Pages

  • RSS

22 November, 2009

(பாவ) மன்னிப்பு...

வணக்க்....கம் மக்களே.... நலமா?
போன பதிவு போட்டதிலேர்ந்து கொஞ்சம் ஓவராத்தான் அழுதிட்டேன் போல இருக்கு. என்கூட சேர்ந்து கிட்டு இயற்கையும் மழையா அழுது தீர்த்திடிச்சா... தெருவெங்கும் வெள்ளம்... போக்குவரத்து சிக்கல்... மழை ரெஸ்ட்ல போய்ட்டாலும் என் அழுகை நிக்கல. கண்ணன் கூட இன்னமும்... அவ்வ்வ்வ்.... அது ஒரு புறம்னா இன்னைக்கு நான் எழுதப் போற விஷயம் மறு புறம். என் பதிவுகள படிக்க வச்சு உங்கள கொடுமைப்படுத்தி, உங்க பொன்னான நேரத்தையும் மண்ணாக்கறேன் இல்ல... ரெம்ப உறுத்துதுங்க. ஏற்கனவே மனசு சோர்ந்து போயிருக்கிற நேரத்தில அழுகை பொங்குது... நான் பதிவு எழுத வந்த கதைய சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு உறுத்தலே இல்லாம கொடுமைய கண்டினியூ பண்றத்துக்கு அருமையான சர்ந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த என் அன்புத் தம்பி கோபிநாத் உங்களுக்கு கோடி நன்றிகள். நல்லாருங்க தம்பி. ஏய் அடங்குடி... எதுக்கு இப்டி தலைய சுத்தி மூக்க தொடறே பாருங்க... ஒரு வித்யாசமான பில்டப்போட ஆரம்பிக்கலாம்னா .சா முறைக்குது. சரி வாங்க நாம கதைக்குள்ள குதிக்கலாம்.

எல்லாரையும் போலவே எனக்கும் ஃபார்வாட் மெயில் பண்ற ஒரு ஃப்ரெண்டு. அதில சிலபல பதிவுகளுக்கான லிங்கும் இருக்கும். பதிவுலகம் ரொம்ப பயங்கரமானதுங்கிற ஒரு தப்பான எண்ணத்தில நான் இருந்ததால டிலீட்ட அமுக்கிவிட்டுடுவேன். ஒரு நாள் ஃப்ரெண்டோட டார்ச்சர் ஒரு லிங்க போய் பாக்க வச்சிடுச்சு. அதுல பாருங்க கதவு வழியா ரைட் லெக்க வச்சு முறையா பதிவுலகத்துக்க போவேன்னு பாத்தா சாளரம் வழியா தொபுக்கடீர்னு உள்ள விழுந்துட்டேன். அதுதான் பதிவுலகம்னு மறுபடி தப்பா நினைச்சு அங்கனவே சுத்திகிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட எல்லா இடுகைகளும் படிச்சுட்டேன். அவ்வ்வ்வ்.... திடீர்னு ஒரு நாள் இவரெல்லாம் எழுதும்போது நாமளும் ஏன் எழுதக் கூடாதுன்னு (கார்க்கி நோ கோவம், பேசிக் கிட்டத விட இன்னும் போட்டுக் குடுத்திடுறேன். பீ கூல்... ஓகே..) தோணிச்சு. கம்பியூட்டர் கண்ணாம்பா + டெக்னிக்கல் தேனாம்பாவான நான் என்னதான் ரைமிங்கா இருந்தாலும் இப்டி ஒரு பேர் ரெம்ப ஓவருடி அதே ஃப்ரெண்டு துணையோட கொடுமைய ஆரம்பிச்சுட்டேன்.

என்ன எழுதலாம்னு ரொம்பல்லாம் யோசிக்கல. என்னப் பத்தி மட்டுமே எழுதுறதுன்னு உறுதியான முடிவோட இருந்தேன், இருக்கேன். அது தவிர விருதுகளுக்கு, வாழ்த்துக்களுக்குன்னு சிலது. அதையும் தவிர ஏகலைவியா என் குருநாதர் கார்க்கிக்கு குருதட்சணையா சில (டேமேஜ்) பதிவுகள். அம்புட்டுதேன். விவாதங்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள்னு என் அறிவுக்கு சம்பந்தமில்லாத எதையும் எழுத மாட்டேங்க. நானே என் இடுகைகள மறுபடி படிக்கிரதில்லேங்கிரப்போ உங்கள எக் காரணம் கொண்டும் என்னோட பழைய பதிவுகள படிச்சிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிறேன்.

தமிழ்ல எழுதுறத்துக்கு google.com/transliterate/indic/Tamil பாவிக்கிறேன். இப்போ இன்னொரு ஃப்ரெண்டு கிட்ட ஈகலப்பைய வாங்கி வச்சிருக்கேன். இன்னும் சரியா அதில உழவு ஆரம்பிக்கல.

பதிவுலகத்துக்குள்ள வரு முன்னர் நான் இருந்த மனநிலை.... என்ன யார்னே தெரியாத ஒரு இடத்தில போய் ஒளிஞ்சுக்க மாட்டோமான்னு நான் நினைச்சது மனசளவில கை கூடியிருக்கு. உன்னைய ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு அவங்க நினைக்கப் போறது உறுதி என் மனதுக்கு இதமாய், என்னை திசை திருப்பி ஒரு புது உலகுக்குள்ள கொண்டு போய் விட்ட பதிவுகள் எத்தனை.... என்னை பார்த்திராத, என் கூட பேசியிராத எத்தனை நண்பர்கள் என் கூட இப்போ... என்னமோ ரொம்ப நாளா பழகின மாதிரி ஒரு உணர்வு. இத்தனை நாளா இப்டியான உறவுகள இழந்திட்டு இருந்திருக்கேனேன்னு நிஜமான கவலை. ஒவொருத்தர் பதிவ படிக்கும்போதும் அவங்க திறமைய பார்த்து அப்டி வியந்து போவேன். பதிவர்களுக்குள்ள இந்த நட்பும் ஒற்றுமையும் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்னு என்னை அறியாமலே வேண்டிக்கிற அளவுக்கு பதிவுலகம் என்னை மாத்திடிச்சு. என்றாவது ஒருநாள் உங்களில் யாரையாவது நான் நேரில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. அவங்களுக்கு இந்தக் கொடுமை வேறயா???

அப்புறம் என்னங்க.. என்னையும் மதிச்சு தொடர் பதிவுகளுக்கு கூப்ட, விருதுகள் வழங்கிய, என்னை பின் தொடர்கின்ற அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றிகள். உங்க யாரையாவது என் பதிவுகள் மூலமா, என் பின்னூட்டங்கள் மூலமா நான் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க. இப்போ மாதிரியே எப்பவும் என் கொடுமைய பொறுத்துக் கிட்டு என் கூட நண்பர்களா இருங்க. என்னோட பதிவ படிக்கிற அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போ நான் இத தொடர்ந்து கொண்டு போறத்துக்கு கூப்பிட போறவங்க இவங்கதான்.

தியாவின் பேனா பேசுகிறது...
பார்த்ததும் படித்ததும் சங்கர்.
பிரியமுடன்......வசந்த்
பித்தனின் வாக்கு சுதாண்ணா.
எடக்கு மடக்கு R.கோபி.
வடலூரான் கலை.
இது என்னோட இடம். தமிழ்பிரியன்.
சொல்லரசன்
சந்ருவின் பக்கம்

பத்து பேருக்குமான சிறு குறிப்பு :- நீங்க முன்னாடியே உங்க கதைய எழுதி நான் அத படிக்காம மிஸ் பண்ணி இருந்தேன்னா கமன்ட்ல கும்மிடுங்க... வரட்டுங்களா...

15 November, 2009

வரலேன்னா குறிச்சிடு...

எல்லாரும் எப்டி இருக்கீங்க? நலம்தானே? நாங்களும் நலம்.

எனக்கும் கவிதை எழுதணும்னு ஆசை வந்திடுச்சுங்க... ஹிஹிஹி... சும்மா... லுல்லுல்லாயிக்கு.... எழுதல. வந்தாதானே... ஆனா நான் படிச்சதில பிடிச்ச சில பல கவிதைகள உடனவே குறிச்சு வச்சுக்குவேன். அதில சிலத இன்னைக்கு எழுதுறேன். படிச்சு அத எழுதினவங்களுக்கு ஒரு சபாஷ போட்டிடுங்க. (சட்டப் பிரச்சனைகளுக்கு முகம் குடுக்க பயந்ததால எழுதினவங்க பெயர்கள் உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன) உங்கள படிக்க வச்ச எனக்கு??? வேற என்ன? கமன்ட்தான்.

சொல்ல நினைத்தபோதெல்லாம்
பேச
வாய்த்ததில்லை.
பேசக்
கிடைத்த சில நொடிக்குள்
சொல்லாமல் விட்டதே அதிகம்.
பேசாத சொற்களின் அடுக்கில்
மலையென வளர்கிறது
அன்பு!

வேகக்காற்று
கண்கள் மூடி
முகம் பொத்தி
வெட்கம் கொள்கிறேன்
ஒட்டிக் கொண்ட மணற்துகளாக
நீயனுப்பிய
முத்தங்கள்!

உன்னால் அடைந்த
சந்தோஷங்களுக்கு பதிலாக
எதையுமே தர முடியாத ஏக்கங்களில்
ஆழ வேரூன்றிப் படர்கிறது
அன்பு!

எனக்குள் அடைபடாமல்
வானம் அளக்கும் சுதந்திரம் தந்து
மிகச்சிறிய இதயத்தில்
நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
சிறு ஒளியாக
மிதந்தலைகிறது
அன்பு!

இந்தக் கவிதை படிச்சதும் எனக்கு பிடிச்சிருந்தாலும் ஒரு விஷயம் உடன்பாடில்லை. அன்பான ஒருவர் கொடுக்கும் முத்தம் எப்டி முகத்தில ஒட்டிக்கிற மணற்துகளா ஆகும்? பூவிதழ் பட்டாப்புல, மயிலிறகால வருடினாப்ல இப்டி எதுனா இருந்திருக்கலாமோ???

உன் நினைவுகளில் இருந்து
விடுதலை என்பது
கிடைக்காதா எனக்கென்று
அப்போதும் உன்னையே
நினைக்கிறது என் மனம்.

உன்னால் என் மனதில்
மொட்டவிழ்ந்த பூக்களையெல்லாம்
வாடாமல் வைத்திருக்க
வழியொன்று கண்டு கொண்டேன்

நீ என்னை தவிர்த்து விலகி
தவிக்க விடும் தருணமெல்லாம்
தவறாமல்
தனிமையில்
அழுகின்றேன் கண்ணா..

கண்ணீர்ப் பூக்களாம் தாம்
அவை
பெருமையாய்
சொல்லிக் கொள்கின்றன.

அவங்க கண்ணன் அவங்கள தவிக்க விடக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்.சரிதானுங்களே?

'நீயும் நானும்
ஒண்ணுன்னு சொன்னேன்'
சொன்னவன் நீதானே?
இல்லாத ஒன்றை
உறுத்தலின்றி சொல்ல
எப்படி முடிந்தது உன்னால்??

ஒதுங்கி நீ போக நினைக்கும் வரை
ஒப்பவில்லை என் மனது
ஒன்று என்பதற்கு அர்த்தங்கள் பல என்று!

வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது?

நீயும் நானும் ஒன்றுதான்
ஒன்றில் மட்டும்
என்னை ஏமாற்றுவதில் நீயும்
என்னையே ஏமாற்றுவதில் நானும்.

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது. ஒதுங்கறாங்கன்னு தெரிஞ்சா பிடிக்கலேன்னா போய்கிட்டே இருன்னு போக வேண்டியதுதானே??? ஆனா இந்த மனசு மனசுன்னு ஒண்ணு இருக்கே... அது சிலத அப்டீல்லாம் சுலபமா விட சம்மதிக்காதுங்க. ரெம்ப அடம்புடிக்கும்.சமயத்தில சண்டித்தனம் கூட பண்ணும். அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும், புரியும் அதோட வலி!!!

அவ்வ்வ்.... மறுபடி அழுகாச்சியா வருது... கமன்டிட்டு வாங்களேன் கொஞ்சம் அழுரத்துக்கு கம்பேனி கிடைச்சாப்ல இருக்கும்... அவ்வ்வ்வ்வ்.... ஆவ்வ்வ்வ்வ்...

08 November, 2009

எனக்கும் புடிச்சிடுச்சு.

