தலைக்கு மேல இல்ல அதுக்கும் மேல சரியான, செமையான, பயங்கரமான, கடுமையான, இன்னும் பல னவான வேலைங்க. அதான் பொட்டிக்கு + வலையுலகத்துக்கு விடுமுறை விட்டுட்டேன். குடும்பத்துக்கே பர்த்டேஸ் வந்ததால சனிக்கிழமை சின்னதா ஒரு பார்ட்டி வீட்ல. ஒரே கல்லுல நாலு மாங்கா... அதான் ஒரு வாரம் லீவ் போட்டு வேலையில குதிச்சிட்டேன். சாப்பாடு ஆர்டர் பண்ணி எடுத்தோம். வந்தவங்க நலம் கருதி மத்ததெல்லாம் என் தலைமேல.
ரெண்டு கலாச்சாரங்களையும் கலவையா பின்பற்றுறா மாதிரி பட்ஷனங்களையும் நம்மூரு பேசிக் ரெசிப்பிய வச்சு இந்த ஊர்ல கிடைக்கிற சாமான்களை கொண்டு தயார் பண்ணணும். சிலது வெளிநாடு வாழ் பெண்மணிகளோட சுய கண்டுபிடிப்பாவும் இருக்கும். ஆனா தைரியமா சாப்பிடலாம்க. ஸ்வீட்டும் காரமுமா ஏழு அயிட்டம் செஞ்சேன். அதோட ஐசிங் கேக் மூணு.
இதில யார் கண்ணு பட்டுதோ என் லீவுக்கும் ஆப்பு. எங்க டிப்பார்ட்மென்ட்ல புதுசா சேர்ந்த ஒருத்தர தவிர மத்த எல்லாரையும் வைரஸ் காய்ச்சல் தாக்கிட்டதில நான் ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டியதாயிடிச்சு. அதுவரை நீதானே ஜாலியா லீவ்ல இருக்கே செய்துமுடின்னு எந்த ஹெல்ப்புமே செய்யாம விட்டேந்தியா இருந்த மத்த மெம்பர்சுக்கு சனி காலை சரியாவே விடியல. அப்பப்போ என்னை தொல்லை பண்ணிக்கிட்டே ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த மொக்கை சாமிக்கு இனிமே வீட்ல பார்ட்டியே வேணாம்டின்னு சொல்ற அளவுக்கு வேலை. வீட்ட பூரா ஒதுங்க வச்சு மாப் பண்ணினது அவர்தான். பையனுக்கும் பொண்ணுக்கும் கான்டி பாக் ரெடி பண்றது, வெளிய குப்பை போட்டுட்டு வர்றது, ஸ்டோர் ரூம்ல எதுனா எடுத்து குடுக்கிரதுன்னு அவங்களுக்கு ஏத்த வேலை. அம்மா போதும் நாங்க இனிமே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்கிற லெவலுக்கு போய்ட்டாங்க.
மூணு மணிக்கு ஆரம்பிச்ச பார்ட்டி முடிய நைட்டு ஒரு மணியாச்சு. எங்களையும் சேர்த்து மொத்தம் எட்டு குடும்பங்கள். ஒரு ஃபாமிலி நைட் தங்கிரதுன்னும், சிலர நான் டிராப் பண்றதுன்னும் முடிவாச்சு. அதெல்லாம் முடிச்சு நான் தூங்க நாலு மணியாச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லாரும் ஒண்ணா சந்திச்சோம். என்னதான் அலுப்பா இருந்தாலும் கலகலன்னு வீட்ல சத்தம் கேக்கிறா மாதிரியே இருந்திச்சா தூக்கம் வரல.... உடனையே நிறைய வேலை இருக்கு ஹெல்ப் பண்றியான்னு கேட்டப்போ செஞ்சு வை வந்து சாப்டுறேன்னு சொன்ன என் ஃப்ரெண்டோட ஞாபகம் வந்திச்சா... அதுக்கொரு மெயில போட்டுட்டு, ரெண்டு பதிவும் படிச்சேனா தூக்கம் தன்னால வந்திடுச்சு.இனி நான் செஞ்ச கேக் பாருங்க. சாப்பாடு நான் செய்யாததால ஃ போட்டோ எடுக்கல. ஸ்வீட்ஸ் காரம் சாப்ட எடுத்து வைச்சிட்டு டீ செய்றதில நான் பிசி ஆய்ட்டதால ஃபோட்டோ எடுக்க மறந்துட்டேன்.
அப்புறம் என்னங்க. எல்லாரும் கேக் சாப்டுங்க. அடுத்த தடவை ரொம்ப வித்யாசமான ஒரு பதிவோட சந்திக்கிறேன். வரட்டுங்களா....
22 நல்லவங்க படிச்சாங்களாம்:
வந்துட்டோம்ல்ல முதல் ஆளா...இருங்க பதிவை படிச்சிட்டு வரேன் ;))
Sonic,H2o, கரடி பொம்மை இதுல எல்லாத்தில் இருந்தும் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். ;)))
சூப்பரு, அருமை, நல்லாயிருக்கு ;))
ஆமா உங்க ஸ்வீட் எங்க??
கலக்குங்க ;))
மீண்டும் வாழ்த்துக்கள் ;)
ஒரே கல்லில் நாலு மாங்கா நல்லாக் கழிந்ததில் சந்தோஷம் சுசி:)! ஐசிங் கேக் மூணும் அழகு. மூணிலிருந்தும் ஒவ்வொரு துண்டு எடுத்துக் கொண்டேன், நன்றி சுசி:)!
கேக் எல்லாம் வித்தியாசம நல்லா இருக்கு. படத்தைப் பார்த்து சாப்பிட்ட சந்தோசம். கண்ணனுக்கும், கண்ணமாவிற்கும், மாப்பிள்ளைக்கும் எனது வாழ்த்துக்கள்.
அவரின் பேண்ட் சர்ட் அருமை. நல்லா ஹாண்ட்சம்மா இருப்பார்னு நினைக்கின்றேன். சரியா சாப்பாடு போடமாட்டிங்களா தொப்பை இல்லை அவருக்கு(பொறாமை).
நல்ல நாளில் கடவுளின் அனுக்கிரகம் மேலும் கிடைக்க, நிலைக்க வாழ்த்துக்கள்.
பொறாமையா இருக்கு.. எல்லோருக்கும் வாழ்த்துகள்...
ஆமா, இந்த கேக்கெல்லாம் எந்த கடைல வாங்கனீங்க?:))
பதிவும், கேக்கும் நல்லா இருக்கு,
அட்ரஸ் குடுத்தா கேக் பார்சல் அனுப்புவீங்களா?
டாக்டரா இருந்துகிட்டு சுகரை ஏத்திடுவீங்க போலையே!
நீங்க பேசுறதும் சுவீட்டு, குடுத்த கேக்கும் சுவீட்டு..
வாழ்த்துக்கள் மாமா (அ) மச்சான்!!
சொல்லியாச்சு.. சொல்லியாச்சு.. வேர் இஸ் த பார்ட்டி?
vaazththukkaL susi
பெண்களே.. இதுவும் சரிதானே
பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html
நன்றி கோபி. நீங்க ரொம்ப நல்லவர். மறக்காம என் ஸ்வீட்ஸ கேட்டுருக்கீங்க. மத்தவங்க என்ன கஷ்டத்தோட அத சாப்டிருப்பாங்கன்னு பாக்கத்தானே? நல்லாருங்க. எல்லாரும் சாப்பிடுறதில பிசியா இருந்ததில ஃபோட்டோ எடுக்கல :))))
நன்றி அக்கா... மூணும் அன்னிக்கே சாப்டு முடிச்சாச்சு. இப்போ கூட பொண்ணு சண்டை போட்டுட்டு போறா ஒரு பீஸ் கூட மிச்சம் கிடையாதான்னு :)))
நன்றி சுதாண்ணா. சரியா சொன்னீங்க. அவர் ஹாண்ட்சம்தான்:)) நீங்க வேற என்னதான் சாப்பாடு போட்டாலும் எதுனா பண்ணி இளைச்சிடுவார். எனக்கே பொறாமைன்னா பாத்துக்கோங்களேன்.
உங்களுக்கு சரியான வயித்தெரிச்சல் கார்க்கி. அதான் வாங்கினதான்னு கேக்கறீங்க. இல்ல கடைல வாங்கினா மாதிரி ரொம்ப அழகா இருக்குன்னு சொல்றீங்களாப்பா???
முதல் வருகைக்கு நன்றி சங்கர். கேக் தீர்ந்திடுச்சே.. அட்ரஸ குடுங்க புதுசா செஞ்சு பில்லோட அனுப்பறேன்.
கலை ஏற்கனவே என் பர்த்டேக்கு நீங்க எனக்கு விஷ் பண்ணலைன்னு கொலைவெறில இருக்கேன் நான். அதுல இன்னும் டாக்டர வேற விட மாட்டீங்களா? பார்ட்டிதானே? ஒண்ணு இங்க வாங்க. இல்ல அக்கா குடும்பத்துக்கு டிக்கட்ட அனுப்புங்க மாமா, மருமக்களோட வந்து உங்கூர்ல ஜமாய்ச்சுடலாம்:))
நன்றி வசந்த். என்னாச்சு? அவ்ளோதானா :((
நன்றி பிரியமானவள். வந்து படிச்சு பின்னூட்டம் மட்டுமில்ல ஓட்டும் போட்டாச்சு.
சுசி அவர் எப்படி பாடி மெய்ண்டைன் பண்றார்னு கேட்டு பதிவா போட்டா போலி டாக்டர் பேரு நிலைக்கும் இல்லையா?
எங்களுக்கும் உபயோகமா இருக்கும். நன்றி. இன்றைய பதிவு படித்து சமைக்கவும்.
சூப்பர் ஐடியா அண்ணா... மைண்ட்ல போட்டாச்சு....
பதிவு படிச்சுட்டேன்... :)))
//ஆனா தைரியமா சாப்பிடலாம்க. ஸ்வீட்டும் காரமுமா ஏழு அயிட்டம் செஞ்சேன். அதோட ஐசிங் கேக் மூணு.//
தைரியமா சாப்பிட்டவங்க அடுத்தநாள் எப்படியிருந்தாங்கன்னு சொல்லவேயில்லையே நீங்க.
அவங்க போனத்துக்கு இன்னும் ஃபோன் பண்ணவே இல்லை சொல்லரசன்.
எதுனா ஆயிருக்கும்கிறீங்க??? :)))
Seems you had a great and tiring time. Your children and hubby are lucky to get you Susi. Nice.
சந்தோஷமான தருணங்கள் உங்கள் குடும்பத்தில் எல்லா நாட்களிலும் வரட்டும் :)
கேக் அழகாயிருக்கு.
ரொம்ப நன்றி விக்னேஷ்வரி.
ரொம்ப நன்றி அம்மிணி.
அருமை, நல்லாயிருக்கு
நன்றி தியா.
அருமை நல்லாயிருக்கு
தியா??? நன்றி.
அடுத்தடுத்து இரண்டு பின்னூட்டம் பதிந்துவிட்டேன் தவறுதலாக
Post a Comment