான் கணவன். அடுத்தடுத்து இரண்டு பிள்ளைச் செல்வங்கள், ஆணொன்றும் பெண்ணொன்றுமாய். சிறிதளவேனும் வாழ்வில் பிடிப்பு வந்ததே அதன்பின்தான். ஆனாலும் சித்ரவதைகள் குறையவில்லை. பொறுத்துக் கொள்ள முடியாத எல்லையை அடைந்த பின்னர் தோழியின் உதவியோடு நாட்டை விட்டே வெளியேறினாள்.
அயராத உழைப்பு + தன்னம்பிக்கையால் பிள்ளைகளுக்கு நல்ல நிலையைக் கொடுத்து தனக்கும் ஒரு துணையை தேடிக் கொண்டாள். துணைக்கு வந்தவன் தொல்லை செய்ய ஆரம்பித்தான் சுயநலமாய். அவ்வப்போது பத்திரங்கள் நீட்டப்பட்டன, முடிவு செய் நானா பிள்ளைகளா என்ற கேள்வியுடன். ஒவொரு தடவையும் ஒப்பமிட்டு முகத்தில் எறிவாள். மிரட்டமட்டுமே தெரிந்தவன் மறுபடி துணையாவான்.
மகனுக்கு வந்தது தொல்லை மருமகள் வடிவில். அவர்கள் சண்டை நாட்களில் பேரன் பாட்டி வீட்டில் தூங்க ஆரம்பித்தான். பிள்ளை என்ற நூலால் கட்டப்பட்ட வாழ்க்கை தொடர்கிறது அவர்களிடையே. அறுந்து போகாமல் முடிச்சை இறுக்கிப் போடும் முழு முயற்சியில் இவள்.
இவளைப் போலவே தைரியசாலி மகள் என்ற இவளின் பெருமிதத்துக்கு இடியாய் அழுதபடி வந்தாள் மகள். எத்தனை சித்ரவதைகள் அனுபவித்திருக்கின்றது அந்த இருபத்து மூன்று வயதுப் பெண். எட்டு வயது முதல் ஒன்றாகப் படித்தவர்கள் வாழ்விலும் இணைந்து கொண்டதற்கு அந்த மனிதமிருகம் கொடுத்த பரிசுகள் அத்தனையும். பிள்ளைகளுக்காக கொலையும் செய்ய தயங்கமாட்டாள் இவளென்று புரியாத அந்த மிருகம் கொலை மிரட்டல் விடுகிறது இவளுக்கே.
*************************************************
இது என்னோட ஒரு தோழியோட நிலை. அவங்க பேச்சுல எப்பவும் இருக்கிறது பிள்ளைங்க, பேரப் பிள்ளைங்கதான். அந்த மிருகம் தவிர அத்தனை பேரையும் நான் சந்திச்சிருக்கேன். ஒரு தடவை ஆபீஸ் பக்கத்தில இருக்கிற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல கண்ணில, கன்னத்தில வீக்கத்தோட அவங்க மகளை பாத்தேன். நான் என்னன்னு கேக்காமலே பல்வலின்னு சொன்னா. அவ்ளோ குட்டியா இருப்பாங்க. எப்டி மனசு வந்துது அந்த ராட்சஷனுக்கு. மனசால,உடலால எவ்ளவு சித்ரவதைகள அனுபவிச்சிருக்கா. இத்தனை வருஷமா ஒரு வார்த்தை கூட ஏன் சொல்லலைன்னு கேட்டத்துக்கு நீங்க அனுபவிக்கிறது போதும்மா. நானும் குடுக்க வேண்டாம்னு பாத்தேன். ஆனா இதுக்கு மேல என்னால முடியலம்மான்னு இவங்கள கட்டிக்கிட்டு அவ அழுதப்போ எப்டி வலிச்சிருக்கும் இவங்களுக்கு.. இந்த அம்மாவோட கண்ணீருக்கு கண்டிப்பா அந்த மிருகம் பதில் சொல்லி ஆகணும்ங்க.
