மார்கழி மாசம் வந்தாலே நத்தார் கொண்டாட்டம் எல்லார் வீட்லையும் களை கட்ட ஆரம்பிச்சிடும். வீட்டுல இண்டு இடுக்கு விடாம அலங்காரம் தூள் பறக்கும். இந்த வருஷம் white christmas வந்ததுல இங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. தேவைக்கு அதிகமாவே ஸ்னோ கு....விஞ்சு போய் கிடக்கு. இந்த ஸ்னோ இருக்கே அது ஒரு அழகான ஆபத்துங்க. போக்குவரத்துக்கு ரெம்ப தொல்லை பண்ணும். நடந்து போறவங்களும் ஸ்னோல வழுக்கி விழுந்து கைய கால உடைச்சுக்குவாங்க. நான் லீவுங்கிறதால பத்ரமா வீட்டுக்குள்ள இருக்கேன். என் கண்ணன தொல்லை பண்ணிக்கிட்டு.
எல்லோரும் எந்த வித இன மத நிற வேறுபாடும் இல்லாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம். பசங்களுக்காகவே நாங்களும் கிறிஸ்துமஸ் தடபுடலா கொண்டாடுவோம். திசம்பர் முதலாம் தேதிலேர்ந்து நத்தார் தினமான 25 ம் தேதி வரைக்கும் காலண்டர் கிஃப்ட்னு தினமும் காலேல பசங்களுக்கு குடுக்கணும். அத விட ஸ்பெஷல் கிஃப்ட் ஒண்ணும் வாங்கி வச்சிக்கணும். சரியா 24 ம் தேதி நள்ளிரவு பனிரண்டு மணிக்கு பரிசு பிரிச்சு மேயும் படலம் ஆரம்பமாகும். அத்தோட அன்பர்கள், ஆதரவாளர்கள் குடுக்கிற கிஃப்ட்டுகளும் கில்லி ஆடப்படும். (ஆஹா..நம்ம விஜய். சூப்பர்டி சுசி) ஆனந்த கூச்சல், ஏமாற்றம், பொறாமை, சில சமயம் அழுகைன்னு கிடைக்கிற பரிசுகளுக்கு ஏற்ப விதவிதமான பாவனைகள் வெளிப்படும். என்ன கிஃப்ட் வேணும் உங்களுக்குன்னு கேக்கவே தேவை இல்லை. இங்க இருந்து உங்கூர் நீளத்துக்கு ஒரு 'குட்டி' லிஸ்ட் எழுதி வச்சிருப்பாங்க.
வீட்டுக்குள்ள தேராட்டம் ஒரு கிரிஸ்த்மஸ் மரத்த அலங்காரம் பண்ணி அது கீழ அத்தன பரிசுகளையும் அடுக்கி வச்சுடுவோம். அடிக்கடி தங்களோட பங்கு சரியா இருக்கான்னு செக்கிங் வேற நடக்கும். அப்பப்போ ஏன் நாம முன்னாடியே பிரிச்சு பாக்க கூடாது. அது ஒண்ணும் தெய்வ குத்தம் கிடையாதேன்னு கேள்வி வேற. நாங்க வந்ததிலேர்ந்து பழகற, கொஞ்சம் க்ளோசா பழகற ரெண்டு நண்பர்கள் குடும்பங்கள் சேர்ந்துக்குவோம். வருஷத்துக்கு ஒருத்தர் வீட்ல ஒண்ணு கூடுவோம். ட்ரடிஷனல் நார்வேஜியன் சாப்பாடுகள், நம்மூர் சாப்பாடுகள் ரெண்டையும் கலந்து..கட்டுவோம். ரெண்டு நாளைக்கு எல்லாருமா ஒரே வீட்ல தங்கி செம ஜாலியா இருக்கும். இந்த வருஷம் ஒரு நண்பர் வீட்ல. நீங்களும் தாராளமா வந்து கலந்துக்கலாம்.
உங்க அனைவருக்கும் என்னோட இனிய நத்தார் வாழ்த்துக்கள். அப்டியே எங்க வீட்டு பால்கனில இருந்து நான் போட்டா புடிச்ச இயற்கை காட்சிகள் சிலத போட்டிருக்கேன் பாத்து ரசிச்சு மகிழுங்க. அப்டியே நத்தார் பரிசுகளையும் மறக்..காம அனுப்பி வச்சிடுங்க.
ரொம்ப எதிர்பார்ப்போட இருந்த, ஆவலோட பார்த்துட்டு இருந்த, ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்த இன்னும் சிலபல இருந்தவான.. ஒரு விஷயம் இன்னைக்கு நிறைவேறப் போது. அதனால உங்கள வபோ கஷ்டப்படுத்த மனசு வர்ல. குட்டியா முடிச்சுக்கிறேன். சந்தோஷம்தானுங்களே.. வரட்டுங்களா..
ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )
11 hours ago