இந்த வாரம் எதப் பத்திடி மொக்கை போடப்போறே? கூடப் பொறந்தது அக்கறையா இப்டி கேட்டதுமே சட்னு உஷாராகி அதிசயம்னு சொல்லு இல்லேன்னா வ.போ உன்ன டியூப்லைட்னு குட்டியிருப்பா இல்லக்கா சின்ன அம்மிணி என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டுருக்காங்க, அத எழுதப் போறேன்னேன். உன்னப் போயின்னு ஆரம்பிச்சவ நிறுத்தி எதப் பத்தின்னா. பிடிச்ச பிடிக்காத பத்து எழுதணும். நிறையப் பேர் ரொம்ப சூப்பரா எழுதி இருக்காங்க. நானும் எதுனா வித்யாசமா யோசிக்கிறேன்னேன் . சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதோட நீ எப்டி எழுதினாலும் அத எழுத்துன்னே சொல்ல முடியாது. மூடிக்கிட்டு போயி முடிஞ்சத எழுதுன்னா. தன் அழகு மேல கண்ணு வைக்காதன்னு என் கிட்ட (கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம) சொன்ன என் நண்பன மாதிரியே என் எழுத்து மேல கண்ணு வைக்காத, இப்போ ஃபோன வைன்னு சொல்லிட்டு எழுத டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. எனக்கு சரியா எழுத வராததுக்கு டிவியும் ஒரு காரணமோ??? வாஸ்து சரியில்ல. இடத்த மாத்தணும்

பதிவ தொடர என்ன கூப்டதுக்கு நன்றி அம்மிணி. இன்னொரு நன்றி ரூல்ஸ் எதுவும் போடாததுக்கு.

1. அரசியல் தலைவர்
அரசியலே பிடிக்காது. அப்புறம் தலைவர்கள எங்கிருந்து பிடிக் க/காத.


2. எழுத்தாளர்
பிடித்தவர்
:- ரமணிச்சந்திரன் தொடங்கி அப்டியே என் பதிவ படிக்கிற நீங்க ஒரு பதிவுக்கு சொந்தக்காரர்னா உங்க வரைக்கும் லிஸ்டு நீளும்..
பிடிக்காதவர் :- வேற யாரு இத எழுதினவங்கதான்.

3. கவிஞர்:
எனக்கு கவுஜ கூட எழுத வராதுங்கிரதால எல்லா கவிஞருமே பிடிச்சவங்கதான்.


4. இயக்குனர்:
பிடித்தவர் :- மணிரத்னம்.
பிடிக்காதவர் :- இருங்க யோசிக்கிறேன்.....


5. நடிகர்:
பிடித்தவர் :- எப்போதும்
விஜய்.
பிடிக்காதவர் :- லிஸ்டு கொஞ்சம் பெருசு.


6. நடிகை:
பிடித்தவர் :- ஜோதிகா.
பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம்.


7.இசையமைப்பாளர்:
பிடித்தவர் :- இசைஞானி. இசைப்புயல், ஹாரிஸ், யுவன்.....
பிடிக்காதவர் :- இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு பிடிச்சா மாதிரி ஒரு பாட்டையாவது இசை அமைச்சிடுரதால பிடிக்காதவர் கிடையாது.அம்புட்டுதேன்.

8. பாடகர்:
பிடித்தவர் :- டிம்மி.

பிடிக்காதவர் :- குணா பாடல்லாம் மாட்டார். என்னங்க இது கேள்வி.

9. பாடகி:
என்ன விட நல்லா பாடுரதால எல்லாரையும் பிடிக்குமே...


10. விளையாட்டு வீரர்:
விளையாட்டா? அப்டீன்னா???

இனி அப்டியே அம்மிணி மாதிரியே மூணு பேர கூப்டு விட்டுடுறேன்.

கோபிநாத் என்னதான் நீங்க மாமாங்கத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் நாங்க அழைப்போமில்ல.

பிரியமுடன்......வசந்த் நீங்க தொடர் பதிவல்லன்னு தானே போட்டீங்க.

பித்தனின் வாக்கு சுதாண்ணா தொடர் கதைக்கு சின்னதா ஒரு பிரேக் குடுங்க.

இது நம்ம ஆளு மறுபடி வெளியூரா? வந்ததும் கண்டினியூ..

அப்பாடா... கரீட்டா மூணு பேர கூப்டாச்சுப்பா. வரட்டா மக்களே? நலமா இருங்க.

மு.கு. :- என் கண்ணாளன் செஞ்ச சதியால நேத்து என்னால பதிவு போட முடியலீங்க. ஃபோன்ல எதோ ப்ராப்ளம்னு நோண்டிக்கிட்டு அடிக்கடி நெட் கனேக்சனையும் கட் பண்ணி ரொம்ப கடுப்பேத்திட்டார். அதனால திங்க கிழமை எப்படா விடியும்னு காத்திருந்து என் பதிவ படிக்க ஆவலா வந்த உங்கள ஏமாத்த வேண்டியதாயிடுச்சு. ஜாரி...

பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்.....

01 November, 2009

கேக் சாப்டு கொண்டாடுங்க....

என்னங்க திடீர்னு காணாம போய்ட்டேன்னு பாத்தீங்களா?  என்னாச்சு இவளுக்குன்னு  நினச்சு பாத்தீங்க இல்ல?  நினைக்காதவங்களுக்கு கேக் கிடையாது.உங்க கமன்ட்சுக்கு இன்னும் பதில் எழுதல. சாரி...

தலைக்கு மேல இல்ல அதுக்கும் மேல சரியான, செமையான, பயங்கரமான, கடுமையான, இன்னும் பல னவான வேலைங்க. அதான் பொட்டிக்கு + வலையுலகத்துக்கு  விடுமுறை விட்டுட்டேன். குடும்பத்துக்கே பர்த்டேஸ் வந்ததால சனிக்கிழமை சின்னதா ஒரு பார்ட்டி வீட்ல. ஒரே கல்லுல நாலு மாங்கா... அதான் ஒரு வாரம் லீவ் போட்டு வேலையில குதிச்சிட்டேன். சாப்பாடு ஆர்டர் பண்ணி எடுத்தோம். வந்தவங்க நலம் கருதி மத்ததெல்லாம் என் தலைமேல.

ரெண்டு கலாச்சாரங்களையும் கலவையா பின்பற்றுறா மாதிரி பட்ஷனங்களையும் நம்மூரு பேசிக் ரெசிப்பிய வச்சு இந்த ஊர்ல கிடைக்கிற சாமான்களை கொண்டு தயார் பண்ணணும். சிலது வெளிநாடு வாழ் பெண்மணிகளோட சுய கண்டுபிடிப்பாவும் இருக்கும். ஆனா தைரியமா சாப்பிடலாம்க. ஸ்வீட்டும் காரமுமா ஏழு அயிட்டம் செஞ்சேன். அதோட ஐசிங் கேக் மூணு.

இதில யார் கண்ணு பட்டுதோ என் லீவுக்கும் ஆப்பு. எங்க டிப்பார்ட்மென்ட்ல புதுசா சேர்ந்த ஒருத்தர தவிர மத்த எல்லாரையும் வைரஸ் காய்ச்சல் தாக்கிட்டதில நான் ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டியதாயிடிச்சு. அதுவரை நீதானே ஜாலியா லீவ்ல இருக்கே செய்துமுடின்னு எந்த ஹெல்ப்புமே செய்யாம விட்டேந்தியா இருந்த மத்த மெம்பர்சுக்கு சனி காலை சரியாவே விடியல. அப்பப்போ என்னை தொல்லை பண்ணிக்கிட்டே ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த மொக்கை சாமிக்கு இனிமே வீட்ல பார்ட்டியே வேணாம்டின்னு சொல்ற அளவுக்கு வேலை. வீட்ட பூரா ஒதுங்க வச்சு மாப் பண்ணினது அவர்தான். பையனுக்கும் பொண்ணுக்கும் கான்டி பாக் ரெடி பண்றது, வெளிய குப்பை போட்டுட்டு வர்றது, ஸ்டோர் ரூம்ல எதுனா எடுத்து குடுக்கிரதுன்னு அவங்களுக்கு ஏத்த வேலை. அம்மா போதும் நாங்க இனிமே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்கிற லெவலுக்கு போய்ட்டாங்க.

மூணு மணிக்கு ஆரம்பிச்ச பார்ட்டி முடிய நைட்டு ஒரு மணியாச்சு. எங்களையும் சேர்த்து மொத்தம் எட்டு குடும்பங்கள். ஒரு ஃபாமிலி நைட் தங்கிரதுன்னும், சிலர நான் டிராப் பண்றதுன்னும் முடிவாச்சு. அதெல்லாம் முடிச்சு நான் தூங்க நாலு மணியாச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லாரும் ஒண்ணா சந்திச்சோம். என்னதான் அலுப்பா இருந்தாலும் கலகலன்னு வீட்ல சத்தம் கேக்கிறா மாதிரியே இருந்திச்சா தூக்கம் வரல.... உடனையே நிறைய வேலை இருக்கு ஹெல்ப் பண்றியான்னு கேட்டப்போ செஞ்சு வை வந்து சாப்டுறேன்னு சொன்ன என் ஃப்ரெண்டோட ஞாபகம் வந்திச்சா... அதுக்கொரு மெயில போட்டுட்டு, ரெண்டு பதிவும் படிச்சேனா தூக்கம் தன்னால வந்திடுச்சு.இனி நான் செஞ்ச கேக் பாருங்க. சாப்பாடு நான் செய்யாததால ஃ போட்டோ எடுக்கல. ஸ்வீட்ஸ் காரம் சாப்ட எடுத்து  வைச்சிட்டு டீ செய்றதில நான் பிசி ஆய்ட்டதால ஃபோட்டோ எடுக்க மறந்துட்டேன்.

இது Sonic னு கண்ணனுக்கு ரொம்ப பிடிச்ச nintendo DS game. வந்து பாத்தவர் ஒரு பெரிய ஹக் மூலமா தன்னோட சந்தோஷத்த சொன்னார். உங்களுக்கு கஷ்டம்னா பரவால்லம்மா சோனிக்குக்கு மூக்கு இருக்கு. நீங்களும் வச்சு குடுக்குரீங்களான்னார். உடனையே செஞ்சு குடுத்ததும் உலகத்திலேயே நல்ல அம்மான்னு விருது குடுத்துட்டு போனார். என்னவோ மிஸ்ஸாகுதேன்னு எவ்ளோ யோசிச்சும் மூக்கு எனக்கு தெரியவே இல்ல. அதுக்கு மூளை முதல்ல இருக்கணுமோ???


இது H2O ன்னு கண்ணம்மாவுக்கு பிடிச்ச ஒரு கடல் கன்னிகள் பத்தின சீரியல். வேலை வாங்கறேன்னு கடுப்பில இருந்தவங்க இத காமிச்சதும் கூலாகி ஹெல்ப்போ ஹெல்ப்புன்னு ஹெல்ப்பிட்டாங்க. பிரிண்ட் க்ளியரா வராததால உங்களுக்கு ரொம்ப பிடிச்ச Emma ங்கிற கடல்கன்னி படம் சேர்க்க முடியலம்மான்னேன். இதுவே போதும்மான்னு ஹக்கோட ரெண்டு கிஸ்ஸும் சேத்து குடுத்தாங்க.

கண்ணாளனுக்குத்தான் பெரிய சர்ப்ரைஸ். என் புருஷன் குழந்தை மாதிரின்னு சொல்லாம செஞ்சுட்டீங்கன்னு எல்லாரும் சொன்னப்போ லைட்டா வெக்கப்பட்டார். நீங்க வேற என் பர்த்டே கிஃப்டா நான் கேட்டத இன்னும் வாங்கி குடுக்கலேங்கிற கடுப்பிலதான் இந்த கரடி குட்டிய செஞ்சேன்னு நான் சொல்ல.. ஏன் அத டெடி பொம்மைன்னு கொஞ்சம் டீசண்டா சொல்லக் கூடாதான்னு அவர் முறைக்க.. வந்தவங்க ரொம்ப சிரிச்சது இதுக்குத்தான்.



அப்புறம் என்னங்க. எல்லாரும் கேக் சாப்டுங்க. அடுத்த தடவை ரொம்ப வித்யாசமான ஒரு பதிவோட சந்திக்கிறேன். வரட்டுங்களா....

28 October, 2009

என் அன்புக் கணவருக்கு...


தவிர்க்க முடியாத காரணத்தால என்னோட வழக்கத்தையும் மீறி அடுத்த இடுகைய ரெண்டு நாள் காப்ல போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயிட்டேன் மக்கள்ஸ். நலமா இருக்கீங்கதானே? தலைப்பை பாத்ததும் புரிஞ்சு கிட்டவங்க முதுக சொறிஞ்சு விட்டுக்கலாம். அதேதான் இன்னைக்கு என் கண்ணாளன் பிறந்தநாள். அவர பத்தி எழுத ஆரம்பிச்சா என்னால நிறுத்த முடியாதுங்கிற பாயிண்ட மைண்ட்ல வச்சுக்கிட்டு படிக்கிறத தொடருங்க. ஏன்னா எங்க  ரெண்டு குடும்பமும் நான் பிறக்கிறத்துக்கு முன்னாடி இருந்தே நட்பானவங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்து கண்ணாளன எனக்கு தெரியும். அண்ணன்களோட மட்டுமில்லாம இவர் அப்பாவோட ஃப்ரென்ட் கூட.

