Pages

  • RSS

11 October, 2009

வாழ்த்து + சரவெடி + தீபாவளி.

எல்லோரும் நலமா இருக்கீங்களா நல்லவர்களே?
நான் நலமில்லை. மறுபடியுமா அப்டீன்னு கேட்டவங்களும் கேக்காதவங்களும் அப்டியே தொடர்ந்து படிச்சிட்டு போங்க.


முதல்ல வாழ்த்திடலாம். இன்னைக்கு குணாவோட பெரியண்ணனுக்கு பிறந்தநாள். அவர் எனக்கும் பெரியண்ணாதான். சின்ன வயசில எனக்கு குணா குடும்பத்தில ரொம்ப பிடிச்சது யாரன்னு கேட்டா இவர்தாம்பேன். என்ன எங்க பார்த்தாலும் பிடிச்சு வச்சிடுவார். ஒரு தடவை பெயர் வச்சு குடுங்கம்மான்னு மாமியார்கிட்ட  யாரோ வந்தப்போ அங்கிளோட என் அப்பா கடைக்குட்டி நானு பேர வைக்கலாம்னு இவர் சொல்லி என் பேர்ல ஒண்ணு இப்போ அவங்க ஊர்ல சுத்திகிட்டிருக்கு பாவம். ரொம்ப ஜாலியானவர். கொஞ்சம் முன்கோபி. அண்ணி மேல உயிரையே வச்சிருக்கார். அவரோட அன்புத் தங்கை நான். என் பொண்ணு அவங்களுக்கும்  பெண் செல்வம். ஏன்னா அவங்களுக்கு ரெண்டு பையன்கள் . பெரியப்பா இருக்கும்போது பொண்ணோட  அட்டகாசம் தூள் பறக்கும். நியூசீலண்ட்ல இருக்காங்க. ரெண்டு வருஷம் முன்னாடி மாமியார் இங்க வந்திருந்தப்போ காலிங் பெல் சத்தம் கேட்டு கதவ திறந்தா இவர் சிரிச்சுகிட்டே நிக்கிறார் சர்ப்ரைஸ்னு. மாமியாரும் மருமகளும் மயக்கம் போடாத குறை. அடுத்த வருஷம் குடும்பமா வரப் போறதா சொல்லி இருக்காங்க. பழைய பாட்டுன்னா உயிர். ரீமிக்ஸ் பழையபாடல் வந்தா நான் அனுப்பி வைக்கணும்.

ஹாப்பி பர்த்டே பெரியண்ணா.


நேத்து ஒரு பூப்பு நீராட்டு விழாவுக்கும்  ஒரு பர்த்டே பார்ட்டிக்கும் போயிருந்தோம். அத்தனை பேரும் என்ன பத்தி ரெண்டு விஷயத்துக்காக  பேசினாங்க. ஒண்ணு எப்டி வசந்த் இப்டீன்னு நம்ம பிரியமுடன் வசந்துக்கு பின்னூட்டம் போடற நம்மள  மாதிரி எப்டீங்க இவ்ளோ அழகா ஐசிங் போடறீங்கன்னு கேட்டது. ரெண்டாவதுதான் சரவெடி. கார்க்கியோட அடுத்த படம் கிடையாது. இது என்னோட அதி புத்திசாலித்தனத்தால நடந்தது.  என்னங்க ஆச்சு ஏற்கனவே குணா மூலமா தெரிஞ்சுகிட்டாலும் கன்ஃபார்ம் பண்றாங்களாம், உங்களுக்கு போயி இப்டியா அப்போ உங்களுக்குன்னா பரவால்லயா?, இருந்தாலும் குணாவுக்கு இவ்ளோ கோவம் வரும்படியா நீங்க நடந்திருக்க  கூடாது அவர எதுக்கு இதுக்க இழுக்கறீங்க  இப்டி பல தரப்பட்ட விசாரிப்புக்கள். என்ன ஆச்சுன்னு அறிய ரொம்ப ஆவலா இருக்கீங்களா? சொல்றேன் சொல்றேன். இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. நேத்து சனிக்கிழமை. சரியா? அதுக்கும் முன்னாடி வந்த வெள்ளிக் கிழமை அடிங் அவங்க தொடர்ந்து படிக்கணுமா வேணாமா?  வேலை  முடிச்சு வந்து சமையல கடுப்போடவ விட்டுட்டே  செஞ்சுகிட்டிருக்கும்போது மாமியார் கிட்ட இருந்து ஃபோன். என் சின்னண்ணனும் அவங்க வீட்ல வந்து நின்னதால அப்டியே கீழ போய் குணா கூட சேர்ந்து பேசினோம். பேசி முடிச்சு மேல வந்தா கிச்சனோட கண்ணாடி கதவு வழியா வழக்கமா தெரியற டைனிங் டேபிள காணோம். ஒரே புகை மூட்டம். அடுப்புல எதுவோ ஜகஜ்ஜோதியா எரிஞ்சு கிட்டிருக்கு. என்னடீ இதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு கிட்டப் போய் பாத்தா வெண்டிலேஷன்ல இருந்த அத்தனை பிளாஸ்டிக் பார்ட்ஸும் உருகி எரிய ஆரம்பிச்சதுமில்லாம சுத்தி இருந்த மரப் பகுதிகளும் லைட்டா எரிய ஆரம்பிச்சிடுச்சு. அப்போதாங்க என் மூளையில அது உனக்கு இருக்கா என்ன  பல்ப் நெருப்ப அணைக்க தண்ணி ஊத்தணும்னு சட்டுன்னு ஸ்விச் ஆனாச்சு. அப்டியே அந்த தீச்சட்டிய தூக்கிட்டு போய் (ஜ்வாலை கைகள பதம் பாக்க) சிங் மேல வச்சு டாப்ப திறந்து விட்... அப்புறமென்ன சரவெடிதான்...  சுத்தி இருந்த பொருட்கள், மேல கூரை, அப்டியே முன்னாடி நான்னு முழு இடமும் பறந்தது சூடான எண்ணை. கொழுந்து விட்டு எரிஞ்சது அப்பளாம் பொரிக்க நான் காய வச்சிருந்த எண்ணைங்கிறது  இந்த அறிவுக் கொழுந்துக்கு மறந்து போச்சே. கதவு மூடி இருந்ததால மணம், சவுண்ட், புகை எதுவுமே வெளிய போகலேன்னாலும் கேட்ட டீ வந்து சேரலியேன்னு பாக்கிறத்துக்காக குணா அட்டன்ச போட்டாரு. என்னடீ பண்றேன்னு கேட்டவர் நிலமையோட தீவிரம் புரிஞ்சு மிச்சமீதி வேலைய பொறுப்பேத்துக்கிடாரு. அப்புறம் என்ன அப்பளம் சுடப் போய் கொப்பளம்தான். மூக்கு கண்ணாடியால கண் தப்பிச்சு. காது கன்னத்தில சில துளிகள். ஃபங்க்ஷன்ல பரவால்லையே திருஷ்டிப் பொட்டு வச்சா மாதிரி உங்களுக்கு இதுவும் அழகாதான் இருக்குன்னு ஒரு ஃப்ரெண்டன்  சொல்ல சுத்தி இருந்த ஃ
ப்ரெண்டிகள் எல்லாம் என்ன அமுக்கி புடிச்சு பர்மனண்டாவே மெழுகுவத்தியால சூடு வைக்க பாத்ததுல கொஞ்சம் பயந்துட்டேன். உங்க  கிச்சன்ல ஃபயர் அலாரம் கிடையாதான்னு முன்னாடியே யாரோ கேட்டீங்க இல்லை? ஒரு ஃப்ளோல சொல்லிட்டு போனதால விட்டுபோச்சு. இப்போ பதில் சொல்றேன். இதுநாள் வரைக்கும் அதுக்கு வேலையே இல்லாம போனதில பாட்டரிய மாத்தலை. ஹிஹிஹி....


இனி தீபாவளி. ஏற்கனவே வைரஸ் காய்ச்சல். இப்போ கொதி எண்ணை சூடு. அதோட குணாவோட திடீர் கண்டிஷன். என் எழுத்துலகுக்கு டாட்டா சொல்ல சொல்லி இருப்பார்னு நினைச்சவங்களுக்கு சாரி. இது வேற. குறிப்பா என் பதிவுலக தம்பிகளுக்கானது. என் அன்புத் தம்பிகள்  கலை, கோபி மற்றும் மின்னல் மாதிரி அப்பப்போ வந்துட்டு போகும் தமிழ் பிரியன். நல்லா கேட்டுக்குங்கப்பா. மாமா தெளீவா சொல்லிட்டாரு. உன் தம்பிங்க சீர் அனுப்பி வச்சாங்கன்னாதான் இந்த வருஷம் தீபாவளி கொண்டாட்டம்னு. அக்கா பாவம் இல்லையா? உங்க மருமக்கள யோசிச்சு பாருங்க? இன்னும் ஒரு வாரம் இருக்கில்ல. கடன உடன வாங்கியாவது ஆவன செய்யுங்கப்பா. நல்ல  நாள் அதுவுமா அக்கா கண்கலங்கி நிக்கணுமா? நிக்கணுமா?நிக்கணுமா? அக்கவுண்ட் நம்பரும், அட்ரசும் மெயில்ல வந்துட்டே இருக்கு. ப்ளீஸ் ஹெல்ப் மீ தம்பீஸ்....



இந்த வருடம் என் ராசிய  சனிபகவான் கொடும்பார்வை பாக்க போறாராம். கோபி என்ன தொடர்பதிவுக்கு கூப்பிடும்போதே நினைச்சேன். அத்தோட அதற்கான முன்னறிவிப்புதான் இந்த வெடி  விளையாட்டுன்னு சாஸ்திர வல்லுனர்கள் சொல்லுறாங்க. இல்லேன்னா ஒரு அதிமேதாவியால இவ்ளோ முட்டாள்தனமா நடந்துக்க முடியாதாம். ரைட்டு! புரியுது. இதுக்கு மேலயும் எழுதணும்னு  தோணினாலும் அடிப்பாவி நல்லவங்கள இப்டியா சோதிப்பே  கை  வலிக்குது. அப்டியும் ஏன் இவ்....ளோ எழுதறேன்னு கேட்டீங்கதானே? சொல்றேன். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம்தாங்க.

போறத்துக்கு முன்னாடி பெரியண்ணாவுக்கு கிஃப்டா ஒரு சாங் போடலாம்னா டவுன்லோட் பண்ண முடியல. அதனால லிங்க் மட்டும் குடுத்துடறேன். பாருங்க. வரட்டுங்களா?
http://www.youtube.com/watch?v=h4jbjnsr60U 

04 October, 2009

முக்கிய அறிவிப்புகள்....

எல்லாரும் நலமா மக்கள்ஸ்?

நாங்க நலமா இல்ல..  குடும்பத்தோட ஜூரம் கும்மி அடிக்குது. குணா + சதுவுக்கு கும்மி கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு. எனக்கும் பொண்ணுக்கும் கொஞ்சம் கம்மி. இந்த வாரம் பசங்களுக்கு ஸ்கூல் லீவுங்கிறதால பரவால்ல. பாவம் லீவ்ல என்ன பண்ணலாம்னு பெருசா ப்ளான் போட்டு வச்சிருந்தாங்க.

மு.அ.நம்பர் ஒன்னு:-  நாங்க சீக்கிரமா குணம் ஆய்டணும்னு வேண்டிக்கங்கப்பா... போலி டாக்டர் போலி நர்ஸ் வேலையும் சேர்த்து  பாக்க வேண்டியதா இருக்கு...

************************************

அடுத்ததா அந்த மேட்டருக்குத்தான்  ஜம்பி வந்திருக்கேன். சோ யாரும் அவசரப்பட்டு டாக்டருக்கேவான்னு கேக்காதீங்க. முடியல... நான் தெளிவா போலி ன்னு போட்டும் யாரும் அத கண்டுக்கிறதா இல்ல. இங்க வரதுக்கு செலவாகுமேங்கிரதால நல்ல வேளை   ட்ரீட்மெண்டுக்கு நேர்ல வரலைன்னாலும் கேள்விக் கணைகளை அனுப்பிட்டே இருக்காங்க. தலைவலிக்கு தைலம் தேய்க்கிறது, முதுகு வலிக்கு மூவ் தேய்க்கிறது உட்பட சில பாட்டி, சித்தப்பா, ஒன்னு விட்ட பெரியப்பா வைத்யம்தான் எனக்கு தெரியும். ஏதோ யாவரும் நலமுக்கு பொருத்தமா இருக்கட்டுமேன்னு நான் போட்டது எனக்கு சொ.செ.சூ ஆய்டிச்சு. போலியையும் மீறி எப்டின்னு ரொம்ப மூளைய குடைஞ்சும் பதில் கிடைக்கல. யக்கா ஃபாலோயர்சில போலின்னு போட்டு வைங்கன்னு கோபி,  குட்டி சாரி.. சுட்டி காமிச்சதும்தான் தெரிஞ்சுது. தம்பி டாங்க்சுப்பா... நீங்க யாருமே பிரஃபைல் பக்கம் போறதில்லயா மக்கா? ஃபாலோயர்சோட எஸ் ஆயிடரீங்களா? ரைட்டுங்க. இன்னையோட மாத்திடறேன். ஆனா ஒண்ணுங்க தலைப்புக்கு டாக்டர் மாதிரி வேற எதுவும் பொருந்த மாட்டேங்குது. 

