Pages

  • RSS

29 July, 2010

நீ ரொம்ப கேள்வி கேக்கறே..

அல்லாரும் நல்லா இருக்கிங்களா மக்கள்ஸ்.. உங்க கிட்ட இப்டி கேட்டு எத்த்த்த்த்தனை நாளாச்சு.

விடுமுறை இன்னமும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கிறதால கொஞ்சம் மனசு சரியா இல்லை.. அதனாலதான் என் பயணம் பத்தி இன்னமும் எழுதல. கண்டிப்பா எழுதுவேன். அதுவும் தொடர் கதையா.  என் கிட்ட பத்து கேள்விகள அனுப்பி வச்சிருக்காங்க நம்ம சின்ன அம்மிணி ஒரு தொடர் பதிவு வடிவில. நான் தான் எப்போதும் கேள்வி கேப்பேன்னு ஒருத்தர் சொல்வார். இதுவும் கேள்விதானே. அதான் அவர் சொல்றத அப்டியே தலைப்பா வச்சேன். உங்கள சொல்லல அம்மிணி. இத தொடர நானும் சிலர கோத்து விடறேன். அம்மிணி சொன்னா மாதிரி நேரமும் விருப்பமும் இருந்தா தொடருங்க, தொடர வைங்க.

@சந்தியா.

@ப்ரியா.

@புன்னகை.

@சீமான்கனி

@கயல்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சுசி.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சுசின்னு பேர் வைக்க பெருசா எந்த காரணமும் இல்லைங்க. அது என்னோட செல்ல பேரு மாதிரி. சின்ன வயசுல அப்டி கூப்பிடுவாங்க. அதனால் வச்சேன். அது உண்மையா என் பேருதான். ஆனா எனக்கு இன்னொரு பேரும் இருக்கு.. பாட்ஷா.. பாட்ஷா மாதிரி

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

காலடி எங்க வச்சேன்.. சாளரம் வழியா என் ஃப்ரெண்டி புடிச்சு தள்ளி விட்டுட்டா.. தொபுக்கடீர்னு வந்து விழுந்துட்டேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணே ஒண்ணுதாங்க செய்தேன். போஸ்ட்டு போஸ்ட்ட்ட்ட்டா எழுதிப் போட்டேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. ஏனாஆஆ.. என்னப் பத்தி மட்டும் எழுதணும்கிறதுதாங்க என் எண்ணமே. விளைவு.. நீங்க நலமா இருக்கிங்க தானே??

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என் மனத் திருப்திக்காக எழுதறேன். அது மூலமா உங்க அன்பை சம்பாதிக்க முடிஞ்சது நிறைவு.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

கண்ணே கண்ணு.. இப்போதைக்கு.   இன்னமும் ஒரு எட்டுப் பத்துக்கு சொந்தக்காரி ஆகும் எண்ணம் இருக்கு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

உண்டு. எழுத தைரியம் இல்லை. அல்லாரும் என்னய பாருங்க.. பாத்திங்களா.. இப்போ சைகைல காட்னேனே.. அந்த பதிவர் தான்.  ஏன்னும் சொல்லணுமா.. இப்போ மறுபடி பாருங்க என்ன.. இதுக்குத்தான். யார் கிட்டவும் சொல்லிடாதிங்கப்பா.. நான் பாவம்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அவ்வ்வ்.. பாராட்டலை. ஒருத்தங்க திட்டினாங்க. என் பதிவுக்குன்னா கூட பரவால்ல. அவங்க பதிவுக்கு கமண்ட் போட்டத்துக்கு. இங்க பாராட்டைப் பத்தி மட்டும் கேட்டிருக்கிறதால திட்டு பத்தி இதுக்கு மேல சொல்ல முடியாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஆவ்வ்வ்வ்வ்.. இருங்க.. இன்னும் கொஞ்சம் அழுது மனச  தேத்திக்கிட்டு   சொல்றேன்.. முன்னாடி நான் குடுத்த டவல் வச்சிருக்கிங்க இல்லை.. என்னதும் எடுத்துட்டு வரேன்.. கிளம்பிடாதிங்க..

25 July, 2010

கிளிக்ஸ்..

ஊர்ல இருந்து அண்ணா ஃபோட்டோஸ் அனுப்பி இருந்தார். உங்க கூடவும் பகிர்ந்துக்கலாமேன்னு நினைச்சதோட விளைவு இந்த பதிவு. சொந்த வீட்ல போய் இருக்கிற சந்தோஷம்.. சுகம்.. ஒவொரு தடவை இடம் பெயர்ந்து மறுபடி எங்க வீட்டுக்கு போகும்போதும் அனுபவிச்சிருக்கோம். ஓடியோடி ஏய் இது பாத்தியா.. அத பாத்தியா.. இந்த மரம் இங்க புதுசா வந்திருக்கேன்னு அவ்ளோ ஆரவாரம். ஒவொரு தடவை வீட்ட விட்டு கிளம்பும்போதும் திரும்பி வரும்போதும் அப்பா கண் கலங்க தவறுவதில்லை. அப்போ அது சிரிப்பா இருக்கும் எங்களுக்கு. இப்போ நாங்களே உழைக்க ஆரம்பிச்சதும் தான் அருமை புரியுது. சாரிப்பா.. ரஜியும் இப்போ ஒரு அப்பாவா, உங்க மனநிலைல தான் இருக்கான். தன் உழைப்பில பாத்து பாத்து கட்டிய வீட்டுல ஒரு மாசம்தான் இருந்தாங்க. இப்போ மறுபடி போய் இருக்கிறதுன்னா.. ”சொர்க்கம்டி”ன்னு சொன்னான். கரண்ட் மட்டும் இல்லையாம். அதுவும் சீக்கிரம் வந்துடும்னான்.

