Pages

  • RSS

02 November, 2011

மஷ்ரூம் பீஃபும் சோயா மட்டனும்.

'அம்மா.. தங்கா பெரியம்மா வீட்ல ஃபோறிகோல் சாப்டோம்மா.. அவ்வ்வவ்ளோ டேஸ்ட்ட்ட்ட்டா இருந்ததும்மா.. நீங்களும் செஞ்சு குடுக்கரிங்களா'

அப்டின்னு பசங்க ஒரு சேரக் கூறி(வி)னார்கள். அது ஒண்ணும் அவளவு கஷ்டமான ரெசிப்பி இல்லைங்க. கஷ்டம்னா கூட அது சாப்டுறவங்களுக்குதானே, செய்ற எனக்கு என்ன வந்தது. ஆனால் கோவா (முட்டைக்கோஸ்) + மட்டன்.. பார்க்க சூப் போல இருந்தாலும் மெயின் டிஷ்ஷே அதுதானாம். காம்பினேஷன் நல்லா இல்லையேன்னு விட்டிட்டன். இவங்க கேட்டதும் சரின்னு கூகிளாண்டவரிட்ட matpirat.no என்று வேண்டினேன்.. அவர் இதையா வேண்டினே சரியா பாருன்னு குட்டினதும் பார்த்தா pratக்கு பதில் piratனு டைப்பிட்டன். சரின்னு வேண்டப்பட்ட பொருளெல்லாம் லிஸ்ட் எழுத வேண்டியது இல்லாம ரோல்ஸ் செய்ய வாங்கி வச்ச மட்டன் கூடவே கோவான்னு பிரிஜ்ஜை திறந்ததும் சிரித்தன. வேறென்ன வேண்டும்?? ஓ.. என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டுமோ?? நோட்டிக்குங்க.

fårikål (எ) mutton stew.

நாலு பேருக்கு.

1 1/2 கிலோ மட்டன்

1 1/2 கிலோ கோவா

4 ts முழு மிளகு

2 ts உப்பு

3 dl தண்ணீர்

உருளைக்கிழங்கு தேவைக்கு ஏற்ப.

 

063 பாத்திரம் கொஞ்சம் பெருசா இருக்கட்டும். இப்டிக்கா பெரிய துண்டா, எலும்பு இருக்கிறதா இருக்கணும் மட்டன். இங்க இப்டியே கிடைக்குது. கோவாவையும் இப்படியே பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளுங்க.

 

 

 

 

064 இடையிடையே மிளகையும் தூவிக்கணும். நான் 4 க்கு பதில் 8 டீ ஸ்பூன் சேர்த்தேன்.

 

 

 

 

 

 

067 அப்படியே முழுவதையும் கலந்து கட்டி அடுக்கிவிட்டு உப்பு சேர்த்து, தண்ணீரையும் ஊத்திக்கணும். இனி அதுபாட்டுக்கு  இரண்டு மணி நேரம் குறைஞ்ச தீயில வேகட்டும். இப்போ உருளைக்கிழங்கை தனியா வேக வைத்துக் கொள்ளுங்க. அது முடிய நீங்க வேற வேலை இருந்தா பாத்திட்டு வாங்க. சிம்ல இருக்கிறதால அடிப்பிடிக்க வாய்ப்புகள் குறைவு.

 

070 ஒன்றரை மணி நேரம் அவிந்ததும் நான் மேலும் காலிஃப்ளவர், புரோக்கலி, காரட் என சில பல சேர்த்துவிட்டேன். ஆனால் இவற்றை இறக்குவதற்கு ஒரு பத்து நிமிடம் இருக்கும்போது சேர்த்தாலே போதும். அரைமணி நேரமாக ஓவர் குக் ஆகிவிட்டது.

 

 

073 நம்பி சாப்பிடலாம்!! சுள்ளென்று மிளகு அவ்வப்போது கடிபட ம்ம்..

பாதியிலவே வாசனை வாயூற வைத்தது. வீட்டில் ஆரும் இல்லை. ஆசையாகக் கேட்ட பசங்க இல்லாமல் தனியே சாப்பிட மனமில்லாமல் அடிக்கடி கிச்சனுக்குப் போய் வாசனை பிடித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். நாலு மணிக்கு மேல் ஓவர் பசியாகி பாதி சாப்பிடும்போது வந்தார்கள். மீண்டும் வெளியே போக வேண்டி இருந்ததாலும், போன இடத்தில் எதுவோ சாப்பிட்டு விட்டதாலும் வந்து சாப்பிடுவதென்று மாம்ஸ் தீர்ப்பை வழங்கினார். திடீரென தடதடவென்று படியேறினார் அம்மு.

'எங்கம்மா போறீங்க.. கிளம்பலாம்' என்ற மாம்ஸ்க்கு

'அப்பா ஃபோறிகோல் மறந்திட்டேன்' என்ற பதில்தான் படியிறங்கிப் போனது. தடதடவென்று சது படியேறி வந்த சத்தத்தில் அம்முவின் 'ம்ம்..' கரைந்து போனது. இருவருக்குமே மீதியை ஊட்டிவிட்டு

'யம்மன் கொத் அம்மா.. நீங்கதான் ஃபோறிகோல் செய்றதில பெஸ்ட்' என்ற சர்ட்டிபிக்கேட்டோடு கிளம்பினோம். வரும்போது

'அது என்னடி ரெண்டு மணி நேரம் சமைச்சதா சொன்னே.. சூப் போல இருக்கு.. அதான் சாப்பாடா இன்னைக்கு' என்ற மாம்சுக்கு

'உங்கூர்ல சூப் ரெண்டு மணி நேரமா சமைப்பாங்களா' என்றதோடு நான் நிறுத்த சுவையின் புகழ் பரப்பினார்கள் நான் பெற்ற மக்கள். வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'அடியே.. பெரிய பீசா தூக்கிட்டு வந்தா அது கோவா.. இப்டியா என்ன ஏமாத்துவே நீ' என்று மாம்ஸின் குரல் கேட்டது.