மு.அ. நம்பர் ரெண்டு:- என்ன லேபல்ஸ் போடலாம்கிற ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. டேமேஜுக்கு ஏற்ப ஆலோசனைகளுக்கு 'தக்க' சன்மானம் வழங்கப்படும்..

************************************

நேத்து The Love Guru படம் பாத்தேன். Mike Myers, Justin Timberlake, Jessica Alba நடிச்சிருந்தாங்க. படம் போன வருஷமே ரிலீஸ் நான் நேத்துதான் பாத்தேன். எஸ் ஆகாதீங்க ப்ளீஸ்... தமிழ் படத்துக்கே விமர்சனம் எழுத தெரியாத நான் உலக படத்துக்கா எழுத போறேன்??? அதில குரு சொன்னதில ஒரு விஷயத்த மட்டும் சொல்ல போறேங்க.
Be
Loving &
Openhearted
With
My
Emotions


எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஆனா புரிய வேண்டியவங்களுக்கு இது புரியுமான்னு தெரியல.

மு.அ. நம்பர்  மூணேய்:- எனக்கு குளிர் ஜூரம்.

************************************

இங்க இருட்டு ஆரம்பிச்சாச்சு. கூடவே குளிரும். சம்மர் வந்ததே தெரீல. அதுக்குள்ளே அடுத்த கால மாற்றம். ஆனா குணாவோட அலர்ஜி தொடரும் போட்டுட்டு போய்டுச்சு. அவருக்கு சம்மர் வந்தாலே அலர்ஜியும் கூட வந்திடும். ஒரு வகையான புல்லு, மகரந்தம், நாய், பூனைன்னு பெரிய லிஸ்ட் இருக்கு. மீ த ஃபஸ்டு லிஸ்ட்ல. நான்கூட இந்த வருஷம் பூனையாட்டம் மூக்க தேய்ச்சுவிட ஆரம்பிச்சிருக்கேன். இதுதான் அலர்ஜி வருவதற்கான முதல் அறிகுறியாம். ஆனா இந்த ஊரு பொண்ணுங்களுக்கு சம்மர்ல ட்ரெஸ் அலர்ஜியும் வந்திடுங்க. இதில இவ்ளோ warm country ல இருந்து வந்திருக்கே. இருந்தும் எதுக்கு இப்டி மூடி கட்டிக்கிட்டு இருக்கேன்னு என்ன பாத்து கேள்வி வேற. கேட்பவரின் நக்கலை பொறுத்து என் பதிலில் நளினம் இருக்கும்.

மு.அ. கட்ஸீ:- இங்கு எந்த அறிவிப்பும் கிடையாது.

************************************

அப்புறம் என்னங்க?   இப்டி கலவையா எழுதிட்டு அதுக்கு  எதுனா பெயர் வச்சாகணுமே. கூட்டு, பொறியல், சாலட் ஏன் காக்டெயில்னு கூட பேர் வச்சிருக்காங்க. யோசிச்சு நல்லதா ஒரு பேர அடுத்த தடவை வச்சிடறேன். இப்போதைக்கு ஒரு பழைய லேபல போட்டுக்கிறேன்.

28 September, 2009

என் செல்லக் கண்ணனுக்கு...

நாளைக்கு  என் குண்டுக் கண்ணனுக்கு பிறந்த நாள். நான் வேறு சில காரணங்களுக்காக லீவில வீட்ல இருக்கிறதுல அவருக்கு கூடுதல் கொண்டாட்டம்.  எனக்காகவா  லீவ்  போட்டீங்கன்னு துளைச்சு எடுத்திட்டார்.

அவர் ஒரு அம்மா செல்லம். பிறக்கும்போதே அம்மாவுக்கு ஜாஸ்தி கஷ்டம் குடுக்காதவர். அவர் பிறந்த அன்னிக்கு காலேல இருந்தே எனக்கு ஒரு மாதிரியா இருந்துது. சாயந்தரம் வரை வலி எடுக்கல. இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி பேசினப்போ உடனவே வரசொன்னாங்க. குணா மான்செஸ்டர் யுனைட்டட் மாச் பாத்துட்டு இருந்தாரு. இதோ முடிஞ்சிரும் போயிரலாம்னு கடைசீல மாச் முடிஞ்சு, ஹை லைட்ஸ் பாத்து, ஃப்ரெண்ட்ஸ் கூட ப்ளேயர்ஸ்  திறமைய பத்தி பேசி, அதுக்கும் மேல ஷேவ் செஞ்சு (தேவையே இருக்கலை. அன்னிக்கு எந்த அழகான நர்சுமே வரலை) ஒருவழியா போனப்போ நேரம் இரவு 20:50 சொச்சம். அவங்க கடுப்பாயிட்டாங்க. உனக்கு டெலிவரீல ப்ராப்ளம் இருக்குன்னு தெரியும்ல இப்டியா அசண்டையா இருப்பேன்னு கேட்டப்போதான் எனக்கு குளிர் எடுத்திடுச்சு. அப்புறம் பொண்ண ஒரு ஃபிரண்ட் மூலமா வீட்டுக்கு அப்பா கிட்ட அனுப்பி வச்சுட்டு, (ஏன்னா சாதாரண செக் அப்னு அவங்களையும் தூக்கிட்டு போய்ட்டோம்)  நேரா ஆபரேஷன் தியேட்டர் போயாச்சு. சரியா 21:38 க்கு ஹேய்ய் உங்களுக்கு ஒரு baby boy கிடையாது  ஒரு boy baby யா வந்து பொறந்திருக்குன்னு குறுக்க போட்டிருந்த திரைக்கு மேலால எட்டி பாத்து சொன்னாங்க. 4570g + 52cm ல பிறந்த என் கண்ணன நர்ஸ் கொண்டு வந்து காட்டினப்போ தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்துது.

என் மறுபிறவி... அந்த நிமிடம்.... அவரை என் கைகளில் ஏந்திய நொடி... பிசுபிசுன்னு இருந்த என் கண்ணனோட நெத்தியில நான் கொடுத்த முதல் முத்தம்... 
என் பிறவிப் பயன்!!!


இவர் என்ன மாதிரி கொஞ்சம் சாஃப்ட் காரக்டர். அடுத்தவங்க மனசு நோகாம நடக்கணும்கிற அக்கறை இப்பவே இருக்கு. மன்னிப்பு, நன்றி ரெண்டும் இவர் அகராதியில ரொம்ப முக்கியம். அவரும் சொல்றதோட அடுத்தவங்களும் சொல்லணும்னு அதிகம் எதிர் பார்ப்பார். உலகத்திலேயே அதி புத்திசாலியாவும்  (அவருக்கு தெரியாதத சொல்லும்போது) அதி முட்டாளாவும் (மறுபடி மறுபடி சொல்லும்போது)  சிலவேளை நான் இருக்க வேண்டியதிருக்கும். அன்பா அவருக்கேத்தா மாதிரி சொன்னா எதுவும் எடுபடும். கத்தல், கோபம்னு போனா ஒரு வாரம் கழிச்சு கூட கேப்பார் அன்னிக்கு நீங்க அப்டி என்னைய திட்டினீங்க உங்களுக்கு எம் மேல அன்பில்லையான்னு.

அம்மா இந்த பொட்டு உங்களுக்கு நல்லால்ல, இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லாருக்குன்னு அக்கறையோட சொல்ற ரெண்டாவது ஆள் அவர்தான். செல்லமா முகத்த வச்சுகிட்டு ஏதாவது கேக்கும்போது கடவுளே என்னால மறுக்கவே முடியாது... கூடவே ஒரு ப்ளீஸ் வேற. என்ன பண்ண அவர் நன்மைக்காக சிலதுக்கு மறுப்பு சொல்ல வேண்டி வருதே.  உடனேயே அப்பா செல்லம் ஆய்டுவார்.

பேசும்போது விஷயத்த சொல்லி முடிச்சு ஒரு பத்து இருபது செகண்ட்ஸ்  கழிச்சு அம்மா ன்னு அழுத்தமா சொல்வார். அதில இதுக்கு என்ன செய்யப் போறீங்கன்ற கேள்வியோட நான் சொன்னது புரிஞ்சுதாங்கிற கேள்வியும் சேர்ந்து இருக்கும். அக்கா ஸ்கூல் தவிர மீதி நேரம்லாம் தம்பின்னுதான்   கூப்டணும்னு ஆர்டர் போட்டுருக்கார். ஸ்கூல்ல எல்லாரும் தன்ன தம்பின்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அவருக்கு பிடிச்ச கிஃப்ட் லிஸ்ட் போட்டு போன வாரமே குடுத்துட்டார். அதில எது நாங்க வாங்கி இருப்போம்னு தனக்கு இப்பவே தெரியுமாம்னு  காலேலையே  சொல்லியாச்சு. கட்டாயம் தூங்கியே ஆகணுமா, பனிரெண்டு மணி வரைக்கும் முழிச்சு இருக்க கூடாதா, எனக்கு தூக்கமே வரலை, நான் டயர்டாவும் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவர் இப்போ அசந்து  தூங்கிட்டு இருக்கார். இனி அவர எழுப்பி நாங்க வாழ்த்தப்போறோம்.

என் செல்லக் கண்ணன் எல்லா சீரும் பெற்று, சிறப்போட மன நிறைவா வாழணும்னு என் பிள்ளையாரை வேண்டிக்கிறேன். நீங்களும் வாழ்த்துங்க.

அவர் ஒரு விஜய் விசிறி. வெக்கேஷனுக்கு கார்ல ட்ராவல் பண்ணப்போறோம்னு சொன்னா  அம்மா எனக்கு விஜய் படம் எடுத்து வச்சீங்களான்னுதான் முதல்ல கேப்பார்.  வீடியோ சாங் போடுறதில சிக்கல் இருக்கிறதால அவர் கேட்ட ராமா ராமா சாங் (எனக்கு மட்டும் இல்லைன்னு தோணுது) போட முடியலை. அதனால விஜய் ஸ்டில் மட்டும் போடறேன். முடிஞ்சா புலி உறுமுது பாட்ட ஒரு தடவை கேளுங்க அவருக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.





22 September, 2009

எல்லோரும் கொண்டாடுவோம்...

இப்போ கொஞ்சநாளாவே என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சு. கேள்வி இதுதான் தலைவி என்ன செய்யப் போறீங்க? அதுதாங்க நம்ம கலை என்ன அனைத்துலக கார்க்கி ரசிகர் மன்ற தலைவீன்னு அறிவிச்சதால வந்த வினை. நல்லாருங்க கலை!!! முன்னாடியே உங்களுக்கு சொல்லி இருந்தேனே மன்ற வேலைகள் இருக்குன்னு. ஞாபகம் இருக்கில்ல? மன்றத்தோட திட்டங்கள ஒழுங்கா நடைமுறை படுத்திடணும் தம்பி. இல்லேன்னா கொபசெ பதவியில இருந்து தூக்கிடுவேன்.

இனி விஷயத்துக்கு போவோமா..

நம்ம பதிவுலக பிரபலம்,
மொக்கைகளின் சாமி,
சினிமா சின்னசாமி,
அப்பப்போ சீரியஸ் சாமி,
புட்டிக் கதைகளின் புகலிடம்,
அஞ்சா நெஞ்சன்,
ஏழுவை வாழ வைக்கும் தெய்வம்,
சிறுகதை, கவிதை, விமர்சனம், காதல், அரசியல் என்று கலந்து கட்டி அடிக்கும்
காக்டெயில் கார்க்கி
சாரி.. சாளரம் கார்க்கியின் பிறந்த நாள்....

அதை பதிவுலகமே அதிரும்படியா கொண்டாட
வேண்டாமா? வேண்டாமா? வேண்டாமா?

கொண்டாடிடுவோம்!


நிகழ்வுகள் பின்வருமாறு.

-மொக்கை குட்டி சாமி, வருங்கால பிரபல பதிவர் பப்லுவ சந்திச்சு கூட நின்னு போட்டோ எடுத்து அவரோட ஆட்டோக்ராஃப் வாங்கிக்கலாம். (இதுக்கு மட்டும் கட்டணம் கிடையாது)

-ஏழுவ சந்திச்சு பேசி அப்புறம் நீங்க ஏழரையோட வீட்டுக்கு போகலாம்.