எங்க ஆபீஸ்லையே ரொம்பத் தைரியமான பொண்ணுன்னு பேரெடுத்தவங்க பலசமயம் என்னால இதுக்கு மேல முடியலன்னு சொல்லி அழும்போது.. தனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குதுன்னு கேக்கும்போது.. அவ மனசுக்கு ஆறுதலா பேசி, அழுகையும் சில சமயம் மனச இலகுவாக்கும்கிரதால கொஞ்சமா அழ விட்டு, அவ கண்ணீரைத் துடைச்சு, சிரிக்க வச்சுட்டுதான் அவ ரூம விட்டு மறுபடி என் இடத்துக்கு போவேன். இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றேம்பா.. ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி இறுக்கி அணைச்சுக்குவா. கண்ணீரால கலைஞ்சு போன மேக்கப்ப சரி செஞ்சு, லிப்ஸ்டிக்கோட சிரிப்பையும் சேத்து பூசிக்கிட்டு அடுத்த நொடி அவ வேலை பாக்க ஆரம்பிக்கும்போது இவதானா கொஞ்சம் முன்னாடி அழுதான்னு மலைப்பா இருக்கும்.
அவ கிட்ட அவளோட மனத்திடம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே. என் உறவுகள நினைச்சு நான் தவிச்சப்போல்லாம் எனக்கு அவ்ளோ ஆறுதலும், நம்பிக்கையும் குடுத்தா. அவ பேரன்கள் ரெண்டு பேரும் என்கூட ஒட்டிக்கிட்டதில ரொம்ப சந்தோஷப்படுவா. மூணு வருஷம் முன்னாடி அவங்கள விட்டுப் போன அம்மா செஞ்சு குடுத்த ஷால் ஒண்ண அவங்க ஞாபகமா எனக்கு பிரசன்ட் பண்ணி இருக்கா.
ஒண்ணு மட்டும் சொல்றேன் சுசி, என் பொண்ண அவன் எதுனா பண்ணினான்னா அவன கொல்லவும் தயங்கமாட்டேன்னு சொல்லும்போது அவ கண்கள்ல கவலையையும் மீறி அப்டி ஒரு திடம் தெரியும். அப்டீல்லாம் ஆகாது, அவன் அந்தளவுக்கு போகமாட்டான்னு சொல்லி பேச்ச மாத்துவேன். அவன் இவங்களையும் நேர்லயும், ஃபோன்லையும் நிறைய தடவை மிரட்டி இருக்கான். என்னதான் போலீஸ், சட்டம்னு எல்லாம் பக்காவா இருந்தாலும் உயிருக்கு ஒண்ணு ஆனத்துக்கு அப்புறம் எதுவும் தேவை இல்லையே. அந்த அன்பான அம்மா நிம்மதியா இருக்கணும்னா பசங்க வாழ்க்கை சரி ஆகணும். பொண்ணோட மனசு சரியாகி எல்லா துன்பங்கள்ள இருந்தும் வெளிய வரணும். அதுக்காக எப்பவும் கடவுள வேண்டிக்குவேன்.
ஒருத்தங்களோட சந்தோஷத்தில இல்ல, துக்கத்தில பங்கெடுத்திக்கிறது தான் ரொம்ப பெரிய விஷயம்னு என் உயிர் நட்புகிட்ட சொல்வேங்க. குட்டியா ஒரு அணைப்பு, கையில், தோளில் சின்னதாய் ஓர் அழுத்தம், முதுகில் ஒரு வருடல், ஆறுதலாய் ரெண்டு வார்த்தை, புரிதலாய் ஒரு பார்வை.. இப்டி எத்தனையோ விதத்தில அடுத்தவங்க துக்கத்தில நாமளும் பங்கெடுத்துக்கலாம்ங்க. செஞ்சு பாருங்க, அனுபவிச்சுப் பாருங்க.. நான் சொன்னது சரிதான்னு நீங்களும் சொல்வீங்க..
வரட்டுங்களா..
24 நல்லவங்க படிச்சாங்களாம்:
//ஒருத்தங்களோட சந்தோஷத்தில இல்ல, துக்கத்தில பங்கெடுத்திக்கிறது தான் ரொம்ப பெரிய விஷயம்னு என் உயிர் நட்புகிட்ட சொல்வேங்க. குட்டியா ஒரு அணைப்பு, கையில், தோளில் சின்னதாய் ஓர் அழுத்தம், முதுகில் ஒரு வருடல், ஆறுதலாய் ரெண்டு வார்த்தை, புரிதலாய் ஒரு பார்வை.. இப்டி எத்தனையோ விதத்தில அடுத்தவங்க துக்கத்தில நாமளும் பங்கெடுத்துக்கலாம்ங்க. செஞ்சு பாருங்க, அனுபவிச்சுப் பாருங்க.. நான் சொன்னது சரிதான்னு நீங்களும் சொல்வீங்க..