 Raji return to home 002 Raji return to home 011 Raji return to home 112

இது ரஜி வீட்டோட மிச்சம் மீதிகள். கொய்யா,தேசில்லாம் ஆளில்லாத போதும் நிறைய்ய காய்ச்சுப் போய் இருந்துதாம். 

 

 

அண்ணா வீட்டுக்கும் ரஜி வீட்டுக்கும் இடையில கிபிர் விமான குண்டு விழுந்த பெரிய்ய்ய குழி இருந்திச்சாம். நல்ல வேளை வீடு தப்பிச்சு. வீட்டுக்கு பின் பக்க வேலியோரம் இருந்த பதுங்கு குழிக்குள்ள 20 வெடிக்காத ஷெல்குண்டுகள் எடுத்தாங்களாம். என்னடா இதுன்னு நான் பயப்பிட சிரிக்கிறான். ”அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி. என்ன லேண்ட் மைண்ட்ஸ் தான் இன்னமும் சரியா கிளியர் பண்ணல. மத்தபடி ஒரு பயமும் இல்லை”ங்கிறான். எனக்கு வயித்தில நெருப்பு.

Raji return to home 026 Raji return to home 079 Raji return to home 102

எங்க ஊர் கண்ணகை அம்மன் கோயில் திருவிழா. சேதமானாலும் வீழாத கோபுரம். தேரிழுக்கிற படத்துல வலது கரையில ஆரஞ்ச் கலர் வஸ்திரத்துல ஆஜானுபாகுவா தெரியிற முதுகுதான் நம்ம சின்னண்ணா ரஜி.

 

DSC03882 DSC03884 DSC03912

இது அக்காச்சி தாய்நாடு போன உடன எடுத்தது. எல்லா சாமானும் எடுத்தாச்சான்னு கடைசி லுக் அண்ட் செக்  விடும் பொறுப்பான அம்மா பரமேஸ்வரி. அங்க போயி சாப்பிடலைன்னாலும் பரவால்லை.  நிறைய்ய குடிக்கணும்னு சித்தி (ஹிஹிஹி.. நான் தான்) சொன்னத சமத்தா கேட்டு கைல கோக் பாட்டில் தூக்கிய  அக்காச்சியோட மூத்த வாரிசு சஜோபன். தாய் மண்ணில் கால் பதித்த அத்தானோட பாதங்கள்.

DSC03978 DSC03979 DSC04012

சித்தி மாதிரியே பெட் பிரியர் அக்காச்சியோட ரெண்டாவது வாரிசு கருண். ”என்ன இவருக்கு பிரியம் கொஞ்சம் ஜாஸ்திடி. பூனைய வால்ல பிடிச்சு சுழட்டி ஒரு எறி”ன்னு அண்ணா சொன்னார். இப்போ சமத்தா விளையாடறாராம். நேத்தும் ஸ்கைப்ல காமிச்சார். ஷிஃபர்னு பேர் வச்சிருக்காராம். அத்தையோட லக்கேஜ்ல கனடா போக ட்ரையல் பார்க்கும் அண்ணாவோட கடைசி வால் கிரண். அண்ணா வளர்க்கிற கோழி.. குஞ்சுகள் உடன்.

அவ்வ்வ்வ்வ்வ்..

DSC03907

ரெம்ம்ம்ப டச்சிங்கான படம். ரஜி, கருண், அக்காச்சியோட கடைசி வால் சேரன். மாமன் மடியில உரிமையா இருந்து பட்டாம்பூச்சி பாக்கறாங்க. பொக்கிஷம் இந்தப் படம். எவ்ளோ நேரம் பாத்துட்டு இருந்தேன்னு தெரில.. வித் ஆவ்வ்வ்வ்..

வர்ட்டா..

21 July, 2010

நானும் ரவுடிதான்!!