ம்.. பிறக்கும்போது மூணரை கிலோ, அப்பவே உன்ன விட வெயிட்டு கம்மி 51 cm ல இருந்தாராம்.ரெண்டாவது பையன். அடுத்ததாவது பொண்ணா பிறக்காதான்னு ஏங்கி பஞ்ச பாண்டவர்கள பெத்து போட்டதுதான் மிச்சம்னு அத்தையம்மா இப்பவும் சொல்லி கவலைப்படுவாங்க. இவர் ரெண்டாவது. பெரியண்ணா சின்ன வயசிலேயே வெளிநாடு போக வேண்டிய நிர்ப்பந்தம். மாமாவ காலன் பறிச்சுக்கிட்டான். பதினேழாவது வயசில அம்மா தம்பீங்க இவர் பொறுப்பில. அத்தையம்மா இழப்பில இருந்து மீண்டு வரும் வரைக்கும் முழுப் பொறுப்பும் இவர்தான். தம்பீங்க மூணு பேரும்  இன்னைக்கும் சின்னண்ணன் கிட்ட கலந்து பேசித்தான் எதையும் செய்வாங்க. மாமியார் கிட்ட இவர் பேச்சுத்தான் எப்பவுமே எடுபடும். எப்பிடியாவது அவங்கள சமாளிச்சு தன் காரியத்த சாதிச்சுக்குவார்.

கிரிக்கட், ஃபுட்பால், வாலிபால் விளையாடுறதில புலி சிங்கம் ரேஞ்சு.  இப்போ கூட யாராவது ஒண்ணு ஃபோன்ல டேய் மச்சான் நீ அந்த மாச்ல அடிச்சியே ஒரு சிக்சர்னு மலரும் நினைவுகள் பேசும். இங்க கிரிக்கட் கிடையாதுங்கிரதால மத்தது ரெண்டும் தொடருது. அதிலேம் ஃபுட்பால் முதல் பொண்டாட்டி லெவலுக்கு போய்டிச்சு.

வேட்டைப் பிரியர். ஒரு தடவை வேட்டைக்கு போன இடத்தில பாம்பு கூட கடிச்சிருக்கு. தான் நினைச்சத செய்து முடிச்சிட்டு தான் அடுத்த வேலை. மனசுல பட்டத மறைக்காம பேசுறதால கொஞ்சம் தலைக்கனம்னு சொல்வாங்க.

நல்ல வேளை சிக்ஸ் பாக் அளவுக்கு போகலேன்னாலும் வெயிட் கிலோ இல்ல கிராம் அளவுக்கு கூட ஏற விடமாட்டார். அண்ணனும் தம்பீங்களும் கொஞ்சம் புஷ்டியா இருப்பாங்களா போட்டு கடிச்சு குதறிடுவார். இந்த சம்மர்ல லண்டன் போறத்துக்கு ஒரு மாதம் முன்னாடியே கடைசி தம்பி சொன்னார் அண்ணி என்னவாவது பண்ணி வரும்போது சின்னண்ணா வெயிட்ட கொஞ்சம் ஏத்திடுங்கன்னு.

சரியான மொக்கைசாமி. இவர் இருக்கிற இடத்தில மொக்கையும் சிரிப்பும் கொடி கட்டிப் பறக்கும். பேச்சால சட்னு அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணிடுவார். குறிப்பா எதிர்ப்பாலார.. கடலை மன்னன். அதனால மத்தவங்க மட்டுமில்ல  நானும் பொறுக்கீன்னு சொல்லி இருக்கேன். பின்ன என்னங்க. சும்மாவே ஊருக்குள்ள சேத்து வச்சு பேசி கிண்டல் பண்ணுவாங்க. இவர் வேற ரோட்ல எதிர்ல பைக்ல வந்தா சைக்கிள்ள போற எனக்கு ஹாரன் அடிக்கிறது, எங்க வீட்டுக்காங்கிறது, ஊருக்கே கேக்கிறா மாதிரி சத்தமா அண்ணன ரெடியா இருக்க சொல்லுங்க இதோ அஞ்சு நிமிஷத்தில வந்திடறேன் ஊர் சுத்தப் போணும்னு ஏய் அவர் விளையாட போணும்னு சொல்வார்டி...  யார் இல்லேன்னா ஆறு மணி விளையாட்டுக்கு நாலு மணிக்கே கிளம்பி மூணு பேர கூட்டு சேத்துக்கிட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்களாம்? ஊரோட இந்த கோடீலேர்ந்து அந்த கோடி வரைக்கும் ஒரு ரவுண்டு வருவாங்கல்ல. மனச்சாட்சியே மனச்சாட்சி  இல்லாம பேச கூடாது சொல்லிட்டேன்  முட்டு சந்தில உக்காந்து கிட்டே சவுண்டு குடுக்கிறதுன்னு கொலைவெறி ஆக்கிட்டார். ஒருநாள் வந்த கோவத்தில நேரா அம்மா கிட்ட வந்து ஏம்மா இந்த மாமனார் பேர சொல்லி அங்கிளோட பொறுக்கி அடங்கவே மாட்டுதான்னு ஒரே கத்தல். இப்போ கூட எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நீ கொட்ற குப்பைய 'பொறுக்கி' எடுக்கப் போறாருன்னு சரியா சொல்லி இருக்கேன்னு. 

கோவம் வந்துதுன்னு வச்சுக்குங்க.. அது யாரா இருந்தாலும் நோ எக்ஸ்கியூஸ்... ஊர்ல எனக்கு தெரிஞ்சு ஒரு எட்டு பத்து பேர், இங்க ஒரு நாலஞ்சு பேர்னு இன மத நிற வேறுபாடில்லாம 'கவனிக்கப்பட்டிருக்காங்க'. அதனால மத்தவங்க லைட்டா ரவுடியாட்டம்  பாப்பாங்க. 

ஒரு இடத்தில சும்மா உக்காந்து இருக்கிறது மட்டும் இவரால முடியாது. லீவ் நாள்ல கூட டான்னு ஆறு மணிக்கு எழுந்து நின்னு எங்க கிட்ட திட்டு வாங்குவார். அதிலையும் பேசாம இருக்கிறது முடியவே முடியாது.

என்னதான் கோவம் வந்தாலும் அத சாப்பாடு மேல காட்றது மட்டும் பிடிக்கவே பிடிக்காது. சாப்பாடு இன்னதுதான் வேணும்னு இல்ல. எண்ணை கம்மியா, தேங்காய் சேர்க்காததுன்னா சரி. ஸ்வீட் பிடிக்காது. white chocolate கொஞ்சம் பிடிக்கும். பிடிக்காத ஒண்ண யாருக்காகவும் செய்ய மாட்டார்.

எப்பவும் கலகலன்னு இருக்கிறவர் சோகமா இருக்கார்னா ஒண்ணு Manchester  United இல்ல Brann ங்கிற லோகல் டீம் மாச்ல தோத்திடுச்சுனு அர்த்தம். இசை ஈடுபாடு அவருக்கு இல்லைங்கிரதால பாட்டெல்லாம் போடல.

என் கண்ணாளன் இன்னைக்கு போலவே என்னைக்கும் சந்தோஷமா வாழணும்னு என் அப்பன் விநாயகன வேண்டிக்கிறேன்.

அப்டியே அவருக்காக ரெண்டு க்ளப் படம்ஸ்.... இப்போ ஓக்கேவாப்பா ??? அப்பா.. பாருங்க இப்போதான் சிரிக்கிறார்.



26 October, 2009

என் செல்லக் கண்ணம்மாவுக்கு...

நலமா மக்கள்ஸ்?

என் பதிவில புது இடுகைன்னதுமே வாயில வாழ்த்தும் கையில கிஃப்ட்டுமா வந்தவங்க ரெண்டு ஸ்வீட் எடுத்துக்கோங்க. இன்னைக்கு என் கண்ணம்மாவுக்கு பிறந்த நாளுங்க. தம்பி பர்த்டேக்கு லீவ்ல நின்னீங்க எனக்கு என்ன பண்ண போறீங்கன்னு கேப்பாங்கன்னு தெரிஞ்சு நான் முன்னாடியே ஒரு வார லீவ் எடுத்திருக்கேன். ஏங்க... எங்க ஓடறீங்க? அதுக்குன்னு நான் தினமும் ஒரு பதிவெல்லாம் போட மாட்டேங்க. ப்ராமிஸ்.. நம்புங்கப்பா... தைரியமா இருங்க.

இவங்க பிறக்கும்போது எங்கள மட்டுமில்ல டாக்டருங்களையும் பதற வச்சிட்டாங்க. 25 ஆம் தேதி மாலை மூணு மணி சொச்சத்துக்கு நான் வரப் போறேனே மம்மீன்னு சிக்னல் குடுத்தவங்க, 26 காலை பத்து மணியோட சைலண்டாயிட்டாங்க. எத்தன டாக்டர்ஸ், எத்தன செக் அப், அப்பப்போ மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ் வேற... கடைசியா வெயிட் பண்ணலாம்னு முடிவாகி ஒரு மிட்வைஃப் அப்பப்போ செக் பண்ணிட்டு என் கூடவே  பேசிட்டு இருந்தாங்க. கிடைச்ச காப்ல குணா ஃபோன் பேச வெளிய போய்ட்டார். திடீர்னு வெளிய போன மிட்வைஃப் ஒரு படையோட வந்து என்ன ஸ்ட்ரெச்சருக்கு ஷிஃப்ட்  பண்ணி நேரா ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போய்ட்டாங்க. என்ன ஏதுன்னு நான் முழிக்க  எங்கள நம்பு, கடவுளை வேண்டிக்கோ, நல்லதே நடக்கும்னாங்க. பிள்ளையாரே.. மாரியம்மா.. என் குழந்தைக்கு.. அப்புறம் எதுவும் தெரியல...

நினைவு வந்தப்போ வலிக்குது இனிமே குழந்தை பிறக்க போதுன்னு நினைக்குறேன்னு  அதே மிட்வைஃப் கிட்ட சொன்னேன். சிரிச்சுக்கிட்டே உனக்கு 4450g + 49cm ல 12:35 க்கே பெண் குழந்தை பிறந்தாச்சு  நீ இப்போ ICU ல இருக்கேன்னாங்க. எங்க என் குழந்தைன்னப்போ ரெண்டு ஃபோட்டோவ காமிச்சா. ஒண்ணுல மலைப்போட குணா. பின்ன வெளிய போனவர் திரும்பி வந்தப்போ இந்தா உன் பொண்ணுன்னு குட்டிம்மாவ குடுத்தாங்களாம். அவர் மயக்கம் போடாத குறை.

குட்டிம்மா ஹார்ட் பீட் சடனா குறைஞ்சு  போய்ட்டதால  ஆப்பரேஷன் பண்ணினதாவும், அப்போ அவங்க திகைச்சுப் போனதில புரையேறி லங்க்ஸ்ல தண்ணீர் போய்ட்டதால சைல்ட் க்ளினிக்ல ட்ரீட்மென்ட்ல இருக்காங்கன்னும் சொன்னாங்க. பாக்கணுமேன்னேன். உனக்கு நிறைய ப்ளட் லாஸ் ஆயிருக்கு கொஞ்சம் பொறுத்துக்கோன்னு  சொல்லி மூணாவது நாள் தான் ஆம்புலன்ஸ்ல கொண்டு போய் காட்னாங்க. கடவுளே என் கண்மணிய அவ்ளோ வயருக்கும் மத்தியில பாத்தப்போ.... இப்போ நினைச்சா கூட மனசு அடிச்சிக்கும். என் வயர்களோட சிக்கிகிட்ட அவங்க வயர்களை பிரிச்செடுத்தத விட என்கிட்டே இருந்து அவங்கள வாங்கத்தான் நர்சுங்க கஷ்டப்பட்டு போய்ட்டாங்க.

நாலாம்நாள் கையில என் கண்மணிய குடுத்துட்டு மிட்வைஃப் சொன்னாங்க அன்னிக்கு ஒரு நிமிஷம் தாமதிச்சிருந்தா இந்த குட்டி தேவதைய உன் கிட்ட குடுக்கிற பாக்யம் எனக்கு கிடைச்சிருக்காதுன்னு. அன்னிலேர்ந்து தேவதை எங்க வீட்ட சொர்க்கம் ஆக்கிட்டா. அவளோட சின்ன அசைவு கூட கட்டளையாகி உடன் நிறைவேற்றப்பட்டது. அவளே எங்கள் உலகமாய். அவளுக்காகவே விழித்து அவள் தூங்கும் அழகை ரசித்தபடியே தூங்கி... இளவரசியின் அரசாட்சி வீட்டின் ஒவ்வொரு இயக்கத்திலும்... குணா சைட்ல முதல் பெண் பேரக் குழந்தைங்கிற பெருமை. என் சைட்ல முதல் பேரக் குழந்தையே அம்மணிதான். செல்லத்துக்கு கேக்கணுமா.