வரட்டுங்களா..//
இது என்னவோ உண்மைதானுங்கக்கா..!!
நல்லா சொல்லி இருக்கீங்கக்கா..எழுத்து நடை..எதோ பக்கத்தில் ஒருவர் பேசிக்கிட்டு இருக்கும் எஃபெக்டை (விளைவை?!) தருது..
பாலோவர் ஆகிறேன்..இன்று முதல்..!!
வாழ்த்துக்கள்!!
// மிரட்டமட்டுமே தெரிந்தவன் மறுபடி துணையாவான். //
மனித வடிவில் மிருகம்
//இது என்னோட ஒரு தோழியோட நிலை. //
ஓஹ் அவ்ளோ பெரியவங்க உங்களுக்கு தோழியா?
//பேச்சுல எப்பவும் இருக்கிறது பிள்ளைங்க, பேரப் பிள்ளைங்கதான்.//
பெத்த பாசம்
//மிருகம் தவிர அத்தனை பேரையும் நான் சந்திச்சிருக்கேன்..//
அவனையும் பார்த்திருந்தா பாத்ததுமே கொன்ருப்பீங்கல்ல அதான் மிஸ் ஆயிட்டே இருக்கான் அவ்...
//இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றேம்பா.. ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி இறுக்கி அணைச்சுக்குவா. //
அட அட அடா
//ருத்தங்களோட சந்தோஷத்தில இல்ல, துக்கத்தில பங்கெடுத்திக்கிறது தான் ரொம்ப பெரிய விஷயம்//
கண்டிப்பா ரொம்ப நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்
அக்கா நானும் கடவுளை வேண்டிக்கிறேன். அந்த அம்மாவுக்கு மனநிம்மதி கிடைக்க.
கடைசி பத்தி கூடவே இருந்து சொல்ல மாதிரி இருக்கு. !!!
ரொம்ப நெகிழ்வான பகிர்வு சுசி.
அந்த குடும்பத்துக்கு நிம்மதி வரட்டுமுன்னு எல்லோருமா நினைசிக்கிறலாம்.கூட்டு பிராத்தனை மாதிரி.
ஜாலியாவே பேசி உங்களை பார்த்துட்டனா?மனசு கனத்துதான் போறேன் இந்த முறை..
//
ஜாலியாவே பேசி உங்களை பார்த்துட்டனா?மனசு கனத்துதான் போறேன் இந்த முறை.//
ம்ம்.. அபப்டித்தான் இருக்கு.
//ஒருத்தங்களோட சந்தோஷத்தில இல்ல, துக்கத்தில பங்கெடுத்திக்கிறது தான் ரொம்ப பெரிய விஷயம்//
உண்மைதான்,சந்தோஷத்தை விட துக்கத்தில் பங்குகொள்வதுதான் உண்மையான நட்பு
//இப்டி எத்தனையோ விதத்தில அடுத்தவங்க துக்கத்தில நாமளும் பங்கெடுத்துக்கலாம்ங்க..//
இதுவேதான் சுசி நானும் நினைக்கிறது. உங்கள் தோழியின் வாழ்வில் தொல்லைகள் மறைந்து நிம்மதி நிலவ என் பிரார்த்தனைகளும்.
மனம் முழுவதும் கனம்!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கன். தொடர்ந்து வாங்க. :))
*******
அவன இல்ல உபி, வேற ஒருத்தரைத்தான் பாத்ததுமே கொல்லப் போறேன் ;)) அவங்கள பாத்தா வயசு சொல்லவே முடியாது. அவங்களுக்கு நான் வச்சிருக்கிற பெயர் குள்ள நமீதா. அதோட நட்புக்கு ஏதுப்பா வயசு. இப்போ நானெல்லாம் உங்க தோழியா இல்லையா? வசந்த்... இருக்கீங்களா? தப்பான முடிவெல்லாம் எடுக்கப் படாது. ஓகே.