ரொம்ப நாளாவே எனக்கொரு ஆசைங்க. பதிவுலகத்துக்குள்ள குதிச்சு ஒரு வருஷத்துக்கு மேலாகியும் இன்னமும் ஒரு சமையல் குறிப்பு கூட  எழுதலையேன்னு. தெரிஞ்சாத்தானேன்னு மனசாட்சிய முந்தி நானே சொல்லிட்டேன். அதிலும் இந்த ரெசிப்பி என்னவர் ஒரு அமெரிக்கன்  பொண்ணு குடுத்ததுன்னு கொண்டு வந்தார். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அட.. இந்த கேக்க சொன்னேங்க. இன்னும் பேர் சொல்லலை இல்லை. இது பேரு banana cake. நீங்க உங்க இஷ்டத்துக்கு வேற பெயர் வேணா வச்சுக்கலாம். இப்போ கம்மு.. சமையல ஸ்டார்ட் பண்ணலாம்.
DSCN0214
நல்ல்ல்லா படத்த பாத்துக்கோங்க. முட்டை, பால் எடுத்து வைக்க மறந்துட்டேன். oven தூக்கிட்டு வந்து இங்க வைக்க முடியல. அதுக்கு மேல இதை எல்லாம் அடுக்க முடியல. இப்போதான் மத்யான சமையல் முடிச்சதால hot plate சூடா இருக்கு. இம்புட்டுதான். கரெக்டா எல்லாம் எடுத்து வச்சுக்குங்க. அளவு அடுத்த பத்தி. முக்கியமா சாப்ட ஆள் வேணுங்க. உங்க வீட்டுக்கு குடும்பத்தோட ஆஜராக நான் தயார். டிக்கட் செலவு உங்களது. மருத்துவ செலவு என்னது.
ஆயில்  125g
சர்க்கரை  250g
முட்டை 2
வாழைப்பழம் (நன்கு கனிந்தது) 3 – 4
மா 500g
பேகிங் சோடா 1ts
உப்பு 1/2 ts
பேகிங் பவுடர் 1 ts
வெனிலா பவுடர் 1 ts
பால் 3 tabs
அப்டியே நான் சொல்லி இருக்கிற அளவில, ஒண்ணொண்ணா சேர்த்து நல்லா பீட் பண்ணிக்கோங்க. இதுல பால் அவங்க சொன்னத விட நான் ஒரு நாள் தப்பா 300ml சேர்த்துட்டேன். அது கூட நல்லாத்தான் இருந்துது. அப்டியே ஒரு ப்ரெட் ஃபோர்ம்ல விட்டுக்கோங்க.
DSCN0215
இப்போ oven 160c ல செட் செஞ்சுக்கோங்க. ஹீட் வந்ததும் அவனோட lowest rack ல வச்சு ஒண்ணரை மணி நேரம் பேக் செய்யணும். உங்களுக்கு விருப்பம்னா  90 நிமிஷமும் பேக் செய்யலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
DSCN0216
என்ன சிரிப்பு?? இதுக்குத்தான் சொன்னேன் பெயர் உங்க இஷ்டம்னு. இது ப்ரெட் ஃபோர்ம்ல செய்றதுனாலையோ என்னமோ பாக்குறத்துக்கு ப்ரெட் மாதிரியே இருக்கும்ங்க.
DSCN0220  DSCN0219
சமையல் எப்டி இருந்தாலும் ப்ரசண்டேஷன் நல்லா இருக்கணுமாம். இதிலயும் ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன்.
ஒண்ணு - பாதி வெட்டின வெங்காயத்தை நடுவுல வச்சிங்கன்னா குட்டி விசிட் வரவங்க அத சாக்கு வச்சு அழுறத்துக்கு ஈஸியா இருக்கும்.
டூவு - அப்டியே நடுவுல ஒரு முழு வெங்காயத்தை வச்சிட்டிங்கன்னா உங்க மாலை நேரத்த முழுசா முழுங்க வந்தவங்க சாவகாசமா தோலுறிச்சு அழ வசதியா இருக்கும்.
இத பாத்து, படிச்சு அழுகை வருது ஆனா அழ முடியலைன்னு நினைக்கிறவங்க தயவு செஞ்சு அழுதிடுங்க. பிளீஸ்.. மனசுக்குள்ள கவலைய அடக்கி வச்சா உடம்புக்கு ஆகாதாம்.
வர்ட்டா..

18 July, 2010

புரி(யப்)படாத வலி.

என் உடலின் வலி..

கோபத்தில் புரிபடவில்லை உனக்கு

ஆசையில் புரிபடவில்லை அவனுக்கு

அவ்வளவு ஏன்

எனக்கே என் வலி புரிபடவில்லை

புரியப்படாத என் மனதின்

வலியை மீறி..

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~                                                                      

sad-girl (1)

 ~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~

முதலில் கோவம்

அடுத்து அருவருப்பு

தொடர்ந்து கேவலம்

என்பதாய் ஒரு பார்வை

கடைசியில் போதுமுன்

நடிப்பென வாய் திறந்து

சொல்லாமல்

நீ காட்டிய சலிப்பு..

தாரளமாய் புரிய வைத்தது

உனக்குள் எனக்கான அன்பை

தாங்க்ஸ்!!

14 July, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன்..

போற அவசரத்தில வீட்ட பூட்டிட்டு உங்களுக்கு டாட்டா சொல்லாம ஓடிட்டேன். மூணு வாரம் என் குடும்பம் ஸ்விட்ஸர்லாந்துக்கு உல்லாசப் பயணம் போய்டிச்சு. இதுவும் ஹிஹிஹி.. ஷெட்யூல் செஞ்சதுதான். போன இடுகைத் தலைப்பு பாத்திங்க இல்லை.. உங்க பதிவுகள் படிக்க முடியாதேங்கிற கவலைல வந்த பெருமூச்சு தான் அது. உங்களோடதாவும் எடுத்துக்கலாம். நிம்மதிப் பெருமூச்சு. புரியுது. இப்டி ஷெட்யூல் செஞ்சு தொல்லை தொடர என்ன அவசியம் இப்போன்னு கேக்கறிங்க. நெக்ஸ்டு பத்திக்கு வாங்க சொல்றேன்.

அதாவது நான் பேசுறத குறைச்சுக்கிட்டேன்னா நீங்க என்ன  மறந்துடுவிங்களோ, அப்புறம் என் இடத்துக்கு வேற யாராவது வந்துடுவாங்களோ அப்படியாகப்பட்ட பயம் எனக்கு இருக்கு.  அப்டின்னு வேண்டியவர் ஒருத்தர் சொன்னாங்க. அதான். இந்த கொடும் முயற்சி. எப்போதும் டச்ல இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நேரம் கிடைச்சா முடிஞ்ச வரைக்கும் பதிவுகள் படிக்கிறேன். சரியா நண்பர்ஸ்..

நாங்க வந்திருக்கிறது என் மச்சினி நிலா வீட்டுக்கு. அவள பத்தி முன்னாடியே சொல்லி இருக்கேன். மறந்தவங்களுக்காக அம்மா பேயி.. அவ ஆள் ரெம்ப டெர்ர்ர்ர்ரர்.. நம்ம வீட்டு மொக்கை சாமியையே சமயத்தில மொக்கிடுவா. சரண்டர் ஆகாம சமாளிச்சுக்கிட்டே சொல்வார் “அடியேய்.. நீ என்னையே மிஞ்சிட்டேடி.. இரு நேர்ல வரேன் உனக்கு”ன்னு. சாம்பிளுக்கு ஒண்ணு டைப்புறேன் படிங்க. ஸ்கைப்ல கண்ணாளனும் நானும் ஜோடியா உக்காந்து அவ கூட பேசிட்டு இருந்தோம். அவ கம்பியூட்டர்ல கோளாறு. கலர் சரியா தெரியாது. திடீர்னு சொன்னா.

“என்ன மச்சாள்.. நீங்க பிங்க் கலர்ல இருக்கிங்க.. அண்ணா யெல்லோவா இருக்கார்??”

“ஏய்.. நான் பூவுடி.. அப்டித்தான் தெரியும்”

“அப்போ அவர் என்ன பழமா??”

இவ அப்பாவோட ரெண்டாவது தங்கை பொண்ணு. அப்பா வழில எங்க அம்மா அவங்கதான். ராணி அத்தை. அவங்க பசங்களுக்கு முன்னம் எங்களுக்கு ஊட்டி விடுற பாசக்காரி. மாமா 48 வயசிலவே எங்கள விட்டு போய்ட்டார். அத்தைதான் எல்லாம் அவங்களுக்கு. இப்போ அண்ணா கேட்டுக்கிட்டார்னு அண்ணா கூட இருக்காங்க. ஸ்கைப்ல பேசும்போது இப்போதும் அதே குட்டிம்மா, அம்மாச்சிதான் நான் அவங்களுக்கு. மூத்தவளுக்கு என் வயசு. ஊர்ல இருக்கா. ரெண்டாவது பையனும் சுவிஸ்ல. மூணாவது இப்போ நாங்க போயிருக்கிற டெர்ர்ரர். நாலாவது பொண்ணு சுவிஸ் வரத்துக்காக வெயிட் பண்ணிட்டு வருங்கால கணவன் கூட ஸ்கைப்பும் பேச்சுமா இருக்கா.  கடைசிப் பையன் கத்தார்ல. எங்க செல்லம். லேட்டஸ்ட்டா தன் காதல் பத்தி சின்ன மச்சிக்கு மட்டும் தான் தெரியும்னு ஃபேஸ்புக்ல ஒரு வெடிகுண்டை வீசி விட்டிருக்கு. எல்லாரும் யார்னு சொல்லுனு என்னைய குடையறாங்க.

அப்பா கிராமம்தான் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியோட எல்லை. என்னவர் நார்வே வரத்துக்காக இவங்க வீட்ல தங்கி இருந்தார். இவ சைக்கிள்லதான் டபுள்ஸ் ஏத்திக்கிட்டு எல்லை வரைக்கும் கொண்டு வந்து விட்டிட்டு இவ அப்டியே ஸ்கூல் போனா. தன்னோட ராசிதான் இவர் எங்கேயும் சிக்காம நார்வே வந்ததா சொல்வா. அவ கணவன் ரூபன் அண்ணாவ எங்களுக்கு ஊர்லவே தெரியும். ரொம்ப நல்லவர். இவள நல்லபடியா பாத்துக்கிறார்.

இவளோட குட்டிப்பாப்பா.. அட்ஷகி. எட்டு மாசம். சொன்னா நம்புங்க. அவங்க ஸ்கைப்ல என் கிட்ட மட்டும்தான் பேசுவாங்க. சிரிப்பாங்க. தூக்க வாங்கனு கை நீட்னா வருவாங்க. எல்லா கூத்தும் காட்டுவாங்க. மத்தவங்கள லுக்கு ஒன்லி. ரொம்ம்ம்ம்ம்ம்ப ஆசையோட போறேன் அவங்கள பாக்க.

எங்களுக்கு பிடிச்ச மாதிரி கார்லதான் டூர். ஐஸ்லாண்ட்ல எரிமலை வெடிச்சப்போ பசங்க சொன்னாங்க. இந்த தடவை ஃப்ளைட்ல எங்கேயும் போக வேண்டாம். பயமா இருக்கு. கார்ல போகலாம்னு. அவ்ளோ ஜாலியா இருக்கும். கண்ணாளனுக்கு லாங் ட்ரைவ்னா உயிர். 30km – 60km, சில இடங்களில 80km. இது தான் இங்க ஸ்பீட் லிமிட்.  தலைநகர் ஆஸ்லோ தாண்டிட்டோம்னா அப்புறம் மலைப்பாதை கிடையாது. ஸ்பீட் குறைஞ்சது 120km. கேக்கணுமா என்னவர. கார் இப்டித்தாங்க போகும்.

j (2)

மீதி பயண அனுபவங்கள் அடுத்த பதிவுகள்ல. (தொடரும் தொல்லைஸ் நண்பர்ஸ்.. திடப்படுத்திக்கோங்க) ப்ளான் இதுதான்.

போம்போது நார்வே –  டென்மார்க். சித்தி வீடு ரெண்டு நாள்.

டென்மார்க் – சுவிஸ்.

வரும்போது சுவிஸ் – ஹாலண்ட். ஒரு மச்சாள், ரெண்டு மச்சான்ஸ் வீடுகள்ல ரெண்டு நாள்.

ஹாலண்ட் – டென்மார்க். மறுபடி சித்தி வீடு. ஒரு நாள்.

டென்மார்க் – சுவீடன். முக்கியமான ஒருத்தங்கள பாக்கணும்.

சுவீடன் – நார்வே. ஹோம் ஸ்வீட் ஹோம்.

வர்ட்டா..

09 July, 2010

தலை வணங்குகிறேன்..

இந்த வாரம் பூரா நல்லாவே பிஸி. டீம் லீடர் வெகெஷன்ல போனதாலா அவங்க ஆணியும் என் கைல. உங்க கமண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். ரொம்ப நன்றி. கண்டிப்பா பதில் எழுதுவேன். அது வரைக்கும் பொறுத்தருள்க. பதிவுகள் அது பாட்டுக்கு ஷெட்யூல் பிரகாரம் வெளிவந்துட்டு இருக்கு. சமத்தா. இது தவிர.

விஜியோட இந்த இடுகை படிச்சதில இருந்து மனசு முழுவதும் ஒரு கோபம், ஆற்றாமை, அழுகைனு கலவையா ஒரு உணர்வு. படிச்ச எல்லாரும் இந்த அனுபவத்துக்கு ஆளாகி இருப்பிங்கனு நினைக்கிறேன். பகிர்ந்து கொண்டதுக்கும் பகிர அனுமதிச்சதுக்கும் நன்றி விஜி.

சுனிதா கிருஷ்ணன்.. எனக்கு அவங்கள பத்தி சொல்ல வார்த்தையே வரல. என்ன ஒரு தைரியம்.. கலங்கிய கண்களும் பிரமிப்புமா அவங்க பேச்ச கேட்டு, பாத்துட்டு இருந்தேன். அவங்கள தீர்க்காயுசோட வாழ வை இறைவானு வேண்டிக்க தவறல. அவங்களுக்கு என் மரியாதை நிறைந்த வணக்கங்கள்.

அந்த பிஞ்சு முகங்கள் இன்னமும் மனசில இருக்கு. எப்டி முடியுது அவங்களால?? இந்தப் பிஞ்சுப் பூக்கள கடிச்சுக் குதற?? என்ன வகை இவங்க?? மிருகம்னு கூட சொல்ல முடியல. என்னோட அக்காச்சி நேர்ல பாத்த ஒரு நிகழ்வு. அப்போ அவ டீச்சர் ட்ரெய்னிங்ல இருந்தா. ஒரு ஃப்ரெண்ட் கூட பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது பைக்ல ரெண்டு பேர் வந்தாங்களாம். கூட அஞ்சு ஆறு வயசில ஒரு குட்டிப் பொண்ணு. ஒருத்தர் பைக்ல இருக்க மத்தவர் இறங்கி கடைக்குள்ள போனாராம். பைக்ல மற்றவர் இவங்களுக்கு முதுகு காட்டி இருந்தாராம். பொண்ணு அழுற சத்தம் கேட்டுதாம். அப்போ கடைக்கு போனவர் திரும்பி வர குட்டிப் பொண்ணு இன்னும் சத்தமா அழுதிட்டே  சொன்னாங்களாம் ”அப்பா.. இந்த அங்கிள் கிள்றார் ரொம்ப வலிக்குது”னு. அவங்க கை காட்ன இடம்?? அங்க இருந்த எல்லாரும் பாத்திட்டாங்க இதை. அப்பா அங்கிளுக்கு பளார்னு ரெண்டு அறை விடுறத்துக்கு பதில் இவங்களையும் சுத்தியும்  பாத்துட்டு  “சரிடாம்மா.. இதோ நாம வீட்டுக்கு போயிடலாம்”னு சொல்லி குழந்தை வாய இறுக்கி மூடிட்டே போய்ட்டாங்களாம். இப்போவும் அக்காச்சி சொல்வா. லச்சு கவனம்டி. நீ போகாத இடத்துக்கு தனியா யார் கூடவும் அனுப்பாத. ஆண்கள் சில விஷயங்கள நினைக்க மாட்டாங்க. அந்த கணம் போதும் ஒரு மிருகம் தன் வேலைய காட்டனு.