இவங்க அப்பா செல்லம். உருவம் மட்டுமில்ல பிடிவாதம் கோவம்னு குணமும் அப்பாவைக் கொண்டு. ஆனா அம்மா முகத்த வச்சே மனச கண்டு பிடிச்சுடுவா. தம்பி அம்மா கவலையா இருக்காங்க நாம சமத்தா இருக்கணும்னு சொல்வா. அக்காவா அவருக்கு அட்வைசும் நடக்கும். அம்மாவா இருக்கிறது நல்லதாம்மான்னு அடிக்கடி கேப்பா. அம்மாவாக  என் மனது அடையும் சந்தோஷம் எதோ ஒரு வகையில் அவங்களுக்கு புரியுதுன்னு நினைக்கிறேன். அடிக்கடி உலகத்திலேயே சிறந்த அம்மான்னு எனக்கு விருதும் குடுப்பாங்க.

என்னோட முதல் ரசிகை இவங்கதான். என்னோட சின்ன வயசு கதைகள் கேக்கிரதுன்னா ரொம்ப பிடிக்கும். மாமியார் வந்து நிக்கும்போது அப்பா பத்தி கேப்பாங்க. தான் தப்பு செய்யாதப்போ தைரியமா பேசுவாங்க. தப்பு தன் பேர்லன்னா குடுகுடுன்னு ஓடிப் போய்  ஹீரோயினாட்டம் பெட்ல  தொப்புன்னு விழுந்து அழுவாங்க. கொஞ்சம் அவங்க வழியிலே விட்டு பிடிச்சாதான் பிடிவாதத்த  விடுவாங்க. அவங்க நினைக்கிறது உடனையே நடந்தாகணும். சரியான காரணம் சொல்ற வரைக்கும் எதையும் ஒத்துக்க மாட்டாங்க.

என் செல்லக் கண்ணம்மா நீடூழி வாழணும். அவ வாழ்வில எல்லா சீரும் சிறப்பும் பெறணும். நீங்களும் அவங்கள மனதார வாழ்த்துங்க.

Hannaah Montana ங்கிற Miley Cyrus உடைய பரம விசிறி. வீடியோ போட முடியல. லிங்க்ல போய் பாருங்க. இதுதான் இப்போ அவங்க அதிகம் கேட்டு,பாடுற பாடல்.

http://www.youtube.com/watch?v=bo8tgpk7sOI

17 October, 2009

தீபாவளி ஸ்பெஷல் (அ) ஸ்பெஷல் தீபாவளி!!!

நலமா மக்களே...

நான் நலம். காயம் எல்லாம் ஆறிடிச்சு. உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. இந்த ஆதரவு எனக்கு என்னைக்கும் கிடைக்கணும்னு பிள்ளையார வேண்டிக்கிறேன். எனக்கு ஒரு நட்பு இருக்குங்க. பேருக்குத்தான் நட்பே தவிர என் மேல அக்கறையே கிடையாது. எப்பவும் நான்தான் பேசணும் அதுகூட. ஒரு தடவை எப்டி இருக்கேன்னு அதிசயமா கேட்டிச்சு. நல்லா இருக்கேன் ஆனா ட்ரெஸ் அயன் செய்யும்போது கைலதான் சுட்டுக்கிட்டேன்னு சொன்னதுக்கு வயசானா தோல் சுருங்கத்தானே செய்யும். அதுக்குன்னு அயன் செய்வாங்களான்னு கேட்டுச்சு. இப்போ என் வெடி விளையாட்டுக்கு  என்ன சொல்லி இருக்கும்னு நீங்களே கற்பனை ப்ளீஸ்...

எல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்துல இருக்கீங்களா? நல்லது நல்லது. நானும் தீபாவளிக்கு ஏதாவது எழுதணுமேன்னு ரொம்ப யோசிச்சேன். உடனவே பல்ப். இதுவரை நான் எந்த கதையுமே எழுதலை. தீபாவளிக்கு ஏன்  ஒரு கதை எழுதக் கூடாதுன்னு நினச்சு இதோ ஆரம்பிச்சுட்டேன். பயப்பிடாதீங்க. பசங்களுக்கு தினமும் ஒரு கதை சொல்றதால நல்லாவே சொல்வேன். குட்டிக் கதைதான். சோ கண்டினியூ...

அவளுக்கு நினைவு முழுவதும் அந்த ஊரின் அரசினர் வைத்யசாலையில்தான். ஆனால் அவளும் இன்னும் மூன்று பேரும் மட்டும் அரச அலுவலர்களுக்கான விடுதியில தனியா. நேரம் அதிகாலை ஐந்தை நெருங்கி கொண்டிருக்க  அவளால் கலைந்த தூக்கத்தை மீண்டும் தொடர முடியவில்லை. மூவரில் மூத்தவனுக்கு ஐந்து வயது, அடுத்தவளுக்கு நான்கு.  கடைசிக்கு ரெண்டு. என்னதான் அவங்க சத்தமே இல்லாம புறப்பட்டாலும் இவன் எழுந்து போட்ட கூச்சல ஒரு வழியா அடக்கி இப்போதான் மறுபடி தூங்க ஆரம்பிச்சிருக்கான். அதுக்குள்ளே அவங்க வந்திரணுமே. கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்.. அம்மா...ஆ... அவன்தான். இந்த தடவை கூட மற்ற இருவரும் எழுந்தாச்சு. பெரியவன் கேட்டான் சித்தி அம்மா எங்க? அப்பா காணம் இது நாலு வயசு. ஆஆ... இது ரெண்டு வயசு... அவள் செய்வதறியாமல் மலைக்க வெளியே கார் சத்தம். அப்பா என்றபடி ஓடின பெருசுகள்.

மணி அதிகாலை 5:31. நர்சக்கா ஓடி வந்து சொன்னாங்க உங்களுக்கு பெண் குழந்தைங்க. வெளியே  பதட்டத்துடன், நடப்பதும் இருப்பதுமாக ஒரு அரை மணி நேரத்தை அவஸ்தையுடன் கழித்தவர் காதில் அது தேனாய் பாய்ந்தது. நிம்மதியோடு குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார். உள்ளே சின்னதா ஒரு தடவை அழுதிட்டு சமத்தா இருந்த குழந்தை 4kg + 49cm ல இருந்தது. பட்டுக் கன்னத்தை வருடியபடி பக்கத்தில் பெருமையுடன் அம்மா. பக்கத்து பெட் பெண்ணோட பாட்டி சொன்னாங்க சமத்துக் குழந்தை எந்த கஷ்டமும் அம்மாவுக்கு குடுக்காம பிறந்திடுச்சேன்னு. எனக்கு மட்டுமில்ல யாருக்குமே என் பட்டுக்குட்டி  கஷ்டம் குடுக்கமாட்ட இல்லப்பா அம்மா சொன்னது அதன் அடி மனதில் அப்போதே பதிந்து விட்டதோ?

சித்தி சாக்லேட்.. கத்திக் கொண்டே ஓடி வந்தவங்க ஒண்ண மூணாவதுக்கு குடுத்தும் அழுகை நிக்கல. என்ன மாமா அக்கா எப்டி இருக்காங்க? இருக்காங்க. ப்ராப்ளம் ஒண்ணும் இல்ல. டேய் உங்களுக்கெல்லாம் தங்கச்சி பாப்பா பொறந்திருக்குடா... ஹைய்யா எனக்கு ரெண்டு தங்கச்சி பாப்பா இது பெரியவன். வாயில் வைத்த சாக்லட் கசப்பானது குட்டிப் பெண்ணுக்கு. ஒரே பெண் என்ற என் செல்லம் கெடுக்க வந்திட்டாளா ஒருத்தின்னு அப்பவே அதுக்கு தோணிச்சுதோ? சின்னது இன்னும் பெருஸ்...ஸா அழுகையோட வால்யூம கூட்டிச்சு. கடைக்குட்டி செல்லம் இனி தானில்லைன்னு அதுக்கு தெரிஞ்சிருக்கலாம். யார் கண்டா.

இப்போ என் கதையோட ஹீரோயின் வளந்தாச்சு. கணவன் ரெண்டு பசங்களோட சந்தோஷமா இருக்கா. அவளுக்கு குடும்பம், உறவுகள்,நண்பர்கள்தான் உலகம். இவ்ளோ ஏங்க நான் மேலே சொன்ன  என் ஃப்ரெண்டு கூட அவள பத்தி சொல்லி இருக்கு. கணவனுக்காக, குழந்தைகளுக்காக, உறவுகளுக்காக ஏன் நண்பர்களுக்காகன்னு பாத்து பாத்து செய்யிற பொண்ணு நிச்சயம் நல்லா இருப்பான்னு.

இப்போ நான் கதைய முடிச்சிட்டேன். நீங்க அவளுக்காக இன்னும் ரெண்டு வெடிய சேத்து வெடிச்சு, ஒரு பத்து ஸ்வீட்ட சாப்டுங்க. சாப்டாச்சா? அப்டியே சந்தோஷமா அவள வாழ்த்துங்க. எப்டீன்னா ஹாப்பி பர்த்டே சுசின்னு. இல்ல இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசின்னு. ஹிஹிஹி... உங்கள பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும். அதான் ரெண்டையும் எழுத சொன்னா. தீபாவளியோட சேத்து உலகமே அவ பிறந்தநாள கொண்டாடுறதா ரொம்ப சந்தோஷத்தில இருக்கா. உங்க வாழ்த்து இன்னும் சந்தோஷத்த குடுக்கட்டும்.கிஃப்ட மறக்காம அனுப்பி வச்சிடுங்க.

நண்பர்களே, சகோதர சகோதரிகளே உங்க அனைவருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.

பி.கு :- கதையோட ஆரம்பத்திலேயே எனக்கு பிறந்தநாள்னு புரிஞ்சுகிட்டவங்க சுத்த மக்கு. இடையில புரிஞ்சுகிட்டவங்க மக்கு. கடைசீ...வர படிச்சும் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா... நமக்கெல்லாம் நள்ளிரவு வாழ்த்து கிடையாதுங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ஞாபகம் இருந்தா வாழ்த்துவாங்க. பின் குறிப்பு முடிஞ்சாச்சு.

11 October, 2009

வாழ்த்து + சரவெடி + தீபாவளி.

எல்லோரும் நலமா இருக்கீங்களா நல்லவர்களே?
நான் நலமில்லை. மறுபடியுமா அப்டீன்னு கேட்டவங்களும் கேக்காதவங்களும் அப்டியே தொடர்ந்து படிச்சிட்டு போங்க.


முதல்ல வாழ்த்திடலாம். இன்னைக்கு குணாவோட பெரியண்ணனுக்கு பிறந்தநாள். அவர் எனக்கும் பெரியண்ணாதான். சின்ன வயசில எனக்கு குணா குடும்பத்தில ரொம்ப பிடிச்சது யாரன்னு கேட்டா இவர்தாம்பேன். என்ன எங்க பார்த்தாலும் பிடிச்சு வச்சிடுவார். ஒரு தடவை பெயர் வச்சு குடுங்கம்மான்னு மாமியார்கிட்ட  யாரோ வந்தப்போ அங்கிளோட என் அப்பா கடைக்குட்டி நானு பேர வைக்கலாம்னு இவர் சொல்லி என் பேர்ல ஒண்ணு இப்போ அவங்க ஊர்ல சுத்திகிட்டிருக்கு பாவம். ரொம்ப ஜாலியானவர். கொஞ்சம் முன்கோபி. அண்ணி மேல உயிரையே வச்சிருக்கார். அவரோட அன்புத் தங்கை நான். என் பொண்ணு அவங்களுக்கும்  பெண் செல்வம். ஏன்னா அவங்களுக்கு ரெண்டு பையன்கள் . பெரியப்பா இருக்கும்போது பொண்ணோட  அட்டகாசம் தூள் பறக்கும். நியூசீலண்ட்ல இருக்காங்க. ரெண்டு வருஷம் முன்னாடி மாமியார் இங்க வந்திருந்தப்போ காலிங் பெல் சத்தம் கேட்டு கதவ திறந்தா இவர் சிரிச்சுகிட்டே நிக்கிறார் சர்ப்ரைஸ்னு. மாமியாரும் மருமகளும் மயக்கம் போடாத குறை. அடுத்த வருஷம் குடும்பமா வரப் போறதா சொல்லி இருக்காங்க. பழைய பாட்டுன்னா உயிர். ரீமிக்ஸ் பழையபாடல் வந்தா நான் அனுப்பி வைக்கணும்.

ஹாப்பி பர்த்டே பெரியண்ணா.