நான் போன போது எனக்கு நிறைய்ய்ய முழு பெப்பரும், நான்கைந்து கோவா பீசும், பாதி பொட்டாட்டோவுமே இருந்தது. அப்பாவியாய் பார்த்த எனக்கு

'அதான் நீங்க அப்போவே சாப்டிங்களே' என்று பதில் வந்தது அதே நான் பெற்ற மக்களிடம் இருந்து. இங்கே இலையுதிர்காலக் குளிருக்கு இதமாகவும், பனிக்காலக் குளிருக்கு உடலைத் தயார்ப்படுத்தத்  தேவையான கொழுப்பைச் சேர்க்கவும் என இது ஃபோறிகோல்  சீஸனாகிவிடுகிறது. அக்காச்சிக்கு இந்த ரிசிப்பி சொன்னேன்.

’செய்லாம்டி எங்க.. சஜோபனுக்கு இப்டியான டிஷஸ் பிடிக்காது. கருண் குட்டிமாமா செஞ்சு குடுத்த பிளாக் சிக்கன் தவிர வேற சாப்டாது. சேரன் எடுவை எடுத்திட்டு இருக்கும். அப்பாவுக்கு செஞ்சு குடுக்கறேன்’ என்றார்.

‘அது என்ன குட்டிமாமா செஞ்ச ப்ளாக் சிக்கன்?? ரஜி எப்போ இப்டிலாம் சமைக்க ஆரம்பிச்சான்??’ என்று ஆச்சரியமானேன்.

’அது நாங்க அங்க போயிருந்தப்போ ரஜி பறவை மீன பொரிச்சுக் குடுத்தான். மீன்னு சொன்னா கருண் சாப்டாரேனுட்டு சிக்கன்னு சொன்னேன்.. அது கருப்பா இருந்ததால அதுக்கு பிளாக் சிக்கன்னு கருண் பேர் வச்சிட்டார்' அப்டின்னா.

நான் கூட மஷ்ரூம் சமைச்சுட்டு பீஃப்னு சொல்லி வெள்ளிக்கிழமைல இவங்களுக்கு குடுத்திட்டு இருந்தேன். மாமியார் இது மஷ்ரூம் ஆனா பீஃப்னு சொல்லி அம்மா தருவாங்கன்னு சொல்லின நாளில இருந்து அவங்க உஷாராயிட்டாங்க. சமைக்க முடியலை. அப்புறம்தான் தெரிஞ்சது மாமியாருக்கு மஷ்ரூம் உவ்வேன்னு. ஆனால் சோயாமீட் மாமியாருக்கு பிடித்தம்ன்றதால இன்றுவரை வெள்ளில மட்டன்னு போயிட்டு இருக்கு.

9 நல்லவங்க படிச்சாங்களாம்:

பாலா said...

லஞ்ச் டயத்துல இப்படி பசியா கிளப்பிட்டீங்களே...

கோபிநாத் said...

மஷ்ரூம் பீஃபுயை "அக்கறை"யுடன் செய்து "என் குடும்பம்"த்துடன் உண்டு, "கொலைவெறி"யுடன் பதிவில் படங்களுடன் போட்டுவிட்டேன் ;-)

ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படிக்கு
யாவரும் நலம் சுசி ;-)


\\அதுக்கு பிளாக் சிக்கன்னு கருண் பேர் வச்சிட்டார்' அப்டின்னா\\

ஆகா...கவனமாக தான் இவுங்களை டீல் பண்ணவேண்டும் போல ;-)

எல் கே said...

:))

விஜி said...

என்னது 2 மணி நேரம் வேகனுமா? ம்ம்க்கும் எங்க ஊருல இனிமேல் வருசத்துக்கு நாலு கேஸ் சிலிண்டர் தானாம்...

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் கூட மஷ்ரூம் சமைச்சுட்டு பீஃப்னு சொல்லி வெள்ளிக்கிழமைல இவங்களுக்கு குடுத்திட்டு இருந்தேன். //

கிகிகி ஏமாறாதே ஏமாற்றாதே.

//1 1/2 கிலோ கோவா//

அப்படியே 1/2 கிலோ மும்பை 1/2 கிலோ கொல்கத்தா 1/2 கிலோ டெல்லி 1/2 கிலோ சென்னை இதெல்லாம் போட்ருந்தா ருசியான இந்தியாவே கிடைச்சிருக்குமே ...! மிஸ் பண்ணிட்டீங்க

சுசி said...

ஹஹாஹா.. பாலா அதான் லஞ்ச் சாப்டிங்க இல்லை :)

@@

கோப்ஸ்.. ஏவ்வ்வ்வ் விடுறது நானா?? ரைட்டு!!
கவனம் இல்லப்பா வெகு கவனம் :)

@@

கார்த்திக் :)

சுசி said...

ஹஹாஹா.. வேணும்னா மட்டன் வேகினதும் கடைசில கோவா சேர்த்துக்கலாம் விஜ்ஜி :)

@@

தத்துவமா உ பி?? கிர்ர்ர்ர்ர்..

அதான் இல்லையே.. உங்க வீட்டுக்கு வந்து மச்சாள் (தம்பி வைஃப எங்கூர்ல மச்சாள்னு சொல்வோம்) கையால ருசியான இந்தியாவ டேஸ்ட் பண்னுவேன்ல :))

rajamelaiyur said...

இப்பவே நாக்கு இனிக்குது

rajamelaiyur said...

இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு