Pages

  • RSS

29 November, 2009

அடிப்பாவி....

நவம்பர் மாதம் வந்தாலே மனதில் ஒரு பாரம் தானாக வந்து அமர்ந்து விடும். இம் முறை வேறு விதமாக.

உங்கள் தியாகத்துக்கு ஈடாக
ஏதேனும் வார்த்தைகள் கிடைக்குமென்றால்
அவற்றால்
உங்கள் தியாகத்தை விபரிப்பேன்
மாவீரர்களே....

கார்த்திகை 27.....வழக்கம்போல் இல்லாமல் இம் முறை வீட்டிலேயே சரியாக மாலை ஆறு மணிக்கு இது வரை ஈழ மண்ணில் உயிர் நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் ஒற்றை மெழுகுவர்த்தியை ஏற்றி அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து கொண்டோம். இனிமேலாவது அங்கே சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று மனதார வேண்டிக் கொள்ளவும்  தவறவில்லை. முட்டி மோதும் எண்ண அலைகளிலிருந்தும்,  அவை தரும் வலிகளிலிருந்தும் தப்பிக்க முடியாமல் நான். என்னை தேற்றுவதற்காக தன்னை காட்டிக் கொள்ளாத என் கண்ணாளன். அவர் வேலைக்கு புறப்பட்ட போது என் தைரியத்தையும் கூடவே கொண்டு போய் விட்டதாய் உணர்ந்தேன். பிள்ளைகளால் சிறிது நேரம் சிந்தனை திசை மாற்றப்பட்டது. உடைந்து போய் விடாமல் இருப்பதற்காக யாருடனும்  பேசப் பிடிக்கவில்லை. உயிர் நட்பைத் தவிர.

********************************************************************************

மறுபடியும் இங்க வெள்ளமுங்க. கண்ணன் கூட எல்லாம் சரி ஆனத்துக்கு அப்புறமும் வெள்ளத்துக்கு முழுக் காரணம் இயற்கை தான். என் பர்த்டேவுக்கு முதல் முறையா எனக்கு ஒரு கண்பானை கிஃப்டா வேணும்னு கேட்டிருந்தேன். அதுவும் பர்த்டேக்கு ரெண்டு வாரம் முன்னாடியே கேட்டாச்சு. இந்த வாரம்தான் கிடைச்சுது. ரெம்ப நாள் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கிட்டு சுத்துறது பாக்கிற அவருக்கு மட்டுமில்லாம எனக்கும் கஷ்டமா இருந்தாலும் விடல நான்.  கடசீல மறந்துட்டாரோங்கிற முடிவுக்கு நான் வந்தப்போ குடுத்தார். இத்தனை நாள் கழிச்சா குடுப்பாங்க. "நானே போய் வாங்கிக்க தெரியாம இல்ல. எப்பவும் என்கூட இருக்கப் போறது. என் கண்ணாளன் ப்ரெசென்ட் பண்ணினதுன்னு கேக்குறவங்களுக்கு 'பெருமையா' சொல்லணும் இல்ல. அதான் உங்ககிட்ட கேட்டேன்"னேன். சொன்ன விதத்தில சிரிச்சாலும்  பாயிண்ட புரிஞ்சு கிட்டார். இதுவரை எனக்கு இன்ன  கிஃப்ட்தான்  வேணும்னு கேக்காத நான் அதிசயமா கேட்டதுனால பெஸ்டா குடுக்கணும்னு தேடி அலைஞ்சாராம் (?!)

*******************************************************************************

செவ்வாய் கிழமை ஆபீசுக்கு  நிமிஷத்துக்கு ஒரு ஃபோன் பண்ணி பொண்ணும் பையனும் மாறி மாறி  எப்போ வீட்டுக்கு வருவீங்கம்மான்னு கேட்டுட்டு இருந்தாங்க. கராஜ்ல கார விட்டதும் அப்டியே என்ன மடக்கி மூணாவது வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. குனியச் சொல்லி கண்ண வேற மூடியாச்சு. அங்க போய் பாத்தா அவங்க வீட்டு பசங்க கைல ஒரு குட்டி முயல். பிரவுன் கலர்ல. பேர் அமாண்டுஸ். அவ்ளோ ஸ்வீட்டா... என்னக் கேக்கணுமா? உடனவே ஃப்ரென்ட் ஆய்ட்டேன். புஸ்ஸு புஸ்ஸுன்னு கழுத்துக்குள்ள மூச்சு விட்டுக் கிட்டே என் தோள்ள படுத்திருப்பார். ஒவொரு தடவையும் கூட்டுக்குள்ள விடும்போது ஏனோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். பசங்க தங்களுக்கும் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. அப்பாவுக்கு அலர்ஜிம்மான்னு சொன்னதும் அப்பாவுக்குத்தானே எங்களுக்கு இல்லையேன்னு சொன்ன பொண்ணு, அவ கேட்டத்துக்காக அமாண்டுஸ் கூட விளையாடின அப்பா நாள் பூரா நச்சு நச்சுன்னு தும்மலோட அவஸ்தைப் பட்டத பாத்ததும் இப்போ அவர வீட்டுக்கு கொண்டு வரத நிறுத்திட்டா. இப்டியே எல்லா விஷயங்களையும் பசங்க புரிஞ்சு கிட்டாங்கன்னா பெத்தவங்களுக்கு எவ்ளோ நல்லா இருக்கும்.... ஆனா வீட்டுக்குள்ளே ஒரு ஜீவன கூட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருக்கிறதா... என்னால முடியாதுப்பா.

********************************************************************************

கஸின் கூட ஃபோன்ல பேசிட்டிருந்தப்போ நீ பாதி நான் பாதி கண்ணா... பாட்டு கேட்டுது அவ வீட்டு ரேடியோல. ஹேய்... சூப்பர் பாட்டுடி. கேட்டு ரொம்ப நாளாச்சுன்னேன். ஏன்னு கேட்டா. இல்ல.. இப்டியான பாட்டுகள கேக்கும்போது பழைய காதல்களோட ஃபீலிங்க்ஸா போய்டுது. அதான்னேன். நீங்க வேற அந்த ஃபீலிங்க்ஸ்லாம் போய்டக் கூடாதேன்னுதான் நான் கேக்குறதேன்னா. அப்போ நான் அவளுக்கு சொன்னத இத படிச்சத்துக்கு அப்புறம் அவ எனக்கு சொல்லப் போறா.

அது என்னன்னு தெரிஞ்சிக்க உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன். ஒண்ணு நீங்க மறுபடி தலைப்ப படிக்கணும்... டூவு நீங்க விவெல் சோப் ஆட் பாக்கணும். இதில்லாமலே நாங்க கண்டு பிடிச்சிட்டோமேன்னு  பொய்லாம்  பேசப் படாது. ஓக்கே...
வரட்டுங்களா....

41 நல்லவங்க படிச்சாங்களாம்:

Thamiz Priyan said...

கண்பானையா? அது எதுக்கு?..

சுசி said...

அதாங்க தமிழ்பிரியன்... ஐபாட்... ஹிஹிஹி.... மொழி பெயர்க்க ட்ரை பண்ணினேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஐ பாட்க்கு கண்பானைனு மொழிவிளக்கம் கண்டறிந்த புலவர் சிகாமணி சுசி வாழ்க வளர்க நின் தமிழறிவு..அவ்வ்வ்வ்..

ப்ரியமுடன் வசந்த் said...

அமாண்டுஸ் புதுசா இருக்கே

மண்டூஸ்ன்னுதான் கேள்வியும் திட்டும் பட்டிருக்கேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

//இப்டியான பாட்டுகள கேக்கும்போது பழைய காதல்களோட ஃபீலிங்க்ஸா போய்டுது. அதான்னேன்.//

ஒஹ்ஹொ..

ப்ரியமுடன் வசந்த் said...

//அந்த ஃபீலிங்க்ஸ்லாம் போய்டக் கூடாதேன்னுதான் நான் கேக்குறதேன்னா//

ம்ம் நல்ல ஃப்ரண்டுதான்

Thamiz Priyan said...

\\\சுசி said...

அதாங்க தமிழ்பிரியன்... ஐபாட்... ஹிஹிஹி.... மொழி பெயர்க்க ட்ரை பண்ணினேன். \\\
யக்கா.. முடியல... அவ்வ்வ்வ்வ்வ்

சுசி said...

ரொம்ப நன்றி வசந்த்... நீங்க அழுதுக்கிட்டே குடுத்தாலும் பட்டத்த ஏத்துப்போம்ல...

புது வசந்து சூப்பரா இருக்கீங்களே....

//மண்டூஸ்ன்னுதான் கேள்வியும் திட்டும் பட்டிருக்கேன்..//
அது சரி...

இது நார்வேக்காரன்களோட முயல்குட்டி. அவங்க அமாண்டுஸ்னு வச்சிருக்காங்க. நம்ம முயல்னா உங்க ஞாபகமா மண்டூஸ்னு வைக்கலாம் :))))

சுசி said...

அழுவாதீங்க தமிழ்பிரியன்...

அக்காவோட அறிவ பாத்து ஆனந்த கண்ணீர்ல வரணும்....

சுசி said...

எச்சரிக்கை!!!

கண்பானைன்னு கண்ணாளன் கிட்ட கேட்டா அவர் எப்டி புரிஞ்சுப்பார்னு யாராவது கமன்ட்ல போட்டீங்க.. உச்சி மண்டேல கொட்டி வச்சுடுவேன்... அவர்கிட்ட ஒழுங்கா 'ஐபாட்'னுதான் கேட்டேன்.

ஓக்கேவா.

பா.ராஜாராம் said...

நெகிழ்வாய் தொடங்கி,கல கலப்பாய் நிறைவு செய்திருக்கிறீர்கள் சுசி.எதை தொட்டாலும் மிளிரும் எழுத்து."சும்மா"அடிச்சு பின்றீங்க!

சுசி said...

ரொம்ப நன்றி ராஜாராம்.

நாளைக்கு அமாண்டுஸ் கூட விளையாட போம்போது அவங்க வீட்டு காலிங் பெல் பக்கம் என்ன போக விடாம பாத்துக்கோ பிள்ளையாரப்பா....

Anonymous said...

//அங்க போய் பாத்தா அவங்க வீட்டு பசங்க கைல ஒரு குட்டி முயல். //

வீட்டுக்குள்ள வச்சா ஒரு வாசனை வேற வரும்.

//ஸின் கூட ஃபோன்ல பேசிட்டிருந்தப்போ நீ பாதி நான் பாதி கண்ணா... பாட்டு கேட்டுது அவ வீட்டு ரேடியோல//

சூப்பர் பாட்டு. எனக்கும் பிடிக்கும்.

பித்தனின் வாக்கு said...

// அதாங்க தமிழ்பிரியன்... ஐபாட்... ஹிஹிஹி.... மொழி பெயர்க்க ட்ரை பண்ணினேன். //
இப்படி எல்லாம் எங்களை பயமுறுத்தக் கூடாது.

// இனிமேலாவது அங்கே சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று மனதார வேண்டிக் கொள்ளவும் தவறவில்லை //
என்னுடைய விருப்பமும் பிரார்த்தனையும் அதுவே.

// எப்பவும் என்கூட இருக்கப் போறது. என் கண்ணாளன் ப்ரெசென்ட் பண்ணினதுன்னு கேக்குறவங்களுக்கு 'பெருமையா' சொல்லணும் இல்ல. அதான் உங்ககிட்ட கேட்டேன்"னேன். //
ஜ இப்படிக்கு கூட ஜஸ் வைக்கலாமா?
.//... ஆனா வீட்டுக்குள்ளே ஒரு ஜீவன கூட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருக்கிறதா... என்னால முடியாதுப்பா. //
நல்ல விசயம்.

// கேக்கும்போது பழைய காதல்களோட ஃபீலிங்க்ஸா போய்டுது. அதான்னேன் //
அது எப்படி காதல் பழசாகும், ஒன்று மரணிக்கும், அல்லது புதிய பாதையில் நடைபோடும். பழசு ஆகாது. பழைய நினைவுகளுடன் எனபது பொறுத்தமான ஒன்னு. நன்றி சுசி. பழைய காதல் நினைவுகளுடன் எனறு போடவும். பழைய கதல்களோட என்றால் என்னமே நிறைய காதல்கள் இருந்த அர்த்தம் வரும்.

பித்தனின் வாக்கு said...

ஆகா அடம்பிடித்து ஜபாட் வாங்கியாச்சா. நல்லது.

ராமலக்ஷ்மி said...

//இப்போ அவர வீட்டுக்கு கொண்டு வரத நிறுத்திட்டா.//

நல்ல புள்ளைங்க. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

கண்பானையில் பொங்கி வழியும் இசையை இன்பமாய் அனுபவிக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள்:)!

கலையரசன் said...

//கண்பானை கிஃப்டா வேணும்னு கேட்டிருந்தேன்//
அவசரத்துல படிக்கும்போது கள்பாணைன்னு படிச்சிட்டேன்.. சாரியக்கா!!

ஐபாட்ல என்ன வாங்கி குடுத்தாரு மாமா..?
ஐ-டச்சா?, கிளாசிக்கா?, நானோவா?, ஷஃப்புல்லா?

கலையரசன் said...

//இப்டியான பாட்டுகள கேக்கும்போது பழைய காதல்களோட ஃபீலிங்க்ஸா போய்டுது.//
ஆகும்.. ஆகும்..
என்ன இன்னைக்கு ஃபீலிங்க்ஸ் பிளிருது?