நான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு ரிஸல்ட்கு வெயிட் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போ எங்க ஊர்ல பல் மருத்துவர் இருந்தாங்க. ஆனா மருந்துதான் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ள போக வேண்டிய கட்டாயம். அப்பா கூட போனேன். உயிர் போனாலும் பரவால்லை மானம் போயிரக்கூடாதுங்கிறதுதான் அப்போ ஒவொரு பெண்ணோடதும் வேண்டுதல். வயது இங்க கணக்கில இல்லை. அப்பா ஃப்ரெண்ட் வீட்ல தங்கி இருந்தோம். அங்க என் கஸின் ஒருத்தி பேயிங் கெஸ்டா இருந்தா. படிக்கிறத்துக்காக. ஒரு நாள் அவ வர வேண்டிய நேரத்துக்கு டியூஷன் முடிஞ்சு வர்லை. வீட்டுக்கார ஆண்ட்டி அவ்ளோ சத்தம் போட்டாங்க. எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அப்போ அவங்க சொன்னாங்க. ”பத்து வயசு கூட இருக்காதும்மா ஒரு பொண்ணு. ரெண்டு மூணு பேர் சேர்ந்து குதறியிருக்காங்க. ஹாஸ்பிட்டல்ல அவ அழுத சத்தம் இன்னமும் என் காதில கேக்குது. நிலைமை தெரிஞ்சும் நாமளே எதுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி குடுக்கணும் அவங்களுக்கு”ன்னு.

இங்க இன்னமும் மோசம். பையன் பொண்ணு வித்யாசமில்லாம சீரழிக்கிறாங்க. lommemann (pocket man) ன்னு ஒண்ணு ரொம்ப வருஷமா சுத்திட்டு இருந்துது. 10-13 வயசு பையன்கள்தான் அதனோட இலக்கு. அது பேண்ட் பாக்கெட்ல கை விட்டு பாக்க சொல்லுமாம். சாக்லெட், பணம் இருக்கும்னு. பாக்கெட் ஓட்டையா இருக்குமாம். போலீஸ் யார்னு கண்டு பிடிச்சும் கைது செய்ய முடியாம இருந்துது. ஆதாரம்?? Erik Andersen அது பேரு. 58 வயசு. 1999 – 2006 காலப்பகுதியில 66 பையன்கள அப்யூஸ் பண்ணி இருக்கு. அது அசந்த ஒரு நேரத்தில போன வருஷம் எங்க ஊர்ல வச்சுத்தான் பிடிச்சாங்க. பணக்காரன். படிச்சவன். பையன் கூட நல்ல வேலைல இருக்கார்.

lommemann

கைதுக்கு அப்புறமா தான் நிறைய்ய பேர் போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் குடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னமும் பலர் வெளிய சொல்ல வெக்கத்தில மறைச்சு வச்சிருக்கலாம்னும் சொல்றாங்க. தண்டனை என்ன தெரியுமா?? 6-9 வருஷ சிறை. 2,525,000kr காம்பன்சேஷன்.  500,000kr சட்டச் செலவுகள். இது போதுங்களா அதுக்கு?? கல்லால அடிச்ச்ச்ச்ச்சே கொல்லணும். என் கலீக் சொல்வா. ”இதுங்கள எல்லாம் ஒரு கம்பிக் கூட்டுக்குள்ள பிறந்த மேனியா விட்டுட்டு, வெளிய குட்டிக் கல்லு நிறைய்ய வச்சிருக்கணும். யார் வேணா எப்ப வேணா கல்லெடுத்து அடிக்கலாம். நான் எவ்ளோ செலவுன்னாலும் போயி அடிச்சிட்டு வருவேன். ஆனா உயிர் போகாம சாப்பாடு தண்ணில்லாம் ஒழுங்கா குடுக்கணும். அப்போதான் இது மாதிரி இன்னொண்ணு உருவாகாது”ன்னு.  இப்போ சதுவுக்கு Voss cup football tournament நடந்துதுன்னு சொன்னேனே. இப்டியான இடங்கள்ல இந்த pedophiles சுத்திட்டு இருப்பாங்களாம். அதுகளுக்குன்னு ஒரு பெரிய நெட்வெர்க்கே இருக்குதாம்.

