Pages

  • RSS

12 June, 2009

*****************


எல்லோரும் நலம்தானே? சின்னதா ஒரு விளக்கம்.. நான் பாக்கிறதில பிடிச்ச விஷயங்களை, நான் கேட்டு ரசிக்கிற விஷயங்கள, நான் கவிதைங்கிற பேர்ல எழுதுற (?) விஷயங்கள, நான் ருசி பார்த்த விஷயங்கள இன்னும் எத்தனையோ விஷயங்கள உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன்.

உங்களுக்கும் வேற வழி இல்லைங்க. அனுபவிச்சு தான் ஆகணும். எனக்கும் வேற யார் இருக்கா? என் கண்ணாளனுக்கு ரொ....ம்ப சந்தோஷம்க. இந்த பாட்ட கேளுங்களேன், அந்த படத்த பாருங்களேன், இந்த காமெடிக்கு கொஞ்சமாவது சிரிங்களேன்னு தொல்லை பண்ண மாட்டேனாம். பாவம். கொஞ்சூண்டு நிம்மதியாவது மனுஷனுக்கு கிடைக்கட்டுமே.

இனி அப்பப்போ எழுதறேன். பொறுமையோட படிச்சிடுங்க. அப்போதான் யாவரும் நலமா இருக்கலாம்.

மு.கு:-
என்னோட படம் மாத்திட்டேன். அழ...க்கா (வடிவேல் ஸ்டைல்) இருக்கேனான்னு ஒரு வார்த்தை மறக்காம சொல்லிடுங்க....

5 நல்லவங்க படிச்சாங்களாம்:

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள்!

நிலாரசிகன் said...

வருக தமிழ் தருக.

kommentarer இது என்ன நார்வே மொழியா?

சுசி said...

//தமிழ் பிரியன்//
நன்றி தமிழ் பிரியன். நேரம் கிடைக்கும்போது நிச்சயமா நிறைய எழுதுறேன்.

சுசி said...

//வருக தமிழ் தருக.
kommentarer இது என்ன நார்வே மொழியா?//
நன்றி நிலாரசிகன்... அது நார்வே மொழியேதான். சும்மாவே தமிங்லீஷ்ல போட்டு குழப்பிக்கிட்டு இருக்கோம். இதில மூணாவதா இதுவும் சேர்ந்து ஒரே தலைவலி. கொமெந்த்தாரெர்னா கமண்ட்ஸ்னு அர்த்தம். ஆனா இப்டி தமிழ்ல (குண்டக்க மண்டக்கவா) எழுதுறது ரொம்பவும் சுகமா இருக்கு. எப்டில்லாம் எழுதுறாங்கன்னு பிரமிப்பாவும் இருக்கு. நிச்சயமா தமிழ்ல எழுதுவேன்.

சுசி said...

மறந்தே போய்ட்டேன் தமிழ் பிரியன்.. என் பதிவை பின் தொடர்வதற்கு என் மனமார்ந்த நன்றிகள். வர வர பொறுப்பு கூடிகிட்டே போறாப்ல இருக்கு. உங்க பதிவர் உதவி பார்த்தேன். ரொம்ப கண்ணைக் கட்டுது. எனக்கு நெறைய நேரம் தேவை இந்த டெக்னிகல் சமாச்சாரங்களோட மல்லு கட்ட. நிச்சயமா பயன்படுத்துவேன். இல்லேன்னா உதவீன்னு உடனே கேட்க மாட்டேனா என்ன? படத்ல இருக்கிற வாண்டு யார்? ரொம்ப க்யூட்டா இருக்கு.