-சைடு வாங்கிகிட்டு நிக்கிற கார்க்கியோட கட் அவுட்டுக்கு (இப்போ வேற ஃபோட்டோ போட்டிருக்காரா பிரஃபைல்ல) பால் அபிஷேகம்(?) பண்ண வசதியா சைடாவே ஏணி கட்டப்பட்டிருக்கும். மத்தபடி கொலைவெறியோடு வரும் ரசிகர்கள் அழுகின தக்காளி, முட்டை போன்ற 'தேவைப்பட்ட' பொருட்களை தாங்களே எடுத்துட்டு வரணும். இதுக்கான தனி வழி + கட்டண விபரம் அறிய கொலைவெறி கொபசெ வை அணுகவும்.

-அவர் உயிரை வாங்கிய காஜல் அகர்வால கூப்டா கார்க்கிய மறந்து கூட்டம் அங்க போய்டும்னு எச்சரிக்கப் பட்டதால அந்த திட்டம் அமுலாகலை. பதிலுக்கு ஷக்கீலா டக்கீலாவோட வந்து ஒரு குத்தாட்டம் போடுவாங்க.

-ஆண்ட்ரியா வந்து பாடினா இவர் ரெக்கை முளைச்சு பறந்து விடும் அபாயம் இருக்கிறதுனால பறவை முனியம்மா தேனீ குஞ்சரம்மாவோட சேர்ந்து கும்மி அடிச்சு குலவை பாடுவாங்க.

-ஆதி எடுத்த நீ எங்கே படம் முழு நாளும் தொடர்ச்சியா திரையிடப்படும். இது பார்க்காம யாரும் எஸ்கேப் ஆக முடியாது என்பது பின் குறிப்பு.

-முக்கியமா விழாவுக்கு வரும் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஒண்ணு படி ஒரு சாளரம் இவர் நினைவா குடுக்கப்படும்.

-குறிப்பா பாதுகாப்பு பொறுப்ப மன்றத்தோட தானை தளபதி என்ற ரீதியில என் கண்ணாளன் குணாளன் பாத்துப்பார்.

பி.கு- நான் அடுத்த பதிவு போடும்வரை கொண்டாட்டம் நடைபெறும்.
பி.கு டூவு - மக்கள் கொண்டு வரும் பரிசுகளும் பணமுடிப்பும் தலைவிக்கே சொந்தம். மத்த பிற டேமேஜுகள் விழா நாயகனையே சேரும்.
பி.கு மூணு-ஒரு பாட்டு அவருக்காக மன்றம் சார்பா போட்டிருக்கேன். இஷ்டப்பட்டவங்க பாத்துக்குங்க.
பி.கு லாஸ்ட்டு - அப்டியே அவங்க அவங்க பர்த்டே எப்பன்னும் மறக்காம பின்னூட்டத்தில போட்டுட்டு போங்க. உங்கள வாழ்த்திர சாக்கில நானும் ஒரு பதிவு போட்டுடுவேன் இல்ல... (நீ சமத்துடி சுசி விருதுக்கும் வாழ்த்துக்குமே பதிவ போட்டுடுரே.. கீப் இட் அப்.)

இப்போ இன்று பிறந்தநாள் காணும் விழா நாயகன் கார்க்கி அவர்களை சாளரம் வழியே ஜம்பி வந்து புட்டிய ஓபன் பண்ணி சாரி.. ரிப்பன கட் பண்ணி விழாவை தொடக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
சென்னையின் சிங்கமே ஹைதையின் தங்கமே வாங்க கார்க்கி வாங்க....


15 September, 2009

அவரும் நானும்....

எல்லோரும் நலம்தானா ?

நானும் நலமே.


நான் பதிவு எழுத ஆரம்பிச்சதில இருந்து இந்த குணாவுக்கு என் மேல ரொம்ப பொறாமை வந்திடுச்சுங்க. என் எழுத்துத் திறமை என்னை உலகளாவிய ரீதியில் பிரபலம் ஆக்கியிருப்பது அவருக்கு பொறுக்கலை. விடுங்க விடுங்க. பிரபலமானா சில பல பிரச்சனைகள், போட்டி பொறாமைகள் வந்துதானே தீரும்.


வாரம் ஒரு பதிவு போடவே நான் படற கஷ்டம் அவருக்கு எங்க புரியப் போது. சும்மா அத படிக்கிற உங்க கஷ்டத்த பத்தி மட்டுமே பேசினா எப்டி? நானும் எதோ கொஞ்சம் மனசாட்சி உள்ளவங்கிரதாலதானே தினமும் எழுதலை. அநியாயத்துக்கு என் மேல குத்தம் சொல்ல கூடாதில்லையா.


அது மட்டுமா பொட்டி முன்னாடி உக்காந்தா போதும். அப்போதான் அவருக்கும் பசங்களுக்கும் நான் ஒருத்தி வீட்ல இருக்கேங்குற ஞாபகம் வரும். அம்மா அது, சுசி இதுன்னு எத்தனை தடங்கல்.. இதையெல்லாம் தாண்டி நான் எழுதுரத்துக்குள்ள எழுத வந்த விஷயம் மறந்து போய்டும். அது யாரது இல்லேன்னா மட்டும்னு இப்போ நினைச்சது? ஓ என் மனசாட்சியா...


இந்த சண்டே ஒரு பர்த்டே பார்ட்டி போயிருந்தோம். பெரும்பாலும் பேச்சு என்னை சுத்தியே இருக்க ரெண்டு காரணங்கள். ஒண்ணு கேக் ஐசிங் செஞ்சது நான். அதுக்கு சீரியஸா முகத்த வச்சுக் கிட்டு என்னமோ தான்தான் செஞ்சா மாதிரி குணா குடுத்த பில்டப்புல நீங்களும் இருக்கீங்களேன்னு சில மனைவியர் கணவன்மாரை கடும் பார்வை பாத்துக்கிட்டாங்க. நான் குணாவ கொடும் பார்வை பார்த்தது வேற விஷயம்.

அடுத்தது நான் இளைச்சுட்டேனாம். டாக்டர பாத்தீங்களா, டயட்ல இருக்கீங்களா, ஏதாவது பிரச்சனையா இப்டீன்னு ஏகப்பட்ட கேள்விகள். என் மேல அவங்களுக்கு இருந்த அக்கறைய பாத்து எனக்கு அழுகையே வந்துடிச்சு. குணா கிட்ட கேட்டப்போ அவளுக்கு புதுசா இப்போ ஒரு வெட்டி வேலை கிடைச்சிருக்கு அதான்னு சொல்லிட்டு சரிதானேங்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தார்.. நான் சொன்னேன் இல்லை எனக்கு கவலைகள் சிலதிருக்கு அதான்னு. அது சொ.செ.சூ ஆயிடிச்சு. நிஜம்தாங்க, பாவம். இத்தனை நாள் என்ன கொடுமைப்படுத்தினது அவளுக்கு பெருசா தோணலை. ஆனா இப்போ ஒட்டுமொத்த பதிவுலகத்தையே கொடுமைப்படுத்தும்போது அவளுக்கு கவலையா இருக்குன்னார். இது ரொம்ப ஓவரு. என் பதிவை அவ்ளோ பேர் படிக்கிறதில்லைன்னு எனக்கு தெரியாதா என்ன.ஏங்க அவ்ளோ கொடுமையாவா இருக்கு நான் எழுதுறது????

என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.

மீண்டும் சந்திக்கிறேன் ஒரு நல்ல முடிவுடன்.

04 September, 2009

விருதும் வாழ்த்தும்...

நலமா உறவுகளே... நானும் நலமே.







பாத்தீங்களா வருஸ்ஸையா மூணு விருதுங்க. அத எல்லாருக்கும் பிரிச்சுக் குடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில நான் இருக்கேன். பணமுடிப்பு, பொற்கிளின்னா விஷயம் வேற.

முதலில் எனக்கு பட்டாம் பூச்சி விருதை தந்த கார்த்திகேயனுக்கும், சுவாரஸ்ய பதிவர் விருது தந்த காயத்ரிக்கும், நட்பு வட்டத்துக்குள் என்னையும் சேர்த்துக் கொண்ட வசந்துக்கும் நிறைய நன்றிகள்.

இதில் பட்டாம்பூச்சி விருதை
இது நம்ம ஆளு பாரதியார்
இவங்களுக்கு குடுத்துடுறேன்.

சுவாரஸ்ய பதிவர் விருதை
சாளரம் கார்க்கி
வடலூரான் கலையரசன்
தமிழ்த்துளி டாக்டர் தேவா
இவங்களுக்கு குடுத்திடுறேன்.

அடுத்துதான் ரொம்ப கஷ்டம். கரெக்டா பத்து ஃப்ரென்ட்ஸ சொல்லணுமாம். இருந்தாலும் என் ஃப்ரெண்ட்ஸ் உங்க ஃ ப்ரெண்ட்ஸ், உங்க ஃப்ரெண்ட்ஸ் என் ஃப்ரெண்ட்ஸ், அவங்க ஃப்ரெண்ட்ஸ் நம்ம ஃப்ரெண்ட்ஸ்னு சுருக்கமா சொன்னா எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ்தான் இல்லையா.
இது நம்ம ஆளு பாரதியார்
இது என்னோட இடம். தமிழ்பிரியன்
சாளரம் கார்க்கி

இவங்களோட என் பதிவை படிக்கிற எல்லாருமே என் நண்பர்கள்தான்.
ஆணிய புடுங்கிகிட்டே பதிவையும் எழுதுறதால நட்பு சம்பந்தமான பாட்டோ படமோ போட முடியலை. உங்களுக்கு பிடிச்ச பாட்டை நீங்களே ஒரு வாட்டி பாடிக்குங்க. ஆஃபீஸ்ல செக்யூரிட்டி சிஸ்டம் ரொம்ப மோசம். நெட் அக்செஸ் குடுக்காம ஒரு பதிவரோட வளர்ச்சிக்கு தடையா எவ்ளோ அநியாயம் பண்றாங்க பாத்தீங்களா?

அடுத்ததா வாழ்த்து.... என் கூட ஃபோன்ல ரொம்ப அட்டகாசம் பண்ணிட்டு இருக்கிற ரெண்டு பேருக்கு.
ஒருத்தர் பெரியண்ணனோட மூணாவது வாரிசு ஊர்ல இருக்கார். கொஞ்சம் சாது. என்கிட்டே அப்பா பூஷு ம்மா பப்புன்னு கொஞ்ச நேரம் சமத்தா பேசிட்டு போய்ட்டே இருப்பார்.

அடுத்தவர் கானடால இருக்கார். அக்காவோட மூணாவது வாரிசு. ரொம்ப வாலு. அப்பப்போ குடும்ப உறப்பினர்கள் இவரால வீங்கின தலையோட அலைய வேண்டியதிருக்கு. எது கிடைச்சாலும் எடுத்து அடுத்தவங்க மண்டை மேலேயே அடிக்கிறது இவர் ஸ்டைல். நான் பேசும்போது மட்டும் கண்ணை விரிச்சுக் கிட்டே கேட்டுட்டு இருப்பாராம். அம்மாவோ அக்காவோ பேசுடி கேட்டுட்டே இருக்கார்னு அப்பப்போ சொல்லலேன்னா அவர் லைன்ல இருக்காரான்னே தெரியாது. எனக்கென்னமோ சித்தி கிட்ட பேச வச்சிடுவேன்னு சொல்லி அவர அக்கா மிரட்டி வச்சிருக்காளோன்னு லைட்டா டவுட்டு.

இருந்தாலும் எப்ப பாத்தாலும் ஷித்தி ஷித்தின்னே அவர் சொல்லிட்டு இருக்கிறதுல அக்கா ரொம்பக் கடுப்பிலேயும் மாமா அதீத ஆனந்தத்திலேயும் இருக்கிறதா தகவல்.

செல்லக் கண்ணன்கள் ரெண்டுக்கும் இந்த மாசம் ஒரு வயசு ஆகுதுங்க. அவங்க என்னிக்குமே சந்தோஷமா நீடூழி வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

அப்புறம் என்ன. அடுத்த பதிவில உங்க எல்லாரையும் சந்திக்கிறேன். அது வரை நலமா இருங்க.

28 August, 2009

என் அன்பு அப்பாவுக்கு...



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.
என்னோட வழக்கமான ஸ்பெஷல் கிரீடிங் இந்த தடவை பதிவு வடிவில. உங்களோட வழக்கமான முறுவலோட படிக்கிறீங்களா? படிங்க...

முன்னல்லாம் எங்களுக்குள்ள பெரிய போட்டியே நடக்கும். யார் உங்களை முறைக்க வைக்கிறதுன்னு. நீங்க எங்களை அடிச்சதில்ல. (நான் மட்டும் ஒரே ஒரு வாட்டி மழைல நனைஞ்சுட்டு ரொம்ப லேட்டா தனியா வீட்டுக்கு வந்ததுக்கு ஒரு அடி வாங்கி இருக்கேன். அந்த பாக்யம் மத்தவங்களுக்கு கிடைக்கல) அடி குடுக்காத வலிய உங்க பார்வை குடுத்திடும்பா. எப்பவும் அன்பும் சிரிப்புமான உங்க முகத்தில கோபத்தை நாங்க அதிகம் பார்த்ததில்லை.

உங்களை தெரிஞ்சவங்க அப்டியே உன் அப்பாவோட குணம் உன்கிட்ட வந்திருக்குன்னு சொல்லும்போது உடனேயே குட்டிப் பொண்ணா ஆயிடறேன்பா. ஏன்னா அப்போ ஆரம்பிச்சது இந்த பெருமிதம்.

சமயத்தில எங்களுக்கே டவுட்டாருக்கும் இவங்க எங்க ஃபிரண்ட்சான்னு, உங்ககிட்ட அவ்ளோ உரிமை அவங்களுக்கு. அதிலேயும் ஒருத்தர் மருமகன்னு ஆனதும் நீங்க வெட்கத்தோட திடீர்னு மரியாதை குடுக்க ஆரம்பிச்சதும் நாங்க இப்பவும் கிண்டல் பண்ற ஒரு விஷயமாச்சே.

எங்களுக்கு நீங்க குடுத்த சுதந்திரமே வேலியாய் எங்களை காப்பாத்திச்சு. இது என்னால முடியலப்பான்னு உங்க கிட்ட சொல்லும் வரை தான் அது முடியாத காரியம்.

அம்மாவை சில சமயம் நீங்க புரிஞ்சுக்காம நடந்துக்கிறதா சொல்லப்படும் குற்றச்சாட்டு அவங்க தலைவலீன்னு படுத்த அடுத்த நிமிஷமே சூடா ஒரு கப் டீயும், டாப்லட்டுமா அவங்க பக்கத்தில உங்கள பாக்கிறப்போ மன்னிக்கப்படும்.
பெரியண்ணன் தோளை மிஞ்சுமுன்னரே உங்க தோழன் ஆன பெருமைக்குரியவன். இன்றும் உங்க மந்திரி அவன்தானே.
அக்கா பேச்சுக்கு எப்பவுமே மதிப்பு குடுப்பீங்க. ஆனா இப்போ ரெண்டு நாள் பேசலைன்னா கூட எங்க என் குட்டிப் பொண்ணோட குரலைக் காணோம்னு நீங்க கேக்கறப்போ புரிஞ்சுக்கிட்டேன்பா.. உங்கள பொறுத்த வரைக்கும் நான் இன்னும் குழந்தைதான்னு. சின்னண்ணனுக்கு காதல் தவிர அத்தனைக்கும் உங்க வழிகாட்டுதல் தேவைப்பட்டுது.

என்னைய மட்டும் முதல் ஆளா கட்டிக் குடுத்து விரட்ட பாக்கிறீங்களே என்ற கோபம் கணவன் என்ற புது உறவோட அப்பா என்ற அன்பு நண்பனும் எனக்கு கிடைச்சப்போ
காணாமலே போய்டுச்சுப்பா. நீங்களும் அத புரிஞ்சுகிட்டீங்கங்கிறது ஆசீர்வாதம் பண்ணும்போது நீங்க சிரிச்ச சிரிப்புல தெரிஞ்சுதுப்பா.
ஞாபகம் இருக்கா... நிறைமாத கர்ப்பத்தோட ஏர்போட்ல என்னப் பாத்தப்போ கண்கள் பனிக்க என் தலையை வருடிய நொடியிலிருந்து நீங்க எனக்கு தாயுமானவர். அம்மா கூட ரெண்டு பொண்ணுங்களையும் அப்டி பாத்ததில்லையே.

இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் இதே அண்ணன்கள், அக்கா, அம்மா, நீங்க, கணவன், குழந்தைகளோட வாழணும்.. ஆனா இப்டி திக்குக்கு ஒருத்தரா இல்லாம எல்லாரும் ஒண்ணா. உங்களுக்கு நீண்ட ஆயுள், மன நிறைவோட வழக்கம்போல கடவுள் கிட்ட இதையும் கேக்கப் போறேன்..

நீங்க எப்பவும் சொல்றத சொல்லி முடிச்சுக்கிறேன். நீங்க யாருக்கும் தீங்கு செய்யலை.. செய்யவும் போறதில்லை.. உங்களுக்கு கிடைக்க வேண்டியது இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும். அது வரை பொறுத்திருப்போம்.

ஹாப்பி பர்த்டே அப்பா..

அன்பு முத்தங்களுடன்..
கடைக்குட்டி.

16 August, 2009

கார்க்கி - மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

யாவரும் நலமா மக்களே....


நானும் நலம்தான்.


இன்னைக்கு தோரணை படம் பார்த்தேன். என்னது வில்லு ரிலீஸ் ஆய்டுச்சாமான்னு கேட்றாதீங்க. இங்க தியேட்டர்ல தோரணை போடலை. நான் நெட்லயும் பாக்கறதில்ல. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்களை சன் போடும்போதோ இல்ல block buster movie ன்னு கலைஞரும் ஐங்கரன் இன்டர்நேஷனலும் கூட்டு சேர்ந்து போடும்போதோதான் பார்ப்பேன். லண்டன் போனப்போ நிறைய்ய படங்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். தோரணை பார்த்திட்டு இருக்கும்போது சட்னு ஒரு விஷயம் தெரிஞ்சுது. இந்த ஸ்டைல நான் எங்கேயோ பார்த்திருக்கேனேன்னு. அத நேரடியாவே சம்பந்தப் பட்டவர் கிட்ட கேட்ரலாம்னுட்டு பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன். இதனால மானாட மயிலாடவுக்கு வரலைன்னு கலா மாஸ்டர் வேற கோச்சுக்கப் போறாங்க.


இவர பார்த்திருக்கீங்களா? பார்த்தவங்க படிக்கறத தொடருங்க. பார்க்காதவங்க ஷகீலா (அ) டக்கீலான்னு கூகிளாண்டவர கேட்டீங்கன்னா இவர் பக்கம் கைய காமிப்பாருன்னு இவரே சொல்லி இருக்கார்.


அப்டியும் சிக்கலேன்னா சாளரம்







இப்போ இவங்கள்ல ஸ்ரேயாவ விட்டுட்டு விஷால மட்டும் பாருங்க.


பாத்தீங்களா! அதே டிரெஸ்ஸிங் ஸ்டைல்.. அதே தொப்...பி..... இத லக்கலக்க ரஜனி ஸ்டைல்ல சொல்லிக்குங்க. அதே கண்ணாடி..







இப்போ ஷ்ரேயாவ ஜூஸ் குடிக்க அனுப்பிட்டு விஷால் பின்னாடி ஒரு மரத்த வச்சா...........???





இப்பிடி இருக்கும்.....!!!!!





அதே கண்ணாடி... அதே ஹேர் ஸ்டைல்..









இப்டி வழக்க விரோதமா உக்காந்து கிட்டார் ப்ளே பண்ண கார்க்கிகிட்டதான் விஷால் கத்துக் கிட்டாராம். கார்க்கி வித் கிட்டார் ஸ்டில் கிடைக்கல.




இப்போ மறுக்கா மேலே போயி பதிவோட தலைப்ப படீங்க..


அதே தான்....

இவ்ளவுக்கும் இவர் ஒரு விஜய் ரசிகராமாமாம்.


என்னதான் இவர் நாங்க யாரு தெரியுமில்ல!!! ன்னு சொன்னாலும், தெரீல....

இவர் யார் ரசிகர்னு....



பின் குறிப்பு (அ) முன் குறிப்பு :-


நான் மேற் சொன்ன நபர்களுக்கும் இந்த படத்தில் சிரிப்பவருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறேன்.
இதை மனதில் கொண்டு பின்னூட்டத்தை போடவும்.




பி.கு :- கார்க்கியின் ஸ்டில்ஸ் அவர் பதிவிலேயே சுடப்பட்டவை.
பி.கு. க்கு பி.கு :- இந்த பாடலில் கார்க்கியை அல்ல விஷாலை பார்க்கலாம், கூட ஸ்ரேயாவும் பலரும்.

இப்போ மறுமறுக்கா அல்லாரும் மேலே போய் தலைப்பை படீங்க... சுசி ஜூட்டேய்....

12 August, 2009

லண்டன் ரிட்டர்ன்.....

நல்லா இருக்கீங்களா நல்லவர்களே?

நான் வந்துட்டன். வந்துட்டன். வந்துட்டன். அலறிக்கிட்டே வந்துட்டன். ஏன்னு தொடர்ந்து படீங்க பதிவுலக வழக்கப்படி கடைசீல சொல்றேன்.

சீட் நம்பர் பாத்ததுமே நாலு பேர் கொண்ட குடும்பம் பிரிஞ்சு உக்கார வேண்டிய சோதனை உருவாச்சு. போகும்போது அப்பா கூட வரும்போது அம்மா கூடன்னு குட்டீஸ் எடுத்த முடிவு செயலாச்சு. என் கெட்ட + குணாவோட நல்ல நேரம் என் பக்கத்தில ஒரு வயதான தம்பதி. குட்டிக் கைகளோட திடீர்னு பெரிய கையும் பின்னாடி இருந்து சேட்டை பண்ண ஆரம்பிக்க சிரிச்சு கிட்டே ஆன்டி என் கூட பேச ஆரம்பிச்சாங்க. அப்புறமென்ன சுசி ஜாலியா பீட்டர் மொக்கைய ஆரம்பிச்சுட்டா.

குணா தம்பி வீட்லதான் டேரா. ரெண்டு வருஷமாச்சு பாத்து. அண்ணன் குடும்பத்த பாக்காத கவலேல பாவம் ரொம்ப குண்டாயிட்டாரு. வைஃப் உண்டாயிருக்காங்க. குணாவுக்கு அவ்ளோ கொண்டாட்டம். சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ எல்லாம் பாரபட்சமே இல்லாம தம்பிய வாரிக்கிட்டே இருந்தாரு.

நல்லவங்க போற ஊர்ல எல்லாம் மழை பெய்யும்கிரதுக்கு சரியா ஒரே மழை. பசங்களுக்கு டபுள் கூத்து நனைஞ்சு கிட்டே ஊர் சுத்தரோம்னு. நான்தான் கொஞ்சம் எடை குறைஞ்சு போய்ட்டேன். என்னங்க? புரியலையா? நான்தான் குணாவோட சர்க்கரைக்கட்டி,பசங்களோட sweet அம்மா.. சரி விட்டுர்றேன், படிக்கிறத விட்ராதீங்க.

Big Ben முன்னாடி ஃ போட்டோ புடிச்சோம், London Eye இல ஒரு சுத்து வந்தோம், Madame Tussauds போய் வெளிய வர்றதுக்குள்ள போதும்னு ஆயிடிச்சு. ஆளாளுக்கு எப்டி இருக்கே சுசி, ஏன் ரெண்டு வருஷமா வரலைன்னு பேச ஆரம்பிச்சா எப்டீங்க விட்டுட்டு வர முடியும்? இந்த ஆஞ்சலீனா ஜூலிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. ஒரு வேளை பிராட் பிட் எங்கிட்ட ரொம்ப நேரம் பேசினது பிடிக்கலையோ என்னமோ. Bluewater Shopping Centre ல சுத்தினோம். OLD TRAFFORD Manchester United football club stadium + museum பார்த்தது ஒரு வித்யாசமான அனுபவம். அதுவும் குணா டீமோட பரம சப்போட்டர் வேற. ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. இடையில சிலபல நண்பர்கள், உறவினர்கள சந்திச்சோம். Birmingham பாலாஜி கோயில் போனப்போ சுமங்கலி பூஜை நடந்துட்டு இருந்துச்சு. நான் வேற மாடர்ன் சுமங்கலியா போய் நின்னுட்டன்.. மாமா பையன் என்னக்கா இன்னைக்குன்னு இப்டி பப்பரப்பான்னு வந்து நிக்கறேன்னு வார ஆரம்பிச்சுட்டான்.

அவன பத்தி சொல்ல மறந்துட்டேன். பத்து வருஷத்துக்கு அப்புறம் சந்திச்சோம். ஆளும் அறிவும் வளர்ந்தாலும் இப்பவும் என்னோட அதே குட்டி மச்சான்தான். பசங்களும் நல்லாவே ஒட்டிக் கிட்டாங்க. கொழுந்தனார் இருக்கிறது சிட்டிக்கு ரொம்ப வெளிய. அதனால நினைச்சாப்ல ரெஸ்டாரன்ட்ல கொட்டிக்க முடியல. நானும் அவனும்தான் சமையல். மழைக்கு சூடா அவிச்ச வேர்க் கடலை சாப்டா நல்லா இருக்கும்டான்னு சொன்னதுக்கு காய வச்சு உடைச்ச வேர்க் கடலை வாங்கி ஒருநாள் பூரா ஊற வச்சு அவிச்சீங்கன்னா அவிச்ச வேர்க் கடலை உடைச்சு சாப்டுற கஷ்டம் இல்லாம கிடைக்கும்னு சிலபல பாச்சிலர் டிப்சும் குடுத்தான். வரும்போது ஏர்போர்ட்ல பார்க்க ரொம்ப பாவமா இருந்துது. அடிக்கடி வாங்கக்கான்னு சொல்லும்போதே கண்ணு கலங்கிடிச்சு. வெளிநாடு, தனிமை.. பாவம்....

