எல்லாரும் எப்டி இருக்கீங்க? நலம்தானே? நாங்களும் நலம்.
எனக்கும் கவிதை எழுதணும்னு ஆசை வந்திடுச்சுங்க... ஹிஹிஹி... சும்மா... லுல்லுல்லாயிக்கு.... எழுதல. வந்தாதானே... ஆனா நான் படிச்சதில பிடிச்ச சில பல கவிதைகள உடனவே குறிச்சு வச்சுக்குவேன். அதில சிலத இன்னைக்கு எழுதுறேன். படிச்சு அத எழுதினவங்களுக்கு ஒரு சபாஷ போட்டிடுங்க. (சட்டப் பிரச்சனைகளுக்கு முகம் குடுக்க பயந்ததால எழுதினவங்க பெயர்கள் உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன) உங்கள படிக்க வச்ச எனக்கு??? வேற என்ன? கமன்ட்தான்.
சொல்ல நினைத்தபோதெல்லாம்
பேச வாய்த்ததில்லை.
பேசக் கிடைத்த சில நொடிக்குள்
சொல்லாமல் விட்டதே அதிகம்.
பேசாத சொற்களின் அடுக்கில்
மலையென வளர்கிறது
அன்பு!
வேகக்காற்று
கண்கள் மூடி
முகம் பொத்தி
வெட்கம் கொள்கிறேன்
ஒட்டிக் கொண்ட மணற்துகளாக
நீயனுப்பிய
முத்தங்கள்!
உன்னால் அடைந்த
சந்தோஷங்களுக்கு பதிலாக
எதையுமே தர முடியாத ஏக்கங்களில்
ஆழ வேரூன்றிப் படர்கிறது
அன்பு!
எனக்குள் அடைபடாமல்
வானம் அளக்கும் சுதந்திரம் தந்து
மிகச்சிறிய இதயத்தில்
நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
சிறு ஒளியாக
மிதந்தலைகிறது
அன்பு!
இந்தக் கவிதை படிச்சதும் எனக்கு பிடிச்சிருந்தாலும் ஒரு விஷயம் உடன்பாடில்லை. அன்பான ஒருவர் கொடுக்கும் முத்தம் எப்டி முகத்தில ஒட்டிக்கிற மணற்துகளா ஆகும்? பூவிதழ் பட்டாப்புல, மயிலிறகால வருடினாப்ல இப்டி எதுனா இருந்திருக்கலாமோ???
உன் நினைவுகளில் இருந்து
விடுதலை என்பது
கிடைக்காதா எனக்கென்று
அப்போதும் உன்னையே
நினைக்கிறது என் மனம்.
உன்னால் என் மனதில்
மொட்டவிழ்ந்த பூக்களையெல்லாம்
வாடாமல் வைத்திருக்க
வழியொன்று கண்டு கொண்டேன்
நீ என்னை தவிர்த்து விலகி
தவிக்க விடும் தருணமெல்லாம்
தவறாமல்
தனிமையில்
அழுகின்றேன் கண்ணா..
கண்ணீர்ப் பூக்களாம் தாம்
அவை
பெருமையாய்
சொல்லிக் கொள்கின்றன.
அவங்க கண்ணன் அவங்கள தவிக்க விடக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்.சரிதானுங்களே?
'நீயும் நானும்
ஒண்ணுன்னு சொன்னேன்'
சொன்னவன் நீதானே?
இல்லாத ஒன்றை
உறுத்தலின்றி சொல்ல
எப்படி முடிந்தது உன்னால்??
ஒதுங்கி நீ போக நினைக்கும் வரை
ஒப்பவில்லை என் மனது
ஒன்று என்பதற்கு அர்த்தங்கள் பல என்று!
வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது?
நீயும் நானும் ஒன்றுதான்
ஒன்றில் மட்டும்
என்னை ஏமாற்றுவதில் நீயும்
என்னையே ஏமாற்றுவதில் நானும்.
அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது. ஒதுங்கறாங்கன்னு தெரிஞ்சா பிடிக்கலேன்னா போய்கிட்டே இருன்னு போக வேண்டியதுதானே??? ஆனா இந்த மனசு மனசுன்னு ஒண்ணு இருக்கே... அது சிலத அப்டீல்லாம் சுலபமா விட சம்மதிக்காதுங்க. ரெம்ப அடம்புடிக்கும்.சமயத்தில சண்டித்தனம் கூட பண்ணும். அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும், புரியும் அதோட வலி!!!
அவ்வ்வ்.... மறுபடி அழுகாச்சியா வருது... கமன்டிட்டு வாங்களேன் கொஞ்சம் அழுரத்துக்கு கம்பேனி கிடைச்சாப்ல இருக்கும்... அவ்வ்வ்வ்வ்.... ஆவ்வ்வ்வ்வ்...
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
23 hours ago
21 நல்லவங்க படிச்சாங்களாம்:
வேகக்காற்று
கண்கள் மூடி
முகம் பொத்தி
வெட்கம் கொள்கிறேன்
ஒட்டிக் கொண்ட மணற்துகளாக
நீயனுப்பிய
முத்தங்கள்!
///இந்தக் கவிதை படிச்சதும் எனக்கு பிடிச்சிருந்தாலும் ஒரு விஷயம் உடன்பாடில்லை. அன்பான ஒருவர் கொடுக்கும் முத்தம் எப்டி முகத்தில ஒட்டிக்கிற மணற்துகளா ஆகும்? பூவிதழ் பட்டாப்புல, மயிலிறகால வருடினாப்ல இப்டி எதுனா இருந்திருக்கலாமோ???///
மேலே சொன்ன வரிகளில் வேகக்காற்று என்பது முத்தக்காற்று அதை பார்த்து முகம் பொத்தி வெட்கம் கொள்கிறாள்.அவைகள் முகத்தில் ஒட்டி கொள்கின்றன.
//'நீயும் நானும்
ஒண்ணுன்னு சொன்னேன்'
சொன்னவன் நீதானே?//
'சொன்னவள்'னு இருந்திருந்தா நானும் அழுகாச்சிக்கு கூட்டு சேந்திருப்பேன், இருந்தாலும் நீங்க கூப்பிட்டதுக்காக அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அழகான கவிதைகள் பகிர்வுக்கு நன்றிகள்.
//வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது?///
ஒன்றென்பது கனிததில் இருந்து வந்ததுன்னு சொல்லலாமுன்னு பார்த்தா... அக்கா மானாவரியா மண்டையிலையே கொட்டுவாங்க தெரிஞ்சு...
மூணும் அருமை, அட்டகாசம், சூப்பர்!! ஆமா.. இதையெல்லாம் யாருக்கா தீட்டுனது-?
அழகான கவிதைகள் சுசி.ட்ரேட்மார்க் பகிர்தல்!யார் எழுதுனதுன்னு சொல்லிருக்கலாமே சகா?
சரி சரி நெம்ப அளுவாதியோ ...
\\அவ்வ்வ்.... மறுபடி அழுகாச்சியா வருது... கமன்டிட்டு வாங்களேன் கொஞ்சம் அழுரத்துக்கு கம்பேனி கிடைச்சாப்ல இருக்கும்... அவ்வ்வ்வ்வ்.... ஆவ்வ்வ்வ்வ்...
\\
யக்கா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
இதெல்லாம் ஓவரு ஆமா...;(
//நீயும் நானும் ஒன்றுதான்
ஒன்றில் மட்டும்
என்னை ஏமாற்றுவதில் நீயும்
என்னையே ஏமாற்றுவதில் நானும்.//
ஆவ்வ்வ்வ்..அவ்வ்வ்வ்வ்
ம்க்கும் ம்க்கும்..
நெம்ப அழாதீங்கோ....
குணா இதெல்லாம் கேக்குறது இல்லியா?
கேட்டதுனாலதான் இப்படி கவிதையா
அவ்வ்வ்...
மணற்துகள்ன்னு கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்காக...
கண்ண உறுத்திட்டே இருக்குமே திரும்ப எடுக்குற வரைக்கும்.....
காற்றில் வரும் தூசு நம் முகத்தில் ஒட்டினால் அதை துடைப்போம், ஆனாலும் மனசு கேக்காமல் அதை அடுத்து அடுத்து துடைத்துக் கொண்டே இருப்போம். முகம் அலம்பும் வரை நம் முகத்தில் தூசு இருக்கும் நினைவு இருக்கும். அதுபோல காதலனின் முத்தம் துடைக்கத் துடைக்க முகத்தில் ஒட்டிக் கொண்டால் போல அழிக்க முடியா நினைவுகள் என்பதாக அமைகின்றது கவிதை.
எதோ எனக்குப் புரிந்தது இதுதான்.
சரி சரி கண்ணைத் துடைச்சுக்கே. இல்லைனா குணா மாமா அழுவாரு.
ஆமா பள்ளிகூடத்தில் ஆரம்பிச்சு கவிதை வரைக்கும் உனக்கு காப்பி அடிக்கும் வழக்கம் போகலையா?
நன்றி சுசி.
அழுகாச்சி கவுஜயை சிரித்து கொண்டே படித்து முடித்தேன்...
ஹீ...ஹீ...ஹீ....
//மூணும் அருமை, அட்டகாசம், சூப்பர்!! ஆமா.. இதையெல்லாம் யாருக்கா தீட்டுனது-//
யாரோ யாருக்காகவோதீட்டியது... இவங்க போட்டது கண்ணாளனுக்காக..
//வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது//
இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிப்புட்டேன்.. அவர்கிட்ட கேட்டாதானே தெரியும்..
முதல் வருகைக்கு நன்றி இளவட்டம். ஓஹோ இப்டி வேற அதுக்கு அர்த்தம் இருக்கா???
சரிசரி.. அழுவாதீங்க சங்கர். அடுத்த தடவை 'ள்' வர கவிதையா படிக்க வைக்கிறேன்.
நன்றி சந்ரு.
அக்கா மேல அந்த பயம் இருக்கட்டும் கலை :))) தீட்டினதாஆ? நோ பாட் வேர்ட்ஸ் கலை.
நன்றி ராஜாராம். நான் சகா இல்ல ராஜாராம்... அவ்வ்வ்வவ்....
இன்னும் கொஞ்..சம் அழுதுக்குறேன். இது ஜமால் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்ததால வந்த ஆ.க :)))
அததான் நானும் சொல்றேன் கோபி.. இருந்தாலும் ரொம்ப அழ வச்சிட்டேனோ :))
வசந்து... கொ.போ.கூ ... இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு கேக்கறேன். அப்போ சொல்லுங்க உறுத்துதான்னு. ஓகேவா...
ஆமால்ல... இது கூட பொருத்தமாத்தான் இருக்கு சுதாண்ணா. அதெப்டிங்ணா.. பசு மரத்து ஆணியாச்சே காப்பி அடிக்கிற பழக்கம். போகாது.. போகாது..
கிரர்ர்ர்ர்.... இது நல்லால்ல சொல்லிட்டேன் R.கோபி.
நீங்கல்லாம் என்ன தொழிலதிபர் கார்க்கி? இப்டிதான் கம்பேனி ரகசியத்த பப்ளிக்கில போட்டு விடுறதா?? கேட்டும் பதில் சொல்லலையே என்ன செய்யட்டும்???
இந்தக்கவிதை மட்டும் இன்னும் புடிபடாம இருக்குங்க சுசி எனக்கு.
நீயும் நானும் ஒன்றுதான்
ஒன்றில் மட்டும்
என்னை ஏமாற்றுவதில் நீயும்
என்னையே ஏமாற்றுவதில் நானும். //
டாப் ஆஃப் ஆல்.
அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும், புரியும் அதோட வலி!!! //
உங்களுக்கு அந்த வலி புரிஞ்சது போல இருக்கே. அனுபவி.......?
அழகான கவிதைகள் சுசி
அப்டி இல்ல அம்மிணி... உங்களுக்கு நல்லாவே வரும்... உங்க எதிர்க் கவிதை படிச்சேன்ல :)))
நீங்க என்னைய கரீட்டா புரிஞ்சுட்டீங்களே விக்கி.... அவ்வ்வ்வவ்......
நன்றி நேசமித்திரன்.
//சகா//
சகபயணி...
கிர்ர்ர்ர்..
:-)
வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது?
எனக்கு புரிஞ்சிருச்சு..
Post a Comment