பசங்க தனியா வெளிய போறதுன்னா எப்டி நடந்துக்கணும்னு சொல்லி வச்சிருக்கோம். தனியா போறதும் தவிர்க்க முடியாதே. பர்த்டே பார்ட்டி, ஸ்கூல் ட்ரிப், ஆக்டிவிட்டிஸ்னு போக வேண்டிய கட்டாயம் இருக்கு. எந்த மிருகம் எங்க இருக்குமோ?? அன்பா, மிரட்டலான்னு பல வகைகள்ல அவங்க தாக்குதல் இருக்குதே. ஸ்கூல்லவும் குட் டச், பேட் டச் பத்தி எல்லாம் சொல்லிக் குடுத்திருக்காங்க. அது மட்டுமில்லாம பசங்க கிட்ட நாமளும் ஓப்பனா பேசுறது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். தனக்கு என்ன ஆகுதுன்னே தெரியாம பாதிக்கப்படுறவங்கதான் அதிகம்னு சொல்வாங்க. இதுக்கு மேல எனக்கு சொல்லத் தெரியலைங்க. ஆத்திரம்.. இல்லை இல்லை.. கொலைவெறிதான் வருது.

07 July, 2010

புதிய(என்ன)வன்

”தலை வலிக்குது.. உம்மா??”

என்பதாய் நானோ

”தலை வலிக்குதா.. உம்மா!!”

என்பதாய் நீயோ

வாழ்ந்திருக்கிறோம்

எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது

வழக்கம்போல கேட்கத்தான் விழைகிறேன்

புதியதான உன் கோவங்களும்

புரியாதது போன்ற பாவனைகளும்

முகம் நிறைத்த கசப்புக்களும்

எட்டித் தள்ளுவதால்

மனதோடு செத்துப் போகிறது கேள்வி

மறக்காமல் தலைவலியை

மடங்காக ஆக்கிவிட்டு.

<<<<<     >>>>>

j 016 (2)

<<<<<     >>>>>

வெறுப்பை உமிழும் விழிகள்

கசப்பாய் பேசும் உதடுகள்

அலட்சியம் நிறைந்த முகம்

யாரையோ பார்ப்பதாய்

ஒரு புது உணர்வு

எனக்குள் எனை மீறித் தோன்றிவிட

தொலைந்து போன என்னவனை

கணமும் தேடுகிறேன்

பழைய நினைவுகளை தட்டிப் புரட்டி

புதிய நினைவுகளை எட்டி விரட்டி.

04 July, 2010

அம்மா.. பேயி..

jailani's awards ஜெய்லானி ரொம்ப நல்லவருன்னு மறுபடி நிரூபிச்சிருக்கார். இந்த தடவையும் அலுக்காம எத்தனை பேருக்கு விருது கொடுத்திருக்கார் தெரியுமா.. இங்க போய்தான் பாருங்களேன். பதிவுலக கர்ணன் நீங்கதான் ஜெய்லானி. (அடுத்த விருதும் கிடைக்க வழி பண்ணிட்டே. என்ன ஒரு நல் மனம்) இந்த தடவை தங்க மகள்/ன் விருது. ரொம்ப நன்றி நண்பரே.

இப்போ நானும் விருத பகிர்ந்துக்கணும்ல. எனக்கு பிடிச்ச நம்பர்ல குடுத்திடறேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு வாரி வழங்குங்க. இல்லை நைஸா.. ஓக்கேவா.. அப்புறம் எல்லாத்துக்கும் காரணம் கேக்குறவ நான்னு சொன்னார் ஒருத்தர். யார்னு கேக்க மாட்டிங்க இல்லை.. சமத்து நண்பர்ஸ் நீங்க. விருதுக்கான காரணத்தை சொல்லிடறேன் கூடவே.

கயல்விழி – கவிதைகளுக்காக. கூர்வாள்ங்கிற தலைப்புக்கேற்றாற் போல அவளவு கூர்மை வார்த்தைகளில்.

ஆதி – ரமா, சுபாவுக்காக. நீங்க இவ்ளோ அழகா எழுதுறத்துக்கான மனநிலைய கொடுக்கிறதில பெரும் பங்கு அவங்களதுதானே.

மயில் – அன்புக்காக. இப்போதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் உங்கள. அதான் இப்போதைக்கு இது.

மதுமிதா – கவிதைகளுக்காக. குட்டிக் குட்டியா வார்த்தைகள் கூடவே பெரிய அளவிலான சிந்தனை.

சந்தியா – தமிழுக்காக. தமிழ்ல எழுதணும்ன்ற உங்க ஆர்வத்துக்கு இந்த ஒரு விருது போதாது.