நேத்து ஒரு பூப்பு நீராட்டு விழாவுக்கும்  ஒரு பர்த்டே பார்ட்டிக்கும் போயிருந்தோம். அத்தனை பேரும் என்ன பத்தி ரெண்டு விஷயத்துக்காக  பேசினாங்க. ஒண்ணு எப்டி வசந்த் இப்டீன்னு நம்ம பிரியமுடன் வசந்துக்கு பின்னூட்டம் போடற நம்மள  மாதிரி எப்டீங்க இவ்ளோ அழகா ஐசிங் போடறீங்கன்னு கேட்டது. ரெண்டாவதுதான் சரவெடி. கார்க்கியோட அடுத்த படம் கிடையாது. இது என்னோட அதி புத்திசாலித்தனத்தால நடந்தது.  என்னங்க ஆச்சு ஏற்கனவே குணா மூலமா தெரிஞ்சுகிட்டாலும் கன்ஃபார்ம் பண்றாங்களாம், உங்களுக்கு போயி இப்டியா அப்போ உங்களுக்குன்னா பரவால்லயா?, இருந்தாலும் குணாவுக்கு இவ்ளோ கோவம் வரும்படியா நீங்க நடந்திருக்க  கூடாது அவர எதுக்கு இதுக்க இழுக்கறீங்க  இப்டி பல தரப்பட்ட விசாரிப்புக்கள். என்ன ஆச்சுன்னு அறிய ரொம்ப ஆவலா இருக்கீங்களா? சொல்றேன் சொல்றேன். இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. நேத்து சனிக்கிழமை. சரியா? அதுக்கும் முன்னாடி வந்த வெள்ளிக் கிழமை அடிங் அவங்க தொடர்ந்து படிக்கணுமா வேணாமா?  வேலை  முடிச்சு வந்து சமையல கடுப்போடவ விட்டுட்டே  செஞ்சுகிட்டிருக்கும்போது மாமியார் கிட்ட இருந்து ஃபோன். என் சின்னண்ணனும் அவங்க வீட்ல வந்து நின்னதால அப்டியே கீழ போய் குணா கூட சேர்ந்து பேசினோம். பேசி முடிச்சு மேல வந்தா கிச்சனோட கண்ணாடி கதவு வழியா வழக்கமா தெரியற டைனிங் டேபிள காணோம். ஒரே புகை மூட்டம். அடுப்புல எதுவோ ஜகஜ்ஜோதியா எரிஞ்சு கிட்டிருக்கு. என்னடீ இதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு கிட்டப் போய் பாத்தா வெண்டிலேஷன்ல இருந்த அத்தனை பிளாஸ்டிக் பார்ட்ஸும் உருகி எரிய ஆரம்பிச்சதுமில்லாம சுத்தி இருந்த மரப் பகுதிகளும் லைட்டா எரிய ஆரம்பிச்சிடுச்சு. அப்போதாங்க என் மூளையில அது உனக்கு இருக்கா என்ன  பல்ப் நெருப்ப அணைக்க தண்ணி ஊத்தணும்னு சட்டுன்னு ஸ்விச் ஆனாச்சு. அப்டியே அந்த தீச்சட்டிய தூக்கிட்டு போய் (ஜ்வாலை கைகள பதம் பாக்க) சிங் மேல வச்சு டாப்ப திறந்து விட்... அப்புறமென்ன சரவெடிதான்...  சுத்தி இருந்த பொருட்கள், மேல கூரை, அப்டியே முன்னாடி நான்னு முழு இடமும் பறந்தது சூடான எண்ணை. கொழுந்து விட்டு எரிஞ்சது அப்பளாம் பொரிக்க நான் காய வச்சிருந்த எண்ணைங்கிறது  இந்த அறிவுக் கொழுந்துக்கு மறந்து போச்சே. கதவு மூடி இருந்ததால மணம், சவுண்ட், புகை எதுவுமே வெளிய போகலேன்னாலும் கேட்ட டீ வந்து சேரலியேன்னு பாக்கிறத்துக்காக குணா அட்டன்ச போட்டாரு. என்னடீ பண்றேன்னு கேட்டவர் நிலமையோட தீவிரம் புரிஞ்சு மிச்சமீதி வேலைய பொறுப்பேத்துக்கிடாரு. அப்புறம் என்ன அப்பளம் சுடப் போய் கொப்பளம்தான். மூக்கு கண்ணாடியால கண் தப்பிச்சு. காது கன்னத்தில சில துளிகள். ஃபங்க்ஷன்ல பரவால்லையே திருஷ்டிப் பொட்டு வச்சா மாதிரி உங்களுக்கு இதுவும் அழகாதான் இருக்குன்னு ஒரு ஃப்ரெண்டன்  சொல்ல சுத்தி இருந்த ஃ
ப்ரெண்டிகள் எல்லாம் என்ன அமுக்கி புடிச்சு பர்மனண்டாவே மெழுகுவத்தியால சூடு வைக்க பாத்ததுல கொஞ்சம் பயந்துட்டேன். உங்க  கிச்சன்ல ஃபயர் அலாரம் கிடையாதான்னு முன்னாடியே யாரோ கேட்டீங்க இல்லை? ஒரு ஃப்ளோல சொல்லிட்டு போனதால விட்டுபோச்சு. இப்போ பதில் சொல்றேன். இதுநாள் வரைக்கும் அதுக்கு வேலையே இல்லாம போனதில பாட்டரிய மாத்தலை. ஹிஹிஹி....


இனி தீபாவளி. ஏற்கனவே வைரஸ் காய்ச்சல். இப்போ கொதி எண்ணை சூடு. அதோட குணாவோட திடீர் கண்டிஷன். என் எழுத்துலகுக்கு டாட்டா சொல்ல சொல்லி இருப்பார்னு நினைச்சவங்களுக்கு சாரி. இது வேற. குறிப்பா என் பதிவுலக தம்பிகளுக்கானது. என் அன்புத் தம்பிகள்  கலை, கோபி மற்றும் மின்னல் மாதிரி அப்பப்போ வந்துட்டு போகும் தமிழ் பிரியன். நல்லா கேட்டுக்குங்கப்பா. மாமா தெளீவா சொல்லிட்டாரு. உன் தம்பிங்க சீர் அனுப்பி வச்சாங்கன்னாதான் இந்த வருஷம் தீபாவளி கொண்டாட்டம்னு. அக்கா பாவம் இல்லையா? உங்க மருமக்கள யோசிச்சு பாருங்க? இன்னும் ஒரு வாரம் இருக்கில்ல. கடன உடன வாங்கியாவது ஆவன செய்யுங்கப்பா. நல்ல  நாள் அதுவுமா அக்கா கண்கலங்கி நிக்கணுமா? நிக்கணுமா?நிக்கணுமா? அக்கவுண்ட் நம்பரும், அட்ரசும் மெயில்ல வந்துட்டே இருக்கு. ப்ளீஸ் ஹெல்ப் மீ தம்பீஸ்....



இந்த வருடம் என் ராசிய  சனிபகவான் கொடும்பார்வை பாக்க போறாராம். கோபி என்ன தொடர்பதிவுக்கு கூப்பிடும்போதே நினைச்சேன். அத்தோட அதற்கான முன்னறிவிப்புதான் இந்த வெடி  விளையாட்டுன்னு சாஸ்திர வல்லுனர்கள் சொல்லுறாங்க. இல்லேன்னா ஒரு அதிமேதாவியால இவ்ளோ முட்டாள்தனமா நடந்துக்க முடியாதாம். ரைட்டு! புரியுது. இதுக்கு மேலயும் எழுதணும்னு  தோணினாலும் அடிப்பாவி நல்லவங்கள இப்டியா சோதிப்பே  கை  வலிக்குது. அப்டியும் ஏன் இவ்....ளோ எழுதறேன்னு கேட்டீங்கதானே? சொல்றேன். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம்தாங்க.

போறத்துக்கு முன்னாடி பெரியண்ணாவுக்கு கிஃப்டா ஒரு சாங் போடலாம்னா டவுன்லோட் பண்ண முடியல. அதனால லிங்க் மட்டும் குடுத்துடறேன். பாருங்க. வரட்டுங்களா?
http://www.youtube.com/watch?v=h4jbjnsr60U 

04 October, 2009

முக்கிய அறிவிப்புகள்....

எல்லாரும் நலமா மக்கள்ஸ்?

நாங்க நலமா இல்ல..  குடும்பத்தோட ஜூரம் கும்மி அடிக்குது. குணா + சதுவுக்கு கும்மி கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு. எனக்கும் பொண்ணுக்கும் கொஞ்சம் கம்மி. இந்த வாரம் பசங்களுக்கு ஸ்கூல் லீவுங்கிறதால பரவால்ல. பாவம் லீவ்ல என்ன பண்ணலாம்னு பெருசா ப்ளான் போட்டு வச்சிருந்தாங்க.

மு.அ.நம்பர் ஒன்னு:-  நாங்க சீக்கிரமா குணம் ஆய்டணும்னு வேண்டிக்கங்கப்பா... போலி டாக்டர் போலி நர்ஸ் வேலையும் சேர்த்து  பாக்க வேண்டியதா இருக்கு...

************************************

அடுத்ததா அந்த மேட்டருக்குத்தான்  ஜம்பி வந்திருக்கேன். சோ யாரும் அவசரப்பட்டு டாக்டருக்கேவான்னு கேக்காதீங்க. முடியல... நான் தெளிவா போலி ன்னு போட்டும் யாரும் அத கண்டுக்கிறதா இல்ல. இங்க வரதுக்கு செலவாகுமேங்கிரதால நல்ல வேளை   ட்ரீட்மெண்டுக்கு நேர்ல வரலைன்னாலும் கேள்விக் கணைகளை அனுப்பிட்டே இருக்காங்க. தலைவலிக்கு தைலம் தேய்க்கிறது, முதுகு வலிக்கு மூவ் தேய்க்கிறது உட்பட சில பாட்டி, சித்தப்பா, ஒன்னு விட்ட பெரியப்பா வைத்யம்தான் எனக்கு தெரியும். ஏதோ யாவரும் நலமுக்கு பொருத்தமா இருக்கட்டுமேன்னு நான் போட்டது எனக்கு சொ.செ.சூ ஆய்டிச்சு. போலியையும் மீறி எப்டின்னு ரொம்ப மூளைய குடைஞ்சும் பதில் கிடைக்கல. யக்கா ஃபாலோயர்சில போலின்னு போட்டு வைங்கன்னு கோபி,  குட்டி சாரி.. சுட்டி காமிச்சதும்தான் தெரிஞ்சுது. தம்பி டாங்க்சுப்பா... நீங்க யாருமே பிரஃபைல் பக்கம் போறதில்லயா மக்கா? ஃபாலோயர்சோட எஸ் ஆயிடரீங்களா? ரைட்டுங்க. இன்னையோட மாத்திடறேன். ஆனா ஒண்ணுங்க தலைப்புக்கு டாக்டர் மாதிரி வேற எதுவும் பொருந்த மாட்டேங்குது. 

மு.அ. நம்பர் ரெண்டு:- என்ன லேபல்ஸ் போடலாம்கிற ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. டேமேஜுக்கு ஏற்ப ஆலோசனைகளுக்கு 'தக்க' சன்மானம் வழங்கப்படும்..

************************************

நேத்து The Love Guru படம் பாத்தேன். Mike Myers, Justin Timberlake, Jessica Alba நடிச்சிருந்தாங்க. படம் போன வருஷமே ரிலீஸ் நான் நேத்துதான் பாத்தேன். எஸ் ஆகாதீங்க ப்ளீஸ்... தமிழ் படத்துக்கே விமர்சனம் எழுத தெரியாத நான் உலக படத்துக்கா எழுத போறேன்??? அதில குரு சொன்னதில ஒரு விஷயத்த மட்டும் சொல்ல போறேங்க.
Be
Loving &
Openhearted
With
My
Emotions


எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஆனா புரிய வேண்டியவங்களுக்கு இது புரியுமான்னு தெரியல.

மு.அ. நம்பர்  மூணேய்:- எனக்கு குளிர் ஜூரம்.

************************************

இங்க இருட்டு ஆரம்பிச்சாச்சு. கூடவே குளிரும். சம்மர் வந்ததே தெரீல. அதுக்குள்ளே அடுத்த கால மாற்றம். ஆனா குணாவோட அலர்ஜி தொடரும் போட்டுட்டு போய்டுச்சு. அவருக்கு சம்மர் வந்தாலே அலர்ஜியும் கூட வந்திடும். ஒரு வகையான புல்லு, மகரந்தம், நாய், பூனைன்னு பெரிய லிஸ்ட் இருக்கு. மீ த ஃபஸ்டு லிஸ்ட்ல. நான்கூட இந்த வருஷம் பூனையாட்டம் மூக்க தேய்ச்சுவிட ஆரம்பிச்சிருக்கேன். இதுதான் அலர்ஜி வருவதற்கான முதல் அறிகுறியாம். ஆனா இந்த ஊரு பொண்ணுங்களுக்கு சம்மர்ல ட்ரெஸ் அலர்ஜியும் வந்திடுங்க. இதில இவ்ளோ warm country ல இருந்து வந்திருக்கே. இருந்தும் எதுக்கு இப்டி மூடி கட்டிக்கிட்டு இருக்கேன்னு என்ன பாத்து கேள்வி வேற. கேட்பவரின் நக்கலை பொறுத்து என் பதிலில் நளினம் இருக்கும்.