Theme Park • Alton Towers என்னைய அலற வைச்ச இடம். ஒரு Oak மரம், சூனியக்காரி, 200 வருஷம் முந்தின கதைன்னு சொல்லி உள்ள கூட்டிட்டுப் போனா அங்க எதோ எல்லாம் இப்போ நடக்கிராப்ல இருக்கு. அந்த இருட்டும் மணமும் இன்னும் நினைவில இருக்கு. ஹைலைட்டா ஒரு பெஞ்சு மேல உக்கார வச்சு குறுக்க கம்பியபோட்டு எந்திரிச்சு ஓட முடியாம இறுக்கிட்டு ஃபுல்லா ரெண்டு மூணு சுத்து. தலைகீழா நிக்கும்போது அந்த சூனியக்காரியோட சிவப்பு கண்கள், பேய் சிரிப்புன்னு, நல்ல வேளை நானும் ஜூனியரும் அலறினது யாருக்கும் கேக்கலை. வேர்த்து விறுவிறுத்து வெளிய வந்தப்போ பொண்ணு ரொம்ப ஜாலியா இருந்துச்சும்மா இன்னொரு வாட்டி போலாமான்னா.
சுசி #%&%#¤%&...
குணா தம்பி எனக்கு அப்பவே தெரியும் அண்ணி உள்ள கொண்டு போயி கத்தக் கூட வழியில்லாம என்னமோ பண்ணப் போறாங்கன்னு. நீங்களே போகும்போது நா எப்டி ஜகா வாங்குரதுன்னுதான் வந்தேன்னார்.

வரும்போது நெறைய சாக்லேட் வாங்க நான் விடலைன்னு என்னைய மறுபடி தனிய விட்டுட்டாங்க. ஜன்னலாண்டை ஒரு அக்கா, நடுவ காலி சீட், கரையில நான். என்னடா இப்டி ஆச்சேன்னு பாத்தா ராஜேந்தர் சிங்க்னு ஒரு விமானப் பணி ஆண். ஜன்னலக்கா அடிக்கடி உதவிக்கு கூப்டதால.. அது என்னமோ சொல்வாங்களே நெல்லுக்கு இறைத்தன்னு...

அப்புறம் சாக்லேட்லாம் கேட்டு அடம் பிடிக்கக் கூடாது. உங்க பல்லுக் கெட நான் விடுவனா?. பின்னூட்டத்த ஒழுங்கா போட்டுட்டு சமத்தா அவங்க அவங்க வேலையப் பாருங்க.

மறுபடி சந்திக்கலாம்.

அ.. வர்ட்டா...

இப்போ ஆரம்பிச்சாதான் அடுத்த பதிவை இதவிட பெருஸ்ஸா போட முடியும்....

24 July, 2009

டேக் சுவீட்டு, அண்ட் டான்சு...

ஹலோ ஹவ் ஆர் யூ பீப்பில்ஸ்.... நல்ல ஹாப்பியா இருக்கீங்களா? அதை இன்னும் கூட்ராப்ல ஒன் மாட்டர்.

ஆத்தா எனக்கு லீவு உட்டாச்சு..................

அப்டீன்னு இன்னைக்கு ஒர்க் முடிச்சு வீடு ரிட்டேனிங்க்போது கத்திக்கிட்டே வந்தேன். சுசிக்கு லீவு. சேம் டூ யூ. ஒய்னா சுசியை லண்டன் பிக்சிட்டி இருகரம் நீட்டி வரவேண்டாம் ப்ளீஸ்னு கெஞ்சிக் கிட்டிருக்கு. அதுக்குன்னு போகலேன்னா எப்டி? இதுக்கெல்லாம் ஒரி பண்ணிக்கிற ஆள்னா பதிவுலகத்துக்க ரைட் லெக்க வச்சு வந்திருப்பேனா? டூ வீக்ஸ்தான். மறுபடியும் வந்திருவேன். யாருக்காவது மைல்டா அட்டாக்? பரவால்ல டெல் மீ, டெல் மீ.

அதுக்குன்னு சும்மா படிச்சிட்டு போலாம்னுதானே நினைச்சீங்க? ஞாயிறு ஈவ்னிங்க்தான் ஃப்ளைட்டு. அது வரைக்கும் இங்கனவே கண்ண வச்சிட்டு சுத்திக்கிட்டே இருப்பேன். கமென்ட் போடலேன்னா? டூரு கான்சல்! சொல்ட்டேன்.

சுசிக்கு எதனா ஆகி நாம எஸ்கேப்பிக்கலாம்னு நினைச்சு நீங்க இந்த தேங்கா உடைக்கிறது, மண் சோறு, தீ மிதிக்கிறது, மொட்டை போடறது, காவடி எடுக்கிறதுன்னு சிலபல வேண்டுதல்களை ப்ளாக்காண்டவருக்கு வைப்பீங்க. எத வேணா வைங்க மக்கா. ஆனா பொட்னு போறா மாதிரி செஞ்சுருங்க. அது சாட்டர்டே நடக்காமலும் பாத்துக்குங்க.

அப்புறம் கைவசம் டென் அவார்டுங்க இருக்கு. வந்ததும் குடுத்து கௌரவிச்சிடுறேன். அப்புறம் லண்டன்லேர்ந்து என்ன கொண்டு வந்தீங்கன்னு நீங்க கேக்கக் கூடாதில்ல.

வேற என்னங்க? ரொம்ப டாங்க்சு. உங்க கிட்ட டாக்கினது மூலமா மை இங்கிலிபிஸ்ஸும் இம்ப்ரூவ் ஆயிட்டதுல மீ டூ ஹாப்பி.

அ.... பை பை,

அ.... சி யூ...

அ... டாட்டா.....

நோ ஃப்ளையிங் கிஸ்ஸு. அத மானாட மயிலாடவில போய் சண்டே வாங்கிக்குங்க.

22 July, 2009

சுசி போட்ட ரிவர்ஸ்....

எல்லாரும் நலமா மக்களே!

ஓகே. அப்டீன்னா அப்டியே பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமைய நோக்கி ரிவர்ஸ்ல வாங்க.

வந்திட்டீங்களா? இப்போ மணி நாலு முப்பது. பொட்டிய மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வீட்டு முன்னாடி வண்டிய நிறுத்தி ரிமோட் எடுத்து garage கதவ திறக்கிறேன். ஒரு வழியா லாரிய நண்பர்கள் எங்க வண்டிக்கு வச்ச செல்லப் பெயர் உள்ள ஏத்தினதும்தான் ஞாபகம் வந்திச்சு. அடடா நாளைக்கு barbecue party க்கு நண்பர்கள கூப்ட்ருந்தோம், எதுவும் வாங்கலையேன்னு. சரி இப்பவே அதையும் முடிச்சிரலாம்னு ரிவர்ஸ போட்டு பின்னாடி எடுத்.. டமார் படார்னு கலவையா ஆனா பயங்கரமா ஒரு சவுண்டு. சுருக்கமா #"@#$%^&*@#$$%!@#$%^&*இப்டி.

ஒண்ணும் இல்லீங்க உள்ள வந்ததுமே வழக்கம்போல ரிமோட்ட அழுத்திட்டேன். கதவு அதுங் கடமைய செய்றதுக்காக மூட ஆரம்பிச்சிருக்கு. நான் ரிவர்ஸ்ல வர்றேன்னு அதுக்கு தெரியுமா என்ன! உடனடி நடவடிக்கையா ரிமோட்ட மறுபடி அழுத்தினதால லாக் ஆகி கதவு நின்னிடுச்சி. நல்லவேள ஸ்டெப்னிக்குள்ள கதவு மாட்டிக் கிட்டதால சேதாரம் கொஞ்சம் கம்மி. மிட்சுபிஷி பஜீரோ இப்போ பிஞ்சரோ ஆய்டிச்சு. சம்பவ நேரம் குணாவும் பசங்களும் வீட்ல இல்ல. இவ்ளோ பெரிய சமாசாரத்த சூ மந்த்ரகாளி போட்டா மறைக்க முடியும்? வந்ததும் குணா பாத்திட்டாரு. கதவுதான் மறுபடி மூட மாட்டாம நிக்குதே.கேள்வி நம்பர் ஒண்ணு.ஏய் என்னடி ஆச்சு? அது வந்துப்பான்னு ஆரம்பிக்கும்போதே கேள்வி நம்பர் ரெண்டு நெனப்ப எங்க வச்சிட்டு வந்தே? ..................................................................................................................... இருங்க, குணா திட்டும்போது சுசி எதுவும் பேச மாட்டா. அவர் திட்ற டைம்ல நாம நெனப்ப நான் எங்க வச்சேன்னு பாத்திர்லாம். 15 min. ரிவர்ஸ்ல வாங்க.

புறப்படறதுக்கு சற்று முன் அக்கா கிட்ட இருந்து ஒரு மின்னஞ்சல். மவளே இன்னிக்கும் நீ எனக்கு கால் பண்ணலன்னு வச்சுக்கோன்னு ஆரம்பிச்சு தங்கச்சீங்கிரதினால கெட்ட வார்த்தை எதுவும் போடலை எக்கச்சக்கமா எழுதி இருந்தா. கட்டாயம் கால் பண்ணனும்னு நெனச்சேன். படிச்ச பதிவுக்கெல்லாம் மறக்காம பின்னூட்டம் போட்டேனான்னு நினச்சேன். அப்போ பாத்து Byonce Knowels பாடின Halo ப்ளே ஆச்சா அப்புறம் எந்த நினைவும் இல்ல. எத்தன வாட்டி சொல்றது பாட்ட போட்டுக் கிட்டு டிரைவ் பண்ணாதேன்னு. அது அலறலேன்னா இசை ரசிகர்கள் குணாவை மன்னிக்கட்டும் கதவு மூடுற சத்தம் கேட்டிருக்கும் இல்ல. சின்னதா ஒரு பாயின்ட் இருக்குதோ?

நான் ஏன் குணா திட்டும்போது கம்னு இருக்கேன்னு நீங்க கேக்கலேன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?
கேட்டுக்குங்க. ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு அவர் சந்தோஷப்படுவார். ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப் ஆயிடுவார். மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு எனக்கும் ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

இவ்ளவுக்கும் சுசி ஸ்டேடியாதான் இருந்தா. கடைசீல ஒண்ணு சொன்னார் பாருங்க. அப்போதான் லைட்டா கண்ல தூசி. மத்தபடி தப்பு பண்ணினா சுசி அழமாட்டா. லண்டன் போம்போது நகைக்கடைக்கு போணும்னு சொல்லிட்டிருந்தே இல்ல ன்னு மனச் சாட்சியே இல்லாம சொல்லிட்டாரு. ரெண்டு நாளா நான் அவர்கூட பேசல. நீங்க நினைக்கிறாப்லையே அவர் ஓவர் நிம்மதியா இருக்காரேன்னுட்டு மறுபடி பேச ஆரம்பிச்சிட்டேன். அதுவும் இன்னைக்கு பன்றிக் காய்ச்சலோட அறிகுறி என்னன்னு பன்றிக்கறி சாப்டுக் கிட்டே அவர் கேட்டப்போ நான் சொன்ன பதிலோட லைஃப் பழைய ஃப்ளோல போக ஆரம்பிச்சிடிச்சு.

அப்டியே நீங்க நிம்மதியா இருக்கிறதா பதிவாண்டவர் சொன்னாரா அதான் மனசு கேக்கலை. என் பதிவ போட்டுட்டன்.வரட்டுமா உறவுகளே!

20 July, 2009

சுசிக்கும் விருது....

எல்லாரும் நல்லா இருக்கீங்களா உறவுகளே? நான் நல்லாவே இல்ல. ஏன்னு இப்போ கேக்காதீங்க. அழ எல்லாம் மாட்டேன். எழுதீருவேன் அப்புறம் நீங்க அழுவீங்க. மேல படீங்க.

சுசிக்கும் விருதாமே.... ?! நம்பவே முடியவில்லை.

நன்றி சந்ரு. எனக்கு பதிவுலகில் கிடைத்த முதல் அங்கீகாரம். நான் பாட்டுக்கு ஏதோ எழுதிக்கிட்டு இருக்கேன். உருப்படியாவும் ஏதாவது எழுதணும்னு நினைக்க வச்சிட்டீங்க. என்னோட எழுத்துக்காக இல்லேன்னாலும் சின்ன வயசுல சின்னண்ணன் பிடிச்ச பட்டாம்பூச்சீங்களை எல்லாம் அவன் கூட கட்டிப் புரண்டு சண்டை போட்டு பறக்க விட்டு உயிர் காத்த சமூக சேவைக்காக வேணா கட்டாயம் ஏத்துக்கிறேன். மீண்டும் நன்றிகள் சந்ரு.