]]]     ]]]     ]]]     ]]]     ]]]

வாரத்துக்கு ஒரு தடவை ப்ரஃபைல் ஃபோட்டோ மாத்துறது என் வழக்கம். கை கால்னு ஃபோட்டா புடிக்காம நல்லா முகம் தெரியுறாப்ல ஒரு ஃபோட்டா போடலாமேன்னு திடீர் ஆசை வந்துச்சு. சரினு செயல் படுத்தினேன். அப்போ பாத்து என் கஸின் ஆன்லைன்ல வந்தா. இது நல்லா இருக்கா பார்டினு அனுப்பி வச்சேன். பட்னு ஆஃப்லைன்ல போய்ட்டா. ரெண்டு நாளா ஆன்லைன்ல வரவே இல்லை அவ. ஃபோன போட்டு என்னாச்சுன்னு கேட்டா லைட்டா ஜூரம். இப்போ பரவால்லன்னா. நீங்க ஒண்ணும் நினைக்காதிங்க மச்சாள். இங்க வெதர் சரி இல்லைனு ஒரு பி.கு வேற. ரைட்டு!!

அவ தங்கை ஊர்ல இருக்கா. அவளும் என் கஸின் தான். இவ ஸ்கைப்ல அவ கூட பேசும்போது இந்த ஃபோட்டோவ அனுப்பினாளாம். அதாவது நான் மேலே சொன்னது. பாத்துட்டு அவ குடுத்த ரீயாக்‌ஷன் தான் தலைப்புக்கு உதவிச்சு. மச்சாளுக்கு உன் ஐடி குடுக்கட்டுமான்னு கேட்டத்துக்கு வேணாம்கா.. நான் கேட்டதா சொல்லுனாளாம். ஆகட்டும் ஆகட்டும். அவ ஸ்விட்சர்லாண்ட் தான் வர இருக்கா. கல்யாணம் முடிவாகி இருக்கு. நேர்ல போய் பாத்திட மாட்டேன். வரட்டும் வரட்டும். என்னமோ தெரில. என் உறவுகள் பக்கத்து நாட்டுக்கு வந்தா கூட பக்கத்து வீட்டுக்கே வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.

]]]     ]]]     ]]]     ]]]     ]]]

grill-too-hot-716044

இந்த வருஷ சம்மர்க்குரிய முதல் பார்பகியூ நேத்து தான் செய்ய முடிஞ்சுது. +18 ல வெதரும் அம்சமா இருந்துது. நான் உங்களுக்கு சுலோச்சனா அக்கா விஜய் அண்ணா பத்தி இதுவரை சொல்லை இல்லை?? இப்போ சொல்றேன். அவங்க என்னவர் அண்ணா முன்னாடி இங்க இருந்தப்போ ஃப்ரெண்ட்ஸ் ஆகி, என்னவர் இங்க வந்ததும் அவர் ஃப்ரெண்ட்ஸ் ஆகி. அப்டியே என் ஃப்ரெண்ட்ஸ் ஆனவங்க. என் ஃப்ரெண்ட்ஸ்னு இவர் கை காட்டி விட்டவங்களுக்குள்ள எனக்கு பட்னு பிடிச்சு போனவங்க தங்கா அக்கா. அவங்கள அப்டித்தான் கூப்டுவோம். நானோ என்னவரோ மனம் விட்டு பேசுறது அவங்க கிட்ட மட்டும்தான்.

நினைச்சதும் அவங்க வீட்டுக்கு நாங்களோ இல்லை எங்க வீட்டுக்கு அவங்களோ போவோம், வருவோம். எங்க பசங்க கூட அவங்கள பெரியம்மா, பெரியப்பானு தான் சொல்வாங்க. என்னோட வழிகாட்டி மட்டுமில்லை என் உயிர் நட்பும் அவங்கதான். சமயத்தில என்ன அம்மா மாதிரி கவனிச்சுக்குவாங்க. சண்டை போடுவேன் எப்போ நீங்க எனக்காக பேச போறிங்கனு. அவ்ளோத்துக்கு என்னோட எதிர்வாதம் பண்ணுவாங்க. கடைசில சொல்வாங்க. உங்க கூட ஒத்துப் பேசினா இந்த விஷயத்தில உங்க குழப்பம் போயிருக்காது. அதான் அப்டி பேசினேன்னு. சரியாத்தான் இருக்கும்.

அப்புறம் நேத்து இந்த ட்ரெஸ்ல பின்னாடி இருந்து பாக்கும்போது பதினாறு வயசு பொண்ணு மாதிரி இருக்கிங்கன்னு அவங்க சொன்னத்துக்காக நான் இதையெல்லாம் எழுதினதா நினைச்ச்ச்சுக்காதிங்க நண்பர்ஸ். அவங்க சொன்ன உடனவே என்னவர் “தங்காக்கா.. அத நீங்க சொல்லக் கூடாது. நாங்க சொல்ணும்”னும், விஜய் அண்ணா ”நான் நினைக்கிறேன் உன்னை ஐ செக் அப் கூட்டிப் போகணும்”னும் சொல்லியாச்சு. அப்போ முன்னாடி இருந்து பாத்தா எப்டி இருப்பேன்னு கமண்ட்ல கும்ம நினைச்ச நண்பர்ஸ் தலைப்பை தைரியமா காப்பி பேஸ்ட் பண்ணுங்க. சில உண்மைகள் வலிச்சாலும் நான் தாங்கிப்பேன்.

வர்ட்டா..

01 July, 2010

வித் அவுட் கரண்ட்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.