சங்கர் said...

Ipod - கண்பானை

ஆகா, அருமை அருமை, என்னுடைய அகராதியில் இன்னுமொரு முத்து, நன்றி சுசி

வாங்க, நாம எட்டாம் தமிழ்ச்சங்கம் அமைத்து, தமிழ் வளர்க்க ஆள் சேர்க்கலாம்

நீங்க தலைவி, நான்தான் பொருளாளர்,

கார்க்கிபவா said...

முயல் எனக்கும் பிடிக்கும்.. ஆனா தொட மாட்டேன்.. ஆனா வீட்டுல எந்த பிராணிகளை வளர்த்தாலும் பிடிக்காது.

நேசமித்ரன் said...

அப்புடியே இந்த ஜூக் பாக்ஸ் க்கு மொழிபெயர்ப்பும் போட்டுட்டா நல்லாருக்கும் சுசி

:)

கலகலன்னு போகுதுங்க . முயல்குட்டின்னதும் எனக்கு நான் வளர்த்த 34 முயல்குட்டிகளும் நினைவுக்கு வந்தன

சுசி said...

//வீட்டுக்குள்ள வச்சா ஒரு வாசனை வேற வரும். //
கரெக்டு அம்மிணி. இங்க நாய் பூனை வளர்க்கிறவங்க பக்கத்தில வந்தா லைட்டா ஒரு வாசனை வரும் :((

நல்ல வேளை இவங்க வீட்டுக்கு வெளிய கூட்டில விட்டிருக்காங்க.

//சூப்பர் பாட்டு. எனக்கும் பிடிக்கும்.//
அப்டியா... அப்ப நீங்க என் கட்சி... :)))

சுசி said...

//இப்படி எல்லாம் எங்களை பயமுறுத்தக் கூடாது.//
ஹிஹிஹி... இனிமே செய்யல சுதாண்ணா.

//ஜ இப்படிக்கு கூட ஜஸ் வைக்கலாமா?//
என்னது? ஐஸாஆ.... அவ்வவ்.... இது அன்பில சொன்னதுண்ணா.

//நல்ல விசயம். //
ஆமாம்ல.

//அது எப்படி காதல் பழசாகும், ஒன்று மரணிக்கும், அல்லது புதிய பாதையில் நடைபோடும். பழசு ஆகாது. பழைய நினைவுகளுடன் எனபது பொறுத்தமான ஒன்னு. நன்றி சுசி. பழைய காதல் நினைவுகளுடன் எனறு போடவும். பழைய கதல்களோட என்றால் என்னமே நிறைய காதல்கள் இருந்த அர்த்தம் வரும்.//
என்னண்ணா இது... நாங்க சும்மா விளையாட்டுக்கு பேசிக்கிட்டோம்ணா. நீங்க என்னமோல்லாம் எழுதி என்ன பயமுறுத்துறீங்களே... நான் பாவம்.... அவ்வ்வ்வவ்....

சுசி said...

//நல்ல புள்ளைங்க. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்//
நன்றி அக்கா. அடம்பிடிச்சாலும் திடீர்னு இப்டி எதுனா பண்ணி அசத்திடுவா :)))

//கண்பானையில் பொங்கி வழியும் இசையை இன்பமாய் அனுபவிக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள்:)!//
மறுபடி நன்றி அக்கா.

சுசி said...

//அவசரத்துல படிக்கும்போது கள்பாணைன்னு படிச்சிட்டேன்.. சாரியக்கா!!//
இதுக்கு எதுக்கு சாரி கலை. நீங்க அப்டி படிக்கலேன்னாதான் சாரி சொல்லி இருக்கணும் :)))

//ஐபாட்ல என்ன வாங்கி குடுத்தாரு மாமா..?
ஐ-டச்சா?, கிளாசிக்கா?, நானோவா?, ஷஃப்புல்லா?//
டச் பண்ணீட்டாருப்பா...
ஆப்பிள் ஐ-டச்.

//ஃபீலிங்க்ஸ் பிளிருது//
கலை... எப்டிப்பா... சிரிப்புதான் பிளிருது எனக்கு.... பதிவ போட்டும் சிரிக்க வைக்கிறீங்க.. கமண்ட போட்டும் சிரிக்க வைக்கிறீங்க... உங்க பேர்லயும் ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.

சுசி said...

//Ipod//
இப்டி எழுதில்லாம் பாக்க கூடாது சங்கர். நான் சொல்லிப் பாத்துதான் மொழி பெயர்ப்பேன்.இதுக்கு சம்மதம்னா..
//வாங்க, நாம எட்டாம் தமிழ்ச்சங்கம் அமைத்து, தமிழ் வளர்க்க ஆள் சேர்க்கலாம்//
இதுக்கு அக்ரிமென்ட் போட்டுடலாம்.


//நீங்க தலைவி, நான்தான் பொருளாளர்,//
முடியாது முடியாது... நான்தான் ரெண்டும். நீங்க ஆள் சேர்க்கிறவர். அதான் கொ.ப.செ

சுசி said...

//முயல் எனக்கும் பிடிக்கும்.. ஆனா தொட மாட்டேன்.. //
நீங்க என் கண்ணாளன் கட்சி கார்க்கி :)))


//ஆனா வீட்டுல எந்த பிராணிகளை வளர்த்தாலும் பிடிக்காது.//
நீங்க என் எதிர்க் கட்சி கார்க்கி :(((

சுசி said...

//அப்புடியே இந்த ஜூக் பாக்ஸ் க்கு மொழிபெயர்ப்பும் போட்டுட்டா நல்லாருக்கும் சுசி//
போட்டுடலாம் நேசமித்திரன். பாருங்க இதுக்கே சுதாண்ணா பயந்துட்டார். அதான் யோசிக்கிறேன்.

//கலகலன்னு போகுதுங்க//
நன்றீங்க.

//முயல்குட்டின்னதும் எனக்கு நான் வளர்த்த 34 முயல்குட்டிகளும் நினைவுக்கு வந்தன//
அவ்ளோவா... அம்மாடியோவ்... அப்போ பெரிய பண்ணைன்னு சொல்லுங்க. இப்போ என்னாச்சு?

தமிழ் உதயம் said...

உங்கள் தியாகத்துக்கு ஈடாக
ஏதேனும் வார்த்தைகள் கிடைக்குமென்றால்
அவற்றால்
உங்கள் தியாகத்தை விபரிப்பேன்
மாவீரர்களே....

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி தமிழ் உதயம்.

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க

கோபிநாத் said...

ஊரே வந்து கும்மியிருக்கு....ம்ம் இனி நான் என்னாத்த சொல்ல...என்ஜாய் ;)

மறுபடியும் வெள்ளமுங்கன்னு படிச்சதும் இது என்னடா சோதனைக்கு வந்த சோதைனைன்னு நினைச்சுட்டேன்.அப்புறம் தான் யப்பா இது தானான்னு நினைச்சேன். ;)))

;)

சுசி said...

நன்றி நர்சிம்.

(ஹைய்யா....அடுத்த பதிவில எல்லாருக்கும் ஸ்வீட் குடுத்து கொண்டாடணும். குறிப்பு எதுவும் போடாமலே நர்சிம் என் பதிவு படிச்சிட்டாருங்கோவ்... :))))

சுசி said...

//ஊரே வந்து கும்மியிருக்கு....ம்ம் இனி நான் என்னாத்த சொல்ல...//

அக்கா மேல எவளவு பாசம் கோபிக்கு. கிர்ர்ர்ர்.......

//மறுபடியும் வெள்ளமுங்கன்னு படிச்சதும் இது என்னடா சோதனைக்கு வந்த சோதைனைன்னு நினைச்சுட்டேன்.அப்புறம் தான் யப்பா இது தானான்னு நினைச்சேன். ;)))//

இது.. இது... இதுதான் பாசம் :))))

ப்ரியமுடன் வசந்த் said...

http://blogintamil.blogspot.com/2009/12/blog-post.html


நீங்களும் பிப தான் உபி

சுசி said...

அட ஆமாப்பா...

அவ்வ்வ்வவ்.... தாபி இப்டி பண்ணிப்புட்டாங்களே...

நன்றி உபி.

விக்னேஷ்வரி said...

யம்மா, சும்மான்னு இம்மா மேட்டர் போட்டிருக்கீங்களே சுசிக்கா.

சுசி said...

நன்றியோடு பெற்றுக் கொண்டாச்சு தியா...

சுசி said...

ஹை.. யம்மா.. சும்மா.. இம்மா.. சூப்பரேய்.

தங்கச்சி..நாம எவ்ளோ மேட்டர் போட்டாலும் உங்க ரேஞ்சுக்கு வருங்களா....

Unknown said...

ஐ பாட் = ஐ! பாடுது...
இந்த மொழி பெயர்ப்பு எப்படி...

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி பேனாமூடி.

ஐ.. இதுவும் நல்லாத்தான் இருக்கு :))