*******
வேண்டிக்குங்க கோபி.. கூடவே இருந்து கொட்டு வச்சுக்கிட்டே.. ன்னு
எழுதாம விட்டீங்களே.
டாங்க்ஸ்சுப்பா :)
பிரார்த்தனைக்கு நன்றி ராஜாராம். இதுக்காகத்தான் நான் இத எழுதினதே. அது.. அவ கண்ணீர் கண்கள் நினைவில இருந்ததால இப்டித்தான் எழுத முடிஞ்சுது. சாரி.
*******
ம்ம்.. அப்டித்தான் இருக்கா? நிஜமாத்தான் சொல்றீங்களா கார்க்கி??
*******
அதேதான் சொல்லரசன்.
ரொம்ப நன்றி அக்கா. நிச்சயம் உங்க பிரார்த்தனை அவங்களுக்கு உதவும்.
*******
அவங்களுக்கு நிம்மதி கிடைக்கணும்னு வேண்டிக்குங்க. கனம் கலையும் கலை.
தீதறுந்து நன்றே விளையட்டும்
ஈரவிழி உப்புநீர் காயட்டும்
மாதவங்கள் செய்து பெற்றப் பெண்
நோக பெற்ற துயர் மாறட்டும் நின்ற
இடத்தில் இமை மூடி வாழ்த்துஙகள்
மட நெஞ்சு மாற ...பிரார்த்திக்க தெய்வம் இல்லா உலகில்
மனமார்ந்த நன்றிகள் நேசமித்திரன்.
எவ் விதத்திலாவது அவங்களுக்கு நன்மை நடக்கட்டும்.
அவங்களுக்கு சீக்கிரமே நலம் விளைய ப்ரார்த்திக்கிறேன் சுசி. படிக்கவே கஷ்டமா இருக்கு
நல்லாயிருக்குங்க கடைசிப் பத்தி அருமையாக இருக்கு
வாழ்த்துகள்
பிரார்த்தனைக்கு நன்றி அம்மணி.
*******
நன்றி தியா.
நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.
//இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றேம்பா.. ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி இறுக்கி அணைச்சுக்குவா. கண்ணீரால கலைஞ்சு போன மேக்கப்ப சரி செஞ்சு, லிப்ஸ்டிக்கோட சிரிப்பையும் சேத்து பூசிக்கிட்டு அடுத்த நொடி அவ வேலை பாக்க ஆரம்பிக்கும்போது இவதானா கொஞ்சம் முன்னாடி அழுதான்னு மலைப்பா இருக்கும்.//
உங்களுக்கு என்னோட சல்யூட்...அது போன்ற தோழிகள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்..அவர்கள் சினம் கொண்டெழுந்தால் அது போன்ற ஆண்கள் சின்னாபின்னமாகிப் போவார்கள்...
மனசு வலிக்கிறது. நல்ல பதிவு
முதல் வருகைக்கு நன்றி நிகே.. தாராளமா.. வாங்க.
*******
முதல் வருகைக்கு நன்றி புலவரே. சரியா சொன்னீங்க. உங்களுக்கு என் சல்யூட்.
*******
முதல் வருகைக்கு நன்றி மோகன்குமார். வலிதான்..நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதால கொஞ்சம் பரவால்லாம இருக்கு எனக்கு.
நல்ல கதை மனம்தான் கனக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள் ..
வாழ்த்துக்கள் .....
even my mom is very good of mine.. nice words..
எல்லாம் சரியாகிடும் சுசி. அடுத்தவர்களுக்கு ஆறுதலாய் இருப்பதை விட சிறந்த வரமெது...
இன்னமும் இதுபோல பெண்களுக்கு எதிராய் கொடுமை புரியும் மிருகங்கள் இருக்கின்றார்கள் என என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மிகவும் வலி தரும் கட்டுரை. யாரைக் குறை கூறுவது என்று தெரியவில்லை. அந்த மிருகத்தைப் பிடித்து அனுஅனுவாய் சித்தரவதை செய்யவேண்டும். அப்போதுதான் அடியின் வலி தெரியும். என்ன சொல்வது என்று தெரியவில்லை.
Post a Comment