Pages

  • RSS

11 July, 2011

ஆத்தா எனக்கு லீவ் விட்டாச்சேய்ய்..

j 049

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் மண்ணே.. காத்திரு.. இன்று இரவு என் பொற்பாதம் உன்னை மிதிக்கும்..

இன்னமும் மூட்டை கட்டும் வேலை + வீட்டை ஒதுங்கக் கட்டும் வேலையை முடிக்காததால் இப்போதைக்கு எல்லாருக்கும்

டாட்டா.. பை பை.. சீ யூ..

08 July, 2011

யூவு டெல்லு மீயு??

என்னோட ஒரு கஸின். கனடால இருக்கான். தந்தையர் தினத்தன்று அக்காச்சி வீட்டுக்கு போயிருக்கான். கதவு திறந்ததுமே அக்காச்சியின் மூன்று கண்ணன்களும் கோரசாக ’happy father’s day சித்தப்பா’ என்று வாழ்த்தி இருக்கிறார்கள். ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு இருந்தவனுக்கு வந்தது அடுத்த சோதனை. என் இன்னொரு கஸினின் பிள்ளைகள் அப்பாவுக்குப் பரிசு கொடுக்கப் போனவர்கள் அவனுக்கும் மறக்காமல் பரிசு கொடுத்து வாழ்த்தி இருக்கிறார்கள். ஸ்கைப்பில் ‘ஒரு பேச்சிலருக்கு நேர்ந்த கொடுமைய பாத்திங்களா அக்கா’ என்றவனை வருங்கால அப்பாவுக்கான வாழ்த்தாக எடுத்துக் கொள்ளச் சொன்னேன். பயபுள்ள சோகத்தை மறந்து வெக்கப்படுது.

@@@@@

Voss cup. 6-12 வயதுக்கு உட்பட்ட பசங்களுக்கான ஃபுட்பால் திருவிழா. இம்முறை வெள்ளி ஒரு மேச்சும், சனி மூன்றும் சது டீமுக்கு இருந்தது. என்னால் போக முடியவில்லை. தவிர அத்தனை அடுக்குகளும் செய்து வண்டிக்குள் எல்லாரும் ஏறி டாட்டா காட்டியதும் ’அம்மா எனக்கு இன்னொரு ஹக் வேணும்’ என்றபடி சது கதவைத் திறந்தார். இறுக்கிக் கட்டிக்கொண்டு ’மிஸ் யூ அம்மா’ என்றார். துளிர்த்த கண்ணீரை மறைத்தபடி மீண்டும் கை அசைத்தேன். அவர்கள் திரும்பி வரும் வரை மனம் அலைந்து கொண்டே இருந்தது. நடந்த அத்தனையும் அப்டேட் பண்ணிவிட்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னார். இம்முறை பச்சை கலர் டீஷர்ட் கிடைத்தது.

 074 058

@@@@@

Prince of Persia - The sands of time படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் பார்த்த பொன்னர் சங்கர் நினைவுக்கு வந்தது. குறிப்பாக கோட்டைச் சுவரில் எய்யப்பட்ட அம்பைப் பிடித்து மேலே ஏறும் காட்சி வந்தபோது சிரிப்புத் தாங்கலை. ஏன்னா ஒரு ஆர்வக்கோளாறில ‘அடப்பாவி.. பிரசாந்து படத்தை சுட்டுட்டானே வெள்ளைக்காரன்’னு நினைச்சிட்டேன்.  Brokeback Mountain க்குப் பின்னர் Jake Gyllenhaal நடிப்பில் நான் பார்த்த படம் இது. அவரோட மூதாதையர் நம்ம பக்கத்து நாடாம். அவர் நடித்த மீதிப் படங்களும் பார்க்க வேண்டும்.

@@@@@

’இருக்கும்போது தெரியலங்க.. நடக்கும்போது தெரியுது..’

‘நீங்க உயரம்ன்றதால தெரியல. ஆனா..’

’அவர் அப்போ பாத்தாப்லயே இருக்கார். நீங்க..’