மு.அ. கட்ஸீ:- இங்கு எந்த அறிவிப்பும் கிடையாது.

************************************

அப்புறம் என்னங்க?   இப்டி கலவையா எழுதிட்டு அதுக்கு  எதுனா பெயர் வச்சாகணுமே. கூட்டு, பொறியல், சாலட் ஏன் காக்டெயில்னு கூட பேர் வச்சிருக்காங்க. யோசிச்சு நல்லதா ஒரு பேர அடுத்த தடவை வச்சிடறேன். இப்போதைக்கு ஒரு பழைய லேபல போட்டுக்கிறேன்.

28 September, 2009

என் செல்லக் கண்ணனுக்கு...

நாளைக்கு  என் குண்டுக் கண்ணனுக்கு பிறந்த நாள். நான் வேறு சில காரணங்களுக்காக லீவில வீட்ல இருக்கிறதுல அவருக்கு கூடுதல் கொண்டாட்டம்.  எனக்காகவா  லீவ்  போட்டீங்கன்னு துளைச்சு எடுத்திட்டார்.

அவர் ஒரு அம்மா செல்லம். பிறக்கும்போதே அம்மாவுக்கு ஜாஸ்தி கஷ்டம் குடுக்காதவர். அவர் பிறந்த அன்னிக்கு காலேல இருந்தே எனக்கு ஒரு மாதிரியா இருந்துது. சாயந்தரம் வரை வலி எடுக்கல. இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி பேசினப்போ உடனவே வரசொன்னாங்க. குணா மான்செஸ்டர் யுனைட்டட் மாச் பாத்துட்டு இருந்தாரு. இதோ முடிஞ்சிரும் போயிரலாம்னு கடைசீல மாச் முடிஞ்சு, ஹை லைட்ஸ் பாத்து, ஃப்ரெண்ட்ஸ் கூட ப்ளேயர்ஸ்  திறமைய பத்தி பேசி, அதுக்கும் மேல ஷேவ் செஞ்சு (தேவையே இருக்கலை. அன்னிக்கு எந்த அழகான நர்சுமே வரலை) ஒருவழியா போனப்போ நேரம் இரவு 20:50 சொச்சம். அவங்க கடுப்பாயிட்டாங்க. உனக்கு டெலிவரீல ப்ராப்ளம் இருக்குன்னு தெரியும்ல இப்டியா அசண்டையா இருப்பேன்னு கேட்டப்போதான் எனக்கு குளிர் எடுத்திடுச்சு. அப்புறம் பொண்ண ஒரு ஃபிரண்ட் மூலமா வீட்டுக்கு அப்பா கிட்ட அனுப்பி வச்சுட்டு, (ஏன்னா சாதாரண செக் அப்னு அவங்களையும் தூக்கிட்டு போய்ட்டோம்)  நேரா ஆபரேஷன் தியேட்டர் போயாச்சு. சரியா 21:38 க்கு ஹேய்ய் உங்களுக்கு ஒரு baby boy கிடையாது  ஒரு boy baby யா வந்து பொறந்திருக்குன்னு குறுக்க போட்டிருந்த திரைக்கு மேலால எட்டி பாத்து சொன்னாங்க. 4570g + 52cm ல பிறந்த என் கண்ணன நர்ஸ் கொண்டு வந்து காட்டினப்போ தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்துது.

என் மறுபிறவி... அந்த நிமிடம்.... அவரை என் கைகளில் ஏந்திய நொடி... பிசுபிசுன்னு இருந்த என் கண்ணனோட நெத்தியில நான் கொடுத்த முதல் முத்தம்... 
என் பிறவிப் பயன்!!!


இவர் என்ன மாதிரி கொஞ்சம் சாஃப்ட் காரக்டர். அடுத்தவங்க மனசு நோகாம நடக்கணும்கிற அக்கறை இப்பவே இருக்கு. மன்னிப்பு, நன்றி ரெண்டும் இவர் அகராதியில ரொம்ப முக்கியம். அவரும் சொல்றதோட அடுத்தவங்களும் சொல்லணும்னு அதிகம் எதிர் பார்ப்பார். உலகத்திலேயே அதி புத்திசாலியாவும்  (அவருக்கு தெரியாதத சொல்லும்போது) அதி முட்டாளாவும் (மறுபடி மறுபடி சொல்லும்போது)  சிலவேளை நான் இருக்க வேண்டியதிருக்கும். அன்பா அவருக்கேத்தா மாதிரி சொன்னா எதுவும் எடுபடும். கத்தல், கோபம்னு போனா ஒரு வாரம் கழிச்சு கூட கேப்பார் அன்னிக்கு நீங்க அப்டி என்னைய திட்டினீங்க உங்களுக்கு எம் மேல அன்பில்லையான்னு.

அம்மா இந்த பொட்டு உங்களுக்கு நல்லால்ல, இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லாருக்குன்னு அக்கறையோட சொல்ற ரெண்டாவது ஆள் அவர்தான். செல்லமா முகத்த வச்சுகிட்டு ஏதாவது கேக்கும்போது கடவுளே என்னால மறுக்கவே முடியாது... கூடவே ஒரு ப்ளீஸ் வேற. என்ன பண்ண அவர் நன்மைக்காக சிலதுக்கு மறுப்பு சொல்ல வேண்டி வருதே.  உடனேயே அப்பா செல்லம் ஆய்டுவார்.

பேசும்போது விஷயத்த சொல்லி முடிச்சு ஒரு பத்து இருபது செகண்ட்ஸ்  கழிச்சு அம்மா ன்னு அழுத்தமா சொல்வார். அதில இதுக்கு என்ன செய்யப் போறீங்கன்ற கேள்வியோட நான் சொன்னது புரிஞ்சுதாங்கிற கேள்வியும் சேர்ந்து இருக்கும். அக்கா ஸ்கூல் தவிர மீதி நேரம்லாம் தம்பின்னுதான்   கூப்டணும்னு ஆர்டர் போட்டுருக்கார். ஸ்கூல்ல எல்லாரும் தன்ன தம்பின்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அவருக்கு பிடிச்ச கிஃப்ட் லிஸ்ட் போட்டு போன வாரமே குடுத்துட்டார். அதில எது நாங்க வாங்கி இருப்போம்னு தனக்கு இப்பவே தெரியுமாம்னு  காலேலையே  சொல்லியாச்சு. கட்டாயம் தூங்கியே ஆகணுமா, பனிரெண்டு மணி வரைக்கும் முழிச்சு இருக்க கூடாதா, எனக்கு தூக்கமே வரலை, நான் டயர்டாவும் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவர் இப்போ அசந்து  தூங்கிட்டு இருக்கார். இனி அவர எழுப்பி நாங்க வாழ்த்தப்போறோம்.

என் செல்லக் கண்ணன் எல்லா சீரும் பெற்று, சிறப்போட மன நிறைவா வாழணும்னு என் பிள்ளையாரை வேண்டிக்கிறேன். நீங்களும் வாழ்த்துங்க.

அவர் ஒரு விஜய் விசிறி. வெக்கேஷனுக்கு கார்ல ட்ராவல் பண்ணப்போறோம்னு சொன்னா  அம்மா எனக்கு விஜய் படம் எடுத்து வச்சீங்களான்னுதான் முதல்ல கேப்பார்.  வீடியோ சாங் போடுறதில சிக்கல் இருக்கிறதால அவர் கேட்ட ராமா ராமா சாங் (எனக்கு மட்டும் இல்லைன்னு தோணுது) போட முடியலை. அதனால விஜய் ஸ்டில் மட்டும் போடறேன். முடிஞ்சா புலி உறுமுது பாட்ட ஒரு தடவை கேளுங்க அவருக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.





22 September, 2009

எல்லோரும் கொண்டாடுவோம்...

இப்போ கொஞ்சநாளாவே என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சு. கேள்வி இதுதான் தலைவி என்ன செய்யப் போறீங்க? அதுதாங்க நம்ம கலை என்ன அனைத்துலக கார்க்கி ரசிகர் மன்ற தலைவீன்னு அறிவிச்சதால வந்த வினை. நல்லாருங்க கலை!!! முன்னாடியே உங்களுக்கு சொல்லி இருந்தேனே மன்ற வேலைகள் இருக்குன்னு. ஞாபகம் இருக்கில்ல? மன்றத்தோட திட்டங்கள ஒழுங்கா நடைமுறை படுத்திடணும் தம்பி. இல்லேன்னா கொபசெ பதவியில இருந்து தூக்கிடுவேன்.

இனி விஷயத்துக்கு போவோமா..

நம்ம பதிவுலக பிரபலம்,
மொக்கைகளின் சாமி,
சினிமா சின்னசாமி,
அப்பப்போ சீரியஸ் சாமி,
புட்டிக் கதைகளின் புகலிடம்,
அஞ்சா நெஞ்சன்,
ஏழுவை வாழ வைக்கும் தெய்வம்,
சிறுகதை, கவிதை, விமர்சனம், காதல், அரசியல் என்று கலந்து கட்டி அடிக்கும்
காக்டெயில் கார்க்கி
சாரி.. சாளரம் கார்க்கியின் பிறந்த நாள்....

அதை பதிவுலகமே அதிரும்படியா கொண்டாட
வேண்டாமா? வேண்டாமா? வேண்டாமா?

கொண்டாடிடுவோம்!


நிகழ்வுகள் பின்வருமாறு.

-மொக்கை குட்டி சாமி, வருங்கால பிரபல பதிவர் பப்லுவ சந்திச்சு கூட நின்னு போட்டோ எடுத்து அவரோட ஆட்டோக்ராஃப் வாங்கிக்கலாம். (இதுக்கு மட்டும் கட்டணம் கிடையாது)

-ஏழுவ சந்திச்சு பேசி அப்புறம் நீங்க ஏழரையோட வீட்டுக்கு போகலாம்.

-சைடு வாங்கிகிட்டு நிக்கிற கார்க்கியோட கட் அவுட்டுக்கு (இப்போ வேற ஃபோட்டோ போட்டிருக்காரா பிரஃபைல்ல) பால் அபிஷேகம்(?) பண்ண வசதியா சைடாவே ஏணி கட்டப்பட்டிருக்கும். மத்தபடி கொலைவெறியோடு வரும் ரசிகர்கள் அழுகின தக்காளி, முட்டை போன்ற 'தேவைப்பட்ட' பொருட்களை தாங்களே எடுத்துட்டு வரணும். இதுக்கான தனி வழி + கட்டண விபரம் அறிய கொலைவெறி கொபசெ வை அணுகவும்.

-அவர் உயிரை வாங்கிய காஜல் அகர்வால கூப்டா கார்க்கிய மறந்து கூட்டம் அங்க போய்டும்னு எச்சரிக்கப் பட்டதால அந்த திட்டம் அமுலாகலை. பதிலுக்கு ஷக்கீலா டக்கீலாவோட வந்து ஒரு குத்தாட்டம் போடுவாங்க.

-ஆண்ட்ரியா வந்து பாடினா இவர் ரெக்கை முளைச்சு பறந்து விடும் அபாயம் இருக்கிறதுனால பறவை முனியம்மா தேனீ குஞ்சரம்மாவோட சேர்ந்து கும்மி அடிச்சு குலவை பாடுவாங்க.

-ஆதி எடுத்த நீ எங்கே படம் முழு நாளும் தொடர்ச்சியா திரையிடப்படும். இது பார்க்காம யாரும் எஸ்கேப் ஆக முடியாது என்பது பின் குறிப்பு.

-முக்கியமா விழாவுக்கு வரும் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஒண்ணு படி ஒரு சாளரம் இவர் நினைவா குடுக்கப்படும்.

-குறிப்பா பாதுகாப்பு பொறுப்ப மன்றத்தோட தானை தளபதி என்ற ரீதியில என் கண்ணாளன் குணாளன் பாத்துப்பார்.

பி.கு- நான் அடுத்த பதிவு போடும்வரை கொண்டாட்டம் நடைபெறும்.
பி.கு டூவு - மக்கள் கொண்டு வரும் பரிசுகளும் பணமுடிப்பும் தலைவிக்கே சொந்தம். மத்த பிற டேமேஜுகள் விழா நாயகனையே சேரும்.
பி.கு மூணு-ஒரு பாட்டு அவருக்காக மன்றம் சார்பா போட்டிருக்கேன். இஷ்டப்பட்டவங்க பாத்துக்குங்க.
பி.கு லாஸ்ட்டு - அப்டியே அவங்க அவங்க பர்த்டே எப்பன்னும் மறக்காம பின்னூட்டத்தில போட்டுட்டு போங்க. உங்கள வாழ்த்திர சாக்கில நானும் ஒரு பதிவு போட்டுடுவேன் இல்ல... (நீ சமத்துடி சுசி விருதுக்கும் வாழ்த்துக்குமே பதிவ போட்டுடுரே.. கீப் இட் அப்.)

இப்போ இன்று பிறந்தநாள் காணும் விழா நாயகன் கார்க்கி அவர்களை சாளரம் வழியே ஜம்பி வந்து புட்டிய ஓபன் பண்ணி சாரி.. ரிப்பன கட் பண்ணி விழாவை தொடக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
சென்னையின் சிங்கமே ஹைதையின் தங்கமே வாங்க கார்க்கி வாங்க....


15 September, 2009

அவரும் நானும்....

எல்லோரும் நலம்தானா ?

நானும் நலமே.


நான் பதிவு எழுத ஆரம்பிச்சதில இருந்து இந்த குணாவுக்கு என் மேல ரொம்ப பொறாமை வந்திடுச்சுங்க. என் எழுத்துத் திறமை என்னை உலகளாவிய ரீதியில் பிரபலம் ஆக்கியிருப்பது அவருக்கு பொறுக்கலை. விடுங்க விடுங்க. பிரபலமானா சில பல பிரச்சனைகள், போட்டி பொறாமைகள் வந்துதானே தீரும்.


வாரம் ஒரு பதிவு போடவே நான் படற கஷ்டம் அவருக்கு எங்க புரியப் போது. சும்மா அத படிக்கிற உங்க கஷ்டத்த பத்தி மட்டுமே பேசினா எப்டி? நானும் எதோ கொஞ்சம் மனசாட்சி உள்ளவங்கிரதாலதானே தினமும் எழுதலை. அநியாயத்துக்கு என் மேல குத்தம் சொல்ல கூடாதில்லையா.


அது மட்டுமா பொட்டி முன்னாடி உக்காந்தா போதும். அப்போதான் அவருக்கும் பசங்களுக்கும் நான் ஒருத்தி வீட்ல இருக்கேங்குற ஞாபகம் வரும். அம்மா அது, சுசி இதுன்னு எத்தனை தடங்கல்.. இதையெல்லாம் தாண்டி நான் எழுதுரத்துக்குள்ள எழுத வந்த விஷயம் மறந்து போய்டும். அது யாரது இல்லேன்னா மட்டும்னு இப்போ நினைச்சது? ஓ என் மனசாட்சியா...


இந்த சண்டே ஒரு பர்த்டே பார்ட்டி போயிருந்தோம். பெரும்பாலும் பேச்சு என்னை சுத்தியே இருக்க ரெண்டு காரணங்கள். ஒண்ணு கேக் ஐசிங் செஞ்சது நான். அதுக்கு சீரியஸா முகத்த வச்சுக் கிட்டு என்னமோ தான்தான் செஞ்சா மாதிரி குணா குடுத்த பில்டப்புல நீங்களும் இருக்கீங்களேன்னு சில மனைவியர் கணவன்மாரை கடும் பார்வை பாத்துக்கிட்டாங்க. நான் குணாவ கொடும் பார்வை பார்த்தது வேற விஷயம்.

அடுத்தது நான் இளைச்சுட்டேனாம். டாக்டர பாத்தீங்களா, டயட்ல இருக்கீங்களா, ஏதாவது பிரச்சனையா இப்டீன்னு ஏகப்பட்ட கேள்விகள். என் மேல அவங்களுக்கு இருந்த அக்கறைய பாத்து எனக்கு அழுகையே வந்துடிச்சு. குணா கிட்ட கேட்டப்போ அவளுக்கு புதுசா இப்போ ஒரு வெட்டி வேலை கிடைச்சிருக்கு அதான்னு சொல்லிட்டு சரிதானேங்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தார்.. நான் சொன்னேன் இல்லை எனக்கு கவலைகள் சிலதிருக்கு அதான்னு. அது சொ.செ.சூ ஆயிடிச்சு. நிஜம்தாங்க, பாவம். இத்தனை நாள் என்ன கொடுமைப்படுத்தினது அவளுக்கு பெருசா தோணலை. ஆனா இப்போ ஒட்டுமொத்த பதிவுலகத்தையே கொடுமைப்படுத்தும்போது அவளுக்கு கவலையா இருக்குன்னார். இது ரொம்ப ஓவரு. என் பதிவை அவ்ளோ பேர் படிக்கிறதில்லைன்னு எனக்கு தெரியாதா என்ன.ஏங்க அவ்ளோ கொடுமையாவா இருக்கு நான் எழுதுறது????

என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.

மீண்டும் சந்திக்கிறேன் ஒரு நல்ல முடிவுடன்.

04 September, 2009

விருதும் வாழ்த்தும்...

நலமா உறவுகளே... நானும் நலமே.







பாத்தீங்களா வருஸ்ஸையா மூணு விருதுங்க. அத எல்லாருக்கும் பிரிச்சுக் குடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில நான் இருக்கேன். பணமுடிப்பு, பொற்கிளின்னா விஷயம் வேற.

முதலில் எனக்கு பட்டாம் பூச்சி விருதை தந்த கார்த்திகேயனுக்கும், சுவாரஸ்ய பதிவர் விருது தந்த காயத்ரிக்கும், நட்பு வட்டத்துக்குள் என்னையும் சேர்த்துக் கொண்ட வசந்துக்கும் நிறைய நன்றிகள்.

இதில் பட்டாம்பூச்சி விருதை
இது நம்ம ஆளு பாரதியார்
இவங்களுக்கு குடுத்துடுறேன்.

சுவாரஸ்ய பதிவர் விருதை
சாளரம் கார்க்கி
வடலூரான் கலையரசன்
தமிழ்த்துளி டாக்டர் தேவா
இவங்களுக்கு குடுத்திடுறேன்.

அடுத்துதான் ரொம்ப கஷ்டம். கரெக்டா பத்து ஃப்ரென்ட்ஸ சொல்லணுமாம். இருந்தாலும் என் ஃப்ரெண்ட்ஸ் உங்க ஃ ப்ரெண்ட்ஸ், உங்க ஃப்ரெண்ட்ஸ் என் ஃப்ரெண்ட்ஸ், அவங்க ஃப்ரெண்ட்ஸ் நம்ம ஃப்ரெண்ட்ஸ்னு சுருக்கமா சொன்னா எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ்தான் இல்லையா.
இது நம்ம ஆளு பாரதியார்
இது என்னோட இடம். தமிழ்பிரியன்
சாளரம் கார்க்கி

இவங்களோட என் பதிவை படிக்கிற எல்லாருமே என் நண்பர்கள்தான்.
ஆணிய புடுங்கிகிட்டே பதிவையும் எழுதுறதால நட்பு சம்பந்தமான பாட்டோ படமோ போட முடியலை. உங்களுக்கு பிடிச்ச பாட்டை நீங்களே ஒரு வாட்டி பாடிக்குங்க. ஆஃபீஸ்ல செக்யூரிட்டி சிஸ்டம் ரொம்ப மோசம். நெட் அக்செஸ் குடுக்காம ஒரு பதிவரோட வளர்ச்சிக்கு தடையா எவ்ளோ அநியாயம் பண்றாங்க பாத்தீங்களா?

அடுத்ததா வாழ்த்து.... என் கூட ஃபோன்ல ரொம்ப அட்டகாசம் பண்ணிட்டு இருக்கிற ரெண்டு பேருக்கு.
ஒருத்தர் பெரியண்ணனோட மூணாவது வாரிசு ஊர்ல இருக்கார். கொஞ்சம் சாது. என்கிட்டே அப்பா பூஷு ம்மா பப்புன்னு கொஞ்ச நேரம் சமத்தா பேசிட்டு போய்ட்டே இருப்பார்.

அடுத்தவர் கானடால இருக்கார். அக்காவோட மூணாவது வாரிசு. ரொம்ப வாலு. அப்பப்போ குடும்ப உறப்பினர்கள் இவரால வீங்கின தலையோட அலைய வேண்டியதிருக்கு. எது கிடைச்சாலும் எடுத்து அடுத்தவங்க மண்டை மேலேயே அடிக்கிறது இவர் ஸ்டைல். நான் பேசும்போது மட்டும் கண்ணை விரிச்சுக் கிட்டே கேட்டுட்டு இருப்பாராம். அம்மாவோ அக்காவோ பேசுடி கேட்டுட்டே இருக்கார்னு அப்பப்போ சொல்லலேன்னா அவர் லைன்ல இருக்காரான்னே தெரியாது. எனக்கென்னமோ சித்தி கிட்ட பேச வச்சிடுவேன்னு சொல்லி அவர அக்கா மிரட்டி வச்சிருக்காளோன்னு லைட்டா டவுட்டு.

இருந்தாலும் எப்ப பாத்தாலும் ஷித்தி ஷித்தின்னே அவர் சொல்லிட்டு இருக்கிறதுல அக்கா ரொம்பக் கடுப்பிலேயும் மாமா அதீத ஆனந்தத்திலேயும் இருக்கிறதா தகவல்.

செல்லக் கண்ணன்கள் ரெண்டுக்கும் இந்த மாசம் ஒரு வயசு ஆகுதுங்க. அவங்க என்னிக்குமே சந்தோஷமா நீடூழி வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

அப்புறம் என்ன. அடுத்த பதிவில உங்க எல்லாரையும் சந்திக்கிறேன். அது வரை நலமா இருங்க.

28 August, 2009

என் அன்பு அப்பாவுக்கு...



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.
என்னோட வழக்கமான ஸ்பெஷல் கிரீடிங் இந்த தடவை பதிவு வடிவில. உங்களோட வழக்கமான முறுவலோட படிக்கிறீங்களா? படிங்க...

முன்னல்லாம் எங்களுக்குள்ள பெரிய போட்டியே நடக்கும். யார் உங்களை முறைக்க வைக்கிறதுன்னு. நீங்க எங்களை அடிச்சதில்ல. (நான் மட்டும் ஒரே ஒரு வாட்டி மழைல நனைஞ்சுட்டு ரொம்ப லேட்டா தனியா வீட்டுக்கு வந்ததுக்கு ஒரு அடி வாங்கி இருக்கேன். அந்த பாக்யம் மத்தவங்களுக்கு கிடைக்கல) அடி குடுக்காத வலிய உங்க பார்வை குடுத்திடும்பா. எப்பவும் அன்பும் சிரிப்புமான உங்க முகத்தில கோபத்தை நாங்க அதிகம் பார்த்ததில்லை.

உங்களை தெரிஞ்சவங்க அப்டியே உன் அப்பாவோட குணம் உன்கிட்ட வந்திருக்குன்னு சொல்லும்போது உடனேயே குட்டிப் பொண்ணா ஆயிடறேன்பா. ஏன்னா அப்போ ஆரம்பிச்சது இந்த பெருமிதம்.

சமயத்தில எங்களுக்கே டவுட்டாருக்கும் இவங்க எங்க ஃபிரண்ட்சான்னு, உங்ககிட்ட அவ்ளோ உரிமை அவங்களுக்கு. அதிலேயும் ஒருத்தர் மருமகன்னு ஆனதும் நீங்க வெட்கத்தோட திடீர்னு மரியாதை குடுக்க ஆரம்பிச்சதும் நாங்க இப்பவும் கிண்டல் பண்ற ஒரு விஷயமாச்சே.

எங்களுக்கு நீங்க குடுத்த சுதந்திரமே வேலியாய் எங்களை காப்பாத்திச்சு. இது என்னால முடியலப்பான்னு உங்க கிட்ட சொல்லும் வரை தான் அது முடியாத காரியம்.

அம்மாவை சில சமயம் நீங்க புரிஞ்சுக்காம நடந்துக்கிறதா சொல்லப்படும் குற்றச்சாட்டு அவங்க தலைவலீன்னு படுத்த அடுத்த நிமிஷமே சூடா ஒரு கப் டீயும், டாப்லட்டுமா அவங்க பக்கத்தில உங்கள பாக்கிறப்போ மன்னிக்கப்படும்.
பெரியண்ணன் தோளை மிஞ்சுமுன்னரே உங்க தோழன் ஆன பெருமைக்குரியவன். இன்றும் உங்க மந்திரி அவன்தானே.
அக்கா பேச்சுக்கு எப்பவுமே மதிப்பு குடுப்பீங்க. ஆனா இப்போ ரெண்டு நாள் பேசலைன்னா கூட எங்க என் குட்டிப் பொண்ணோட குரலைக் காணோம்னு நீங்க கேக்கறப்போ புரிஞ்சுக்கிட்டேன்பா.. உங்கள பொறுத்த வரைக்கும் நான் இன்னும் குழந்தைதான்னு. சின்னண்ணனுக்கு காதல் தவிர அத்தனைக்கும் உங்க வழிகாட்டுதல் தேவைப்பட்டுது.