குறிப்பா நான் இன்னைக்கு இருக்கிற மனநிலைக்கு எனக்கு இது பெரிய ஆறுதல்.

சந்ரு மொத்தம் ஆறு பட்டாம்பூச்சீங்கள என் பக்கமா பறக்க விட்டாரு. இதில ஒண்ண மட்டும் வச்சிக்கிட்டு மத்த அஞ்சையும் யார் கிட்டயாவது கொடுத்திரணும்னு சொல்லி இருக்காரு. அத நானும் ரிப்பீட்டே.

நான் ஒண்ண சாளரம் கார்க்கிக்கு வழங்கிக்கிறேன். இவர் ஒரு ஐடியா திலகம். விளையாட்டுத்தனமா பதிவுகள போட்டாலும் திடீர்னு சிந்திக்கவும் வச்சிடுவார். சண்டைக்கு அஞ்சாதவர். எனக்கு பின் பிறவா என் தம்பி.

இன்னொண்ண பிரியமுடன்......வசந்த் க்கு வழங்கிக்கிறேன். படம் போட்டே சமூகத்தில விழிப்புணர்வ ஏற்படுத்திக் கிட்டு வர்றாரு. சில படங்களைப் பாத்து மிரண்டதில என் தூக்கம் பறிபோன பாவத்துக்கு சொந்தக்காரர்.

இன்னொண்ண இது என்னோட இடம். தமிழ் பிரியனுக்கு வழங்கிக்கிறேன். சின்னதா ஒரு சோக டச்சிங்கோட எழுதுவாரு.என்ன அன்போட அக்கான்னு கூப்ட என் முதல் பதிவுலக தம்பி.

இன்னொண்ண பிரிவையும் நேசிப்பவள்.. காயத்ரிக்கு வழங்கிக்கிறேன். காதல் கவிதை அதுவும் ரொம்ப பீலிங்கோட இவங்க எழுதுவாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

இன்னொண்ண சொல்லரசன் க்கு வழங்கிக்கிறேன். எலக்சன்னாலே சக பதிவர்களுக்கு இவர் ஞாபகம்தான் வருமாம். சமுதாய சிந்தனைகளோட பதிவு எழுதுவார்.

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுத்து கொண்டாடி மறக்காம எனக்கும் அனுப்பி வச்சிடுங்க.
மீண்டும் சந்திக்கிறேன்.

14 July, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....

எல்லாரும் நல்லா இருக்கீங்களாங்க? அப்போதான் நான் நல்லா இருக்க முடியும். ஆபீஸ்ல என் பிராஞ்ச்ல என்னத் தவிர எல்லாரும் லீவில போய்ட்டாங்கங்க. அட இந்த காப்ல பதிவா போட்டுத் தாக்கலாம்னா மத்தவங்க விட்டாதானே. ஹேய் சூஷீ! நீ தனியாவா இருக்கேன்னுட்டு வந்து ஆளாளுக்கு மொக்கையா போட்டுத் தாக்கராங்கங்க. நான் என்ன செய்யட்டும்? அலப்பரய பாரு இந்தப் புள்ளைக்கு. அது உன் நல்ல நேரம்டி. இல்லேன்னா அதுக்கப்புறம் உன் மொக்கைப் பதிவுப் பக்கம் யாருமே தல வச்சும் படுத்திருக்க மாட்டாங்கடியோய் ஏங்க இப்போ எதாவது உங்களுக்கு கேட்டிச்சு? ஏதும் கிராஸ் பதிவா இருக்கும். சரி நான் எங்க விட்டேன்?

முதலாம் வகுப்புக்கு போன முத நாளே அம்மா ஆர்டர போட்டுட்டாங்க. அட என் அம்மாவ சொன்னேங்க இனி தாத்தால்லாம் சைக்கிள்ள வச்சு மிதிக்க முடியாது. சின்னண்ணன் கூட சமத்தா நடந்து வந்துடு என் செல்லக் குட்டீன்னு. முதலாம் வகுப்பு வந்ததும் நடைங்கிறது எங்க வீட்ல எழுதாத சட்டம். இவ்ளோ நாள் ஜாலியா சைக்கிள்ள போகும்போது எதுவும் தெரீல. நடக்கும்போது எத்தன தொல்லை? ஊர்ல உள்ள ஆடு,மாடு,நாய்,பஸ்சு,லாரி,பெருசா மீச வச்ச ஆளுங்க,தடி தடியா பொம்பளைங்க எல்லாரும் என் எதிர்க்கவே வரணுமா என்ன? அதுவும் ரெண்டாவது வாரமே பஸ்சுக்கு ஒதுங்கறேன் பேர்வழின்னு கொஞ்சம் ஓவரா ஒதுங்கிட்டேன் குளத்தில முங்கி சாகப் பாத்தேன். சின்னண்ணன் மட்டும் சவுண்டு குடுக்கலேன்னா ஆள் க்ளோஸ். ஜஸ்ட்டு மிஸ்ஸு. இது நான் முன்னாடி சொன்ன கண்டம். இங்க டீச்சர் பேரு தேவி. சின்னண்ணனுக்கு அவங்க டீச்சர் சில சமயம் எக்ஸ்ட்ராவா ஒரு மணி நேரம் டியூஷன் வைப்பாங்க. அப்போ நான் அவன் பக்கத்தில உக்காந்துக்க எனக்கு பர்மிஷன் குடுத்தாங்க. சின்னண்ணன் ரொம்ப நோண்டி. ரெண்டு வாட்டி ஸ்கேலால அவன் கையில டீச்சர் நல்லாவே கவனிச்சு கிட்டாங்க. பொறுத்துக்கிட்டேன். மூணாவது வாட்டி அடிச்சதும் நான் அவ்வ்வ்வ்வ்... வீட்ல போயும் ஒரே அவ்வ்வ்.. என் க்ளாசிலேயும் அவ்வ்வ்வ்... அப்புறம் சின்னண்ணன் தான் இனிமே சமத்து பிள்ளையா அடி வாங்காம இருக்கேன்னு சொல்லி, அப்பா அம்மா டீச்சர் கிட்டயும் பேசி, டீச்சர் இனிமே அவனுக்கு வலிக்காம அடிக்கறதா என்கிட்ட சொல்லி ஒரு வழியா கண்ணீர் காண்டம் முற்றும்.

இனி எல்லாரும் ரெண்டாம் வகுப்புக்கு போவோமா. இங்க எல்லாரும் ரொம்ப சமத்தா சுசி மாதிரியே இருக்கணும். ஏன்னா புதுசா வந்த குறள்தாசன்கிற பிரின்சிபால்தான் நமக்கு டீச்சர். இப்பவும் இவருக்கு என் மேல ரொம்ப அன்பு. சின்னண்ணன் இப்போ இவர் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்கான்.சமீபத்துல நடந்த பள்ளி விழாவில சின்னண்ணன் பொண்ண பாத்திட்டு அப்டியே என்ன பாக்றா மாதிரி இருந்ததாவும் தான் எப்பவும் என்னோட ரசிகன்னும் பாராட்டி பேசினாராம். நம்பலைல்ல? எடுங்க சூடத்த!

மூணாம் வகுப்பு ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது. காரணம் ஸ்கேல் புகழ் சுகுணா டீச்சர். மறந்திட்டீங்களா? வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? ஓகே ஓகே.... தொடர்ந்து படீங்க.

நாலாம் வகுப்பு நல்ல வகுப்பு. சுகந்தீன்னு ஒரு தேவதையே டீச்சரா வந்தாங்க. ரொம்ப நல்ல மிஸ். அவங்க மிஸ் ங்கிரதனாலயோ என்னமோ ரொம்ப அன்பா இருப்பாங்க எல்லார்கிட்டயும். கல்யாணம் ஆகிப் போயும் ஊருக்கு வர்றப்போ என்ன வந்து பாக்கும்படி சொல்லி விடுவாங்க. அவங்களோட பிரியமான மாணவி நானாக்கும்.

அஞ்சாவது கணேஷ்வரி டீச்சர், குறள்தாசன் சார், சுகந்தி டீச்சரோட ஜாலியா போய்டிச்சு. இப்போ எனக்கு யசோ,லதா, மலர், மின்னி, சுமதி, ராஜி,மதாங்கினி, ரட்ணம், குமார், ஆதி, செந்தில்னு ஒரு நெருங்கின நண்பர் கூட்டம் உருவாய்டிச்சு. சுமதி கூட ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. அப்புறமா நாங்க டீச்சிங் இண்டர்வியூ போனப்போதான் பேசிக்கிட்டோம். அவளுக்கும் காரணம் என்னன்னு தெரீலன்னு சொன்னா. இதில இப்போ யசோ,செந்தில் ஊர்ல இருக்காங்க. சுமதி கானடா, லதா லண்டன், ஆதி ஆஸ்த்ரேலியான்னு போய்ட்டாங்க. அட பொருத்தமாத்தான் பயபுள்ளக போயிருக்கு மத்தவங்க எங்கன்னு தெரீல. ரட்ணம் எங்களை விட்டு ஒரேயடியா போய்ட்டான். எட்டாவது படிக்கும்போதே ஸ்கூல விட்டு நின்னுட்டான். நாங்க பத்தாவது வந்தப்போ அவன் உயிரோட இல்ல.
பொழுது போக்குன்னா பாட்டி வீடுதான். எப்பவும் தனியாதா விளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சாப்டு பாட்டி வீடு போனேன்னா ரொம்ப இருட்டானத்துக்கு அப்புறமாதான் மறுபடி வீட்டுக்கு வருவேன். அதுவும் தாத்தா என்ன முதுகு மேல சுமந்துகிட்டு போவாரு. அஞ்சாவது வந்ததும் தாத்தா லைட்டா மூச்சு வாங்கறத பாத்ததும் நானாவே இறங்கி அவர் கைய்ய இறுக்கி புடிச்சு கிட்டே பக்கத்தில நடந்து போவேன். என் தைரியத்த பத்தி மறுபடி எழுத வேணாமேன்னு பாக்கிறேன்.
விளையாட்னா சுசிக்கு ரஸ்க்கு, போட்டீன்னா ரொம்ப ரிஸ்க்கு. அதென்னமோ தெரீலீங்க வரிசையா விட்டுட்டு பிகில ஊதினாங்கன்னா எனக்கு உதறும். எப்டியோ சிலபல மூணாவது பரிசுகள வாங்கி வச்சிருக்கேன்.

கலை எனக்கு கை வந்த கலை. சித்திரம் கைப் பழக்கம் வரல. அப்போ அதுமட்டும் கலை கிடையாதோ? ஆடல்,பாடல், நாடகம்னா கூப்டு சுசியம்பாங்க.

எனக்கு நினைவு தெரிஞ்சு இவ்ளோ வருஷத்திலேம் ஒரே ஒரு வாட்டி ஹோம் ஒர்க் பண்ணலேன்னு தோப்புக் கரணம் போட்ருக்கேன். நண்பர்கள காப்பாத்தப் போயி ஒரே ஒரு வாட்டி அடி வாங்கி இருக்கேன். யாரும் என்னைய அடிச்சதில்ல, நானும் யாரையும் அடிச்சதில்ல. சின்ன சின்ன வாய்ச் சண்டைகள் போட்டதுண்டு.இப்ப சொல்லுங்க நான் நல்லவளா கெட்டவளா?

நெஜமா நான் சந்ருவுக்கு நிறைய நன்றி சொல்லணும். அம்மாடி... இத தான் மலரும் நினைவுகள்ம்பாங்களா... மறுபடியும் அந்தந்த வயதில வாழ்ந்து பாக்கணும் போல ஆசையா இருக்கு. அது மட்டுமா? எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரியண்ணன், அக்கா, சின்னண்ணன், தாத்தா, பாட்டி மத்த உறவுக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரோடான நினைவுகளும்....

அவ்வ்வ்வ்.... ரொம்ப பீலாயிட்டேன். சத்யமா சொல்றேங்க இன்னைக்கு என்னால தூங்க முடியாது. ரொம்ப அழுகாச்சியா இருக்கு....


இப்போ நான் யாரையாவது கோத்து விடணும்ல. தயவு செஞ்சு இத சாதாரணமா நினைக்காதீங்க. அனுபவிச்சு பாருங்க... நிச்சயமா புரியும். ஏய் போதும்டி உன் புலம்பல். யாரையாவது கூப்பிடுற வழிய பாரு பார்ரா, மறுபடியும் எனக்கு ஏதோ கேக்றாப்லையே இருக்கு. வாஸ்து சரியில்ல, டெம்ப்ளேட்ட மாத்தணும்.

அத்துக்கு மின்னே இத்த படீங்க.
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இது சுசியோட விதி : நான் அழைப்பவர்கள் முதலிலேயே இதை எழுதி இருந்தால் உடனடியாக எனக்கு பின்னூட்டத்தில் அறியத் தர வேண்டும். நான் அடுத்தவரை கோர்க்க சாரி அழைக்க இது உதவியாக இருக்கும்.

முதலாவதா நான் அழைக்கிறவர் என்னோட முதல் பதிவுக்கு, முதல் பின்னூட்டம் போட்டவர் என்னும் மதிப்பிற்குரியவர் ஏதோ சொல்கிறேன்! புகழ் திரு நாகை சிவா அவர்கள்.

இரண்டாவது கவிதை முத்துக்களை கோர்த்து எமக்கு தரும் முத்துச்சரம் புகழ் ராமலக்ஷ்மி அக்கா அவர்கள்.

மூணாவதா கொளுத்திப் போடுறதில வல்லவரான இது என்னோட இடம். புகழ் தமிழ் பிரியன் அவர்களை கூப்பிட்டுக்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸப்பா... ஜில்லுன்னு ஒரு சோடாவ உடச்சு கொண்டு வாங்கப்பா. எவ்ளோ எழுதி குவிச்சிட்டேன்.

அப்றமென்ன கிடைக்கிற காப்ல முட்டையும் பாலுமா உடம்பைத் தேத்திக்கிறேன். வந்து கும்மிய போட்டுட்டு போங்க மக்கள்...

12 July, 2009

இளமைக் காலங்கள்.....

எப்டீங்க? எல்லாரும் நலமா இருக்கீங்களா? அதான் நீ வந்திட்டியே இனி எங்க இருந்து அப்டீங்கரவங்க தொடர்ந்து படீங்க. என் பதிவை படிச்சத்துக்கு அப்புறமும் ஒழுங்கா இருக்கீங்கன்னா நீங்க ஸ்ட்ராங் பார்ட்டீங்கதான். இப்போ சொல்லுங்க நீங்க ஸ்ட்ராங் தானே?

இனி விஷயத்துக்கு வருவோமா. இப்போதான் வரவே போறியா, வெளங்கும். முன்னம் ஒரு காலத்தில சந்ருன்னு ஒரு சக பதிவர் என்னய ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாரு. அதுக்காக அவர் ரொம்ப வருத்தப் படப் போறாருங்கோ அவருக்கே ஞாபகம் வருதோ என்னவோ. இன்னிக்கு அத எழுதிர்லாமேன்னுட்டு களத்தில குதிச்சிட்டேன். உங்க கெட்ட காலம்
என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். என் முன்னாடி பிறந்த மூணு வாலுங்களும் பள்ளி போறது பெரும் அக்கப் போராம், என்னால. அவங்க கைய பிடிச்சுக் கிட்டு நானும் கூல் வாடேன் அப்டின்னு கிட்டு அடம் பிடிப்பேனாம். அப்புறம் அம்மா ஏதாவது பண்ணி என்ன அப்புறப் படுத்தினதும் அவங்க கிரேட் எஸ்கேப். அப்றமா ரொம்ப நேரத்துக்கு வெளி கேட்ட பாத்தாப்லையே வாசப் படீல உக்காந்திட்டிருப்பேனாம். அங்கனையே தூக்கம் கூட உண்டாம். அதனால அம்மா தொல்லையே இல்லாம வீட்டு வேல எல்லாம் முடிச்சிருவாங்களாம்.


இப்போ நான் உக்காந்து முழிச்சிட்டிருக்கேன். வாசப் படீலன்னு அவசரப் பட்டு நினைச்சிடாதீங்க. எனக்கு நாலு வயசு ஆய்டிச்சு. நர்சரி ஸ்கூல் மர பெஞ்சில கிட்டத்தட்ட ஒரு இருபது வாலுங்க புடை சூழ உக்காந்து அழலாமா வேணாமான்னு யோச்சுகிட்டு இருக்கேன்.அவனவன் போடற சௌண்ட பாக்கும்போது தப்பா ஆசப் பட்டுட்டோமோ, ஸ்கூலுன்னா ஏதோ எசகு பிசகா நடக்குமோன்னு லைட்டா பயம் வந்திச்சு. மூத்த வாலுங்க ஒரு வார்த்த சொல்லாம விட்டாங்களேன்னு அவங்கள திட்டினேன். அம்மாவும் அப்பாவும் ரொம்ப பெருமையா பாத்திட்டு நின்னாங்களா சரி போனா போகுதுன்னு உக்காந்திட்டேன். ராஜினின்னு ஒரு பொண்ணுதான் என் பெஸ்டு பிரென்ட். அவ அம்மாதான் டீச்சர். என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி. டீச்சர் பேரு தெரீல. ராஜினி அம்மான்னுதான் சொல்லுவேன். இப்டி ஒரு நெலம வரும்னு தெரிஞ்சிருந்தா அறிஞ்சு வச்சிருப்பேன். இப்போ அம்மாவுக்கு ஃபோன போட்டு கேட்டேனா அவங்க பேரு பவளராணின்னு சொன்னாங்க. அது மட்டுமா! ஏண்டாம்மா நேத்து கூட நல்லா தானே பேசினே. மறுபடியும் ஜூரமான்னு கூடவே ரெண்டு கேள்விய சேத்துக் கேட்டாங்க. அவங்களுக்கு தெரியுமா என் நிலை?

அடுத்து எல்கேஜி. டீச்சர் பேரு கணேஷ்வரி. அம்மாவோட உறவுக்காரங்க. ராஜினி க்ளாஸ்ல மிஸ்ஸுங்கறதால ஸ்டார்டிங் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடிச்சு. அவ என்ன விட ஒரு வயசு கம்மி, டீச்சர் பொண்ணுங்கறதால அங்க வந்தாங்கிறது இப்போ மாதிரி அப்போ புரியலையே. நான் சமத்தா எல்லாம் எழுதி முடிச்சிடுவேன். அதனால மிச்ச நேரம் பூரா மத்தவங்கள சும்மா பாத்துகிட்டே இருப்பேன். சுசி நீ ரொம்ப சமத்து குழந்தடி திடீர்னு டீச்சர் ஒரு புது டெக்னிக்க கொண்டு வந்ததும் மறுபடி ப்ராப்ளம். ஸ்கூல் போக மாட்டேன்னு ஒரே அடம். டீச்சர் மணல தர மேல பரப்பிட்டு அது மேல விரலால அ, ஆ ன்னு எழுத வைப்பாங்க. விரல் எல்லாம் சிவந்து போய் அவங்க அடிக்கடி கைய உதறிக்கிறத பாக்க முடியாத நான், வேற என்ன? அவ்வ்வ்வ்வ்வ்... தான்.அப்புறம் டீச்சர் என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ ஏன் டீச்சர் எங்கிட்ட நல்லா, அன்பா நடந்துக்கறீங்க மத்தவங்கள அழ விடறீங்க. நீங்க நல்லவளா கெட்டவளான்னு கேட்டேன். ஐய்யய்யோ! அடிப் பாவி மகளே ஏண்டி அப்டி கேட்டே. டீச்சர் அடி பின்னீருப்பாங்களே அப்டீன்னு அவசரப் பட்டு நினைக்கப்படாது. டீச்சர் ரொம்ப பீலாகி ரொம்ப நேரம் என்ன மடி மேல உக்காத்தி வச்சிட்டு இருந்தாங்க. என்ன சொன்னாங்கன்னு நினைவில இல்ல. ஆனா நெறைய சொன்னாங்க. அதோட அந்த பனிஷ்மேண்டும் அப்றமா இல்ல. என் சமூக சேவை அப்போதான் ஸ்டார்ட் ஆச்சு. ரொம்ப புகழாதீங்க. பதிலுக்கு மேல படிச்சிட்டே போங்க.

இப்போ முதல் வகுப்பு. இங்கேதான் எனக்கு அடுத்த கண்டம் + அடுத்த கண்ணீர் காண்டம். என்னன்னு அறிய இன்னும் ஒரு கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க. சத்தியமா தொடர்ந்து எழுதுவேன். தண்டனைய ஒரே தடவேல குடுக்க கூடாதில்ல. அப்புறம் நீங்க எங்கிட்டவே ரிப்பீட்டு போட்ற மாட்டீங்க. அதாங்க... சுசி எங்க பதிவுக்கு பின்னூட்டம் போடும்போது கொஞ்சூண்டு(?) எழுதுறே. உன் பதிவுன்னா மட்டும் இவ்ளோ எழுதிறியே. நீ நல்லவளா கெட்டவளா???
மீண்டும் சந்திப்போமுங்க... அது வரை நலமா இருங்க.

01 July, 2009

இது ரெம்ப அநியாயம்...

குடி உடல்நலத்துக்கு கேடானதுங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். தெரிஞ்சும் (குணா உட்பட) ஏன் குடிக்கிறீங்க என்பது எனக்கு புரியாத புதிர். இருந்தும் ஏன் இந்த பதிவு சுசீன்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது. கார்க்கி கார்க்கின்னு ஒருத்தர் எழுதின (சத்யமா ஒருத்தர்தான். ரெண்டு கார்க்கிய பூமி தாங்காது) இன்னைய பதிவ படிச்சதோட விளைவு இது. போனாப் போவுது யாருக்காவது யூஸ்புல்லா இருக்கட்டுமேன்னுட்டு போடறேன்.

பி.கு:- முன்னாடியே இத பாத்தவங்க கடுப்பாயிடாதீங்க. ஏன்னா இது எனக்கு ஈ மெயில்ல கிடைச்சது. இதுக்கு எந்த விதத்திலேம் நான் உரிமை கொண்டாடப் போறதில்ல. உரிமை உள்ளவங்க மன்னிச்சுக்கோங்கோ....

பின் குறிப்புக்கு பி.கு:- அவரோட பதிவு படிக்காதவங்க இங்க சொடுக்குங்க....

http://www.karkibava.com/2009/07/blog-post.html

இனி அநியாயத்த பாருங்க....







பின் குறிப்புக்கு பின் குறிப்புக்கு பி.கு:-
இப்டி ஒரு பதிவ போட்டுட்டு உங்க கிட்ட நலம்தானான்னு கேக்க மனசே வரலங்க... அவ்வ்வ்வ்.......

29 June, 2009

வாழ்த்து மழையில் அம்மாவும் அப்பாவும்...


எல்லோரும் நலமா உறவுகளே?!
இன்று என்னோட அன்பு அப்பாவுக்கும் ஆசை அம்மாவுக்கும் திருமணநாள். அவங்க இன்னிக்கு மாதிரியே இன்னும் நெற...ய்ய வருஷம் சந்தோஷமா வாழணும்னு வாழ்த்துங்கள்.கூடவே சின்னதா ஒரு தகவலும் குடுத்திருக்கேன். பாருங்க.

Year 1 is Paper Anniversary
Year 2 Cotton Anniversary
Year 3 Leather Anniversary
Year 4 Linen Anniversary
Year 5 Wood Anniversary
Year 6 Iron Anniversary
Year 7 Wool Anniversary
Year 8 Bronze Anniversary
Year 9 Copper Anniversary
Year 10 Tin or Aluminum Anniversary
Year 11 Steel Anniversary
Year 12 Silk Anniversary
Year 13 Lace Anniversary
Year 14 Ivory Anniversary
Year 15 Crystal Anniversary
Year 20 China - porcelain Anniversary
Year 25 Silver Jubilee or silver wedding Anniversary
Year 30 Pearl Anniversary
Year 35 Coral or jade Anniversary
Year 40 Ruby Anniversary
Year 45 Sapphire Anniversary
Year 50 Golden Jubilee Anniversary
Year 55 Emerald Anniversary
Year 60 Diamond Jubilee
Year 65 Blue sapphire Anniversary
Year 70 Platinum Jubilee.
Year 75 Diamond wedding Anniversary
Year 80 Oak wedding Anniversary

27 June, 2009

மழை விட்டும் தூறல் நிக்கல...

என்னப்பா! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
சுசி மட்டும் நல்லாவே இல்லீங்க. இப்போதான் ஒருபடியா கொஞ்சம் தேறி இருக்கேன். சுசிக்கு பேஸ்மென்ட் மட்டும் இல்லீங்க, பில்டிங்கும் வீக்கு. அவ்ளோ சுலபமா சுசி சீக்காளி ஆனதில்ல. எப்பவாச்சும் ஜலதோஷம் அட்டன்ச போட்டுக்கும். இந்த வாட்டி கொஞ்சம் ஜாஸ்தி ஆய்டிச்சு. பல நோய்கள் கைகோத்துகிட்டு ஒரே சமயத்துல அட்டாக் பண்ணிடிச்சு. அதோட ட்ராவல் பண்ணினதும் ரொம்ப தப்பாயிடிச்சு (அது பத்தி தனி பதிவு எழுதுறேன்)

நா வேற ரொம்ப சீன் காட்டிகிட்டு மலேல ஏறினேனா (இதுக்கும் தனி பதிவு வரும்) நிலம இன்னும் மோசமாயிடிச்சு. ஏங்க எனக்கு மட்டும் இப்டி? ரொம்ப நொந்து போயிட்டேங்க. அதிலையும் டாக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான அன்டி பயாட்டிக் வேற குடுத்திட்டாரா ஒரே தலைசுத்தும், வாந்தியும். குணா இத நண்பர்கள் மத்தீல என்ன மாதிரி ப்ளே பண்ணார்னு தெரீல, ஆளாளுக்கு போன போட்டு மூணாவதா? சொல்லவே இல்லைங்கிறாங்க. அதில இது வேறயா? ( அப்டியே இருந்தாலும் இத எல்லாம் சொல்லிட்டா செய்வாங்க)

அதிலையும் குணாவோட கவனிப்பு இருக்கே, அட அட அடா... ரெஸ்டாரன்ட் கெட்டுது போங்க. காப்பி கேட்டா ஒரு மணிக்கு அப்பறம். ஜூசின்னா அரை மணி. சாப்பாடு பீசாவும் பர்கரும் (பசங்க காட்ல அடை மழை) சுசி ரெண்டு நாள் பாத்திட்டு பொங்கி எழுந்ததில மெரண்டு போயி கோழி குழம்பும் சோறும் போட்டாரு. அவர் மட்டும் காயகல்பம் சாப்பிட்டிருக்காரா என்ன? அவருக்கும் உடம்புக்கு ஏதும் வரும்ல! (என்ன ஒரு பரந்த மனம் பாத்தீங்களா) அப்போ போடறேண்டி நானும் ரெஸ்டாரன்ட் சாப்பாடு.