இப்படிப் பலவாக ஆரம்பித்து ‘..வெயிட் போட்டிங்களா என்ன??’ என்ற ஒரே கேள்வியில் முடிக்கும் அனைவருக்கும் இதையே சொல்லிக் கொல்கிறேன். யாரோ ஒரு நல்லிதயம் அனுப்பி வச்சது. டிலீட் தட்டாம வச்சது நல்லதாப் போச்சு.

HEALTH MESSAGE:

1. If walking/cycling is good for your health, the postman would be immortal. (Not Malaysian Postmen !)
2. A whale swims all day, only eats fish, drinks water and is not thin BUT fat.
3. A rabbit runs and hops and only lives 15 years.
4. A tortoise doesn't run, does nothing ..yet lives for 450 years.
AND
YOU TELL ME TO EXERCISE!

@@@@@

இந்த பாடல் எல்லாரும் கேட்டிருப்பிங்க. இருந்தாலும்  இப்போவும் கேளுங்க. காமகோடியன் வரிகள் உருக்குகிறது. யுவன் இசையில் சங்கர் மகாதேவன் அசத்துகிறார். படம் மௌனம் பேசியதேவாய் இருந்தாலும் மௌனமாகக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இருக்கிறேன். வரிகள் கூகிளாண்டவர் குடுத்தார். பிழை திருத்த நேரமும் மனமும் இடம் கொடுக்காததால் அப்படியே சேர்க்கிறேன்.


என் அன்பே! என் அன்பே!
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி!
என் அன்பே! என் அன்பே!
என் நெஞ்சுக்குள் காதல் வலி!
என் உடலின்று கடலானதே!
என் உயிருக்குள் அலையாடுதே!
இந்தப் பாறைக்குள் பனி பாய்ந்ததே!
என் விரதத்தில் விளையாடுதே!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே............)


விழி பட்ட இடம் இன்று, உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி
புது பார்வைப் நீ பார்த்து, புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாறச் செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும்
அழகான பெண்ணே
முப்படை கொண்டு எனைச் சுற்றி வளைத்தாயடி!
என் உறக்கத்தைத் திருடிச் சென்று
உறவாடும் பூவே!
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்!
அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்!
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்!
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்!
இனி என்ன சொல்லுவேன் இன்று?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே...!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே...........)

02 July, 2011

வாழ்த்தலாம் வாங்க!

இசை தெய்வத்தின் பக்தன். அவர் பற்றிய தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளும் என் அன்புத் தம்பி கோபிக்கு இன்று பிறந்தநாள்.

pillaiyaar ஓடியாந்து ஆசீர்வாதத்தை வாங்கிட்டு போங்க கோப்ஸ். இன்று போல் என்றும் இன்பமோடு வாழ்க வளமுடன்.

என் அப்பன் துணை என்றும் உங்களுக்கு இருக்கட்டும்.

 

 

 

 

 

 

 

உங்களுடைய பதிவின் முகவரி உங்களுக்கே மறந்து போயிருக்கும். இங்கே போய்ப் பாருங்கள் கோப்ஸ்.

இசை தெய்வத்தின் அட்டகாசமான ஒரு தொகுப்பு. தென்பாண்டிச் சீமையிலே பாடல் தேடியபோது கிடைத்தது. மீண்டும் பாருங்கள்.

தென்பாண்டிச் சீமையிலே பாடலின் ஆடியோ இங்கே கேளுங்கள். அவர் குரலில் மூழ்கிப்போய்விடாமல் ஒழுங்காகப் பார்ட்டியைக் கவனியுங்கள்.

அப்படியே கலைஞானியின் இந்தப் பாடல் வாழ்த்தும்.

முழுப் பாடலும் இங்கே. 

முக்கியமான குறிப்பு - பரிசுத் தொகையில் என் பங்கை மறக்காமல் அனுப்பி வைத்துவிடுங்கள்.

மீண்டும் அக்கா, மாமா, மருமக்களின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கோப்ஸ்.