என்னவோ ஒரு எரிச்சல்.. கோவம்.. தேவை இல்லாத பதட்டம்.. அது பயமோன்னு கூட சமயத்தில டவுட்டா இருக்கும்.. இத்தனூண்டு விஷயத்துக்குக் கூட கத்தணும் போல.. எதுவுமே பேசாம இருந்தா தேவலை போல.. ஒருவித ஆற்றாமை அழுத்த..
இப்டியெல்லாம் எனக்கு மட்டும் தான் இருந்ததுன்னு நினைச்சேன்.. நேத்து அக்காச்சிட்ட பேசினப்ப அவளுக்கும் இதே போல இருந்ததா சொன்னா.. எல்லாத்துக்கும் விடை தலைவரின் பிறந்தநாளும் தொடர்ந்து வந்த மாவீரர் தினமும்னு புரிஞ்சது.. கடகடன்னு நடந்து முடிஞ்ச அத்தனையையும் மீட்டுப் பார்த்தோம்.. உலகம் போற்றியவர் இறப்பென்றது பலர் தூற்றும்படி ஆகி இருக்க வேணாமேன்னு இருந்திச்சு.. என்ன இருந்தாலும் எங்க தலைவர் போல இனி ஒருத்தர் எங்களுக்குக் கிடைக்கவேமாட்டார்னு உறுதியா சொல்லிக்கிட்டோம்.. அதுவரைக்கும் அலைஞ்சுட்டு இருந்த மனசு கொஞ்சம் அமைதியாச்சு.. ஆனாலும் சரியா தூங்கமுடியலை..
அப்படியே உறக்கமும் விழிப்புமா புரண்டு புரண்டு படுதிட்டிருந்தவ கடைசியா நேரம் பாத்தப்ப ரெண்டு பதினாலு.. திடீர்னு கேட்ட சத்தம் மாம்சோட மொபைல்னு அடையாளம் புரிஞ்சப்ப பதைப்போட முழு விழிப்பு வந்திடிச்சு.. நேரம் நாலேகால்.. அவருக்குத் தெரிஞ்சவங்க.. புகலிடம் தேடி வந்தவங்க.. இலங்கைக்குத் திருப்ப அனுப்பறதுக்காக போலீஸ் கூட்டிப் போயிருக்காம்.. அப்பறம் அவங்களுக்கு வேண்டியவங்களோட பேசி விஷயம் சொன்னார்.. அஞ்சு மணி போல தூங்க ட்ரை பண்ணா தூக்கத்துக்குப் பதில் கண் எரிச்சல்ல கண்ணீர்தான் வந்துது.. கொஞ்ச நேரம் அவங்களப் பத்திப் பேசிட்டு அப்பறம் மௌனமா அலாரம் வரைக்கும் காத்திருந்தோம்..
இன்றும் மாவீரர் அஞ்சலி நிகழ்வுல கலந்துக்கலை.. அவர போறீங்களான்னு கேட்டேன்.. 'இல்லை.. வீட்ல நீ மெழுகுவத்தி ஏத்துவல்ல அது போதும்.. நான் போலை'ன்னார்.. ஆறுமணிக்கு மெழுகுவத்தி ஏத்தி வச்சிட்டு ஈழத்துக்காக உயிர் இழந்த அத்தனை பேருக்குமாக வேண்டிக்கிட்டேன்.. கூடவே இனியாவது எம்மை நிம்மதியாக வாழ வை இறைவான்னு கேக்கவும் தவறலை..
ஈழம்னு இல்லை.. இலங்கைன்னு இல்லை.. எங்கல்லாம் போரும் அழிவும் இருந்ததோ.. இருக்குதோ.. அந்த மக்களுக்காக.. அவங்க நிம்மதிக்காக.. அவங்க வாழ்க்கைக்காக.. ஒரே ஒரு நிமிடம்.. மனதார அஞ்சலி செய்யுங்க.. நம்மால முடிஞ்சதா இருக்கட்டும்..
அப்படியே இந்தப் பாடலை எல்லாருக்குமா கேக்கணும்னு தோணிச்சு.. ஏஆர் ரகுமானின் இசையிலும் குரலிலும் அற்புதமான பாடல்.. 2002இல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில.. வைரமுத்துவின் வரிகள்ல.. கேட்டு முடிச்சதும் ஒரு ஏக்கப் பெருமூச்சு இல்லேன்னா ஒரு பெரிய மூச்சு வந்திச்சுன்னா.. நீங்க என் இனம்..
--
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..
காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடிக் கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளிக் கண்ணீர் போல் அர்த்தம் தருமோ..
எங்கு சிறுகுழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே..
இங்க இசைப்புயல் வரும் வீடியோ இருக்கு..
இங்க படத்தில் வரும் காட்சி இருக்கு..
இங்க முழுமையான பாடல் இருக்கு..

7 நல்லவங்க படிச்சாங்களாம்:
எங்கு இருந்தால் என்ன...? மனதார நினைத்தாலே போதும்... அழகாக சொல்லிட்டீங்க...
பிடித்த பாடல்... வரிகளுக்கு நன்றி...
ஒரு நாட்டில் போர் நடந்த்தால் அந்த நாட்டு மக்களுக்கு என்ன லாபமும் கிடையாது. மாறாக தூக்கமும், வறுமையும்தான்.(அந்த நாடு போரில் வென்றால் கூட.)
அஞ்சலிகள் !
/ எங்கல்லாம் போரும் அழிவும் இருந்ததோ.. இருக்குதோ.. அந்த மக்களுக்காக.. அவங்க நிம்மதிக்காக.. அவங்க வாழ்க்கைக்காக../
எனது அஞ்சலிகளும் சுசி.
இனியாவது யுத்தம் இல்லாத உலகம் வேண்டும் என கடவுளிடம் கேட்போம்.
நன்றிங்க தனபாலன் :)
--
சரியாச் சொன்னிங்க பாலா..
--
கோபி..
அக்கா..
--
கண்டிப்பாங்க அமுதா..
Post a Comment