முதுகு வலிக்கு திடீர்னு மலை ஏறினதும் காரணாமா இருக்கலாம்னு டாக்டர் சொன்னார். பிசியோதெரபிஸ்ட் சின்னதா எக்சர்சைஸ் பண்ண சொன்னார். அது எங்க கிடைக்கும்னு தெரீலிங்க. அதிலையும் என் சைஸ்ல கிடைக்குமான்னும் தெரீல.

சும்மா சொல்லக் கூடாதுங்க, ஸோபாவும் டீவியுமா பொழுத ஓட்ரதும் சுகம்மாதான் இருந்திச்சுங்க. அதிலையும் இப்போ ஆதித்யா+சன் மியூசிக்கும் நமக்கு வருதா ஒரே ஜாலி. இனி மறுபடியும் வேலைக்கு ஓடுறத நெனக்கவே அலுப்பா இருக்கு. வேற வழி? பசங்களுக்கு கொண்டாட்டம் அம்மா வீட்ல இருக்காங்கன்னு. இந்த குணா இருக்கே... நீ நாளைக்கு வேலைக்கு போறியான்னு கேட்டு அப்பப்போ கடுப்பேத்திட்டே இருப்பாரு (என்னைய பாக்க அவ்ளோ கஷ்டமாவா இருக்கு? ) இப்போ கூட ஒரு டவுட்டாவே சுத்திட்டு இருக்காரு.

அப்புறமா வேற மருந்தோட உங்கள சந்திக்கிறேன். அதுவரை நலமாய் இருங்கள்.

22 June, 2009

விஜய் வாழ்த்து மழையில் - சுசி வருத்த மழையில்....


சுசிக்கு கண்ணு பட்டு போச்சுங்க! குளிர் ஜூரம், உடம்பு பூரா வலி, தலை வலி, தொண்டை நோவு, லைட்டா ஜலதோஷம் அப்புறம் ரொம்ப பசிக்குது, கொடுமை சாப்ட முடில. சிக் லீவ்ல இருந்தாலும் நம்ம விஜய்க்கு சின்னதா ஒரு வாழ்த்து சொல்லிடலாமேன்னு நினச்சேன். சொந்தமா எழுத உடம்பில தெம்பில்ல. அதனால விடுப்பு.காம்ல ஆட்டைய போட்டுட்டேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய். உங்க கொள்கைகள்ல அரசியல்+சினிமாத்தனம் புகாம பாத்துக்கோங்க. வாழ்க நலமுடனும் வளமுடனும்.

இனி சுட்ட பழம்.....



விஜய் பிறந்தநாள் செய்தி !!!

எதிர்பார்த்தபடியே தனது நற்பணி இயக்கத்தை மக்களின் இயக்கம் என அறிவித்துவிட்டார் விஜய்.
விஜய்க்கு இன்று பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்க, தனது பிறந்தநாள் செய்தியாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

"எனது முதல் படம் வெளியானபோது ரசிகர் மன்றம் ஆரம்பித்து, படிப்படியாக சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்த்தீர்கள். ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலை கொடுப்பதில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, இலவச திருமணம் நடத்தி வைப்பது, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுப்பது, ஏழை பிள்ளைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை செய்து சமூக தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள்.

நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி. அதனால் நான் கல்விப் பணியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். பல நூறு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதுடன் அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் 2 இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறேன். இந்த கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். இரண்டு இருபதாகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் பிறந்தநாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.

நேற்றைய தொண்டன், இன்றைய தலைவனாக இருக்கிறான். அதேபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு. இதை ஆழமாக மனதில் பதிய வைத்து மேலும் உங்கள் சமூக பணியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்காக பாடுபடும் ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, வளமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்.

முக்கியமா இவ்ளோ உடம்புக்கு முடியாம போன நெலமேலேம் எனக்கு வாழ்த்து சொன்ன சுசிக்கு என்னோட மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். அவங்க சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்."

ஏன்.... ஏன்... ஏம்பா.... ஏன் இந்த கொலைவெறி? நமக்குள்ள என்ன. சத்தியம்மா விஜய் இத சொன்னாருங்க. ( என் கனவுல)

19 June, 2009

என் புதிய பதிவுலக நண்பர்களுக்கு....


சென்ஷி, லோகு, சொல்லரசன், பித்தன்!

மீண்டும் நன்றி. லோகு சொன்னாப்ல வேற தளங்களிலேயும் போடனும்னு ரொம்...ப ஆசை. ஆனா இன்னும் கொஞ்சூண்டு திருத்தம் செஞ்சதும் போடலாம்னு இருக்கேன். இன்னும் நெறைய எழுதணும்னு எனக்கும் விருப்பம்தாங்க. ஆனா சேம் பிளட். நேரமே கெடக்கிரதில்ல.


இங்க இருந்து பொட்டி தட்ற நேரம்தான் ஐடியாவா கொட்டுது. வீட்டுக்கு போயி என் வாலுங்க கூட மல்லு கட்டி தூங்க வச்சு, சமயல முடிச்சு, ரெண்டு பேர் கூட (குறைஞ்சது) போன்ல (வம்பு) பேசி, கொஞ்சூண்டு டிவி பாத்து (சத்யமா சீரியல் பக்கம் போறதில்ல. நம்ம கதைய வச்சே நாலு மெகா சீரியல் ஓட்டலாம். இதில அது வேறயா)

எத்....தன வேல.... லொட்டு லொசுக்குன்னு வீட்ல வேலைக்கா பஞ்சம் (இந்த வீட்ல மனுஷன் இருப்பானா. சும்மா உக்காந்தா நீ என் தலமேலயும் எதையாவது வச்சிட்டு போய்ட்டே இருப்பேன்னு சொன்னது உன் புருஷனா? விடு சுசி உனக்குத்தான் தாலி கழுத்துல ஏறும் போதே சூடு சொரண எல்லாம் எறங்கிடுச்சே)

இது எல்லா குடும்ப தலைவீசும் சொல்ல்ரதுதாங்க. வீட்டுக்கு வீடு வாசல் படி இருந்து தானே ஆகணும். என் வீடு மட்டும் விதி விலக்கா என்ன. அதிலையும் ஒரோருத்தர் ப்ளாக பாக்கும் போது தப்பா உள்ள வந்திட்டோமான்னு தோனுது. என்ன்னா எழுத்து, என்ன்னா அமைப்பு.... இதில நம்மளது எல்லாம் எந்த மூலைக்கு. இருந்தாலும் பரவால்ல. அவங்களது மாளிகைன்னா நம்மது குடிசை. ஹோட்டல் + கையேந்திபவன். சரவணா ஸ்டோர்ஸ் + பொட்டிகடை. இப்டி ஏதேதோ சொல்லி என்ன நானே தேத்திக் கிட்டு எழுத வேண்டியதா போச்சு. அட்லீஸ்ட் ஆட்டைய போட்டாவது எழுதிருவோம்ல!


அதோட நான் பதிவர் கணக்கை ஆபீஸ்ல இருந்து உருவாக்கீட்டேனா அது பெரிய தலைவலியா போச்சு. ஆஃபிஸ் மெஷின்ல தமிழ் வரல. அப்பறம் நான் ரொம்ப நோண்டினதில அது மூணு மொழிகளேம் போட்டு குழப்பிடுச்சு. நான் வேற டெக்னிகல் விஷயத்தில அதி மேதாவியா சமயங்கள்ல என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறேன். சின்னதா ஒரு உதாரணம். வீட்ல வாலுங்களுக்கு என் மொபைல் + கம்பியூட்டர தொடறதுக்கு அனுமதி கிடையாதுங்க. ஏதாவதுன்னா சமத்தா அப்பாவோடாத விளையாடுங்க கண்ணுங்களான்னு அனுப்பிடுவேன். இப்போ அவங்களுக்குன்னு ரெண்டும் வாங்கி குடுத்ததும் என்ன தெனாவட்டு! உங்க கிட்ட இந்த ப்ரோக்ராம் இருக்கா, இத எப்டி யூஸ் பண்றதுன்னு தெரியுமான்னு ரொம்பவே கடுப்பேத்துறாங்க. நான் பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொன்னா என் யானை சொல்லுது அதா நீ பூனைங்கிறது தெரியுமே காலம் வருதான்னு மட்டும் பாருங்குது. எனக்கு எதிரிங்க வெளிய இல்லீங்க.

உங்க ஆதரவு தான் எனக்கு என்னைக்குமே இருக்குமே (இருக்குமா?) நெஜமா சொல்றேங்க இது எனக்கு ரொம்ப புதுமையான + சுகமான அனுபவமா இருக்கு. முகம் தெரிந்தவர்களிடம் முதுகிலும், மனதிலும் வாங்கும் குத்துகளுக்கும் அடிகளுக்கும் இந்த முகம் அறியா நண்பர்கள் வடிகாலா இருக்கப் போறாங்கன்னு என் மனசு சொல்லுது.

எனக்கு எதுவும் தெரியாதுங்கரத சுருக்கமா சொல்லாம கொஞ்சம் ஓவரா பில்ட் அப் குடுத்திட்டேன்னு நல்லாவே தெரியிது. (அதுக்காக விஜயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்க நீங்க படிக்க கூடாதுங்க. அப்புறம் எங்கேருந்து நலமா இருக்கிறது. பிரஷர் எகிறிடாது?)

எல்லாரும் நல்ல மனசோடயும் நல்ல சுகத்தோடையும் இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன், எப்பவும் போல. மீண்டும் நலம் அறிய வருவேன்....

12 June, 2009

*****************


எல்லோரும் நலம்தானே? சின்னதா ஒரு விளக்கம்.. நான் பாக்கிறதில பிடிச்ச விஷயங்களை, நான் கேட்டு ரசிக்கிற விஷயங்கள, நான் கவிதைங்கிற பேர்ல எழுதுற (?) விஷயங்கள, நான் ருசி பார்த்த விஷயங்கள இன்னும் எத்தனையோ விஷயங்கள உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன்.

உங்களுக்கும் வேற வழி இல்லைங்க. அனுபவிச்சு தான் ஆகணும். எனக்கும் வேற யார் இருக்கா? என் கண்ணாளனுக்கு ரொ....ம்ப சந்தோஷம்க. இந்த பாட்ட கேளுங்களேன், அந்த படத்த பாருங்களேன், இந்த காமெடிக்கு கொஞ்சமாவது சிரிங்களேன்னு தொல்லை பண்ண மாட்டேனாம். பாவம். கொஞ்சூண்டு நிம்மதியாவது மனுஷனுக்கு கிடைக்கட்டுமே.

இனி அப்பப்போ எழுதறேன். பொறுமையோட படிச்சிடுங்க. அப்போதான் யாவரும் நலமா இருக்கலாம்.

மு.கு:-
என்னோட படம் மாத்திட்டேன். அழ...க்கா (வடிவேல் ஸ்டைல்) இருக்கேனான்னு ஒரு வார்த்தை மறக்காம சொல்லிடுங்க....

11 June, 2009

அயன் - நெஞ்சே நெஞ்சே....


ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் என் சேர்கிறாய்..
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே....

கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் இம் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே பேரன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே
வெயிற் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீழும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் மலராகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே

கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காத்து நம் பூமி தனை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாது
ஏய் மஞ்சள் தாமரையே என் உச்ச தாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்..... ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

படம் : அயன்
பாடியவர் : ஹாரிஸ் ராகவேந்திரா, மகதி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பி.கு:- குளிர்மையான காட்சிகள், மகதியின் இனிமையான குரல், எல்லாத்துக்கும் மேல ஹாரிஸின் இசை என எல்லாம் சேர்ந்து இந்த பாடலை ரசிக்க வைத்தது.