நவம்பர் மாதம் வந்தாலே மனதில் ஒரு பாரம் தானாக வந்து அமர்ந்து விடும். இம் முறை வேறு விதமாக.
உங்கள் தியாகத்துக்கு ஈடாக
ஏதேனும் வார்த்தைகள் கிடைக்குமென்றால்
அவற்றால்
உங்கள் தியாகத்தை விபரிப்பேன்
மாவீரர்களே....
கார்த்திகை 27.....வழக்கம்போல் இல்லாமல் இம் முறை வீட்டிலேயே சரியாக மாலை ஆறு மணிக்கு இது வரை ஈழ மண்ணில் உயிர் நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் ஒற்றை மெழுகுவர்த்தியை ஏற்றி அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து கொண்டோம். இனிமேலாவது அங்கே சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று மனதார வேண்டிக் கொள்ளவும் தவறவில்லை. முட்டி மோதும் எண்ண அலைகளிலிருந்தும், அவை தரும் வலிகளிலிருந்தும் தப்பிக்க முடியாமல் நான். என்னை தேற்றுவதற்காக தன்னை காட்டிக் கொள்ளாத என் கண்ணாளன். அவர் வேலைக்கு புறப்பட்ட போது என் தைரியத்தையும் கூடவே கொண்டு போய் விட்டதாய் உணர்ந்தேன். பிள்ளைகளால் சிறிது நேரம் சிந்தனை திசை மாற்றப்பட்டது. உடைந்து போய் விடாமல் இருப்பதற்காக யாருடனும் பேசப் பிடிக்கவில்லை. உயிர் நட்பைத் தவிர.
********************************************************************************
மறுபடியும் இங்க வெள்ளமுங்க. கண்ணன் கூட எல்லாம் சரி ஆனத்துக்கு அப்புறமும் வெள்ளத்துக்கு முழுக் காரணம் இயற்கை தான். என் பர்த்டேவுக்கு முதல் முறையா எனக்கு ஒரு கண்பானை கிஃப்டா வேணும்னு கேட்டிருந்தேன். அதுவும் பர்த்டேக்கு ரெண்டு வாரம் முன்னாடியே கேட்டாச்சு. இந்த வாரம்தான் கிடைச்சுது. ரெம்ப நாள் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கிட்டு சுத்துறது பாக்கிற அவருக்கு மட்டுமில்லாம எனக்கும் கஷ்டமா இருந்தாலும் விடல நான். கடசீல மறந்துட்டாரோங்கிற முடிவுக்கு நான் வந்தப்போ குடுத்தார். இத்தனை நாள் கழிச்சா குடுப்பாங்க. "நானே போய் வாங்கிக்க தெரியாம இல்ல. எப்பவும் என்கூட இருக்கப் போறது. என் கண்ணாளன் ப்ரெசென்ட் பண்ணினதுன்னு கேக்குறவங்களுக்கு 'பெருமையா' சொல்லணும் இல்ல. அதான் உங்ககிட்ட கேட்டேன்"னேன். சொன்ன விதத்தில சிரிச்சாலும் பாயிண்ட புரிஞ்சு கிட்டார். இதுவரை எனக்கு இன்ன கிஃப்ட்தான் வேணும்னு கேக்காத நான் அதிசயமா கேட்டதுனால பெஸ்டா குடுக்கணும்னு தேடி அலைஞ்சாராம் (?!)
*******************************************************************************
செவ்வாய் கிழமை ஆபீசுக்கு நிமிஷத்துக்கு ஒரு ஃபோன் பண்ணி பொண்ணும் பையனும் மாறி மாறி எப்போ வீட்டுக்கு வருவீங்கம்மான்னு கேட்டுட்டு இருந்தாங்க. கராஜ்ல கார விட்டதும் அப்டியே என்ன மடக்கி மூணாவது வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. குனியச் சொல்லி கண்ண வேற மூடியாச்சு. அங்க போய் பாத்தா அவங்க வீட்டு பசங்க கைல ஒரு குட்டி முயல். பிரவுன் கலர்ல. பேர் அமாண்டுஸ். அவ்ளோ ஸ்வீட்டா... என்னக் கேக்கணுமா? உடனவே ஃப்ரென்ட் ஆய்ட்டேன். புஸ்ஸு புஸ்ஸுன்னு கழுத்துக்குள்ள மூச்சு விட்டுக் கிட்டே என் தோள்ள படுத்திருப்பார். ஒவொரு தடவையும் கூட்டுக்குள்ள விடும்போது ஏனோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். பசங்க தங்களுக்கும் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. அப்பாவுக்கு அலர்ஜிம்மான்னு சொன்னதும் அப்பாவுக்குத்தானே எங்களுக்கு இல்லையேன்னு சொன்ன பொண்ணு, அவ கேட்டத்துக்காக அமாண்டுஸ் கூட விளையாடின அப்பா நாள் பூரா நச்சு நச்சுன்னு தும்மலோட அவஸ்தைப் பட்டத பாத்ததும் இப்போ அவர வீட்டுக்கு கொண்டு வரத நிறுத்திட்டா. இப்டியே எல்லா விஷயங்களையும் பசங்க புரிஞ்சு கிட்டாங்கன்னா பெத்தவங்களுக்கு எவ்ளோ நல்லா இருக்கும்.... ஆனா வீட்டுக்குள்ளே ஒரு ஜீவன கூட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருக்கிறதா... என்னால முடியாதுப்பா.
********************************************************************************
கஸின் கூட ஃபோன்ல பேசிட்டிருந்தப்போ நீ பாதி நான் பாதி கண்ணா... பாட்டு கேட்டுது அவ வீட்டு ரேடியோல. ஹேய்... சூப்பர் பாட்டுடி. கேட்டு ரொம்ப நாளாச்சுன்னேன். ஏன்னு கேட்டா. இல்ல.. இப்டியான பாட்டுகள கேக்கும்போது பழைய காதல்களோட ஃபீலிங்க்ஸா போய்டுது. அதான்னேன். நீங்க வேற அந்த ஃபீலிங்க்ஸ்லாம் போய்டக் கூடாதேன்னுதான் நான் கேக்குறதேன்னா. அப்போ நான் அவளுக்கு சொன்னத இத படிச்சத்துக்கு அப்புறம் அவ எனக்கு சொல்லப் போறா.
அது என்னன்னு தெரிஞ்சிக்க உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன். ஒண்ணு நீங்க மறுபடி தலைப்ப படிக்கணும்... டூவு நீங்க விவெல் சோப் ஆட் பாக்கணும். இதில்லாமலே நாங்க கண்டு பிடிச்சிட்டோமேன்னு பொய்லாம் பேசப் படாது. ஓக்கே...
வரட்டுங்களா....
முத்துலிங்கம்
11 hours ago