என்னைய மட்டும் முதல் ஆளா கட்டிக் குடுத்து விரட்ட பாக்கிறீங்களே என்ற கோபம் கணவன் என்ற புது உறவோட அப்பா என்ற அன்பு நண்பனும் எனக்கு கிடைச்சப்போ
காணாமலே போய்டுச்சுப்பா. நீங்களும் அத புரிஞ்சுகிட்டீங்கங்கிறது ஆசீர்வாதம் பண்ணும்போது நீங்க சிரிச்ச சிரிப்புல தெரிஞ்சுதுப்பா.
ஞாபகம் இருக்கா... நிறைமாத கர்ப்பத்தோட ஏர்போட்ல என்னப் பாத்தப்போ கண்கள் பனிக்க என் தலையை வருடிய நொடியிலிருந்து நீங்க எனக்கு தாயுமானவர். அம்மா கூட ரெண்டு பொண்ணுங்களையும் அப்டி பாத்ததில்லையே.

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் இதே அண்ணன்கள், அக்கா, அம்மா, நீங்க, கணவன், குழந்தைகளோட வாழணும்.. ஆனா இப்டி திக்குக்கு ஒருத்தரா இல்லாம எல்லாரும் ஒண்ணா. உங்களுக்கு நீண்ட ஆயுள், மன நிறைவோட வழக்கம்போல கடவுள் கிட்ட இதையும் கேக்கப் போறேன்..

நீங்க எப்பவும் சொல்றத சொல்லி முடிச்சுக்கிறேன். நீங்க யாருக்கும் தீங்கு செய்யலை.. செய்யவும் போறதில்லை.. உங்களுக்கு கிடைக்க வேண்டியது இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும். அது வரை பொறுத்திருப்போம்.

ஹாப்பி பர்த்டே அப்பா..

அன்பு முத்தங்களுடன்..
கடைக்குட்டி.

16 August, 2009

கார்க்கி - மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

யாவரும் நலமா மக்களே....


நானும் நலம்தான்.


இன்னைக்கு தோரணை படம் பார்த்தேன். என்னது வில்லு ரிலீஸ் ஆய்டுச்சாமான்னு கேட்றாதீங்க. இங்க தியேட்டர்ல தோரணை போடலை. நான் நெட்லயும் பாக்கறதில்ல. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்களை சன் போடும்போதோ இல்ல block buster movie ன்னு கலைஞரும் ஐங்கரன் இன்டர்நேஷனலும் கூட்டு சேர்ந்து போடும்போதோதான் பார்ப்பேன். லண்டன் போனப்போ நிறைய்ய படங்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். தோரணை பார்த்திட்டு இருக்கும்போது சட்னு ஒரு விஷயம் தெரிஞ்சுது. இந்த ஸ்டைல நான் எங்கேயோ பார்த்திருக்கேனேன்னு. அத நேரடியாவே சம்பந்தப் பட்டவர் கிட்ட கேட்ரலாம்னுட்டு பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன். இதனால மானாட மயிலாடவுக்கு வரலைன்னு கலா மாஸ்டர் வேற கோச்சுக்கப் போறாங்க.


இவர பார்த்திருக்கீங்களா? பார்த்தவங்க படிக்கறத தொடருங்க. பார்க்காதவங்க ஷகீலா (அ) டக்கீலான்னு கூகிளாண்டவர கேட்டீங்கன்னா இவர் பக்கம் கைய காமிப்பாருன்னு இவரே சொல்லி இருக்கார்.


அப்டியும் சிக்கலேன்னா சாளரம்







இப்போ இவங்கள்ல ஸ்ரேயாவ விட்டுட்டு விஷால மட்டும் பாருங்க.


பாத்தீங்களா! அதே டிரெஸ்ஸிங் ஸ்டைல்.. அதே தொப்...பி..... இத லக்கலக்க ரஜனி ஸ்டைல்ல சொல்லிக்குங்க. அதே கண்ணாடி..







இப்போ ஷ்ரேயாவ ஜூஸ் குடிக்க அனுப்பிட்டு விஷால் பின்னாடி ஒரு மரத்த வச்சா...........???





இப்பிடி இருக்கும்.....!!!!!





அதே கண்ணாடி... அதே ஹேர் ஸ்டைல்..









இப்டி வழக்க விரோதமா உக்காந்து கிட்டார் ப்ளே பண்ண கார்க்கிகிட்டதான் விஷால் கத்துக் கிட்டாராம். கார்க்கி வித் கிட்டார் ஸ்டில் கிடைக்கல.




இப்போ மறுக்கா மேலே போயி பதிவோட தலைப்ப படீங்க..


அதே தான்....

இவ்ளவுக்கும் இவர் ஒரு விஜய் ரசிகராமாமாம்.


என்னதான் இவர் நாங்க யாரு தெரியுமில்ல!!! ன்னு சொன்னாலும், தெரீல....

இவர் யார் ரசிகர்னு....



பின் குறிப்பு (அ) முன் குறிப்பு :-


நான் மேற் சொன்ன நபர்களுக்கும் இந்த படத்தில் சிரிப்பவருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறேன்.
இதை மனதில் கொண்டு பின்னூட்டத்தை போடவும்.




பி.கு :- கார்க்கியின் ஸ்டில்ஸ் அவர் பதிவிலேயே சுடப்பட்டவை.
பி.கு. க்கு பி.கு :- இந்த பாடலில் கார்க்கியை அல்ல விஷாலை பார்க்கலாம், கூட ஸ்ரேயாவும் பலரும்.

இப்போ மறுமறுக்கா அல்லாரும் மேலே போய் தலைப்பை படீங்க... சுசி ஜூட்டேய்....

12 August, 2009

லண்டன் ரிட்டர்ன்.....

நல்லா இருக்கீங்களா நல்லவர்களே?

நான் வந்துட்டன். வந்துட்டன். வந்துட்டன். அலறிக்கிட்டே வந்துட்டன். ஏன்னு தொடர்ந்து படீங்க பதிவுலக வழக்கப்படி கடைசீல சொல்றேன்.

சீட் நம்பர் பாத்ததுமே நாலு பேர் கொண்ட குடும்பம் பிரிஞ்சு உக்கார வேண்டிய சோதனை உருவாச்சு. போகும்போது அப்பா கூட வரும்போது அம்மா கூடன்னு குட்டீஸ் எடுத்த முடிவு செயலாச்சு. என் கெட்ட + குணாவோட நல்ல நேரம் என் பக்கத்தில ஒரு வயதான தம்பதி. குட்டிக் கைகளோட திடீர்னு பெரிய கையும் பின்னாடி இருந்து சேட்டை பண்ண ஆரம்பிக்க சிரிச்சு கிட்டே ஆன்டி என் கூட பேச ஆரம்பிச்சாங்க. அப்புறமென்ன சுசி ஜாலியா பீட்டர் மொக்கைய ஆரம்பிச்சுட்டா.

குணா தம்பி வீட்லதான் டேரா. ரெண்டு வருஷமாச்சு பாத்து. அண்ணன் குடும்பத்த பாக்காத கவலேல பாவம் ரொம்ப குண்டாயிட்டாரு. வைஃப் உண்டாயிருக்காங்க. குணாவுக்கு அவ்ளோ கொண்டாட்டம். சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ எல்லாம் பாரபட்சமே இல்லாம தம்பிய வாரிக்கிட்டே இருந்தாரு.

நல்லவங்க போற ஊர்ல எல்லாம் மழை பெய்யும்கிரதுக்கு சரியா ஒரே மழை. பசங்களுக்கு டபுள் கூத்து நனைஞ்சு கிட்டே ஊர் சுத்தரோம்னு. நான்தான் கொஞ்சம் எடை குறைஞ்சு போய்ட்டேன். என்னங்க? புரியலையா? நான்தான் குணாவோட சர்க்கரைக்கட்டி,பசங்களோட sweet அம்மா.. சரி விட்டுர்றேன், படிக்கிறத விட்ராதீங்க.

Big Ben முன்னாடி ஃ போட்டோ புடிச்சோம், London Eye இல ஒரு சுத்து வந்தோம், Madame Tussauds போய் வெளிய வர்றதுக்குள்ள போதும்னு ஆயிடிச்சு. ஆளாளுக்கு எப்டி இருக்கே சுசி, ஏன் ரெண்டு வருஷமா வரலைன்னு பேச ஆரம்பிச்சா எப்டீங்க விட்டுட்டு வர முடியும்? இந்த ஆஞ்சலீனா ஜூலிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ஒரு வேளை பிராட் பிட் எங்கிட்ட ரொம்ப நேரம் பேசினது பிடிக்கலையோ என்னமோ. Bluewater Shopping Centre ல சுத்தினோம். OLD TRAFFORD Manchester United football club stadium + museum பார்த்தது ஒரு வித்யாசமான அனுபவம். அதுவும் குணா டீமோட பரம சப்போட்டர் வேற. ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. இடையில சிலபல நண்பர்கள், உறவினர்கள சந்திச்சோம். Birmingham பாலாஜி கோயில் போனப்போ சுமங்கலி பூஜை நடந்துட்டு இருந்துச்சு. நான் வேற மாடர்ன் சுமங்கலியா போய் நின்னுட்டன்.. மாமா பையன் என்னக்கா இன்னைக்குன்னு இப்டி பப்பரப்பான்னு வந்து நிக்கறேன்னு வார ஆரம்பிச்சுட்டான்.

அவன பத்தி சொல்ல மறந்துட்டேன். பத்து வருஷத்துக்கு அப்புறம் சந்திச்சோம். ஆளும் அறிவும் வளர்ந்தாலும் இப்பவும் என்னோட அதே குட்டி மச்சான்தான். பசங்களும் நல்லாவே ஒட்டிக் கிட்டாங்க. கொழுந்தனார் இருக்கிறது சிட்டிக்கு ரொம்ப வெளிய. அதனால நினைச்சாப்ல ரெஸ்டாரன்ட்ல கொட்டிக்க முடியல. நானும் அவனும்தான் சமையல். மழைக்கு சூடா அவிச்ச வேர்க் கடலை சாப்டா நல்லா இருக்கும்டான்னு சொன்னதுக்கு காய வச்சு உடைச்ச வேர்க் கடலை வாங்கி ஒருநாள் பூரா ஊற வச்சு அவிச்சீங்கன்னா அவிச்ச வேர்க் கடலை உடைச்சு சாப்டுற கஷ்டம் இல்லாம கிடைக்கும்னு சிலபல பாச்சிலர் டிப்சும் குடுத்தான். வரும்போது ஏர்போர்ட்ல பார்க்க ரொம்ப பாவமா இருந்துது. அடிக்கடி வாங்கக்கான்னு சொல்லும்போதே கண்ணு கலங்கிடிச்சு. வெளிநாடு, தனிமை.. பாவம்....

Theme Park • Alton Towers என்னைய அலற வைச்ச இடம். ஒரு Oak மரம், சூனியக்காரி, 200 வருஷம் முந்தின கதைன்னு சொல்லி உள்ள கூட்டிட்டுப் போனா அங்க எதோ எல்லாம் இப்போ நடக்கிராப்ல இருக்கு. அந்த இருட்டும் மணமும் இன்னும் நினைவில இருக்கு. ஹைலைட்டா ஒரு பெஞ்சு மேல உக்கார வச்சு குறுக்க கம்பியபோட்டு எந்திரிச்சு ஓட முடியாம இறுக்கிட்டு ஃபுல்லா ரெண்டு மூணு சுத்து. தலைகீழா நிக்கும்போது அந்த சூனியக்காரியோட சிவப்பு கண்கள், பேய் சிரிப்புன்னு, நல்ல வேளை நானும் ஜூனியரும் அலறினது யாருக்கும் கேக்கலை. வேர்த்து விறுவிறுத்து வெளிய வந்தப்போ பொண்ணு ரொம்ப ஜாலியா இருந்துச்சும்மா இன்னொரு வாட்டி போலாமான்னா.
சுசி #%&%#¤%&...
குணா தம்பி எனக்கு அப்பவே தெரியும் அண்ணி உள்ள கொண்டு போயி கத்தக் கூட வழியில்லாம என்னமோ பண்ணப் போறாங்கன்னு. நீங்களே போகும்போது நா எப்டி ஜகா வாங்குரதுன்னுதான் வந்தேன்னார்.

வரும்போது நெறைய சாக்லேட் வாங்க நான் விடலைன்னு என்னைய மறுபடி தனிய விட்டுட்டாங்க. ஜன்னலாண்டை ஒரு அக்கா, நடுவ காலி சீட், கரையில நான். என்னடா இப்டி ஆச்சேன்னு பாத்தா ராஜேந்தர் சிங்க்னு ஒரு விமானப் பணி ஆண். ஜன்னலக்கா அடிக்கடி உதவிக்கு கூப்டதால.. அது என்னமோ சொல்வாங்களே நெல்லுக்கு இறைத்தன்னு...

அப்புறம் சாக்லேட்லாம் கேட்டு அடம் பிடிக்கக் கூடாது. உங்க பல்லுக் கெட நான் விடுவனா?. பின்னூட்டத்த ஒழுங்கா போட்டுட்டு சமத்தா அவங்க அவங்க வேலையப் பாருங்க.

மறுபடி சந்திக்கலாம்.

அ.. வர்ட்டா...

இப்போ ஆரம்பிச்சாதான் அடுத்த பதிவை இதவிட பெருஸ்ஸா போட முடியும்....